03-20-2006, 05:27 PM
<b>தமிழீழத்தில் சிறிலங்கா தேர்தல் இரத்து: உத்தியோகபூர்வ அறிவிப்பு </b>
தமிழீழப் பகுதிகளில் சிறிலங்கா உள்ளுராட்சி சபை தேர்தல் இரத்துச் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் இதற்கான அறிவிப்பு இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு அமைய 45 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் 30 ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அம்பாறை மற்றும் திருகோணமலை பகுதியில் 31 சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 30ஆம் நாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் மொத்தம் 330 உள்ளுராட்சி சபைகளில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மொத்தம் 77 சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளால் வடக்கு கிழக்கு தவிர்த்த சிறிலங்கா பகுதிகளில் 22 சபைகளுக்கான தேர்தல் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது.

www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>