Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதிர்காமரின் கொலை, சந்திரிகாவின் நிலை
#1
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்ணணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டா னது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது.

ஜனாதிபதி சந்திரிகாவின் வலது கரமாகவும், அவரின் ஜனாதிபதியின் பாரத்தில் பாதிக்குமேல் சுமந்தவராகவும், இலங்கை அரசியலில் கிங் மேக்கராகவும், ஜேவிபிக்கும், சிங்கள உறுமயாவுக்கும் சிங் கள விசுவாசியாகவும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு இடைஞ்சலாகவும் (அரசிய லில்) விடுதலைப்புலிகளுக்கு தலையிடியாகவும், உலக நாடுகளுக்கு நல்ல பிள்ளையாகவும், தமிழர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள்ளாகவும், இந்தி யாவிற்கு அதன் கைப்பிள்ளையாகவும் செயற்பட்டவர் இன்று பலத்த பாது பாப்பிற்கு மத்தியில் படுகொலை செய்யப்பட்டு, அதாகப்பட்டது தாக்கிய வர்கள் து}ரவிடத்திலிருந்து, து}ரநோக்கோடு செய்த அக்கொலையால் இன்று இலங்கையில் சமாதானம் தொடருமா? சண்டை தொடங்குமா? என்கின்ற வினாவை எழுப்பிவிட்டிருக்கின்றது.

கதிர்காமரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எதிர்பார்த்தநேரத்தில் எதிர்பாராதவிடத்தில் அவரின் கொலை நடந்திருப்பதால், அவரின் கொலையை யார் செய்ய வாய்பிருக்கின்றது என்பதை நாம் நோக்குவோம்.

முதலில் ஐக்கியத்தேசியக்கட்சியில் இருந்து அதைப்பார்ப்போமாகில் இரண்டாயிரமாண்டில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி யில் ஏறியவுடன் கதிர்காமரின் வெளிநாட்டு அமைச்சு பறிபோனதுடன் அவரின் பெயர் வெளிநாடுகளுக்கு தெரியாதபடி முடக்கம் கண்டது. கூடவே சந்திரிகா அரசில் அன்று இருந்த பிரீஸ் (1994இல் புலிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டஅவர் ஓர் பேராசிரியர்) இன்று ஐக்கியத்தேசியக்கட்சியில் இருப்பதால் ரணிலுக்கும் மாற்றுக்கட்சியில் இருந்து மண்டைகூடியவர்களை தன் கட்சிக்கு எடுக்கக்கூடிய தேவையும் இருக்கவில்லை. ஆனால் 1994க்கு பின் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் கதிர்காமரின் தொடர்பு களால் சில பின்னடைவுகள் உண்டானது உண்மை. 1995இல் மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபின் ஐக்கிய தேசியக்கட்சி தமது அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கி இருகாதென்றும், இப்போ ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்தே அனைத்தையும் செய்வதாகவும், ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகவும் தெரிவித்து அதனடிப்படையில் அவரின் பிரச்சாரம் இடம்பெற்றதால் அந்தவி டயத்தால் ரணிலின் கட்சிக்கு அவப்பெயரைச் சம்பாதித்துக்கொடுத்திருந்தார். அவரின் செயற்பாடு அந்த அளவிலேயே இருந்ததினால் கதிர்காமரை போட் டுத்தள்ளும் அளவுக்கு ரணிளுக்கு முக்கியமான ஒருவராக தென்படவில்லை. கூடவே இலங்கை அரசியலில் யார் யார் ஆட்சிக்கட்டிலில் ஏறினாலும் தமிழ ருக்கு விரோதப்போக்கை கொண்டிருக்கும் ஒருவரையே வெளிநாட்டு அமைச் சராக நியமிப்பார்கள். காரணம் எவ்வாறெல்லாம் வெளிநாடுகளுக்கு தமிழரின் உரிமைப்போராட்டத்தை, குழுக்களிற்கிடையேயான போராட்டமாகவோ அன்றி பயங்கரவாதப்போராகவோ காட்டி அப்போராட்டத்தை நசுக்க முடியுமோ அவ்வாறு நசுக்கக்கூடியவர்களை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டிருப்பதால் கதிர்காமரின் பாத்திரத்தைப்பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவு மில்லை, கொள்ளப்போவதுமில்லை. ஆகவே கதிர்காமரை ஐக்கிய தேசியக் கட்சி கொல்லப்போவதில்லை. அதனால் அவர்களுக்கு எந்தவொரு பிரியோச னமுமில்லை.

தொடரும்...
www.tamilkural.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)