Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
ஜென் கவிதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இலையுதிர்க் கால அந்தி
வெற்றுக் கிளையில்
காகம்.
ஒரு மனிதன்
ஒரே ஒரு மனிதன்
உடன் ஓர் ஈ
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
மனிதர்களே,
மரணம் பற்றி பயப்படுகிறீர்களா,
இப்போதே
இறந்துவிடுங்கள் !
ஒரு முறை இறந்துவிட்டால்,
பின்னர் இறக்கவே மாட்டீர்கள் !
மேலும் ஜென் கவிதை தொடரும்..........
நன்றி : ம.நவீன்
----- -----
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
ஜென் புத்த துறவி அவருடைய தியான முறை கருத்துக்கள் உலக பிரசித்த பெற்றவை
Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
ஜென் கவிதை தொடர்கிறது.............
மலை சிகரத்தின் உச்சியில்
முடிவின்மை விரிந்திருக்கிறது
எல்லாத் திசைகளிலும் ! தனது
நள்ளிரவு பரணிலிருந்து எட்டிப்
பார்க்கும் தனிமை நிலா, பனியடர்ந்த
குளத்தில் தெரியும் தன்
பிம்பத்தை வியக்கிறது.
நடுநடுங்கியவாறு,
நிலவை நோக்கி
காதல்பாடல் இசைக்கிறேன்.
காட்டு வாத்துகளுக்குத்
தம் பிம்பத்தைப்
பதிய வைக்கும் உத்தேசமில்லை.
நீரும்
அவற்றின் பிம்பத்தைப்
பெற
மனம் கொள்ளவில்லை.
ஜென் கவிதைகள் தொடரும்...............
----- -----
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
கரிகாலன் கவிதைகள் அருமை. தொடருங்கள்
ஓஷோ வின் பல நாவல்களில் ஜென் பற்றி படித்து இருக்கிறேன் ,அவரின் கவிதைகளை அறிமுகம் செய்ததிற்கு நன்றிகள்
....
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
மேலும் தொடருங்கள் கரிகாலன்.
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
கவி வரிகள் நல்லாருக்கு .. தொடருங்கள் .
Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
என்னுடைய கவிதையையும் இங்கு பதிகிறேன்.........
என்று மலரும் அமைதி என் மண்ணில் ?
என்று வரும் விடியல் என் நாட்டில் ?
என்று ஓயும் துவக்குச் சத்தம் ?
என்று என் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது ?
என்று மறையும் உதிரக்கறை என் மண்ணில் ?
என்று மலரும் தமிழீழத் தாயகம் ?
என்று கிட்டும் என் மண்ணை நான் ஆளும் உரிமை ?
என்று என் மக்கள் வீதிகளில் வீர நடை போடுவது ?
என்று நாங்கள் மீட்பது இழந்ததை ?
ஆனால்,ஒரு நாள் என் நாட்டில் அமைதியும்,விடியலும்,தமிழீழமும் ஒரு சேர மலரும் நாளை
நோக்கி நோக்குகிறேன்..........................
ஆக்கம் : சா.கரிகாலன்
----- -----
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
Thala Wrote:கவி நல்லாருக்கு கரிகாலன்
அது சரி ஜென் எண்டா யாரு நீங்களா :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஜென் கவிதைகள், கதைகள் சில படித்திருக்கின்றேன், அவற்றை இங்கு அறிமுகம் செய்வதற்கு நன்றி கரிகாலன். அந்த கதைகள் சிலவற்றையும் பொழுதுபோக்கு பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
Karikaalan Wrote:ஜென் கவிதை தொடர்கிறது.............
மலை சிகரத்தின் உச்சியில்
முடிவின்மை விரிந்திருக்கிறது
எல்லாத் திசைகளிலும் ! தனது
நள்ளிரவு பரணிலிருந்து எட்டிப்
பார்க்கும் தனிமை நிலா, பனியடர்ந்த
குளத்தில் தெரியும் தன்
பிம்பத்தை வியக்கிறது.
நடுநடுங்கியவாறு,
நிலவை நோக்கி
காதல்பாடல் இசைக்கிறேன்.
காட்டு வாத்துகளுக்குத்
தம் பிம்பத்தைப்
பதிய வைக்கும் உத்தேசமில்லை.
நீரும்
அவற்றின் பிம்பத்தைப்
பெற
மனம் கொள்ளவில்லை.
ஜென் கவிதைகள் தொடரும்...............
கவிதை உத்திகளில் ஒன்று படிமங்களை உபயோகம் செய்வது. நிலவின் பிம்பம் நீரில் வீழ்கிறது. நீரில் உள்ள சிறு அலைகளினால் நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் அருகில் உள்ள வாத்துகளால் நீரில் எந்த ஒரு பிம்பத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை. அதைப் பற்றி அவை கவலை கொள்ளவுமில்லை. தன்னுள் வாத்துகளின் பிம்பம் விழவில்லை என்று நீரும் கவலை கொள்ளவில்லை.
ஆமாம் - ஒரு மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொழுது அவனுடைய புகழ் எங்கும் பரவுகிறது - விரிகிறது. அதைக் கண்டு அவனே நடுக்கத்துடன் பார்க்கிறேன்.
அதே சமயம் - அற்பர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படி ஒரு புகழ் வாழ்க்கை தேவை என்றும் அற்பர்கள் முனைவதில்லை.
நன்றி கரிகாலன் - நல்லதொரு கவிதையை பதிப்பித்தமைக்கு.
-----------------
-----------------
-----------------
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
இணையுங்கள் - தவறாமல்.
காத்திருக்கிறோம்
-----------------
-----------------
-----------------