Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமது பலமே எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும்
#1
மக்களின் நல்வாழ்வு சிங்களத்தின் பெருந்தன்மையினால் விளையப்போவதில்லை:பொட்டுஅம்மான்

இன்று எமது விடுதலைப்போராட்டம் ஒரு திருப்பம் அல்லது கேள்;வி அல்லது நாளை என்ன நடக்கும் என்ற வினாவின் நிலையில் நிற்பதை நாம் அறிவோம். நாளை நடக்கப்போவதை யாரும் அறியார். ஆனால் நாளை மட்டுமல்ல அதற்கு மறுநாளும் மறுநாளுக்கு மறு நாளும் நடக்கப் போவதை எம்மால் கூற முடியும். அது என்னவென்றால் எமது விடுதலையென்பது அல்லது மக்களின் நல்வாழ்வு என்பது சிங்களவர்களின் கருணையினாலோ சிறிலங்கா அரசின் பெருந்தன்மையினாலோ விளையப்போவதில்லை என்பது மட்டும் இன்றும் நாளையும் அதற்கு மறுநாளும் உறுதியாகக் கூறக்கூடியதாக இருக்கும்.எமது பலம், தமிழர்களின் பலம். அந்த பலமே எமக்குரிய விடுதலையை, எமது மக்களுக்குரிய நல்வாழ்வை பெற்றுத்தரும் என்பதே நாம் என்றென்றும் மனதில் வைக்க வேண்டிய எம்மனதில் கொள்ள வேண்டிய உறுதியான செய்தி.


நாளை யுத்தம் வெடிக்கலாம். அல்லது அது ஒரு வாரம் செல்லலாம். அல்லது உடனடியாகவே அதற்குரிய சூழல்கள் நிகழலாம். அரசியல்போக்குகள் எவ்வாறும் அமையலாம். இன்றைய அரசியல் சூழலை போராளிகளாகிய நீங்கள் அறியும் ஆவலில் இருப்பீர்கள். அந்த அரசியற் சூழல் ஒன்றே ஒன்றுதான் நேரடியாகக் கூறுவதாக இருந்தால் சிங்கள அரசாங்கம் போரைத் தொடங்கும் பழியை எமது தலையில் போடும் வகையிலே காரியங்களை ஆற்றி வருகிறது. சிறிலங்காப் படையினர் நேரடியாகவே
எதிரிகள் போருக்கான சூழலை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். எமது போராளிகள் மீதும் பொறுப்பாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தப்படுகின்றன் யுத்தம் எந்த நிலையிலும் வெடிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகிவருகின்றன. அந்த வகையிலே போராளிகளாகிய நாம் இன்று செய்ய வேண்டியது எம்மைப் பலப்படுத்தி நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிக்ககூடிய நிலையில் இருக்க வேண்டும். எம்மைப் பலப்படுத்துவதன் மூலம் எமது இயக்கத்தைப் பலப்படுத்தி எமது தேசத்தையும் பலப்படுத்துகின்றோம். எமது பலமே எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் பலத்தைப் பெருக்கிக் கொள்வதில் காலத்தைப் பயனுள்ளதாக்குவோம் என்று கூறி அதுவே நாம் சீலனின் அன்றைய கனவை நனவாக்கும் எனவும் தெரிவித்தார்.

http://www.tamilkural.com/newtamilkural/in...d=150&Itemid=52
Reply
#2
þÅ÷¼ ¦ÀÂ÷ ¦º¡ýÉ¡ ±ÉìÌ ±ýÛõ ÀÂõ

¸½¢¾¡ Åò¾¢Â¡ÕìÌ À¾¡ Á¾¢Ã¢
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#3
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் தாக்குதல் தளபதியான லெப்டிணன்ட் சீலனின் இருபத்தியிரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொண்டு போராளிகள் மத்தியில் பொட்டு அம்மான் அவர் ஆற்றிய சிறப்புரையில் குறிப்பிடத்தக்க வேறு சில விடயங்கள்
__________

எமது விடுதலைப் போராட்டம் எத்தகையதொரு தளபதியை கொண்டிருந்தது என்பதை நினைவு கொள்ளும் நாளாகவும் இன்றைய நாள் அமைகிறது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலே தலைவர் அவர்களுக்கு எதிராக நிகழ்ந்த பல்வேறு சதிகளை வெல்வதற்கு தளபதி சீலன் எவ்வளவு முனைப்புடனும் தலைவரின் கரங்களைப் பலப்படுத்துவதிலும் உறுதியுடன் நின்றார்.

<b>அண்மையில் எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த மிகக் கசப்பான பக்கங்களான துரோகங்கள் பற்றிய விடயங்களைத் தலைவர் அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது தலைவர் அவர்கள் கூறினார்...

இன்று நாம் கருணா என்ற துரோகியின் பக்கத்தைப் பார்க்கிறோம். இந்தத் துரோகங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த பல துரோகங்களை எமது விடுதலைப் போராட்டம் சந்தித்துள்ளது என்றார்.

இன்று விடுதலைப் போராட்டம் வளர்ச்சியடைந்த நிலையில் எமது இயக்கம் ஒரு மரபு வழி இராணுவமாக முதிர்ச்சியடைந்த நிலவரம்இ நாம் முழுத்தாயகத்திலும் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்த நிலைமை. ஆனால் வளர்ச்சியையே சந்தித்திருக்காத விடுதலைப் போராட்டம் முகிழ்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் துரோகங்கள் நிகழ்ந்தன.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் துரோகங்கள் வென்றிருந்தால் முழு விடுதலைப் போராட்டமும் அழிந்திருக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால் இன்று துரோகங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு வேண்டுமானால் இருக்கலாமே தவிர துரோகங்களை எதிர் கொள்வதற்கும் வெல்வதற்குமான வலிமையை எங்கள் இயக்கம் பெற்றுவிட்டது.

இந்த நிலையிலே இயக்கம் ஆரம்பித்த வேளையில் எமது பலம் நீரூபிக்கப்படாத காலத்திலே மக்கள் மத்தியில் விடுதலைப்போராட்டம் நம்பிக்கை ஏற்படுத்தாத காலத்திலே நிகழ்ந்த துரோகங்கள் முழு இயக்கத்தையும் விடுதலைப்போராட்டத்தையும் அழித்துவிடும் நிலைமையைக் கொண்டிருந்தன.

அந்த வேளையிலே தலைமையின் மீதும் விடுதலையின் மீதும் அவாக்கொண்டு கைகொடுத்த தோள்கொடுத்த ஒருவனாக நான் சீலனைப் பார்ப்பேன் என்று தலைவர் கூறினார்.

விடுதலைப்போராட்டம் மக்கள் மத்தியில் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தாத அந்தக் காலத்திலே தனி மனிதர்களாக சிலர் இணைந்து செயற்பட்ட காலத்திலே விடுதலைப் போராட்டத்துக்குள்ளேயே துரோகங்கள் சார்ந்த அவநம்பிக்கைகள் வந்த வேளையிலே துரோகத்தை எதிர்க்கத் துணியாமல் பலரும் ஒதுங்க முற்பட்ட வேளையிலே சீலன் தலைவர் அவர்களுக்குத் தோள்கொடுத்த அந்த உறுதிதான் இன்று எமது விடுதலைப் போராட்டமாக வளர்ந்து நிற்பதைக் காண்கிறோம். </b>

http://www.eelampage.com/?cn=18589
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)