Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
பழமொழி சொல்வோமா??
உங்களுக்கு தெரிந்த பழமொழிகளை எழுதுங்கள். இடையில் ஏதாவது பேச விரும்பினால், தனியாக இருக்கும் "ஒத்தசொல் போட்டிக்கான உதவி" எனும் தலைப்பின் கீழ் மட்டும் எழுதினால் உதவியாக இருக்கும்.
நன்றி
[b][size=15]
..
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
[b][size=15]
..
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
ஆலயம்தொழுவது சாலவும் நன்று!
!:lol::lol::lol:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா??
ஆனைக்கும் அடிசறுக்கும்.
எட்டாதாயின் வெட்டென மற
கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
கல்லாதது எட்டாதாயின் ஜம்பதில் வளையாதென வெட்டென மறந்து கூத்தாடி கொண்டாடு.
Posts: 38
Threads: 3
Joined: Sep 2005
Reputation:
0
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஆனைக்கொரு காலம் வந்தால் புூனைக்கொரு காலம் வரும்
selva
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
கந்தையானலும் கசக்கி கட்டு
நக்குண்டார் நாவிழந்தார்.
நட்டுவக்காலிக்கு சுட்டிக்காட்டவேணுமா?
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது.
நுணலும் தன்வாயால் கெடும்.
வேலியிலை போற ஓணானை மடியிலை கட்டுறமாதிரி
கல்லைக்கண்டால் நாயைக்காணம் நாயைக்கண்டால் கல்லைக்காணம்
மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதிச்ச மாதிரி
பனைமரத்துக்கீழை இருந்த பாலைக்குடிச்சாலும்
கள்ளெண்டு சொல்வினம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
ஆடுற மாட்டை ஆடிக்கறக்கவேணும் பாடுறமாட்டை பாடிக்கறக்கவேணும்.
ஆத்திரக்காறனுக்கு புத்திமட்டு
கல்லானாலும் கணவன் புல்லானும் புருசன்.
கை்க்கெட்டினது வாய்க்கெட்டாத மாதிரி
பழம் நழுவி பாலிலை விழுந்தமாதிரி-
அடிக்கிற கைதான் அணைக்கும்.
நம்ப நட நம்பி நடவாதே
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகாது.
துள்ளுற மாடு பொதிசுமக்கும்.
தாயைப்பொல பிள்ளை நுாலைப்போல சேலை.
நிறை குடம் தளம்பாது.
சட்டியிலை இருந்தால்தான் அகப்பையிலை வரும்.
பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு.
தாரம் இரண்டும் இரண்டு ஊரு வெள்ளாண்மையும் உதவாது.
பெம்பளை சிரிச்சால் போச்சு
ஆயிரம் பே(வே)ரைக் கொண்டால் அரைப்பரியாரி
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்.
நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன
பந்திக்கு முந்து சண்டைக்கு பிந்து.
குறவனுக்கு முறையுமில்லை கொழுக்கட்டைக்கு தலையுமில்லை.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஒரு சிறு வேண்டுகோள்
ஏன் இப்படி செய்யக்கூடாது? ஒரு கதை சொல்லிப்போட்டு அதிலிருந்து வாற பழமொழியைக்
கண்டு பிடிக்ககூடாது அல்லது ஒரு பழமொழியை சொல்லிப்போட்டு அதற்கு விளக்கமோ அல்லது
கதையோ சொல்லக்கூடாது? அப்படி செய்தால் பிரியோசனமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்
<b> .. .. !!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ஆமாம் ரசினக இங்கே வெண்ணிலா துர்யா இருக்கின்றார்கள் அவர்களுக்கு பொழுது போகும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
இதற்கு விளக்கமும் கொடுத்தால் நன்றாயிருக்கும்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
வியாசன்:
"பொம்பிளை சிரிச்சால் போச்சு புகையிலை விரிச்சால் போச்சு" என்று வரவேண்டும்.
ரசிகை செல்வதும் ஒருவழியில் சரி.
இப்படியும் செய்யலாம்: முதற்பாதியை ஒருவர் எழுத இன்னொருவர் அதனை நிறைவு செய்யலாம்.
"ஊர் ஓடுகில் ஒத்து ஓடு................................................................................"
விரும்பினால் யாராவது நிறைவு செய்யுங்கள்.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்!
அலை மோதும் போதே கடலாட வேண்டும்!
அரை வித்தைக் கொண்டு அம்பலம் ஏறினால், அரைவித்தை முழு வித்தை ஆகுமா?
உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி!
உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்!
காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்!
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
"களவையும் கற்று மற"
கற்பதன் மூலம் களவை மறக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஆனாலும் இப்போது களவையும் பழகி மறக்கவேண்டும் என்று திரிவுபட்டிருக்கினறது.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
"ஆறிலும் சாவு நு}றிலும் சாவு"
மரணம் என்பது எப்பவும் வரும். அது எதற்கு காலம் என்பது இல்லை என்பது தான் அர்த்தம்
குறிப்பு: கர்ணனை குந்திதேவி தன் பக்கம் வரச்சொல்லி அழைத்தபோது, அங்கே வந்து என் சகோதரர்களுடன் ஆறு பேராக இருப்பினும் சாவு தான். இங்கே து}ரியோதனன் முதலான நு}று பேருடன் இருந்தாலும் சாவு சாவு தான் என்று சொன்னதாக கூறப்படுகின்றது. உண்மை தெரியவில்லை
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
அதைத்தானே குறிப்பில் நான் போட்டிருக்கின்றேன். இப்போது யதார்த்ததுடன் ஒத்துபோவதால் பாவிக்கப்படுகின்றது என்பதால் தான் விளக்கத்தில் போட்டிருக்கின்றேன். புரிகின்றதா சுட்டி.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Selvamuthu Wrote:வியாசன்:
"பொம்பிளை சிரிச்சால் போச்சு புகையிலை விரிச்சால் போச்சு" என்று வரவேண்டும்.
ரசிகை செல்வதும் ஒருவழியில் சரி.
இப்படியும் செய்யலாம்: முதற்பாதியை ஒருவர் எழுத இன்னொருவர் அதனை நிறைவு செய்யலாம்.
"ஊர் ஓடுகில் ஒத்து ஓடு................................................................................"
விரும்பினால் யாராவது நிறைவு செய்யுங்கள்.
தனியே ஓடின் கேட்டோடு
கருத்தையாரும் தெளிவா சொல்லுங்கப்பா நமக்குத் தெரியல.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.