09-23-2005, 07:20 AM
சிறிலங்காவில் ஒரு தேர்தல் அதுவும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறப் போவது உறுதியாகி இருக்கின்றது. தென்னிலங்கை அரசியலரங்கில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் கொந்தளிப்புக்கள், கட்சிகளுக்கு இடையிலான உள் முரண்பாடுகள் என்ப வற்றுக்கு இடையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை பகடைக் காயாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மையமாக வைத்துக் கொண்டு தென்னிலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த தேர்தலில் எவர் வென்றாலும் ஆட்சியமைத்தாலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்கள்; கிடைக்கும் வழிமுறைகளுக்கு ஊடாக ஒடுக்கப்படுவார்கள் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.
இதுவரையான சமாதானத்துக்கான காலத்தை தென்னிலங்கை எவ்வாறு கையாண்டது, கையாள்கின்றது என்பதை நினைவுபடுத்தினால் இது மிகத் தெளிவாகும்.
சமாதான காலத்தை விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்கும் அவர்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களின் இயல்பு வாழ்வுக்கு எதிராகவும் செயற்படவல்லவர்களை வளர்த்தெடுப்பதற்கும் தான் தென்னிலங்கை பயன்படுத்திக்; கொண்டிருக்கின்றது. அது நடத்தி வரும் நிழல் யுத்தமும் ஜனநாயகவாத கோசத்தினூடாக மேற்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத இனவழிப்பும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக மோசமானவை.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னதாக சிறிலங்கா படையினரின் பிடிக்குள் இருந்த பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் ஏன் வரவேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்களோ அதே சூழ்நிலையை, இப்போது திரும்பவும் சிறிலங்கா இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளுக்கு விடுத்து வந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல் மூலம் அவர்களை வெளியேறச் செய்துவிட்டு சமூக விரோத சக்திகளையும் விடுதலை விரோத அமைப்புக்களையும் வளர்த்தெடுக்க அது முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. யாழ். குடா நாட்டின் இன்றைய நிலை மிக அப்பட்டமாக இந்த பயங்கரமான சூழ்நிலையை துலாம்பரப்படுத்துகின்றது.
குடா நாட்டுக்குள் விடுதலைப் புலிகள் பிரவேசித்ததையடுத்து பெருமளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்த சமூகவிரோதச் செயல்கள் அவர்கள் வெளியேறியதை அடுத்து இப்போது பெரும் விசுவரூபம் எடுத்திருக்கின்றன.
விடுதலைப் புலிகள் குடா நாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இவ்வாறானவைகள் இடம்பெறவில்லை என்று கூற இயலாது. சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களதும் அந்நிய புலனாய்வாளர்களினதும் ஏஜென்டுக்கள் இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவித்து செயற்படுத்தி வந்தன. விடுதலைப் புலிகள் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவற்றை தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் தான் கட்டுப்படுத்த முடிந்திருந்தது.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அங்கீகாரம் பெற்றிருந்த நபர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட இந்தவாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எதிர்ப் பிரசாரகர்களின் திசைதிருப்பல் உத்திக்கு வாய்ப்பளிக்கக் கூடியதாயிருந்தது. இதன் காரணத்தால் மிகச் சூட்சுமமான முறையில் நடக்கும் தமிழ் விரோத செயற்பாடுகளைக் கட்டப்படுத்த இயலாத தன்மை காணப்பட்டது.
ஆனால், இப்போது கட்டப்பாடற்று ஒழுக்க முறைமைகளை மீறிச் செயற்படத் தொடங்கியுள்ள இளைஞர் குழுக்களின் கை மேலோங்கிய தன்மை குடா நாட்டில் வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா படையினரின் பிடியில் குடா நாடு இருந்த ஆறாண்டு காலத்துள் கட்டுப்பாடற்று திறந்துவிடப்பட்ட சீரழிவு ஊடகங்களினதும் திரைப்படங்களினதும் தாக்கம் பல்வேறு அடிதடிக் குழுக்களை உருவாக்கியது.
தென்னிந்தியத் திரைப்படங்களின் பெயரில் ஒவ்வொரு குழுக்களும் உருவாகி தெருச்சண்டியர்களாக அடாவடித்தனம் காட்டத் தொடங்கின. இதனால் சாமானிய மக்கள் தெருவில் இறங்குவதோ நியாயப்படி நடந்து கொள்வதோ இயலாததாகும் நிலை உருவானது.
சிறிலங்கா இராணுவத்தினரின் பின்னணியுடன் இயங்கிய அநேகமான இந்தக் குழுக்கள் போதைப் பொருள் விநியோகம், இளம் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துதல், வாகனங்களில் வந்து பாடசாலை மாணவியரைக் கடத்திச் செல்லுதல், கூலிக்கு வீடு புகுந்து தாக்குதல், கொலை செய்தல் வரை தமது கைங்கரியங்களைக் காட்டத் தலைப்பட்டன.
இவற்றின் செயற்பாடுகளால் ஓராண்டுக்குள் குறைந்தது இரு கொலைகளாவது யாழ். குடாநாட்டில் முன்னர் நடந்தன. அதே அபாயம் இப்போது விடுதலைப் புலிகள் குடாநாட்டில் இருந்து வெளியேறிய கையோடு ஏற்பட்டிருக்கின்றது. தென்மராட்சியில் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற மோதல் சம்பவங்கள், வடமராட்சி அல்வாயில் ஏற்படுத்தப்பட்டு தூண்டி விடப்பட்டிருக்கும் இரு சமூகங்களுக்கு மத்தியிலான மோதல்கள் என்பன பரபரப்பான கடைசியான சம்பவங்கள்.
தென்மராட்சி சம்பவத்தில் காயமுற்ற ஒரு இளைஞர் இவ்வாரம் உயிரிழந்திருக்கின்றார். அவரை நோக்கி தாக்குதல் நடத்திய மற்றைய குழு சிறு ரக துப்பாக்கியால் சுட்டிருக்கின்றது. அந்தச் சம்பவத்தில் கைக்குண்டு வீச்சுக்களும் கூட இடம்பெற்றிருக்கின்றன. இது சிங்களப் படையினரின் பின்னணியுடன் நடந்த சம்பவம் என்பது தெளிவானது.
தமிழ் தேசவிரோத அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை கொண்டு அவர்களையும் களமிறக்கி குடாநாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமான நிலைக்குள் தள்ளியிருக்கின்றன. இதற்கு முன்னதாக வடமராட்சியில் இரு சமூகங்களுக்கு இடையில் தூண்டிவிடப்பட்ட கலவரம் கொமாண்டோ பாணியில் நடத்தப்பட்ட தாக்குதலாக ஒரு பகுதியினரின் 35 வரையிலான குடிசைகளை எரித்து நாசம் செய்திருக்கின்றது.
இவற்றுக்கு அப்பால் இப்போதும் தெருக்களின் மூலைகளில் புதிய புதிய மோட்டார் சைக்கிள்களில் கைத்தொலைபேசிகள் சகிதம் நிற்கும் இளைஞர் கும்பல்கள் வீதியால் சென்று வரும் இளம் பெண்கள் உட்பட அப்பாவிகள், மெலியார் யாவரையும் தங்களது வீரப்பிரதாபத்தை காட்டுவதற்குரியவர்களாக நடந்து கொண்டிருக்கும் கெடுகாலம் வியாபித்துள்ளது. மாணவியர்கள் இதனால் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் காரணமாக குறிப்பிட்ட பாதைகளினால் தனியாகச் செல்ல முடியாத நிலைமை தோன்றியிருப்பது விடுதலைப் போருக்கும் தமிழர்களின் கலாசாரத்துக்கும் எதிரான மிகப் பெரிய சவாலாகவே இருக்கின்றது.
இது தொடர்பில் சிறிலங்கா பொலிசார் எந்த ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதற்கு பாதிக்கப்படுபவர்கள் முறைப்பாடு தெரிவிக்கவில்லை என்பதை மட்டும் காரணமாக அவர்கள் சுட்டிக்காட்டிவிட்டு, பின்கதவு வழியாக இத்தகைய அடாவடிக்காரர்களுக்கு ஒத்துழைக்கும் போக்கையே கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் வாழ்வியல் முறையில் சில சம்பவங்களால் பாதிக்கப்படுபவர்கள் வெளிப்படையாக எழுத்து மூல முறைப்பாடுகளை கொடுக்க முன்வருவதில்லை. அதற்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நீண்ட கால நோக்கில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள் காரணமாகும். இதனை புரிந்து கொண்டு செயற்படவல்ல, சமூக ஓட்டங்களை விளங்கிக் கொண்டு அதனை பேணி வழிநடத்தக் கூடிய, சிவில் நிர்வாகமாக யாழ். குடா நாடு உட்பட தமிழர் தாயகங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் இல்லை.
இதுதான் விடுதலைப் புலிகளை நோக்கி மக்கள் கைகளை நீட்டுவதற்கு காரணமாக இருக்கின்றது. கடந்த வாரம் குடா நாட்டில் வெளியான பத்திரிகைச் செய்திகளில் கணிசமானவை இது விடயத்தில் விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் விடுத்த கோரிக்கைகளாகவே இருந்தன.
இந்த நிலையில் எல்லாளன் படை குடாநாட்டுக்குள் தனது செயற்பாடுகளை மீளவும் தொடங்கியிருக்கின்றது. அது பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கும் செய்திக்குறிப்பில் இத்தகைய நடவடிக்கைகளி;ல் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையை விடுத்திருப்பதுடன் அவர்களைத் திருந்திக் கொள்ளுமாறு இறுதி அவகாசமும் வழங்கியிருக்கின்றது.
இதனைக் கவனத்தில் கொள்ளாது தொடர்ந்தும் இத்தகைய சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. <span style='font-size:25pt;line-height:100%'>இத்தகைய பின்னணியில் தான் மருதனார் மடத்தில் வைத்து ஆலயப் ப+சகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேற்கொண்டு வந்த மிக மோசமான கலாசார சீரழிவு நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை புறக்கணித்ததன் விளைவாக அந்த முடிவு நேர்ந்திருக்கின்றது என்பது தெளிவானது</span>.
அதனைத் தொடர்ந்து கொக்குவில் பகுதியில் மாந்திரிகர் வேடம் போட்டு துர்நடத்தைகளில் ஈடுபட்டு அப்பாவிகள் பலரை பாதிப்புக்குள்ளாக்கிய ஒருவர் மீது அப்பகுதி இளைஞர்கள் பாய்ச்சல் நடத்தி அவரின் கூத்துக்களை அம்பலப்படுத்தியிருக்கின்றார்கள். இவை சமூக, கலாசார அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஓங்கத் தொடங்கியிருக்கும் நியாயத்தின் கையென கருதலாம்.
இது இன்னும் ஓங்காவிடில் சிறிலங்கா படைகள் தாங்கள் செயற்படாமலே தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது விடுதலைக்கு எதிராக செயற்படவல்ல சக்தியொன்றை உருவாக்கிய வெற்றியைப் பெற்றுவிடுவார்கள்.
http://www.battieezhanatham.com/weeklymatt...9/gnabahan.html

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&