Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணம் ஒரு வரலாறு......
#1
<b>யாழ்ப்பாண இராசதானி</b>

<b>(விக்கிபீடியாவில் இருந்து)</b>

(யாழ்ப்பாண அரசு இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)

கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன.

யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களிலொன்றான <b>வையாபாடல்</b> <b>இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 இவ்வரசு கி.பி. --- யில் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன என்பது அவர்களது கருத்து.

யாழ்பாடி வாரிசு இல்லாது இறந்த பின்னர், இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட, கூழங்கைச் சக்கரவர்த்தியிலிருந்து தொடங்கி, ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்ட வம்சம், அரசு போர்த்துக்கீசர் கைப்படும்வரை ஆண்டு வந்தது. இவர்கள் பரராசசேகரன் செகராசசேகரன் என்ற பட்டப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு ஆண்டு வந்தனர்.

யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென [b]சிங்கைநகர், நல்லூர்</b> என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள <b>வல்லிபுரப்பகுதியில்</b> அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வேறு சிலர் கொள்வர்.

இதேபோல யாழ்ப்பாண அரசின் ஆட்சி எல்லை பற்றியும் தெளிவு இல்லை. குடாநாட்டுப்பகுதியைத் தளமாகக் கொண்டு, சமயங்களில் இவ்வரசின் எல்லை, <b>வன்னிப்பிரதேசம் முழுவதையும் உள்ளடக்கி, மேற்குக் கரையில் புத்தளம் வரை கூடப் பரந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.</b>

கி.பி.1450ல் யாழ்ப்பாணம் தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவந்த, செண்பகப் பெருமாள் என்பவனிடம் தோல்வியடைந்தது. எனினும் 17 வருடங்களின் பின், தோற்றோடிய கனகசூரிய சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து படைதிரட்டிவந்து இழந்த நாட்டை மீட்டான்.

16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கீசரின் நடமாட்டம் இலங்கையையண்டிய கடற்பிரதேசங்களில் அதிகரித்து இலங்கை அரசியலிலும் அவர்கள் தலையிடத் துவங்கிய பின்னர், யாழ்ப்பாண இராச்சியத்திலும் அவர்கள் பார்வை விழுந்தது. போர்த்துக்கீசரின் செல்வாக்கால் இப் பிராந்தியத்தில் கத்தோலிக்க மதம் தலையெடுக்க ஆரம்பித்து, யாழ்ப்பாண இராச்சியத்திலும் மதமாற்றங்கள் தொடங்கியபோது, அப்போதைய யாழ்ப்பாண அரசன், தனது ஆளுகைக்குட்பட்ட மன்னாரில் அவ்வாறு மதம் மாறியோரைச் சிரச்சேதம் செய்வித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனைச் சாக்காக வைத்துக்கொண்டு, 1560ல் போர்த்துக்கீசத் தளபதி டொம் கொன்ஸ்டண்டீனோ டி பிரகன்ஸா, யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். இதன் பின்னர் 1620 வரை போர்த்துக்கீசரின் தயவிலேயே யாழ்ப்பான மன்னர்கள் நாட்டை ஆண்டுவந்தனர். 1620ல் இராச்சியத்திலேற்பட்ட பதவிப் போட்டியைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததின் மூலம், யாழ்ப்பாண மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த இராச்சியம் 1658ல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 138 வருடகாலம் ஆண்டபின், 1796ல் யாழ்ப்பாணத்தை பிரித்தானியரிடம் பறிகொடுத்தனர். பிரித்தானியர் யாழ்ப்பாணத்தையும், அவர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் சேர்த்து ஒரே அலகாக நிர்வகித்தனர். 1948 பிப்ரவரி 4ஆம் திகதி, முழுத்தீவையும் ஒரே நாடாகவே சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறினர்.....
::
Reply
#2
மேலே இருக்கிற தகவல்களில் பிழை இருக்கலாம். சரியான தகவல் தெரிந்தோர் தயவு செய்து திருத்த உதவவும்...
::
Reply
#3
<b>யாழ் வராலாற்று நூலில் முதன்மையான

[b]
வையாபாடல்</b>

வையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும், தொடர்ந்து வரும் பல இடங்களிலும், இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளெனக் காணினும், இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலானது 104 செய்யுள்களினாலானது.


<b>நூலாசிரியர்</b>
இந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, "ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் "வையா" என்பதாகுமெனெக் கருதப்படுகிறது.

<b>காலம்</b>
இந்நூல் 1440 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்த கனகசூரிய சிங்கையாரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய ஏழாம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க. செ. நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்

(விக்பீடியாவில் இருந்து)
::
Reply
#4
<b>கதிரமலை அரசும் சிங்கை நகர் அரசும் </b>

கதிரமலை அரசு கி.பி 1ம் நூற்றாண்டில்; இருந்து கி.பி 9ம் நூற்றாண்டு வரை நீடித்துள்ளது கந்தரோடை எனப்படும் கதிரமலையே ஈழமண்டல ஆட்சியாளர்களின் தலைநகரமாக உள்ளது.

இவ் அரசை தென்னிலங்கை பௌத்த ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் படை எடுத்துத் தமது ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். இது கி.பி 8ம் நூற்றாண்டு வரை அடிக்கடி ஆட்சிக்குட்படுத்தப்பட்டது.

இந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த இந்நகரை ஆட்சி செய்த 2ம் மகிந்த மன்னனுக்கு எதிராக (777-797) உத்தர தேசத்து முதலிகள் கிளர்ச்சி செய்தனர.;

இக்கிளர்ச்சிக்குக் கலிங்க தேசத்தவனான உத்தரசிங்கனே தலைமை தாங்கினான். நெடுங்காலமாக இழந்திருந்த உரிமையை மீட்கும் வகையில், போரிட்டு நாகதீபத்தை உத்தரசிங்கன் பெற்றுக்கொண்டான். இந்த நிகழ்வு கி.பி 785 இல் ஆகும்.

வெற்றி கொண்ட உத்தரசிங்கன் கதிரமலையை தலைநகராகக் கொண்டு, உத்தர தேசத்தை ஆண்டு வந்தான்.

கந்தரோடைப் பிரதேசம் பௌத்தத்தின் செல்வாக்கினால் பௌத்த மக்களது முக்கிய பிரதேசமாக மாறியிருந்தது. பௌத்தம் நாகதீபத்தில் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து விடுவித்தான். நகுலேஸ்வரர் கோயில்,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களை உத்திரசிங்கனின் மனைவி மாருதப்புரவீகவல்லி கட்டுவித்தார்.

யாழ்ப்பாண இராட்சியத்தில் சைவம் இழிவு நிலையிலிருப்பதைக் கண்டு புத்தூக்கம் அளிக்க விரும்பிக் காசிப் பிராமணர்கள், பெரியமனத்தூளார் என்ற அந்தணர் என்பவர்களை வருவித்துள்ளான். இந்தியாவிலிருந்து சில விக்கிரகங்களை எடுத்து வரப்பட்டு இந்துக் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு விக்கிரகங்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் பௌத்தம் கதிரமலை, வல்லிபுரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. அதாவது நாகதீபத்தின் மேற்குப் பகுதி கிழக்குப் பகுதி என்பன வேற்றுமத ஆதிக்கத்திலிருக்கத் தென்பகுpதி (யாழ்ப்பாணம்) மக்கள் விரும்பிக் குடியேறியிராத பிரதேசமாக விளங்கியது.

இத்தகைய நிலையில் தனது தலைநகரை இடம் மாற்றுவதற்கு உத்திரசிங்கன் விரும்பினான். இதனையே சைவம் சிறப்புறக்கூடிய புதியதொரு பிரதேசத்தை அவன் செய்ய விரும்பினான். இதன் விளைவே சிங்கநகர் உதயமானது.

உத்திரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராட்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்திற்கு திடீர் வி ஜயம் ஒன்றினை மேற்கொண்டான.; அவன் வன்னி மார்க்கமாகச் செல்கையில், வன்னியர்கள் ஏழு பேரும் எதிர்கொண்டு வந்த வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். அதற்கு உத்திரசிங்கன் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்டதே தலைநகர் சிங்கநகர் ஆகும்.

தமிழரசின் ஆரம்பத் தலைநகரான சிங்கநகர் என்பது யாழ்ப்பாணத்திற்கு வெளியே வன்னிப் பிராந்தியத்தில் குறிப்பாக பூநகரியில் இருந்ததெனக் கூறமுடியும். வல்லிபுரப் பகுதியிலேயே சிங்கைநகர் இருந்ததெனவும், நல்லூருக்கு அருகில் இருந்ததெனவும், வரலாற்றாசிரியர்கள் கொள்வது ஏற்றதாகவில்லை. சிங்கநகரை உத்திரசிங்கன் பகுதியிலேயே நிறுவினான், என்பது பொருத்தமானது.

ஜீ.புஸ்பரட்ணத்தின் ஆய்வுகளிலிருந்து பூநகரிப் பிரதேசம் பண்டைய இராட்சியம் ஒன்றின் தளமான பிரதேசமாக விளங்கியிருக்கின்றது எனத் தெரிகிறது. பூநகரிப் பிரதேசத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் இதனை நிரூபிக்கின்றன.

கி.பி.10ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி.1003 இல் இராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்றும் 11ஆம் நூற்றாண்டின் பின் முற்பகுதியில் சோழர் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நிலவியதாகச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

உத்தரப்பிரதேசத்தைச் சோழரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் நிர்வகித்து வந்தார்கள். இச்சோழ மன்னனின் பிரதிநதியாக புவனேகவாகு சிங்கைநகரி;ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளான். 13ஆம் நூ ற்றாண்டின் நடுப் பகுதி வரை சிங்கைநகர் வட இலங்கையின் தலைநகராகவும், இந்த அரசு சோழரின் ஆதிக்கத்தினுள்ளும் இருந்தது.

உத்திரசிங்க மன்னன் கதிரமலையிலிருந்து தனது தலைநகரைப் பு +நகரிக்கு மாற்றிக் கொண்டான். யாழ்ப்பாணக் குடா நாட்டில் பௌத்தமும் சிங்களவரும் ஆதிக்கம் பெற்றதால் இந்தத் தலைநகர் இடம் மாற்றம் நிகழ்ந்தது. மீண்டும் 13ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மாறியது. நாகதீவிலிருந்து சிங்களவர்கள் தென் புலம் பெயர்ந்தனர். கலிங்கத்து (மாகன்) மீண்டும் உத்தரதேச மன்னனாகச் சிங் கை நகரில் முடிசூடிக்கொண்ட செய்தி, எஞ்சிய பௌத்த சிங்களவரையும் இடம் பெயரச் செய்துள்ளது, எனத் தெரிவிக்கப்படுகின்றது.


பதிவு
::
Reply
#5
<b>குறுனிக்கற்காலப் பண்பாடு</b>

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையே குறுனிக்கற் காலமாக ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.இப்பண்பாட்டு மக்கள் காட்டுப் புற்களாகத் தோன்றிய பயிர்களில் இருந்து தானியங்களை அறுக்கவும் வேறு தேவைகளிற்குப் பயன்படுத்தவும் சிறிய பிளேட் போன்ற கல் அலகுகளைப் பயன்படுத்தியதால் இக்காலத்தைக் குறுனிக்கற்காலம் அல்லது இடைக்கற்காலம் எனத் தொல்லியலாளர் அழைப்பர்.ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பேயிருந்தே இப்பண்பாடு நிலவியதென்ற கருத்து நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது.அண்மைக்கால ஆய்வுகளால் இலங்கையில் இதன் தோற்றக் காலம் கி.பி 28,000 ஆண்டுகள் எனவும் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் கி.மு 30,000 ஆண்டுகள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இக்காலம் பல உட்பிரிவுகளைக் கொண்டு காணப்படுவதோடு இதன் ஆரம்பம் இற்றைக்கு 5 இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகவே சொல்லப்படுகிறது.ஈழத்தில் இக்காலத்திற்குரிய பிரிவுகள் எல்லாம் காணப்படாவிட்டாலும் கூட பழைய கற்காலம் இடைப்பட்ட கற்காலத்திற்குரிய தடயங்கள் உள்ளன. பழைய கற்காலத்திற்குரிய தடயங்கள் வடபகுதியில் தான் விரிந்து காணப்படுகின்றன.ஆயினும் வட இலங்கையில் இதுவரை அறியப்பட்டுள்ள மிகத் தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தொல்லியற் சான்றுகள் குறுனிக் கற்காலப் பண்பாட்டிற்குரியதாகும்.

இடைக்கற்காலத்திற்குரிய தடயங்கள் யாழ்நாடு தவிர்ந்த ஈழம் முழவதும் காணப்படுன்றன.இக்காலக் கருவிகளை ஆக்குவதற்கு பயன்படுத்திய "குவாட்ஸ்" இனக் கற்கள் யாழ் குடாநாட்டில் காணப்படாததால்தான் இக்கால ஆயுதங்கள் இங்கு கிடைக்கவில்லை இப்பண்பாடு நிலவியதற்கான சான்றுகளை பலாங்கொட,இரத்தினபுரி,கித்துள்கொட,குறுவிற்றாவ,அனுராதபுரம்,வவுனியா,முல்லைத்தீவு,மன்னார்,பூநகரி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தியுள்ளன.

ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த குறுனிக்கற்கால மக்களுக்கும் இடையில் கலாச்சாரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்;; ஒரே மாதிரியானதாகக் காணப்படுகின்றன.

குறுனிக்கற்காலத்திற்குரிய மக்கள்தான் இன்றைய வேடங்களின் மூதாதையர் ஆவர்.இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழி ஆகும்.இலங்கைத்தீவிலும் தமிழ்நாட்டிலும் இப்பண்பாட்டைப் பின்பற்றிய மக்களே ஆதி ஒய்ரோயிட் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.இவர்களின் மொழியும் பண்பாடும் பிற்கால திராவிட நாகரிகத்துடன் இணைந்தே இலங்கை நாகரிகம் தோற்றம் பெற்றது.


பதிவு
::
Reply
#6
தகவலுக்கு மிக்க நன்றி, பல தெரியாத விடயங்களை அறிந்து கொள்ள உதவியது
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
தகவலுக்கு மிகவும் நன்றி தலா

Reply
#8
ம்ம் நல்ல விடயம். தொடரட்டும் தங்கள் பணி.
<b> .. .. !!</b>
Reply
#9
தலா... தொடர வாழ்த்துக்கள்...
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
<b>யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்</b>

விக்கிபீடியாவில் இருந்து.
யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அதனையாண்ட அரசர்கள் பட்டியலுக்கு, யாழ்ப்பாண வைபவமாலையிலேயே தங்கியுள்ளனர். எனினும் யாழ்ப்பாண வைபவமாலை தரும் அவர்களது காலம் பற்றிய தகவல்கள் கிடைக்கக் கூடிய எனைய தகவல்களுடன் பொருந்தி வராமையினால், வெவ்வேறு ஆய்வாளர்களுடைய முடிவுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. கீழேயுள்ள பட்டியல் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஞான) எழுதி 1928ல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம், மற்றும் 1926ல் வெளிவந்த, முதலியார் செ. இராசநாயகம் (இராச) அவர்களுடைய பழங்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற ஆங்கில நூல் ஆகியவற்றில் காணப்படும் காலக்கணிப்பைத் தருகிறது.

அரசர் பெயர் ஞான இராச
கூழங்கைச் ஆரியச்சக்கரவர்த்தி அல்லது காலிங்க
ஆரியச்சக்கரவர்த்தி .........................................கி.பி 1242 கி.பி 1210
குலசேகர சிங்கையாரியன் .......................... .கி.பி 1246
குலோத்துங்க சிங்கையாரியன் ......................கி.பி 1256
விக்கிரம சிங்கையாரியன் ............................கி.பி 1279
வரோதய சிங்கையாரியன் ............................கி.பி 1302
மார்த்தாண்ட சிங்கையாரியன் .......................கி.பி 1325
குணபூஷண சிங்கையாரியன் ........................கி.பி 1348
வீரோதய சிங்கையாரியன் ..............................கி.பி 1344 கி.பி 1371
சயவீர சிங்கையாரியன் ..................................கி.பி 1380 கி.பி 1394
குணவீர சிங்கையாரியன் ................................கி.பி 1414 கி.பி 1417
கனகசூரிய சிங்கையாரியன் ...........................கி.பி 1440


<b>1450ல் கோட்டே அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான்</b>

சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் கி.பி 1450

1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது


கனகசூரிய சிங்கையாரியன் ............................. கி.பி 1467
(???) சிங்கையாரியன் .................................கி.பி 1478
சங்கிலி கி.பி .................................................1519 கி.பி 1519

<b>1560ல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர்</b>


புவிராஜ பண்டாரம் ....................................கி.பி 1561
காசி நயினார் .............................................கி.பி 1565
பெரிய பிள்ளை .........................................கி.பி 1570
புவிராஜ பண்டாரம் ....................................கி.பி 1572
எதிர்மன்ன சிங்கம் ......................................கி.பி 1591
அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) ......... கி.பி 1615
சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) . கி.பி 1617

<b>1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது</b>

<b>(விக்கிபீடியாவில் இருந்து..)</b>
::
Reply
#11
[b]I am sorry to burst Thala's bubble. யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளுக்கும் ஆரியருக்கும் சம்பந்தம் கிடையாது. இந்தச் சொல் " ஆரியர்" அரசர்கள், உயர்ந்தவர்கள் அதாவது "Noble" என்ற வகையில் தான் பாவிக்கப்பட்டதே தவிர, படையெடுத்து வந்த ஆரியருக்கும் இந்த ஆரியச் சக்கரவர்த்திகளுக்கும் தொடர்பு கிடையாது. கலிங்க மாகனின் தொடர்பு கூடச்சரியாக நிரூபிக்கப் படவில்லை. பல சரித்திர ஆசிரியர்கள் அதைப் பற்றிச் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

அந்தக் காலத்திலும், ஏன் அண்மைக் காலம் வரையும் கூட எல்லாவற்றையும் ஆரியத்துடன் தொடர்பு படுத்துவதும், எல்லாச் சாதிகளையும் ஆரியத் தொடர்பு காட்டுவதும், அல்லது சமஸ்கிருதப் படுத்துவதும் ஒரு மதிப்பும், அந்த்ஸ்தும் தருவதாகக் கருதப்பட்டது.விக்கிப்பீடியாவில் நான் கூட, நான் தான் நல்லூர் அரசனின் வழியில் வந்த வாரிசு என்று கூடப் பதிவு செய்யலாம். விக்கிப்பீடியாவில் யாரும் எதையும் பதிவு செய்யலாம்.

சோழமன்னர்கள் கலிங்க நாட்டுடன் இன்றைய இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்துடன் திருமணத்தொடர்பு வைத்திருந்தார்கள், அதில் ஒருவன் சோழ மன்னனின் ஆணையின் பெயரில் தான் யாழ்ப்பாணம் வந்தான். கூழங்கைச் சக்கரவர்த்தி ஒரு பாண்டிய இள்வரசன். தமிழராகிய சோழரும், பாண்டியரும் ஆரியச் சக்கரவர்த்திகள் அதாவது " Noble ones" என்ற பெயரில்( இங்கு "ஆரிய" என்ற சொல் "Noble" என்ற கருத்தில் தான் பாவிக்கப் பட்டது) யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டார்களே தவிர ஈரானில் வந்த ஆரியர்களுக்கும் அவ்ர்களுக்கும் தொடர்பு கிடையாது.பல தமிழரசர்கள் ஏதாவது கோயிலைக் கட்டினால், பிராமணர்களால் ஆரிய title கொடுக்கப் பட்டது.

யாழ்ப்பாண அரசர்கள், ராமேஸ்வரத்துக்குப் பிராமணர்களிடம் பெண் எடுத்தது உண்மை. இது இன்றும் தான் நடக்கிறது. திராவிடன் ரஜனிகாந்த் பணம் வந்தவுடன் பிராமணப் பெண் ரஜனியை மணம் முடித்தமாதிரியும், தயாநிதி மாறன் பிராமணப் பெண்ணை மணமுடித்த மாதிரித் தான் அதுவும். அதை விட யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்திகளுக்கும், ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, அவர்கள் திராவிடத் தமிழர்கள்.
<b>
?</b>
--
Reply
#12
<b>(I know better than your words)</b>சரியான விபரங்கள் எங்கிருந்து பெறப்பட்டன எண்ற தகவல் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது..
::
Reply
#13
நன்றி தலா தகவலுக்கு.. நிறைய தெரியாத விடயங்களை அறிந்து கொண்டேன்....
Reply
#14
தகவலகளுக்கு மிக்க நன்றி
[b][size=15]
..


Reply
#15
<b>யாழ்ப்பாண இராச்சியம் (கி.பி 13 - கி.பி 17 வரை)</b>

<img src='http://www.pathivu.com/content/varalaru/doc/tamilarvaralaru/image/yalirachyam.gif' border='0' alt='user posted image'>
யாழ்ப்பாண இராச்சியம் என்று கூறும்பொழுது போர்த்துக்கேயர் இலங்கை வந்தபொழுது யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய வன்னி மையங்களைக் கொண்டிருந்த இராச்சியமாகக் கருதப்படுகின்றது. இவர்களது ஆதிக்கம் சில வேளைகளில் புத்தளம் கற்பிட்டி வiரைக்கும், பின்னர் நீர் கொழும்பு வரைக்கும் கிழக்குப் பகுதியில் பாணமை வரைக்கும் பரவியிருந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் வடக்கே யாழ்ப்பாண அரசு அடங்காப்பற்று வன்னிமை, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், மாவட்ட வன்னிமைகள் ஆகியனவே இவை.

<img src='http://www.pathivu.com/content/varalaru/doc/tamilarvaralaru/image/mathiri_manai.jpg' border='0' alt='user posted image'>
பின்னர் யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியுற்றது. தமிழீழத்தின் கிழக்கிலும், மேற்கிலும் இந்தத் தமிழ் வன்னிமைகள் கோட்டை, கண்டி அரசுகளின் மேலாண்மைக்கு உட்பட்டு இருந்தன. ஆனால் வன்னியில் இருந்த அடங்காப்பற்று வன்னிமைகள் எவராலும் அடக்கி ஆளமுடியவிலலை. பின்னர் ஆங்கிலேயர் காலத்திலேதான் பண்டார வன்னியன் வீழ்ச்சியோடு இதுவும் வீழ்ச்சியுற்றது.
<img src='http://www.pathivu.com/content/varalaru/doc/tamilarvaralaru/image/yamuna_aeri.gif' border='0' alt='user posted image'>



கி.பி 13ஆம் நூற்றாண்டிலே தோன்றிய யாழ்ப்பாண இராச்சியம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நீடித்தது. பொதுவாக இதனை ஆண்ட அரசரை ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைப்பர்.

இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து படையெடுப்புக்கள் நடத்தி வெற்றி கொண்ட பரம்பரை ஆகும். இவர்களது ஆட்சி மிகச்சிறப்பாக இருந்து வந்த காலத்திலே போர்த்துக்கேயர் ஆதிக்கத்துக்குப் பின்னர் அதனை எதிர்த்த சங்கிலி மன்னனுடைய தோல்வியோடு முடிவிற்கு வருகின்றது.



<img src='http://www.pathivu.com/content/varalaru/doc/tamilarvaralaru/image/sangiliyan_thoppu.jpg' border='0' alt='user posted image'>



சங்கிலியன் இவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமையால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பேர்த்துககேயர் முயன்றனர். இதன்பின் 1560ஆம் ஆண்டு சங்கிலியனுக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தப்பட்டது. இதனைச் சங்கிலியன் முறியடித்தான். எனினும் பின்னர் ஏற்பட்ட பதவிப் போட்டிகள் காரணமாக சங்கிலியன் இறக்க பிலிட்டி ஒலிவேரா என்ற போர்த்துக்கேய தளபதி தலைமையில் ஒரு படை தரைவழியாகவும் அனுப்பப்பட்டது. தரை வழியாக வந்த 5000 போர்; வீரரைக் கொண்ட படை பூ நகரிக்கூடாகவே வந்தது. இவ்வாறாக 1019ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. அப்போது ஆண்ட சங்கிலி குமாரன் என்பவன் சிறைப்பிடிக்கப்பட்டு கோவாவிற்கு அனுப்பப்பட்டான்.

பதிவு
::
Reply
#16
தகவல்களுக்கு நன்றி. விக்கிபீடியா என்றால் என்ன?
Reply
#17
http://ta.wikipedia.org

இங்கதான் இருந்து எடுத்தது....
லிங்குடுதன் அடுதநாள் அது பெரிசா இருக்கிறதால சமயத்தில வேல செய்யல்ல அதால விட்டுட்டன்... அனேகமா எல்லாருக்கும் விக்பீடியா தெரியும் அதால இடத்தின்ர பேரோட நிப்பாட்டியாச்சு..
::
Reply
#18
தாயகத்தைப் பற்றிய தகவலுக்கு :!:
தொடருங்கள் :!:
நன்றி தல


----- -----
Reply
#19
நேரம் கிடைத்ததால் 6 மாதத்துக்கு முன்பு யாழில் வந்த இக்கட்டுரையினை இப்பொழுதுதான் எனக்கு படிக்க முடிந்தது.
மிகவும் பிரயோசமான தகவல். தலவுக்கு நன்றிகள்.
,
,
Reply
#20
தகவலுக்கு மிக்க நன்றி, பல தெரியாத விடயங்களை அறிந்து கொள்ள உதவியது
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)