Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழப் பெண்களை நோக்கிய ஒடுக்குமுறையென்பது
#1
ஈழப் பெண்களிடம் இவ்வளவு ஆற்றல் வருவதற்குக் காரணம், ஸ்ரீலங்கா அரசும் அதன் படையும் எமது சமூகத்தில் இருந்து வந்த, வருகின்ற பிற்போக்குத் தனமான கருத்துகளுமே என்பதனையும் பல சிந்தனையாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

தமிழர் வரலாற்றிலேயே இல்லாத புரட்சி இதுவெனக் கூறலாம்.

ஆனாலும் ஈழப் பெண்களை நோக்கிய ஒடுக்கு முறையென்பது கோரமானதாகவே இருந்து வந்தது. இதனைச் சிலர் இன்றும் ஏற்றுக் கொள்கிறார்களில்லை என்பது அந்தச் சிலரின் வறட்டுத் தனமான கௌரவத்தையே காட்டுகின்றது.
பெண் உடல் ரீதியாக ஆணிலிருந்து வேறுபடுகின்றதை வைத்துக் கொண்டு, தீர்மானிக்கும் சக்தி ஆணுக்கு என்று நினைப்பதனால் தான் வறட்டுக் கௌரவம் பார்க்கின்றனர்.
குழந்தையைப் பெற்றெடுக்கவும், பாலூட்டவும், கணவர், ஏனைய உறவுகள்... குடும்பமென்று வீட்டுப் பணிசெய்து கிடக்கவும், வீடே உலகென்று பெண் இருந்து விட வேண்டும். அவள் இத்தனையையும் செய்யும் உடல் வலிமையுடையவளாயிருப்பாள்... குடத்தில் நீர் சுமப்பாள், அம்மியில் குளவியிழுத்து அரைப்பாள், நெருப்புக் குழித்து சமைத்துப் போடுவாள். இவைபோன்றவற்றைப் பாராது வேண்டும் வேலைகளையெல்லாம் வேண்டிய பின்னர், மானே, தேனே, மயிலே, குயிலே... என மென்மையானவளாக்கிடுவர்.
வீட்டிலிருந்து பெண்கள் வெளியே போகக் கூடாது என்பதற்கான எழுதப்படாத பல சட்டக் கோவைகளை வீடுகளில் வைத்திருப்பார்கள். அதன் படி பெண்ணின் கற்பு பற்றி எடுத்துரைப்பார்கள்.
இந்த இடத்தில்தான் ஒரு முக்கியமான விடயத்தைப் பார்க்காது தவறு விடுகின்றோம். பெண்கள் வெளியில் போனால் கேலி செய்வது யார்? அவளை பாலியல் ரீதியிலான உடல் சேட்டை புரிபவர் யார்? வன்புணர்ச்சி புரிபவர் யார்? செய்வது ஆண். குற்றம் புரிபவர் உலகே வீடெனத் திரிய பெண்கள் முடங்கிக்கிடக்க வேண்டுமா?

எமது தேசத்தில் இன்னும் முடிவடையாத ஒரு கொடுமையான செயல் திருமண வியாபாரம். அதற்குப் பெண்ணுக்கு சீதனம் கொடுப்பதென்ற நாகரிகமான பெயரொன்றும் உள்ளது. ( இதற்கு பெண்களும் காரணமாக இருப்பது என்ற உண்மையினையும் இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.)

குழந்தைகளாக இருக்கும் போது, விளையாட்டுப் பொருள் பெற்றுக் கொடுப்பதில் இருந்து ஆரம்பமாகும் பெண்கள் மீதான பாகுபாடு, இது இன்று வரை முடிவில்லாத தொடர் கதையாகவே உள்ளது.

இது பற்றி மூத்த பெண் போராளிகளுடனான பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் மூத்த பெண் போராளியான ஜனனியிடம் கேட்ட போது, நாங்கள் மாத்திரம் செய்து சமூகத்தில் பெண்களிடம் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பிற்குப் பின் பெண்களிடம் விழிப்புணர்வொன்று ஏற்பட்டுள்ளது. எமது தேசம் விடுதலை பெறுகின்ற போது, நிச்சயமாக பெண் விடுதலை பெற்றிருப்பாள். சமூகத்தில் அதனை நாம் காண்போமென்றார்.

விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஆரம்ப காலத்தில் ஈடுபடுகின்ற போது கூட, சமூகத்திற்குள்ளிருந்து சிறு நெருடலொன்று வந்தது. ஆனால்... பெண் போராளிகளின் மனவலிமை அவர்களின் சாதனையொன்றினால் சமூகம் விழி விரித்து ஆச்சரியமாக நோக்கியதே தவிர, வேறெதுவும் செய்யவில்லை.

மனிதர் என்பதற்குள் ஆணும் பெண்ணும் அடக்கம். ஆண் - பெண் என்ற பேதமின்றி, சரிநிகர் சமானமாக வாழ வைப்பதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் நிச்சயம் வழியமைக்கும் என்றார்.
ஈழவிடுதலையென்பதில் தனித்து மண்விடுவிப்பு மாத்திரமன்றி, அனைத்து ஒடுக்கு முறைக்குள்ளிருந்தும் விடுதலை, பெண் விடுதலை என்பனவும் அடங்கும்.
தமிழீழப் பெண்களின் வீரம்மிக்க எழுச்சியின் வரலாற்றுப் பதிவு தான் மாலதியின் நினைவு நாளும், தமிழீழபெண்கள் எழுச்சி நாளும் ஆகும்.

இந்த நாளில் பண்டைய வரலாற்றினையும் அதன் தொடர்ச்சிகளையும் புதிய வரலாற்றுப் பதிவினையும், தொடரப் போகும் புதிய சிந்தனைகளையும் போராட்டம் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

இதில் நோயிருந்தால் அதற்கு மருந்திட்டு புதிய வரலாற்றினைப் பெற்று சமமாக வாழ்வோம். அதில் உயர்வென்பதை அடைவதும் ஆரோக்கியம், தாழ்வென்பதை தவிர்ப்பதும் ஆரோக்கியம்.

http://www.thinakkural.com/New%20web%20sit...9/Article-7.htm
Reply
#2
பதிவுக்கு நன்றி நாரதர்.
போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை ஏற்றுக் கொண்ட சமூகம் வெளியில் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுதான் உண்மை. போராளியாகவிருந்த பெண் விலத்தி வந்தபின் வாகனம் ஒட முடியவில்லை. தகப்பனுக்கு உடல்நிலை சரியில்லாத போது உழவுஇயந்திரத்தால் வயலை உழ முடியவில்லை. இதுதான் எங்கள் சமூகம்.
இதுபற்றிய விவாதங்கள் நடந்ததுண்டு. போராளியாயிருக்கும் பெண்ணொருத்தி போராளியாயிருக்கும் வரைதான் அவள் விடுதலை பெற்றவள். விலத்தி வீடு வந்துவிட்டால் அவள் மிகச்சாதாரணமானவள்தான். வழக்கமான அத்தனை அடக்குமுறையும் அவள்மேல் உண்டு. காதல் மறுப்பு, விருப்பமற்ற திருமணம், அடி உதை, கொடுமைப்படுத்தல் என்று அனைத்துமுண்டு. வழக்கம்போல கலியாணம் கட்டி பிள்ளை பெற்று வழக்கமான பெண்ணாக வாழவேண்டியதுதான்.

பெண்கள் விடுதலை பெற இன்னும் நீண்டதூரம் போக வேண்டியுள்ளது.
Reply
#3
தவறவிடப்பட்ட விடயம்:
இயக்கத்தில் கராத்தே உட்பட பல சிறப்புப் பயிற்சிகள் பெற்ற பெண் விலத்திவந்து கலியாணம் கட்டி புருசனிடம் நிதம் அடிஉதை வாங்கி வாழ்ந்ததைக் கண்டபோது பெண்விடுதலை பற்றிப் பலமான ஐயம் வந்தது.
ஒருவேளை ஆயுதங்கள்தான் பலமோ?
Reply
#4
கனக்க வேண்டாம் இவோன், இஞ்ச தமிழீழம் எண்டால் எங்கடை மூச்சு, இரத்தம், சுவாசம், கஞ்சிகுடிச்சும் பிடிப்பம் எண்டு அடைமொழி வைச்சு தங்கடை தேசியப்பற்றை பற்றி சுய தம்பட்டமடிக்கிறவையில எத்தினபேர் ஒரு விலகிய பெண் போராளியை மனைவியா ஏற்றுக் கொள்ளுவீனம்?

அங்கவீனம் என்ற பொறுப்பு இல்லாவிட்டாலும் எத்தினபேர் தயார்?

எத்தின போர் மாவீரர் குடும்பத்திற்கு போரளிகள் குடும்பத்திற்கு உதவீனம்?

ஓளிவீச்சு, இசை இறுவெட்டுகள் போன்ற தாயக வெளியீட்டை கள்ளப் பிரதி எடுத்து விக்கிற கடைக்காரர் தெரியும். செந்தப்பாவனைக்கு தெரிந்தவர்கள் உறவினார்களிடம் எடுத்து கள்ளப்பிரதி செய்யிற நாட்டுப்பற்றாளர்களும் இருக்கினம். நாட்டுப்பற்றாளர்கள் என அளவுக்குமின்சி கோசமிடுபவர்கள் பல ரகம். அவயின்ரை வாழ்வு போடுற கோசத்துக் ஏற்ற மாதிரி இருக்கும் எண்டு நினைச்சால் நீங்கள் முட்டாள்.
Reply
#5
எமது சமுதாயத்தில காலம் காலமா புரயோடிப் போயிருக்கிற கான்சர தொடர் போராட்டங்களால தான் அகற்றலாம்.இது கஸ்ட்டம் தான்,இயக்கத்துக்க இருக்கிற கட்டுப்பாடு தலமையின் அரசியல் தெளிவு இரண்டும் தான் அவைக்குப் பாதுகாப்பா இருக்குது.அதை விட்டு வெளியால போனா எங்கட சமூகத்தில இருக்கிற பேயள் தான் அவயின்ட வாழ்க்கயத் தீர்மானிக்குது.இந்தப் பேயள விரட்ட தொடர்ச்சியான அரசியல் போர் இந்தத் தமிழ் சமூகத்திடம் நடத்த வேன்டியதாக் கிடக்குது.

இதில காயம் பட்டாலும் பறுவாயில்ல இறுதியில பழயன கழிதலும் புதியன புகுதலும் நடந்துகொன்டு தான் இருக்கும்.என்ன மாற்றங்கள் நாங்க நினைக்கிற வேகத்தில நடக்காது,ஆனா மாற்றத்துக்கான உந்து சக்திகள் தோன்றிக் கொண்டே இருக்கும்.
Reply
#6
முறத்தால் புலியை அடித்து தமிழ் பெண் துரத்தினாள்.என்று சங்கால பாடலில் மட்டும் காணுகிறோம்.கொல்லைபுறத்துக்கே துணையின்றி போக பயந்த சுபாவமாக பழக்கிய சமுகத்தில் தனது புலியாக போராடி சக்தியை காட்டினாள் . வியந்தார்கள் பாராட்டினார்கள்...பெண்களிடையே பெண்கள் விடுதலை பற்றி சிந்தனை வளர்ந்தது..ஆனால் சமூகத்தில் சிந்தனையில் பெரிய மாற்றத்தைக்காணவில்லை பெண்கள் எதிரான பழைவாத கட்டுமான அமைப்பை உடைப்பதற்க்கான போராட்டங்களை மற்ற தொழிலாளர்கள் மாணவர்கள் புத்திஜீவிகளுடன் இணைந்து சமூக மாற்றத்திற்க்கான பணியை செய்வதன் மூலம் தான் பெண்களுக்கான முழு ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெற முடியும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)