Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்கிரீன்சேவர் உருவாக்க
#1
<b><span style='font-size:22pt;line-height:100%'>பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை வைத்து ஸ்கிரீன்சேவர் உருவாக்க</span>

மைக்ரோசாப்டின் பவர்பாயிண்ட் அப்ளிகேஷனில் ஸ்லைடுகளைத் தயாரித்து மகிழ்ந்தவர்கள் அந்த ஸ்லைடுகளை ஸ்கிரீன் சேவராக மாற்ற விரும்புகின்றனர். பல வாசகர்களும் எப்படி பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றுவது எனக்கேட்டு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றி தர பல சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றின் பெயர்களும் அவை கிடைக்கிற வெப் தளங்களின் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன.


Screensaver Powerpoint Studio (www.1stss.com)

Screen Time for Powerpoint (www.screentime.com)

Any Saver (www.dgolds.com)

Active Screensaver Personal (www.automatedofficesystems.com)

Showtime (www.alienzone.com)

Apex Powerpoint Screensaver Maker (www.zc2003.com)


மேற்படி சாப்ட்வேர்கள் எல்லாமே ஷேர்வேர் பிரிவைச் சேர்ந்தவை. எனவே இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் பணம் கட்டி அந்த சாப்ட்வேரை நிரந்தரமாக்க வேண்டும்.

பைசா செலவு இல்லாமலே பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன் சேவராக மாற்ற வழி உள்ளது. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இருக்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி உள்ளதா? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள் பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றும் வழியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1) உங்களது பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் பைலைத் திறந்து கொள்ளுங்கள்.

2) File Save As கட்டளையை பவர்பாயிண்ட்டில் கொடுங்கள்.

3) Save as tybe என்ற டிராப்டவுன் லிஸ்ட் பாக்ஸை கிளிக் செய்யுங்கள். அதில் GIF அல்லது JPEG அல்லது PNG பார்மட்டுக்களில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

4) My Documents போல்டரின் கீழுள்ள My Pictures என்ற போல்டருக்கு மாறிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே My Pictures போல்டரில் வேறு ஏதாவது இமேஜ் பைல் காணப்பட்டால் அதை வேறு போல்டருக்கு நகர்த்தி கொள்ளுங்கள். அப்படி நகர்த்தாமல் விட்டால் அந்த இமேஜ் பைலும் நீங்கள் உருவாக்கப் போகிற ஸ்கிரீன்சேவரில் இடம் பெற்று விடும்).

5) பைல் பெயர் ஒன்றை டைப் செய்து Save பட்டனை அழுத்துங்கள்.

6) பிரசண்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளையும் இமேஜ் பைல்களாக உருவாக்கவா என பவர்பாயிண்ட் உங்களிடம் கேள்வி கேட்கும். ஆம் எனப் பதில் கொடுங்கள். Export செயல் முடிவடந்தவுடன் ஒவ்வொரு ஸ்லைடிற்கும் ஒரு இமேஜ் பைலானது My Pictures போல்டரில் வெளிப்பட்டிருக்கும்.

7) பவர்பாயிண்ட் இனி தேவையில்லை. எனவே அதை மூடிவிடுங்கள்.

8) விண்டோஸ் எக்ஸ்பியின் டெக்ஸ்டாப்பில் ஐகான்கள் இல்லாத இடத்தில் ரைட் கிளிக் செய்து Properties கட்டளையைத் தேர்வு செய்யுங்கள்.

9) Screen Saver டேபைக் கிளிக் செய்யுங்கள்.

10) Screen Saver என்ற பகுதியில் உள்ள டிராப்டவுன் லிஸ்ட் பாக்ஸை கிளிக் செய்து My Pictures Slideshow என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

11) விரும்பினால் Settings பட்டனை கிளிக் செய்து ஸ்கிரீன்சேவர் பற்றிய செட்டிங்களை மாற்றுங்கள்.

12) Ok பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவுதான். பவர்பாயிண்ட் பிரசண்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளும் ஒவ்வொன்றாக ஸ்கிரீன் சேவரில் காட்சியளிக்கும். இந்த ஸ்கிரீன்சேவரில் அனிமேஷனைக் காண முடியாது, ஒலியைக் கேட்க முடியாது. இந்த குறைகளைப் பெரிதாக நினைக்காதீர்கள். காரணம், எவ்வித செலவுமின்றி எளிதாக ஸ்கிரீன்சேவரை உருவாக்கி விட்டீர்கள்.



நன்றி
[b]தினமலர் Computer மலர்</b>
http://www.dinamalar.com/2005july22compuma...malar/index.asp
Reply
#2
நன்றிகள் வசி
::
Reply
#3
நன்றிகள் வசி
Reply
#4
வசி.. நன்றிகள்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
நன்றி வசி அண்ணா ..
Reply
#6
நன்றி வசி
[b][size=18]
Reply
#7
நன்றி நன்பரே நீங்கள் சொன்ன இந்த முறையில் செய்து வெற்றி கிடைத்தது ....இது போல் பல விடையங்களை தர எனது வாழ்த்துக்கள்........

மற்றும் நன்பரே...

www.webshots.com

இந்த வெப்சைற்ற பைசா இல்லாமலே டவன்நோட் செய்யலாம் .டவன்நோட் செய்து பாருங்கள் உதவியாக இருக்கும் ..மற்றும் இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால்..டிஸ்க்டொப் பிக்சரில் நாட்கலண்டரையும் காட்டும்....

செய்து பாத்துவிட்டு சொல்லுங்கள்

>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)