Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாஞ்சிலுக்கு சங்கர மட பக்தர்கள் எச்சரிக்கை!
#1
நாஞ்சிலுக்கு சங்கர மட பக்தர்கள் எச்சரிக்கை!

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை விமர்சித்துப் பேசிய மதிமுக கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு சங்கர மட பேரவை என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து பேரவையின் பொதுச் செயலாளர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில்,

சங்கராச்சாரியாரையே தள்ளாட வைத்த சர்க்கார் இது என்று நாஞ்சில் சம்பத் பேசியிருக்கிறார்.

எந்தக் கூட்டணியில் நாம் இருக்கிறோம் என்று கடைசி வரை தள்ளாட்டத்துடனேயே இருந்து, தாங்களும் தள்ளாடி, எதிரிகளையும் தள்ளாட வைத்து சாதனை புரிந்தவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அருகதையற்றவர்கள்.

இவர்களின் தன்மானத் தலைவர் வைகோ, யாருக்கும் தெரியாமல் காஞ்சிப் பெரியவரை சந்தித்தது நல்ல நிலையிலா? அல்லது தள்ளாடிய நிலையிலா?

எந்த இடம், எந்த அதிகாலை நேரம் என்ற புள்ளி விவரங்களை வெளியிட்டால் நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவாரா?

காஞ்சிப் பெரியவர் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்போது பொதுத் தேர்தலுக்காக அவரை விமர்சனம் செய்வதை மதிமுக நிறுத்த வேண்டும்.

பக்தர்கள் மனம் புண்படும் அளவுக்குப் பேசினால், விளைவுகளை சந்திக்கப் போவது ஜெயலலிதா அரசுதான் என்பதை எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் ஜெயராமன்.

Thanks : Thatstamil
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)