Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிம்ப உருவாக்கமும் போரியலும்....
#1
பிம்ப உருவாக்கமும் போரியலும்....

அண்மையில் வாசித்த ஒரு கட்டுரையைத் தழுவி எழுதியது.

பிரச்சார ரீதியிலானா உளவியல் யுத்தத்தில் பிம்ப உருவாக்கம் என்பது முக்கிய பங்கை வகிக்கிறது.உளவியல் ரீதியான யுத்த தந்திரத்தில் பிம்ப உருவாக்கத்தின் பங்கு அவ்வளவாக கணக்கிடப் படாவிட்டாலும்,உள்ளார்ந்தமாக பிம்ப உருவாக்கமே அடிப்படை நோக்கமாக இருக்கிறது.ஆகவே இந்த பிம்ப உருவாக்கம் என்றால் என்ன என்பதயும் ,போரியலில் அது எவ்வகயான தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது என்பதையும் பார்ப்போம்.

மரபு ரீதியான யுத்தத்தில் நேரடி மோதல்களினுடாக எழும் உயிர் இழப்பினூடாகவே வெற்றி பெறப்படுகிறது.ஆனால் ஒரு சிறந்த மதி நுட்பமான தளபதி உயிர் இழப்புக்கள் இன்றி அதே வெற்றியை அடய முடியுமா என்றே சிந்திப்பான்.கிளவுஸ்நிட்ஸின் கோட்பாடு நேரடிச் சமர் ஒன்று நடை பெறாமலே நாம் எமது இலக்கை அடய முடியும் என்கிறது.வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பின் எண்ண ஓடத்திலேயே தங்கி உள்ளது.இந்த எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது அல்லது இயக்குவது எது? நாம் எமது எதிரியின் இந்த எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி அவன் எமக்கு சாதகமான செயற்பாடுகளைச் செய்ய வைப் போமாயின், நேரடிச் சமர் இன்றி எமது இலக்கை அடய முடியுமா? மாசேதுங் கூறியது போல எதிரியின் காதை அடைத்தும் அவனது கண்ணைக் கட்டியும் அவனைக் குழப்பமடயச் செய்யவதன் மூலம் அவர்களின் தளபதிகளின் எண்ணங்களைச் சிதைக்க முடியும்.

பிம்ப உருவாக்கத்தில் இரண்டு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.ஒன்று பிம்பத்தை உருவாக்கும் பொருள் மற்றது அதனைப் பார்ப்பவன்.ஒரே பொருளை இருவர் வெவ்வேறு விதமாகப் பார்க்கலாம்.இந்தப் பார்வையை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவர் பார்க்கும் பொருளின் பிம்பத்தை எமக்குகுச் சாதகமான முறையில் எம்மால் காட்ட முடியும்.இவ்வாறு மற்றவரின் பார்வையைக் கட்டுப்படுத்துவதற்கு ,எமக்கு அவரின் சிந்தனை ஓட்டம் பற்றிய அறிவு அவசியம்.

ஒருவரின் சிந்தனை ஓட்டம் அவரின் கடந்தகால அனுபவங்களினாலும் அவரின் மனதில் உண்மை என்று நிறுவப்பட்ட ஒரு சில அடிப்படைக் கட்டுமானங்களில் இருந்தே எழுகின்றது.எமக்கு சாதகமான ஒரு பிம்பத்தை நாம் எமது எதிரியிடம் ஏற்படுத்துவதற்கு நாம் அவரின் இந்த அடிப்படைக் கட்டுமானங்களை அதற்கு ஏற்றவகையில் உருவாக்க வேண்டும்.இதற்கு அவரின் சிந்தனை தொழிற்படும் விதம் பற்றிய அறிவு அவசியம்.

எவருமே தோல்வி அடைவதை விரும்பார்.எமக்கான வெற்றியைப் பெறுவத்தற்கு நாம் எமது எதிரியின் தோல்வி அவர்களின் வெற்றியாகத் தெரிவதற்கான பிம்பத்தை அல்லது தோற்றப் பாட்டை ஏற்படுத்த வேண்டும்.இதனை மாற்றியமைப்பதற்கு எதிரியின் சிந்தனை ஓட்டம் தொழிற்படும் விதம் பற்றிய அறிதலில் இருந்து ,இந்த பிம்ப உருவாக்கத்திற்கான உளவியல் கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டும்.

(ஆங்கில மூலம்Tongueerception Warfare: a perspective for the future ,Henrik Friman
Researcher, The Swedish National Defence College,
Department of Operational Studies.)

http://www.militaryscience.org/public/medi...man(1999)PW.PDF
Reply
#2
நல்ல கருவோடு கூடிய கட்டுரை நண்றிகள்..
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)