Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலர் (டிவி) கனவுகள்
#1
<img src='http://img142.imageshack.us/img142/7909/mugamoodi20dmk4gx.jpg' border='0' alt='user posted image'>


ஏழை மக்களுக்கு கலர் டி.வி. வழங்க ரூ. 1060 கோடிதான் செலவாகும். கலர் டி.வி. கொடுத்தே தீருவோம். கருணாநிதி சபதம்.

போடுங்க போடுங்க.. உங்கப்பன் வீட்டுதா எங்கப்பன் வீட்டுதா.. நீங்கள் உழைத்து சம்பாதித்ததா, நான் உழைத்து சம்பாதித்ததா.. அரசு கஜானாதானே.. நல்லா போடலாம்

ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தந்து பொழுதுபோக்குக்காக, பொது அறிவை பரப்ப, பகுத்தறிவு பாடம் கற்றுத்தர டி.வியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிவித்திருக்கிறேன்.

காலேஜ் பசங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் எப்படி மாமாங்கிற வார்த்தையோட அர்த்தமே கேவலமா ஆச்சோ, அது மாதிரியே திராவிட "கட்சி"ங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் பகுத்தறிவுங்கற வார்த்தையோட அர்த்தமும் கேவலமாயிடுச்சி... டிவியால பொது அறிவு வளருதுன்னு சொன்னா "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" பாட்டுக்கு டான்ஸ் ஆடுற குட்டி பாப்பா கூட கேவலமா சிரிக்கும். தமிழ்நாட்டுல தூர்தர்சன எவ்வளவு பேர் பாக்குறாங்க அதோட ப்ரோக்ராம் என்னன்னு எல்லாம் யாருக்கும் தெரியாது.. ஆனா "பெரும்பான்மை" பார்க்கிற சன் டிவியின் 24 மணிநேர நிகழ்ச்சி நிரல் இங்கே இருக்கு.... இதில் பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் எவ்வளவு, பகுத்தறிவு பாடம் கற்றுத்தரும் நிகழ்ச்சிகள் எவ்வளவு என்பது "கடவுளுக்கே" வெளிச்சம்.

தமிழகத்திலே மொத்தம் 156 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளன.

முப்பது ஆண்டு திராவிட கட்சிகளின் சாதனைன்னு கேட்டா சொல்ல ரொம்ப முக்கியமான புள்ளிவிவரங்கண்ணா.

முதல்கட்டமாக இவர்கள் அனைவருக்கும் கலர் டி.வி வழங்க வேண்டும் என்றால் 53 லட்சம் டி.விக்கள் தேவை.

கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில வையின்னு வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களுக்கு "முதல்கட்டமா" டி.வி வழங்கணும்னு எப்படிங்கண்ணா தோணுச்சி.. அது சரிதான்.. கும்பி காஞ்ச மக்களுக்கு செவிக்கும் கண்ணுக்கும் சிறிது ஈயவும்னு அய்யன் சொல்லியிருக்காருல்ல.. செய்ய வேண்டியதுதான்... ஆனா சமையல் குறிப்பு ஸ்பெஷல் போடும்போது வினோதினிய வச்சி மைக்ரோவேவ்ல எலிக்கறி சமைப்பது எப்படின்னு சொல்லி கொடுக்க மட்டும் மறக்காதீங்க.. விவசாயம் பொய்ச்சா, இந்த மாதிரி ஒரு அய்ட்டம் செய்யலாம்னே தெரியாம கெரகம் பச்சை எலிய அப்படியே சாப்பிடுறாங்களாம்...

30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது சாதாரண தொகைதான். முடியாதது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்க ஊர் கிழவி பொட்டிக்கடையாண்ட உக்காந்துகிட்டு என்ன சொல்லும்னா "ஏண்டா வெட்டி பயலுவளா, இப்படி பீடி குடிச்சே காச கரியாக்குறீங்களேடா"ன்னும்.. அதுக்கு நம்ம பயலுவ எல்லாம், "கெழவி, மாச சம்பாத்தியாம் 1000 ரூவா வாங்குறோம்.. அதுல 20 ரூவா பீடிக்கட்டுல என்ன பெரிசா ஆயிடப்போவுது"ன்னு சொல்லுவாங்க. "அட கருமாந்திரம் புடிச்ச பசங்களா... சந்தனம் மீந்துச்சின்னா ***யில தடவ சொல்லுதா.. அத உருப்படியா எதுக்காச்சும் செலவு பண்ணுங்கடான்னும்... இந்த மாதிரி கிழவிங்க எல்லாம் இப்ப இல்ல...

இதை 2 ஆண்டில் வழங்குவோம். ரூ.2 ஆயிரத்தில் டி.வி.வழங்க மொத்தம் 1060 கோடி செலவாகும்.

2 ஆயிரத்தில் டி.வியா? சரி.. சரி... நான் கூட கலர் டிவின்ன உடனே கலர்ல தெரியிற டிவின்னு நினைச்சேன்.. தேர் திருவிழாவுல கிடைக்கிற டிவிக்கு கலர் அடிச்சி கொடுக்கிறாங்க போல... இல்ல உண்மையிலேயே 4 இன்ச் கலர் டிவி எதுவும் 2 ஆயிரத்துக்கு கிடைக்கிதா? இதுல மந்திரி/எம்.எல்.ஏ கமிசனே டிவிக்கு 2 ஆயிரம் ஆயிடுமேப்பா..

அதாவது ஆண்டுக்கு ரூ.530 கோடிதான். இது ஒரு பெரிய தொகையே அல்ல.

அப்படியே வீட்டுக்கு ஒரு டூ-வீலரோ காரோ வாங்கி கொடுக்கலாம்.. 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே கார் நிறுத்த ஒரு வீடு கட்டி கொடுக்கலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே எல்லாருக்கும் மூணு வேளை சோறும் போடலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே அன்ன சத்திரம் கட்டி சீட்டு விளையாட கொஞ்சம் பணமும் கொடுக்கலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே கோட்டையை இடித்து விட்டு அரண்மனை கட்டி, கார்களுக்கு பதிலாக ரத கஜ துராதிகளை நியமித்துக்கொள்ளலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல....

ச(ப்)பதம் நன்றி :: தமிழ்முரசு
.

.
Reply
#2
இந்தச் செய்தி தமிழ்முரசில் வரவில்லை.... ஆனால் பிருந்தன் நன்றி : தமிழ் முரசு என்று போட்டிருக்கிறார்.... இது களவிதிகளுக்கு ஏற்புடையதா?

இது போன்ற பொய்யர்கள் சொல்லும் கருத்தினை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கள நண்பர்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.....
,
......
Reply
#3
வாங்க மடிப்பாக்கம் மைனர் !
உங்கள் வலைபக்கம் நன்றாய் இருக்கிறது.வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
!




-
Reply
#4
நன்றி உடன்பிறப்பே..... மெதுவாக கழகக் கொள்கைகளை உள்ளே நுழைப்பேன்....
,
......
Reply
#5
Luckyluke Wrote:இந்தச் செய்தி தமிழ்முரசில் வரவில்லை.... ஆனால் பிருந்தன் நன்றி : தமிழ் முரசு என்று போட்டிருக்கிறார்.... இது களவிதிகளுக்கு ஏற்புடையதா?

இது போன்ற பொய்யர்கள் சொல்லும் கருத்தினை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கள நண்பர்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.....

நல்ல கண்டுபிடிப்பு லக்கிலுக், உமது பப்பு எங்கு வேகுமோ அங்குதான் உமது, செயல்கள் நடை பெறும், என்பது எனக்கு தெரியும், அப்படி என்றால் எங்கு வந்தது என்று போட்டிருக்கலாம்தானே, அது உமக்கு தெரியாது எனமட்டும் கூறாதீர், ஏனென்றால் உமது பப்பு அங்கு வேகாது என்பது உமக்கு தெரியும். இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் யாழ்களம் தரும் கருத்து சுதந்திரத்தை நீர், ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சை படுத்துவதற்காகவும், விடிதலைப்புலிகளை நீர் பழிப்பதற்காகவும் பயன்படுத்தியதையும், அதனால் நீர்சிறிதுகாலம் களத்தில் இருந்து வெளியேற்றி வைக்கப்பட்டதும், களம் அறியும், பின்னர் அனுமதித்தபோது வந்து ஓலமிட்டது, உனது புலி எதிர்ப்பை அடக்கிவைத்திருப்பதும் எமக்கு தெரியும், உமது பப்பு நல்லா அவிக்ககூடிய இடம் தற்ஸ்தமிழ் அங்கு நீர் அவித்தவற்றை நாம் பார்த்தவர்கள்தான். கலர்ரீவி கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது போல் எம்மை ஏமாற்றமுடியாது,
செய்தியின் உன்மைதன்மையை முதலில் பார். கருனாநிதி கலர்ரீவி தருவோம் என்று கூறீனாரா இல்லையா? தமிழ்நாட்டு சினிமா பயித்தியங்களுக்கு சினிமா பார்க்க கலர்ரீவி கொடுத்து, வாக்கை அள்ளலாம் என மணக்கோட்டை கட்டுவது யார், அவருக்கு வக்காலத்து வாங்கும் உமக்கு அது பற்றி நான் இங்கு செய்தி போட்டால் எரிவது ஏன்? தமிழ்நாட்டை மேலும் சினிமாவின் பிடியில் வைத்திருக்க நீரும் உடந்தையா? இதுதான் பகுத்தறிவு சிங்கங்கள் செய்யும் அசிங்கங்களா?

இது கருனாநிதி கலர்ரீதருவதாக சொன்னசெய்தி.
http://epaper.tamilmurasu.in/2006/Apr/06/1.html

இது நான் படி எடுத்த இணைப்பு,
http://mugamoodi.blogspot.com/

இது அங்கு நீர் டைம்பாசிங்குக்காக சொன்ன கருத்து.
luckylook said...
சும்மா ரோட்டில் போகிறவன், வர்றவனுக்கெல்லாம் அதிமுக வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 1,000 2,000 என்று கொடுக்கும்போது யாராவது இதுபோல விமர்சனம் செய்தீர்களா? அதிமுக மட்டும் இலவசத்திட்டங்களை அறிவித்து எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும்.... திமுக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பற்றி பேசி தோற்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா?

வேறு வழியில்லாமலே தான் கலைஞர் "இலவச டிவி" என்று களத்தில் இறங்கி விட்டிருக்கிறார்....

அதிமுகவை எதுவும் சொல்லாமல் திமுகவை மட்டுமே குறைசொல்வது அறிவுஜீவித்தனம் என்று நினைத்துக் கொண்டிருபது மடமை....
April 07, 2006 6:28 AM.

உமது பப்பு அங்கு வேகாது, யாழ்களம் தரும் கருத்து சுதந்திரத்தை வைத்து, ஒட்டுமொத்ததமிழருக்கும் உமது பப்பை அவியும், <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#6
லக்கிலுக்

பிருந்தன் ஆதாரத்துடனே நிரூபித்திருக்கிறார். இதன்படி பார்த்தால் நீங்கள்தான் பொய்யர். எங்கே இதனை பொய் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா பார்க்கலாம்.

Reply
#7
என்ன செல்வமுத்து ஆசிரியர்

ஆகா இதனையும் பட்டிமன்றம் ஆக்குகின்றீர்களா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் ஒரு கருத்தை இங்கு எழுதுகின்றீர்கள். அதனை எனது வசதிக்கேற்றவாறு உல்டா பண்ணி எனது வலைப்பதிவில் பதிவு செய்து கீழே நன்றி செல்வமுத்து ஆசிரியர் என்று நான் போட்டால் அது உங்கள் கருத்தாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா??

இதே வேலையைத்தான் தமிழ்முரசு வெளியிட்ட செய்தியை முகமூடி வலைப்பதிவும் செய்திருக்கின்றது. பிருந்தன் முகமூடி செய்த உல்டாவைத்தான் இங்கு பதிந்துள்ளார். பதிவு ஏடுக்கப்பட்டது முகமூடி வலைப்பதிவில் என்று குறிப்பிடவேயில்லை. இதனால் பார்ப்பவர்கள் இவ்வாக்கம் தமிழமுரசில் வந்ததாகவே நினைக்கத் தோன்றும் அல்லவா?? பிருந்தன் தந்த இரு இணைப்பையும் சென்று பாருங்கள் புரியும். இதை எப்படி ஆதாரம் என்கின்றீர்கள். :roll: :roll:
<i><b> </b>


</i>
Reply
#8
வசம்பு கருனாநிதி கலர்ரீவி கொடுபேன் என்று சபதம்(சப்தம்)
போட்ட இடம் தமிழ்முரசு, அதற்குதான் நன்றி சொல்லப்பட்டிருக்கு, அவரது சபதத்தை பேய்காட்டுவித்தை என்று முகமூடி ஆராய்ந்திருக்கிறார். லக்கிலுக் அங்கும் போய் ஓலமிட்டு இருக்கிறார். அதுசரி லக்கிலுக் எங்கு போனாலும் நீரும் வருகிறீர், ஆதரவு தருகிறீர், இது என்ன மாதிரியான கூட்டனி, சந்தர்பவாதகூட்டனியா? அல்லது வருங்கால சந்தர்ப்பங்களை எதிபார்த்து கூட்டனியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#9
சந்தர்ப்பவாதக் கூட்டணியோ, சாதிக்கும் கூட்டணியோ நீங்கள் ஏன் நன்றி முகமூடி என்று போடவில்லை.... அந்தச் செய்தி தமிழ் முரசில் வந்தது போல அனைவருக்கும் நினைக்க வேண்டும் என்று தானே.... உங்க பப்பு எங்க கிட்டே வேகாது நைனா.....
,
......
Reply
#10
Luckyluke Wrote:சந்தர்ப்பவாதக் கூட்டணியோ, சாதிக்கும் கூட்டணியோ நீங்கள் ஏன் நன்றி முகமூடி என்று போடவில்லை.... அந்தச் செய்தி தமிழ் முரசில் வந்தது போல அனைவருக்கும் நினைக்க வேண்டும் என்று தானே.... உங்க பப்பு எங்க கிட்டே வேகாது நைனா.....

இந்த கட்டுரை தமிழ்முரசில் வந்தது என்றால் எனக்கு என்ன லாபம்?
லக்கி நான் எப்போதும் கட்டுரையின் உண்மைதன்மையைதான் பார்ப்பவன், லக்கி கருனாநிதி அப்படி சொன்னாரா இல்லையா? தமிழ்நாட்டு மொத்தசனத்தொகை எவ்வளவு? ஒரு கலர்ரீவி என்னவிலை? ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொன்று அவரது பட்ஜட்டில் கொடுக்கமுடியுமா? இது நடைமுறைக்கு சாத்தியமானதா? அல்லது இது கருனாநிதியின் ஏமாற்று வித்தையா? :wink:
.

.
Reply
#11
தமிழ்நாட்டில் மொத்தம் ஒண்ணரை கோடி குடும்பங்கள் இருக்கின்றன.... அதில் 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கின்றன.... அவர்கள் வீட்டில் கலர் டிவி இல்லையென்றால் அரசுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.... இது இரண்டு கட்டமாக வழங்கப்படும்.... இதற்காக ஆண்டுக்கு 540 கோடி செலவாகும்.... ஆண்டுக்கு 30,000 கோடிக்கு பட்ஜெட் போடப்படும் தமிழ்நாட்டுக்கு இது சாத்தியமே....
,
......
Reply
#12
Luckyluke Wrote:தமிழ்நாட்டில் மொத்தம் ஒண்ணரை கோடி குடும்பங்கள் இருக்கின்றன.... அதில் 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கின்றன.... அவர்கள் வீட்டில் கலர் டிவி இல்லையென்றால் அரசுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.... இது இரண்டு கட்டமாக வழங்கப்படும்.... இதற்காக ஆண்டுக்கு 540 கோடி செலவாகும்.... ஆண்டுக்கு 30,000 கோடிக்கு பட்ஜெட் போடப்படும் தமிழ்நாட்டுக்கு இது சாத்தியமே....

உங்களுக்கே இது அபத்தமாக படவில்லையா? தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய பிரச்சினை கலர்ரீவிதானா?
எத்தனை இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை வாய்பை உருவாக்கி கொடுங்கள் அவர்களே கலர்ரீவி வாங்கிக்கொள்வார்கள், எவ்வளவு மக்கள் தெருவோரங்களில் பசியுடன் படுத்திருக்கிறார்கள், நித்திரையில் எத்தனை லாறிகள் அவர்கள் மீது ஏறி இருக்கிறது, அதை விட கலர்ரீவி பெரிய பிரச்சினையா? சேரிகளில் போதிய மருத்துவ வசதி இருக்கிறதா? லஞ்சத்தை ஒளிப்பதாக கூறுங்கள், அதுமுடியாது, ஏனெனில் ஆட்சிக்கு வந்தவுடன். செய்வதே அதுதானே, கருனாநிதி சொல்கிறார் தான் முதலமைச்சர் ஆனவுடன் ஆறு கோடிகளுடன் ஒரு சாராய வியாபாரி வந்து, பெட்டியை எங்கு வைப்பது என்று கேட்கிறாராம், அந்த சாராய வியாபாரி இப்போ எங்கே, மாதத்துக்கு 6 கோடி என்றால் வருடத்துக்கு? இது சாதாரனமா கொடுப்பதுதான் என்று, முதலமைச்சருக்கே அவர் சர்வ சாதாரனமா கூருகிறார் என்றால், லஞ்சம் எந்தளவுக்கு ஊடுறுவி இருக்கிறது.
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)