stalin Wrote:இளைஞன் அவர்களே ஓர் அறிதலுக்காக கேட்கிறேன் கலச்சாரம் என்பதும் நெகிழ்வு போக்குடையதாய்தான் இருக்கும் அது மதம் சார்ந்த கலச்சாரமாகஇருந்தாலென்ன இனம் சார்ந்ததா இருந்தாலென்ன-----அப்படியானால் கலாச்சாரமும் காலத்துக்காலம் மாற்றமடையுமா----------கிறிஸ்தவமத வருகையின் பின்னர் நாவலரனால் சமய சீர்திருத்த செய்யப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்-------------------------------------ஸ்ராலின்
மன்னிக்கவும் ஸ்ராலின் உங்கள் பதிலை இன்றுதான் கவனித்தேன்.
உண்மைதான். கலாச்சாரம் என்பதும் நெகிழ்வுப் போக்குடையதாய்த்தான் இருக்கும். ஒன்றன் மேல் ஒன்று ஆதிக்கம் செலுத்துவதும், ஒன்றுள் இன்னொன்றைத் திணிப்பதுவும், உன்றை இன்னொன்று உள்வாங்குவதுமாய் கலாச்சாரம் என்பது காலத்துக்குக் காலம் மாற்றமடைந்துகொண்டே இருக்கிறது.
___________________________________________________________________
கலாச்சாரம் - மதம் - இனம் - மொழி என்பவற்றில் எதை/எவற்றை எதனுள்/எவற்றுள் உள்ளடக்குவது என்று ஆராய்ந்தல் அது சிக்கலானதாகவே இருக்கும். கலாச்சாரத்தை மதத்துக்குள்ளும், மதத்தைக் கலாச்சாரத்துக்குள்ளும் உள்ளடக்கி நாம் சமூகத்தை நோக்கமுடியும்.
___________________________________________________________________
அது ஒருபுறமிருக்க ஹன்றிங்டன் என்பவர் சொல்கிறார் நாகரீகங்கள் இடையிலான முரண்பாடுகள் தான் இன்றைய உலகமோதல்களாக நிகழ்கின்றன என்று. ஹன்றிங்டனின் இந்த வாதத்தை பற்றி அன்ரன் பாலிசிங்கம் அவர்களும் தனது "விடுதலை" நூலில் ஆழமாக அலசியுள்ளார்.
அவற்றில் இருந்து:
Quote:"நாகரிகங்கள் மத்தியிலான முரண்பாடும் மோதலுமாகவே இனப் போர்கள் வெடிக்கின்றன. நாகரிகங்களின் வளர்ச்சியும் எழுச்சியும் அவை மத்தியில் நிலவும் உறவு முறைகளுமே எதிர்கால உலக ஒழுங்கமைப்பையும் மனித வரலாற்றின் போக்கையும் நிர்ணயிக்கும் என்பது ஹண்டிங்டனின் வாதம்"
Quote:"இன விடுதலைப் போராட்டங்களை பண்பாட்டுத் தனித்துவத்திற்கான போராட்டமாக மட்டும் வரையறுத்துப் பார்க்க முனைவது தவறு. அந்நிய அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக தேச சுதந்திரம் வேண்டி நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் ஆழமான பரிமாணங்களை அவர் (ஹண்டிங்டன்) கண்டு கொள்ளவில்லை."
எனக்கென்னவோ இதில் ஹன்றிங்டனின் வாதம் சரியானதாகவே படுகிறது. அந்நிய அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் எப்படி நிகழ்கிறது என்று பார்க்கும்போது அது தமது நாகரீகத்தை இன்னொரு நாகரீகத்தின் மீது திணிக்க முயல்கையிலும், தனது நாகரீகத்தை மேன்மையானதாகவும், அதிகாரமுடையதாகவும் நிறுவமுயல்கையிலுமே நிகழ்கிறது. அந்தவகை அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான போராட்டம் பண்பாட்டுத் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டமாகவே தொடங்குகிறது. அதன்பின்னரே அது தேசவிடுதலைப் போராட்டமாகப் பரிணமிக்கிறது எனது கருத்து. இதற்கு உதாரணமாக அண்மையில் திருகோணமலையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையும், அதற்கெதிரான மக்களின் கொந்தளிப்பையும் காட்டலாம்.
___________________________________________________________________
கிறிஸ்தவமத வருகையின் பின்னர் நாவலரால் சமய சீர்திருத்தம் செய்யப்பட்டதென்று நானும் படித்திருந்தேன் - ஆனால் அது எவ்வகையான மாற்றம் என்பது பற்றி அறியேன்.
ஒன்று மட்டும் தெளிவு: கலாச்சாரம் என்பது மிகச் சிக்கலான விடயம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/i]