06-06-2005, 06:14 PM
<b>மானமும் அறிவும் தமிழர்க்கு அழகு</b>
கடந்த 11ம் தேதி தெருவெங்கும் பெண்களின் கூட்டம். குறிப்பாக நகைக் கடைகளில் மிகப்பெரும் நெரிசல். சென்னையில் சில நகைக்கடைகள் காலை 5 மணிக்கே திறந்து விட்டார்களாம்.
அப்படி என்ன அந்த நாளுக்குச் சிறப்பு? முண்டியடித்துக் கொண்டு நகை வாங்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் எல்லோரும் ஒரே இரவில் பெரும் செல்வந்தர்களாகி விட்டார்களா என்ன?
குழப்பத்துடன் விழிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் விடை சொல்கிறார்கள், இன்று அக்சய திதியை. அப்படியென்றால்...?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியொரு சொல் இருப்பதே எவருக்கும் தெரியாது. நகைக்கடைக் காரர்களின் கண்டுபிடிப்பாக இது இருக்கலாம்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திதியையாம். திருமாலின் அவதாரம் பரசுராமன் இந்த நாளில் தான் பிறந்தாராம். இந்த நாளில் நகை வாங்கினால் வீட்டிற்குச் செல்வம் வந்து குவியுமாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிவிடப்பட்ட கதை இன்று தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கிறது. மூடநம்பிக்கையால் உந்தப்பட்டு எல்லோரும் நகைக்கடை நோக்கி ஓடுகின்றனர்.
இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.
எத்தனை பெரியார் தோன்றினாலும் நம் மக்களின் மூடநம்பிக்கைகளை மாற்ற முடியாதோ என்னும் அளவிற்கு அச்சம் பரவுகிறது.
சென்ற ஆண்டு இதே அக்சய திதியையில் நகை வாங்கியவர்கள் வீடுகளுக்கெல்லாம் செல்வம் வந்து குவிந்து விட்டதா? இந்த ஆண்டு நாட்டில் வறுமையே இல்லையா? மக்கள் நகை வாங்கினால், நகைக் கடைக்காரருக்குத் தான் செல்வம் வந்து குவியும்.
எந்தப் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லாமல், யார் எது கூறினாலும் அதை நம்பிக் கொண்டு ஒரே திசையில் மந்தைகளாக ஓடிக்கொண்டிருந்தால் மக்கள் வளம் பெறுவது எப்படி?
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களில் ஒரு சாரார் இறை நம்பிக்கை உடையவர்களாக இருக்கக் கூடும். ஆனால் எவரும் மூடநம்பிக்கை உடையவராக இருக்க முடியாது: இருக்கவும் கூடாது. எனவே தமிழ் மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பரவலைச் செய்ய வேண்டியதும் நம் கடமையாகவே உள்ளது.
மானமும் அறிவும் தான் மனிதருக்கு மட்டுமன்று, ஒரு சமூகத்திற்கும் அழகு. அறிவார்ந்த தமிழ்ச் சமூகமே நம்முடைய எதிர்கால இலக்காக இருக்க வேண்டும்.
நன்றி :தென்செய்தி

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கிளம்பீட்டாங்கையா... :evil: :twisted:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&