07-16-2005, 07:21 PM
<span style='font-size:23pt;line-height:100%'><b>வட இலங்கையில் மிதிவெடியகற்றல்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050716151410mineaction203c.jpg' border='0' alt='user posted image'>
<i>மிதிவெடி அகற்றல் வார நிகழ்வில்</i>
ஆயுத மோதல்கள் இடம்பெற்ற இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மிதிவெடிகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள வெடிப்பொருட்கள் என்பன 196 அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் குடித்திருக்கின்றன.
இவற்றால் சுமார் 1100 பேர் வரையில் தமது அவயவங்களை இழந்திருப்பதாகப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் யாழ் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
72 பேர் இங்கு இறந்துள்ளனர். 613 பேர் படுகாயமடைந்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் போரினால் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்குப் பெரும் தடையாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 20 லட்சம் கண்ணி வெடிகள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கண்ணி வெடியகற்றும் நிறுவனங்கள் மதிப்பிட்டிருக்கின்றன.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050716151359mineaction203b.jpg' border='0' alt='user posted image'>
<i>குழந்தைகளுக்கும் மிதிவெடி விழிப்புணர்வு</i>
கண்ணிவெடிகளை அகற்றும் பணியை விடுதலைப் புலிகளே தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முதலில் ஆரம்பித்தனர்; அரச படைகள், மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய தரப்புக்கள் உள்ளிட்ட, பிரிட்டன், நோர்வே, சுவிற்சலாந்து, ஜப்பான், டென்மார்க், இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.
இதற்கென இந்த நாடுகள் பல மில்லியன்கள் ரூபா நிதியை இதற்கென ஒதுக்கியுள்ளன.
உயிராபத்து மிக்க இப்பணி மிகவும் கடினமானது. இயல்பிலேயே மிகவும் மெதுவானது. இவற்றை முழுமையாக அகற்றிமுடிப்பதற்கு நீண்டகாலம் எடுக்கும் என நிபுணர்கள் கருதுகின்றார்கள்.
இதன் காரணமாகவே மறுபக்கத்தில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் பல நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கு யுனிசெவ் நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகின்றது.
ஐநா மன்றத்தின் ஒரு பிரிவும் கண்ணிவெடிச் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றது.
சமூக நம்பிக்கை நிதியம், விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சியில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் <b>வெண்புறா நிறுவனம்</b> ஆகியன கடந்த வாரம் யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய வடமாகாண மாவட்டங்களில் கண்ணிவெடி விழிப்புணர்வு வாரத்தை ஏற்பாடு செய்திருந்தன.
வீதி நாடகம், பாடல் வில்லுப்பாட்டு, தாளலயம், போன்ற பல்வேறு கலைவடிவங்களின் ஊடாகவும், கண்காட்சியின் ஊடாகவும் கண்ணிவெடிகளின் ஆபத்து, அவை பற்றிய பாதுகாப்புச் செயற்பாடுகள் பற்றியும் இந்த நிறுவனங்கள் பொதுமக்களுக்கு விழிப்பூட்டி வருகின்றன.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050716151338mineaction203a.jpg' border='0' alt='user posted image'>
<i>காட்சிக்கு வைக்கப்பட்ட மிதிவெடிகள்</i>
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் மூலம் மதிவெடிகளினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் யாழ் மாவட்டத்தில் இவ்வருடத்தின் 6 மாத காலப்பகுதியில் 13 பேர் கண்ணிவெடிகளினால் காயமடைந்துள்ளார்கள்.
ஒருவர் உயிரிழந்திருப்பதாக யாழ் மாவட்ட கண்ணிவெடி நடவடிக்கைக்குப் பொறுப்பான அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
கண்ணிவெடிகளை அகற்றுவதிலும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் செலுத்தப்படுகின்ற அக்கறையும் ஆர்வமும் கண்ணிவெடி, மிதிவெடியில் சிக்கி அவயவங்களை இழந்தவர்கள் பக்கம் போதிய அளவில் காட்டப்படுவதில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்டவர்களினால் முன்வைக்கப்படுகின்றது.
செயற்கைக் கால் பொருத்தப்பட்டவர்கள் ஆகக்குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது காலை மாற்றவேண்டியிருப்பதாகவும், இதற்கான செலவுத் தொகையான 3000 ரூபாவில் அரைவாசிப் பணத்தைச் செலுத்த வேண்டும் என சில நிறுவனங்கள் கேட்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டுஇ இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பாத தம்மால் இந்தப் பணத்தைச் செலவு செய்து கால் போடக்கூடிய நிலையில் இல்லையென்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமது நிலையை மனிதாபிமான ரீதியில் கருத்தில் எடுத்து செயற்கை அவயவங்களை இலவசமாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</span>
BBC tamil