Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஓ இதுதான் கட்சி அரசியலா..???
#1
<b>உசிலம்பட்டியில் ஸ்டாலின்அழகிரி கோஷ்டி பயங்கர</b> <b>மோதல் அடிதடி, 'மிதியல்'</b>
ஏப்ரல் 11, 2006

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டசபைத் தொகுதியில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது.



ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு நாறினர்.

உசிலம்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக, பார்வர்ட் பிளாக் (வல்லரசு பிரிவு) தலைவர் கதிரவன் போட்டியிடுகிறார். இவருக்கு அழகிரியின் முழு ஆதரவு உள்ளது என்பதால் சீட் கிடைக்காத ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இத்தொகுதி திமுகவுக்கே கண்டிப்பாக கிடைக்கும் என ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டியன், அவரது அப்பா ராமசாமி ஆகியோர் எதிர்பார்த்திருந்தனர். இருவரும் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அழகிரியின் ஆதரவு பெற்ற கதிரவனுக்கு சீட் போனதால் தங்கப்பாண்டியன், ராமசாமி ஆதரவாளர்களும், மற்றவர்களும் அதிருப்தி அடைந்தனர்.

இந் நிலையில் வேட்பாளர் கதிரவன் அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கியவுடன், ராமசாமியின் ஆதரவாளர்கள் அங்கு வந்து, விழா அழைப்பிதழில் ராமசாமியின் பெயர் ஏன் போடவில்லை என்று கேட்டு தகராறு செய்தனர்.

வாக்குவாதத்தில் ஆரம்பித்த கலாட்டா அப்படியே அடிதடியாக மாறியது. இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. சைக்கிள்களை தூக்கி எறியப்பட்டன.

ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், தூக்கி போட்டு மிதித்துக் கொண்டு அந்த இடத்தையே கலவர பூமியாக்கினர்.

கெட்ட வார்த்தைகள் முழங்க இரு தரப்பினரும் வேட்டி, சட்டைகளை கிழித்துக் கொண்டு, முடியைப் பிடித்து 'ஆஞ்சி' கொண்டும் அடித்துக் கொண்டனர்.

இதனால் அப்பகுதி போர்க்களம் போலானது. திமுகவினரிடையே நடந்த இந்த அடிதடியில் இருந்தி தப்பி வேட்பாளர் கதிரவன் மெதுவாக எஸ்கேப் ஆனார். தனது ஆதரவாளர்களின் பாதுகாப்புடன் அந்த இடத்தை விட்டு ஓடினார்.

மதுரை திமுகவினருக்கு 'கோழி சாப்ஸ்' வாங்கித் தந்து தனக்கென கோஷ்டிகளை உருவாக்கி கட்சியை நாறடித்த அழகிரியின் 'புண்ணியத்தால்' உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் கதிரவனுக்கு டெபாசிட் போனாலும் ஆச்சரியமில்லை.

http://thatstamil.oneindia.in/news/2006/04/11/dmk.html
Reply
#2
ரெம்ப கேவலமா இருக்கப்பா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)