09-19-2005, 08:56 PM
<b>அமைதிப்படை அட்டகாசங்களை ஏன் மறந்தீர்கள்?
புத்தகம் எழுதிய கார்த்திகேயனுக்கு புலிகள் கேள்வி</b>
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையை-& உலகெங்கும், ஒரு மாதிரி விசாரணையாக எடுத்துக்கொள்ள வேண்டும்!
இப்படி பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறது, Ôஇன்டர்போல்Õ எனப்படும் சர்வதேச போலீஸ். இதன் மூலம் உலக புலனாய்வு அமைப்புகளுக்கு இணையாகப் பேசப்படும் ஓர் அமைப்பாக மாறியிருக்கிறது இந்தியாவின் சி.பி.ஐ.
<img src='http://www.vikatan.com/jv/2005/sep/21092005/p23.jpg' border='0' alt='user posted image'>
இந்த அரிய பாராட்டால் உற்சாகப் பூரிப்பில் இருக்கும் டி.ஆர்.கார்த்திகேயனைச் சந்தித்தோம். சி.பி.ஐ&யிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அவர், ராஜீவ் கொலை தொடர்பாக நடத்திய விசாரணையை, புத்தகமாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள அந்தப் புத்தகம், வாய்மையின் வெற்றி என்ற தலைப்பில் விரைவில் தமிழிலும் வெளியாகவுள்ளது. Ôஇன்டர்போல் பாராட்டு... அவர் எழுதியிருக்கும் புத்தகம்... இவைப் பற்றியெல்லாம் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
<span style='color:red'>சர்வதேச போலீஸ் உங்களுக்கும், உங்கள் விசாரணைக் குழுவுக்கும் பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறதே?
உலகத்தில் இதுவரை எத்தனையோ பெரிய தலைவர்கள், வி.வி.ஐ.பி&க்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை அமைப்புகள் எல்லாம் கொலையாளிகள் இவர்கள்தான் என யாரையும் அடையாளம் காட்டவில்லை. இந்தியாவை எடுத்துக் கொண்டால் மகாத்மா காந்தியையும், இந்திரா காந்தியையும் சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மட்டுமே சட்டத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே நான்தான் கொன்றேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டான். இந்திரா அம்மையார் விஷயத்தில் அவரை கொலை செய்தவர்கள் அந்த இடத்திலேயே கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார்கள். ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில்கூட ஆரம்பத்தில் தயக்கங்கள்தான். கொலைக்கு மறுநாள் காலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உச்சபட்ச உளவு அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது எல்லா அமைப்புகளுமே இதை யார் செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றுதான் சொன்னார்கள்.
<img src='http://www.vikatan.com/jv/2005/sep/21092005/p23a.jpg' border='0' alt='user posted image'>
கார்த்திகேயன்
என்னை ராஜீவ் கொலையை விசாரிக்கப் பணித்த போது, அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன். ஆனால், அதன்பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. என்னிடம் கொடுத்த அந்தப் பொறுப்பை அப்போதே பல உயர் அதிகாரிகளிடம் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஆனால், யாருமே அதை ஏற்காமல் தட்டிக் கழித்திருக்கிறார்கள். காரணம், ராஜீவ் கொலை என்பது சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிற ஒரு விஷயம். இந்த விசாரணையில் உருப்படியாக கண்டு பிடிக்காமல் வெறும் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்தால் அது இந்தியாவுக்கே அசிங்கம். தவிர, விசாரணைக்கு தலைமையேற்கும் உயர் அதிகாரிக்கும் பெரிய அசிங்கம்.
நான் மிகவும் நேசித்த ஒரு தலைவரின் கொலைப் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வெளிப்படை யான விசாரணையை மேற்கொண்டேன். அப்போதே எனக்கு அரசியல் குறுக்கீடுகள் வரத் துவங்கின. எங்கிருந்து, யார் மூலம் என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், எனக்கு வந்த குறுக்கீடுகள் விசாரணையின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்ததாக இருந்தது. ஆனால், அரசியல் குறுக்கீடுகளைத் தவிர்க்க, எனக்குப் போதிய சுதந்திரம் கொடுத்தது மத்திய அரசு. அந்த சுதந்திரம்தான் ராஜீவ் கொலையாளிகளை உலகுக்கு அடையாளம் காட்ட எனக்கு உதவியது.ÕÕ
இலங்கையிலும் இந்தியாவிலும் பலிகள் பல நடந்தும், இன்னும் இலங்கையில் அமைதி நிலவவில்லையே?
இதற்குப் பதிலாக அண்மையில் நான் நார்வே நாட்டில் சர்வதேச தீவிரவாதம் பற்றி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நான் அங்கு நிகழ்த்திய உரையின் தலைப்பு ஏன் தீவிரவாதம்? என்பதுதான். தீவிரவாதத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மக்கள் தீவிரவாதம். இரண்டாவது ஜனநாயக தீவிரவாதம்.
மக்கள் தீவிரவாதம் என்பது மத அடிப்படையில் பொதுமக்களுக்குள் மூட்டி விடப்படுகிற தீ. ஜனநாயக தீவிரவாதம் என்பது, சிறுபான்மையினரை மதிக்காமல், அவர்களின் சம்மதம் பெறாமல் பெரும்பான்மையினர் எடுக்கும் சில முடிவுகளினால் விளைகிற தீவிரவாதம். இதுதான் இலங்கையில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற உயிர்பலிகளுக்குக் காரணம்.
முதலில் தமிழர்கள் ஜனநாயக முறையில் குரல் கொடுத்தார்கள். ஆட்சியாளர்களின் காதில் இந்தக் குரல்கள் விழவில்லை. ஆகவே அடுத்த தலைமுறையினர் ஆயுதங்களைக் கையில் எடுத்து, தங்கள் வாழ்வுரிமையைக் காத்துக்கொள்ள போராடுகிறார்கள். அதற்கு தீர்வு கண்டால்தான் அங்கே அமைதி திரும்பும்ÕÕ
ராஜீவ் கொலை விசாரணையைப் பற்றி வெளியிட்டுள்ள புத்தகத் துக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கடும் கண்டனம் வந்ததாமே?
அதை கண்டனம் என்று சொல்ல முடியாது. என் புத்தகத்தின் மீதான அவர்களின் உணர்வைப் பதிவு செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புலிகளின் இணைய தளத்தில் என் புத்தகம் பற்றி அவர்கள் தரப்பு கருத்துக்களை வெளியிட்டனர். அதில், ராஜீவ் கொலையைப் பற்றியும், அதன் விசாரணையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ள தாங்கள், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தைப் பற்றியும், இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டகாசங்களைப் பற்றியும் ஏன் எழுத மறந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.ÕÕ
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரபாகரனை இன்னும் ஏன் கைது செய்ய முடியவில்லை?
ராஜீவ் விவகாரத் தைப் பொறுத்த வரையில், யாரெல்லாம் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டுவதும், அதற்கான ஆதாரங்களை கொடுப்பதும்தான் விசாரணை அமைப்பின் வேலை. மற்றபடி நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்வியை ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும்.
- எஸ்.சரவணகுமார்
படம்: கே.கார்த்திகேயன்
</span>
Thanks: Vikadan