03-19-2006, 11:37 PM
<b>தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை அமைதி திரும்பும் வரை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்</b>
பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழர்களை இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் வரையில் அங்கு அனுப்பகூடாது என்று கோரி லண்டனில் இன்று இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
லண்டன் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் நடந்த இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படும் வரை அங்கு தமிழர்களை பிரித்தானிய அரசு திரும்ப அனுப்ப கூடாது என்றும், திருப்பி அனுப்புவதற்காக கைது செய்யபடும் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பபடுவதற்கு முன்பாக தமது தரப்பு சட்ட உதவிகளை பெறுவதற்காக கால அவகாசம் வழங்கபடவேண்டும் என்றும் கோரியே தாம் இந்த போராட்டத்தினை நடத்துவதாக இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்த "தஞ்சம் கோரியுள்ள தமிழர்களுக்கான நடவடிக்கை குழுவின்" சார்பில் பேசிய ஒருவர் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் மாத்திரம் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுமார் பத்தாயிரம் தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான நிலையினை எதிர்நோக்கியுள்ளதாக கூறும் அந்த அமைப்பை சார்ந்த சட்டத்தரணி ஒருவர், வாராவாரம் சுமார் 20 தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமது இந்த கோரிக்கைகள் தொடர்பான் மகஜர் ஒன்றுக்காக தாம் கையெழுத்து வேட்டை நடத்தி வருவதாகவும், இம்மாத முடிவில் இந்த மகஜர் பிரித்தானிய உளவுத்துறை அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
BBC tamil