Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துவக்கு இதழின் கவிதைப் போட்டி அறிவிப்பு
#1
நீண்ட நெடுநாளைய கனவு இன்று தான் விடிந்திருக்கிறது.

அறிவிப்பதற்கு முன்னதாக சில முன்னேற்பாடுகள் தேவைப்பட்டதால் சில காலம் தாமதம்.

இது குறித்து சில நண்பர்களுடன் பேசியிருக்கிறோம்.

துவக்கு அமைப்பின் முதல் இலக்கியப் பணியாக கலந்துரையாடல்களும் தகுந்தோர்க்குப் பாராட்டு விழாக்களாகவும் சிறிய சிறிய பணியில் இயங்கி பின்னர் இதழாக வடிவம் கண்டது.இரண்டு இதழ்கள் வந்த பின்னர், எல்லோரும் வடிவம் நன்றாக இருந்தாலும், பிடிஎஃப் கோப்புகள் இறங்க சிரமமாக இருப்பதால் வலைதளமாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே என்று கருதி அப்படியே தகவலும் தந்தனர். நாங்களும் வலைதளமாக மாற்றிக் கொண்டாலும், அது குறித்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் சில காலம் தாமதமாகி விட்டது. என்றாலும் மூன்றாவது இதழும் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அதை www.thuvakku.com என்ற தளத்தில் காண முடியும்.

இப்பொழுது மூன்றாவது கட்டமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணமாக தனது அடுத்த கட்ட பணியினைத் துவங்கியிருக்கிறது துவக்கு.

மன்ற அன்பர்கள் இந்த கவிதைப் போட்டி அறிவிப்பினை பல தளங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தாங்கள் இயங்கும் வலை தளங்கள் வலைப்பூக்கள் மடலாடற்குழுக்கள் மின்னஞ்சல்கள் தொலைபேசி கைப்பேசி மற்றும் வசதிப்பட்ட ஊடகங்கள் வழியாக இந்த தகவலை எடுத்துச் சென்று பெருமளவில் படைப்பாளிகளை இந்த கவிதைப் போட்டியில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்ற உதவியை வேண்டுகிறோம்.

நன்றி

அறிவிப்பு கீழே

.
Reply
#2
<b>துவக்கு இலக்கிய அமைப்பு
மாற்று கவிதையிதழ், கூடல்.காம் தமிழ் இணைய தளம்</b>

ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும்

<b>புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான
மாபெரும் கவிதைப் போட்டி.</b>


<b>முதல் பரிசு: உருபா. 10,000
இரண்டாம் பரிசு: உருபா. 7500
மூன்றாம் பரிசு: உருபா. 5000
பாராட்டு பரிசு: உருபா. 1000 பத்து கவிதைகளுக்கு</b>

<b>கவிதைகள் அனுப்பவேண்டிய முகவரிகள்.</b>

<b>இ. இசாக்
P.O. BOX NO: 88256
Dubai - U A E.

சி. சுந்தரபாண்டியன்
மாற்று கவிதையிதழ்
கோணான்குப்பம் - 606 104
விருதாசலம் வட்டம்
தமிழ்நாடு</b>

<b>மின்னஞ்சலில் அனுப்ப</b>thuvakku@gmail.com
thuvakku@yahoo.com

<b>கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15.திசம்பர்.2005</b>

<b>விதிமுறைகள்</b>

1. கவிதைகள் <b>புலம்பெயர்ந்த வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டும்,</b> தேவையற்ற மாற்று மொழிக் கலப்புகள் தவிர்த்தல் வேண்டும்.

2. ஒரு கவிஞர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், கவிஞரின் புகைப்படம், சிறுகுறிப்பு இணைத்து அனுப்பவேண்டும்.

3. போட்டிக்கான கவிதைகள் சொந்த படைப்பாகவும், வேறு எங்கும் வெளியாகாதவைகளாகவும் இருக்க வேண்டும். இது குறித்த உறுதிமொழி கடிதம் இணைக்க வேண்டும்.

4. கவிதைகள் 35 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ (குறைந்தது மூன்று அய்க்கூகள்) என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.

5. பரிசுக்குரிய கவிதைகளை முன்னணி கவிஞர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும், தேர்வுக்குழவின் முடிவே இறுதியானது.

6. போட்டிக்கு வரும் கவிதைகள் தகுதியடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பாக வெளியிடப்படும்.
மேலும் விரிவான விபரங்கள் அறிய:

www.thuvakku.com
மாற்று கவிதையிதழ்
www.koodal.com

ஆகியவற்றை பார்க்கவும்.

தொடர்புகளுக்கு:

இ. இசாக்- 00971 50 3418943.

கவிமதி- 00971 50 5823764

நண்பன்- 00971 50 8497285.

சே.ரெ.பட்டணம் அ. மணி- 00971 50 7763653,

மு.முத்துகுமரன் - 00971 50 6243115

சி. சுந்தரபாண்டியன்- 0091 9360021254.

.
Reply
#3
<b>தேர்ந்தெடுப்பவர்கள் - இன்குலாப் / மு.மேத்தா / த.பழமலய்

நெறிப்படுத்தித் தருபவர் - அறிவுமதி</b>

யாழ் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்பதால் பெருமளவில் உங்களுடைய பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கிறோம்

துவக்கு இலக்கிய அமைப்பிற்காக
முத்துகுமரன்.

.
Reply
#4
இப்போட்டி குறித்தான செய்திகள் வார்ப்பு.காம் பதிவுகள்.காம் அம்பலம்.காம் கீற்று.காம் அம்பலம்.காம் ஆகியவற்றில் வெளியிடப்பட்டிருக்கிறது.. இணையதளங்களிலும் தமிழகத்திலும் கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களை உற்சாகம் கொள்ளச் செய்கிற

.
Reply
#5
தகவலுக்கு நன்றிகள்.
Reply
#6
நன்றி அனி

.
Reply
#7
பதிவு செய்யும் போது ஏன் கடைசி எழுத்து விட்டுப் போகிறது. முன்பொருமுறை நான் நன்றி என தட்டச்சு செய்ய நன் என வந்தது... இப்போதும் அதே போல் வருகிறதே ஏன்?

.
Reply
#8
Muthukumaran Wrote:பதிவு செய்யும் போது ஏன் கடைசி எழுத்து விட்டுப் போகிறது. முன்பொருமுறை நான் நன்றி என தட்டச்சு செய்ய நன் என வந்தது... இப்போதும் அதே போல் வருகிறதே ஏன்?

தகவலுக்கு நண்றி...

முத்துக்குமாரன் நீங்கள் 50 க்கு மேல கருத்துக்கள் எழுதினால் எழுதுப்பிழை திருத்த வசதி கோரி மட்டுறுத்தினரிடம் அல்லது பொறுப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம்........ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#9
நல்லது தலா... அவ்வாறே செய்கிறேன்... உங்களுக்கு தெரிந்தவர்களிடையும் இப்போட்டி குறித்தான செய்தியை தெரியப்படுத்துங்கள்

.
Reply
#10
நன்றி முத்துகுமரன் - விபரத்தை இங்கு வெளியிட்டமைக்கு...

50 பதிவுகளுக்குப் பின் தான் எழுத்துப் பிழை திருத்த வசதி!!!

இது எப்படி இருக்கிறது என்றால் பட்டப்படிப்பை முடித்து விட்டு பின்னர் மீண்டும் மழலையர் பள்ளியில் அவர்களுடன் அமர்ந்து படிப்பைத் தொடங்குவது போல...

குறைந்த பட்சம் - யாராவது வந்து தட்டச்சில் அல்லது மென்பொருள் கோளாறு காரணமாக நிகழும் தவறுகளைத் திருத்துங்களேன் - சமயங்களில் எழுத்துப் பிழைகளைக் காண எமக்கே அசிங்கமாக இருக்கிறது.
-----------------


-----------------




-----------------
Reply
#11
நண்பன்,

கருத்துக்களில் திருத்தம் செய்யும் வசதி புதிய பெயர்களில் களத்தில் இணைந்த சிலரால் கள விதிகளுக்கு முரணாக உபயோக்கிக்கப்பட்டது. அதனை தவிர்க்கவே 50 கருத்துக்களின் பின்பு கள விதிகள் குறித்து அறிந்திருப்பார் அதனை தவறாக உபயோகிக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன் திருத்தம் செய்யும் வசதி வழங்கப்படுகின்றது. 50 கருத்துக்கள் எழுதும் உறுப்பினர்கள் அனைவருக்குமே திருத்தம் செய்யும் அனுமதி வழக்கப்படுவதில்லை, அவர்களின் கருத்துக்களை பொறுத்தே அது முடிவு செய்யப்படுகின்றது, இந்த திருத்தம் செய்யும் வசதி வழங்கப்பட்ட பின்பு கருத்துக்களின் பொருள் மாறாத வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என்பது களவிதி.

இந்த திருத்தம் செய்யும் வசதி கிடைக்கபெறும் வரை புதிய கள உறுப்பினர்கள் அவர்கள் எழுதும் கருத்தை அனும்பும்(Post) முன்பு மாதிரிகாட்சியை(Preview) பார்த்து சரியாக இருக்கின்றதா என சரி பார்த்து கொள்ளலாம், அதனையும் மீறி உங்களையும் அறியாமல் தவறுகள் ஏற்படும் போது மட்டுறுத்தினர்க்ளை தொடர்பு கொண்டால் திருத்தம் செய்ய உதவி செய்வார்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
நண்பரே

என்னுடைய தட்டச்சின் வேகம் - கிட்டத்தட்ட பேசுபவரின் பேச்சை அப்படியே தட்டச்சில் கொண்டு வந்து விட முடியும். ஆம். முறைப்படி தட்டச்சு பயின்றவன். என்றாலும் சில எழுத்துப் பிழைகள் - ஒற்றுப் பிழைகள் வந்து விடுகின்றன. அவற்றை இரண்டாவது மூன்றாவது வாசித்தலில் தான் அறிய முடிகிறது. அப்பொழுது சிறிது கவலை வரத்தான் செய்கிறது. என்ன இப்படித் தப்பும் தவறுமாக எழுதுகிறார் என்று யாரேனும் எண்ணி விடுவார்களோ என்று. களத்தின் விதியை முதலிலேயே அறிவேன். அதற்காகத் தான் விரைந்து பல பதிவுகளை அளித்து 50 என்ற எல்லையைத் தொட்டுஇ பிழை திருத்தம் செய்யும் உரிமைப் போரில் ஈடுபட்டிருக்கிறேன் - நன்றி ( அதுவரையிலும் மட்டுறுத்துனர்கள் யாரேனும் ஒருவர் - என் பதிவுகளில் ஒரு கண் வைத்திருங்கள். பிழையுடன் என் எழுத்துகள் காட்சியளிப்பது சற்று சங்கடமாகவே உள்ளது.)

நன்றி.
-----------------


-----------------




-----------------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)