10-21-2005, 02:00 PM
நாட்டு நடப்பு
<i>நன்றி நிதர்சனம் இணையத்தளம்</i>
வணக்கம் பிள்ளையள்! தயவு செய்து மற்றம்படியை விட இண்டைக்குச் சொல்லிறதை கொஞ்சம் கூடுதல் ஞாபகசக்தியோட உள்வாங்கிக் கொள்ளுங்கோ! ஏனெண்டால் நான் கிழவன், நாளைக்கே செத்துப்போனாலும் எங்கட இனம் பட்ட வேதனை சந்ததி சந்ததியாய் மறக்கப்படாமல் வைச்சிருக்கப்படோணும். கொஞ்ச நாளைக்கு முன்னால விடுவிக்கப்பட்ட எங்கட பிரதேசத்துக்குள்ளை 3 சிறிலங்காப் பொலிஸ்காரர் அனுமதியில்லாமல் உள்நுழைஞ்ச நேரம் பிடிபட்டிருக்கினம். முன்னுக்குப்பின் முரணாய் அவையள் சொல்லிற எல்லாக் காரணமும் ஒப்பந்தத்துக்கு முரணானவையாகவே இருக்கிது. தங்கட கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ளை புலியள் அனுமதி எடுக்கோணும் எண்டு அவையள் கதைக்கிற அதே சட்டத்தைத் தான் எங்கட காவல்துறையும் கதைக்கிது. ஆனாலும், கண்காணிப்புக்குழுவில இருக்கிற ஒரு அம்மணி இது யுத்தநிறுத்த மோதல் எண்டு குதிக்கிறா. அதேன் பாருங்கோ, சிங்களவர் தான் மனுசர், நாங்களெல்லாரும் வேறஏதோ ஜந்துகளே? பிந்துனுவௌ குற்றவாளியளை சாட்சியில்லை எண்டு விடுவிக்கிறது, சுனாமியால உறவுகளை இழந்து பாதிக்கப்பட்டு கூடாரங்களில வேதனை வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட சனத்துக்கு உதவியள் கிடைக்கிறதை முடக்கிறது. அதேநேரம் 80 மில்லியன் நிவாரண நிதியைச் சுருட்டின மகிந்த ராஜபக்ச மீதான விசாரணை தொடர்ந்து நடக்கவிடாமல் குற்றவாளிக்குப் பகிரங்கப்பாதுகாப்பு வழங்கிறது எண்டு எதுக்கும் கூசாத உச்ச (அ)நீதி மன்றம் இயங்கிற சிறிலங்கா மாதிரியில்லை எங்கட தமிழீழம்.
அவையள் சொல்லிற மாதிரி குழந்தையளோட முறைகேடான நடத்தையில ஈடுபட்ட ஒருத்தரைத் தேடித்தான் வந்தவையெண்டால், எங்கட காவல்துறைக்கு அறிவிச்சுப்போட்டு புளியங்குளத்திலோ, உயிலங்குளத்திலோ ராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்தில இவையள் காத்திருந்தால் எங்கட காவல்துறை அந்த ஸ்மித்தை பிடிச்சுக்கொண்டு போய்க்குடுத்திருக்கும். சிவில்சார் சட்ட மீறல்கள், அதிலையும் குழந்தைப்பிள்ளையள் விசயத்தில பாதிக்கப்படிறது எந்த இனமெண்டாலும், பேதமில்லாமல் செயற்படிற கட்டமைப்பைத்தான் தலைவர் இஞ்சை உருவாக்கி வைச்சிருக்கிறார்.
அப்படி இருக்க ஸ்மித் கொழும்பில சரணடைஞ்சு, 2-3 நாளிலையே சட்டபூர்வமான பாலியலுக்கான வயசை 13ஆக மாற்றியிருக்கினம். நான் 14 வயசில கூட புத்தகத்துக்குள்ளை மயிலிறகு வைச்சுப்போட்டு, குட்டி போடுமெண்டு பார்த்துக் கொண்டிருந்த வெங்காயமாய்த்தான் இருந்தனான். 1995இல சந்திரிகா ஆட்சிக்கு வந்ததில இருந்து இதுநாள் வரைக்கும் செய்த ஒரேயொரு நல்ல காரியம் உந்த வயசெல்லையை 16 ஆக உயர்த்தினதுதான்.
இப்ப போறநேரம் அந்த ஒரேயொரு நல்ல பெயரையும் வாபஸ் பெறுகிற மாதிரி 13 ஆகக் குறைச்சாச்சிது. இப்பிடியொரு சட்டமாற்றம் வரப்போறதை அறிஞ்சுதான் ஓடியொளிச்ச பிரிட்டிஷ் ஸ்மித் சரணடைஞ்சிருக்கிறான் போல!
ஏனெண்டால் இனிமேல் வழக்கெல்லாம் குழந்தைகள் - துஸ்பிரயோகம் எண்டில்லாமல் ~வன்புணர்ச்சி| எண்டளவில தான் பார்க்கப்படும். ஒரு 10 வருசத்துக்கு முன்னால சுவிடன் தலைநகரம் ஸ்ரொக்ஹொல்ம் இல நடந்த சர்வதேச மாநாடு ஒண்டில சின்னனுகளில வக்கிரம் கொள்ளிறதுகளுக்கு எதிராக ஏக மனதாய் கன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதுக்குக் கொஞ்சக் காலம் பிறகு தெற்குக் கடற்கரையில வெள்ளைக் கிழடு ஒண்டு துர்நடத்தையில அகப்பட்டு 20 வருச சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
ஆனாலும், மேலைத்தேய அழுத்தங்களால 2வருசத்தில ஆள் விடுதலை செய்யப்பட்டது. உங்களுக்குத் தெரியும்தானே, தாய்லாந்துக்கு அடுத்த இடத்தில சிறிலங்கா சிறுவர் விபச்சாரத்தில சர்வதேச புகழ் எண்டு. பற்றாக்குறைக்கு பாவங்கள் 6 லட்சம் சிங்களக்குடும்பப்பெண்கள் மத்திய கிழக்கில பணிப்பெண் வேலையளுக்கெண்டு போய்நிக்கிறதால அதுகளின்ரை சின்னப்பிள்ளையளும் மோசமான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முகங்குடுக்க வேண்டியிருக்கிதாம்.
உந்த வெளிநாடான வெளிநாடுகளிலையே 16 ஆக இருக்கிற வயசெல்லையை 13 ஆகக்குறைக்கிறது தங்கட வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்ளிறதுக்காக சிறிலங்காவுக்கு வாற வெளிநாட்டு உல்லாசியளுக்கு வழங்கப்படிற சட்டரீதியான பாதுகாப்பாகத்தான் இருக்கப்போகுது.
எங்கட விடுதலைப்போராட்டத்தை நசுக்கப்பார்க்கிற பேரினவாதம் யுத்தத்துக்கு செலவளிக்கிறதுக்காக எப்படியெல்லாம் கேவலங்கெட்ட வழியில பணம் சம்பாதிக்க விழையிதெண்டு பார்த்தனீங்களே! உதுகளை கொஞ்சம் யுனிசெப் காரர் கவனிச்சால் என்னவாம்! ஆனால், எங்களுக்கெண்டு நீதியான தமிழீழச் சட்டம் இருக்கிது.
மற்றது ஐரோப்பியக்கூட்டமைப்புக்கு புதுசாய் தலைமை தாங்கிற பிரித்தானியா புலியளின்ரை வன்முறைகளைத் தொடர்ந்தும் அனுமதிக்கேலாது எண்டு அறிக்கை விட்டிருக்கிதாம். இல்லை நான் கொஞ்சம் விளக்கம் குறைஞ்சனான், சில விசயங்கள் எனக்கு விளங்கேல்லை: எங்கட இனம் சுனாமியில 26 000 சொந்தங்களைப் பலிகொடுத்திட்டு வீடுவாசலுகளை இழந்து 10 மாதமாக அநாதரவாய் இருக்கிற நிலையில, அவையளுக்குக் கிடைக்க இருந்த உதவியளை கதிர்காமரும், உச்ச (அ)நீதிமன்றமும் சேர்ந்து முடக்கினதுக்கு ஒண்டுமே சொல்லாமல் இருந்தவை, இருந்தாப்போல இப்ப ஏனாம் துள்ளியடிக்கினம். ~~உச்சநீதிமன்றம் பொதுக்கட்டமைப்புக்கு விதிச்ச தடை வருத்தம் தருவதாகும்||, எண்டு கிளின்ரன் சொல்லியிருக்கிறார். சுனாமி, கட்ரீனா, றீற்றா போன்ற இயற்கை அனர்த்தங்கள் வருத்தம் தரலாம். ஆனால், ஊழல் விசாரணையளில இருந்து மகிந்தவுக்கு விடுதலை அளிச்ச உச்ச (அ)நீதிமன்றம் நிவாரணங்களை முடக்கினது திட்டமிட்ட நயவஞ்சகம் பாருங்கோ!
போயும் போயும் நேற்று வைச்ச புத்தர்சிலையை எடுக்காமல் ஏமாத்திற சிங்களப்பேரினவாதத்தின்ரை போக்குகளை விமர்சிக்க முன்வராத தரப்புகளுக்கு, அறிக்கை விடுகிற தகுதி ஏதாவது இருக்கோவெண்டு கேட்கிறன். நாகர் கோவிலில எங்கட சின்னனுகளை சிங்களவன் கொல்லிறதை கண்டும்காணாமல் விட்ட சர்வதேசங்களுக்கு இண்டைக்கு மட்டும் எங்கையிருந்து உந்த அக்கறை வந்தது? இடப்பெயர்வுக்கிள்ளை எங்கட இனம் பட்ட இன்னல்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தையாவது தராத ஐ.நா உட்பட உந்த நாடுகளெல்லாம் நீதி, நியாயம் பற்றிக் கதைக்கிற உரிமை உள்ளவையோ?
அவர் ரணில் வேற ஜேவிபியையும் பேச்சுவார்த்தையில கலந்துகொள்ளச் செய்வாராம். தான் நல்ல பிள்ளை பத்திக்கொண்டு ஜேவிபியைச் சாட்டி இழுத்தடிக்கிறதுக்காக! சீனாவில 4 பேர் கூடிநிண்டு கதைச்சாலேயே ஜனநாயகத்துக்கான போராட்டம் எண்டு தங்கட செய்தியில போட்டு, அங்கை அரசியல் மாற்றம் வேணுமெண்டு கூச்சல் போடிற உவையளுக்கு எங்கட மக்கள் எழுச்சிகள் கண்ணுக்குள்ளை குத்தேலையோ!
ஈராக்கில எந்த அதிகாரப்பங்கீடு அவசியம் எண்டு உவையள் வலியுறுத்தினமோ அதே அதிகாரப் பங்கீட்டுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எங்கட விசயத்தில எடுக்கப்பார்க்கினம்.
பட்டப்பகலில பிந்துனவௌவில 12 வயசுப்பொடியன் தலை நசிச்சுக் கொல்லப்பட்டதுக்கு சாட்சியுமில்லை, குற்றவாளியும் இல்லை. ஆனால், கதிர்காமரை மட்டும் புலியள் சுட்டவை எண்டு ஜேம்ஸ் பெண்டு 008 சந்திரிகா சொல்லிறதை நம்பிடுவினம். ஒண்டுமில்லை பாருங்கோ! முதுகெலும்பு உள்ள மூன்றாமுலக நாட்டை பணக்கார நாடுகளுக்கு பெரிசாய் பிடிக்கிறேல்லை.
எங்களிட்டை பலமான படையும், நாங்கள் எல்லாரும் பெருமை கொள்ளத்தக்க நிகரற்ற தலைவரும் இருக்கேக்கிளை தயங்காமல் எல்லாரும் சேர்ந்து உழைச்சால் பொருளாதார வல்லமை படைச்ச நாடாக தமிழீழமும் ஆகலாமோ இல்லையோ!
அதிலையும் வன்முறையைப் பற்றி பிரிட்டன் விமர்சிக்கிறது எனக்கு வேதனையிலயும் சிரிப்பாயிருக்கிது பாருங்கோ! ஆசிய, ஆபிரிக்க நாடுகளெண்டு யுத்தம் நிலவிற 20இற்கும் குறையாத நாடுகளின்ரை இண்டைய நிலமைக்கு ~~சூரியன் அஸ்தமிக்காத புகழ்|| பிரித்தானிய சாம்ராச்சியம் தானே காரணம்! 2000 வருசத்துக்குப் பிறகு பைபிளில பழைய வேதாகமத்தில குறிப்பிடப்பட்டிருக்கிறதை அடிப்படையாக வைச்சு யூதர்களுக்கு தனிநாட்டுரிமை இருக்கிதெண்டு சொன்ன நாடுதானே பிரிட்டன்.
இல்லைப்பாருங்கோ 20ஆம் நு}ற்றாண்டின்ரை ஆரம்பகாலப் பகுதியில யூத மக்கள் தங்களுக்கு எதிராய் ஐரோப்பிய நாடுகளில உருவான எதிர்ப்புணர்வைத் தொடர்ந்து பழைய வேதாகமத்தில குறிப்பிட்டதை வைச்சு பலஸ்தீனத்தில அமைஞ்சிருக்கிற இஸ்ரேலுக்கு குடிபெயரத் தொடங்கிச்சினம்.
கொஞ்சக்காலத்தில ஏற்கெனவே அங்கை வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில பிரச்சினையள் முத்திக்கொண்டு வந்திட்டிது. அந்த நேரம் பிரித்தானிய சாம்ராச்சியத்தின்ரை நிர்வாகத்துக்கு உட்பட்டிருந்த பலஸ்தீனத்தை பிரிட்டன் உடன ஐ.நாவோட (ஐ.நா உருவானது 1945இல்) சேர்ந்து 1948 இல இரண்டாய்ப் பிரிச்சு இஸ்ரேலை அமைச்சுக் கொடுத்திது. 2000 வருசக் கதையை வைச்சு அங்கை அப்பிடி செய்த பிரிட்டன் 238 வருசத்துக்கு முன்னால எங்களுக்கு இருந்ததையும் கெடுத்து குழப்பம் உருவாகிறதுக்கு காரணமாய் அமைஞ்சது மட்டுமில்லாமல், தொடர்ந்தும் பிழையளை விடவெல்லே பார்க்கிது. எங்கட தாயக உரிமைக்கு ஒண்டில்லை ஓராயிரம் ஆதாரங்கள் எங்களிட்டை இருக்கிது.
எங்கட தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒரு நிபந்தனையும் வைக்கேல்லை. அரசாங்கம் தான் தங்கட கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில வைக்கோணுமெண்டு நிபந்தனை விதிச்சிருக்கிது. இல்லை தங்கட வெளிநாட்டமைச்சருக்கே பாதுகாப்பு வழங்கேலாத அரசாங்கத்தை நம்பி, என்னண்டு நாங்கள் எங்கட ஆட்களை அனுப்பிறது! ஆ... சொல்லுங்கோ பார்ப்பம். பக்கத்தில இருக்கிற பாரத பூமியிட்டையும் ஒரு சந்தேகம் கேட்கோணும். தங்களுக்கெதிராய் செயற்படிற ஆயுதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கிறதை நிறுத்தி, இதய சுத்தியோட பேச்சுவார்ததையளிலை கலந்துகொள்ளாததைக் கண்டிக்கிறவைக்கு, இஞ்சை எங்கட எதிர்பார்ப்பும் அதுதான் எண்டிறதை விளங்கிக்கொள்ளேலாமல் இருக்கோ?
என்ரை குஞ்சுகள் ஒண்டு நான் உங்களுக்கு சொல்லிறன்: அடுத்தவை தந்துதான் சுதந்திரத்தை அனுபவிக்கோணும் எண்ட தலைவிதி எங்களுக்கில்லை. தமிழினம் உலகத்தில இருக்கிறதும், இல்லாமல் போறதும தமிழீழத்தில இருக்கிற எங்கட கையளில தானிருக்கிது. குழந்தையளை அடகு வைச்சு யுத்தம் நடக்கிற பேரினவாத அரசை எதிர்க்கிறதுக்கு குஞ்சு, குருமன் எல்லாம் சேர்ந்து துணிஞ்செழுந்தால் எந்தப் பகையும் எரியும் சிறு து}சாய்! நெல்சன் மண்டேலாவையே பயங்கரவாதி எண்டு சொல்லிக்கொண்டிருந்தவைதான் இண்டைக்கு தங்களை சர்வதேச சனநாயகங்களாக விளம்பரப்படுத்திற ஆக்கள் எல்லாரும்!
இல்லைப் பிள்ளையள்! நாங்கள் வாழிறது அறிவியல் யுகத்தில. ஆங்காங்கை ராணுவத்தை நோக்கி வெடிக்காத கிரனைட்டுகளை வீசிற சம்பவங்களை புலியள் மேல பழி சுமத்தி, தொடரும் வன்முறை பற்றிக் கதைக்கிற தரப்புகளைப் பார்த்து சின்னதொரு கேள்வி: புலியள் என்ன சில்வர் சட்டி வாங்கினால் இனாமாய் குடுக்கிற தீபாவளி சீஸன் கிரனைட்டுகளை வைச்சே போராடினம்!
ஆனானப்பட்ட ஆனையிறவை வென்றெடுத்த எங்கட பிள்ளையள் லேசில எறியாதுகள், அப்படி எறிஞ்சாலும் அது எறிஞ்ச மாதிரித்தான் இருக்கும். ராணுவப்புலனாய்வுத்துறை சும்மா சீண்டிறதுக்காகத்தான் உப்பிடியெல்லாம் செய்யிது எண்டது சின்னப்பிள்ளைக்குக் கூட விளங்கும்.
ஐரோப்பியக்கூட்டமைப்பின்ரை அறிக்கையால உசாரடைஞ்சிருக்கிற சிங்களப்பேரினவாதம் எடுக்கப்போகிற மோசமான முடிவுகளுக்கும், அதின்ரை கடந்தகாலம் உட்பட சகல மனிதப்படுகொலையளுக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்பு பொறுப்பு ஏற்கத்தயாரா எண்டு கேட்கிறன்.
போர்த்துக்கேயருக்கு சங்கிலியன் பயங்கரவாதி, ஆங்கிலேயருக்கு பண்டார வன்னியன் பயங்கரவாதி எண்டால் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களுமே பயங்கரவாதியளாவே இருந்திட்டுப்போறம்.
செல்லங்கள்! எங்கட நாட்டுக்கான விடுதலையை வென்றெடுக்கிறதுக்காக ஒரு பலமான படை, உறுதியான மக்கள் வெள்ளம் இரண்டையும் வழிநடத்த சிறந்ததொரு தலைவர் கிடைச்சிருக்கேக்கிளை நாங்கள் விடுதலைக்காக எவரிட்டையும் கையேந்தி நிற்கத்தேவையில்லை! கடற்புலித்துணைப்படைக்குப் போன சனங்கள் ~~ நீங்கள் பயிற்சியை மட்டும் தாங்கோ! ஆயுதங்களை நாங்கள் ஆமியிட்டை இருந்து பறிச்செடுத்து அடிக்கிறம்|| எண்டு இயக்கத்திட்டை கேட்டிச்சினமாம். அந்த ஓர்மம் ஒண்டே போதும் பாருங்கோ, எதையும் நாங்கள் எதிர்கொள்ளலாம். வாறமுறை சந்திப்பம்!
நன்றி: வெள்ளிநாதம் (14-20 -10 - 2005)- (ஈழநாதத்தின் வாரவெளியீடு)
கணனித் தட்டச்சு: திருமகள் (ரஷ்யா)
http://www.nitharsanam.com/?art=12442