Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரபரப்புப் பேட்டி-
#1
இப்போது எதற்கு எடுத்தாலும் ஆர்ப்பாட்டமும், அறிக்கை விடுதலும் தான் தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். அவ்வகையில் திருடர் கூட்டம் செய்வது எப்படி இருக்கும் என்ற எண்ணங்களின் வெளிப்பாடு இவை.

உலகின் திருட்டுக் கும்பல்கள் சேர்ந்து தம்மை உலகம் அங்கிகரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். இதை பேட்டி காணும் பொறுட்டு பத்திரிகையாளர் ஒருவர் அவர்களைச் சந்தித்தார்;. அங்கே அதிசயம் என்னவென்றால் அதன் தலைவர் தமிழராக இருப்பது தான்.

வணக்கம் ஜயா என்று அப்பத்திரிகையாளர் தொடங்குமுன்பே அவர் தொடங்கிவிட்டார்.
" திருட்டுத் தொழில் என்பது மிகவும் பாரம்பரியமான தொழில், அது கூட தமிழர் மரபே. இது சங்க காலம் முதல் தமிழர் கலாச்சாரத்தில் நிலவியிருக்கின்றது. இதற்கு வள்ளுவரும் ஒளவையாரும் தங்கள் பாடல்களில் தெரிவித்து வந்திருக்கின்றனர். காரைக்கால் அம்மையாரும் மாம்பழத்தை திருடிவந்தாக அவர் கணவன் நினைப்பது கூட திருட்டு தமிழர் மரபில் ஒன்றியிருந்தமைக்கான சான்று. எனவே தான் இக்கோரிக்கையை நாம் விடுகின்றோம்." என்றார் மூச்சு வாங்க.

பின்பு தான் தான் பத்திரிகையாளன் என்பதை அறிமுகப்படுத்த முடிந்தது. தனது பாணியில் பத்திரிகையாளர் கேள்வியை ஆரம்பித்தார்.

"உண்மையில் திருட்டு என்பது குற்றமான செயல்தானே. ஒரிரண்டு பேருக்காக இதை தமிழீழம் அங்கிகரிக்கவேண்டும் என ஏன் அறிக்கை விடுகின்றீர்கள்" எனக்கேட்டபோது, கோபம் அவர் முகத்தில் கொப்பளித்தது தெரிந்தது. "உங்கள் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லை என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கின்றிர்கள். ஒரிரண்டு பேர் என்பது உலகத்தின் மொத்த தமிழ்ச்சமூகத்தையும்(அதாவது ஆறரைக் கோடி பேர்) கணக்கெடுத்துப்பார்த்தால் ஒரு சில லட்சங்கள் தேறும். புரிகின்றதா?" என்றார்

அப்படியாயின் திருட்டுத் தொழில் தமிழர் கலாச்சாரத்திற்குள் உள்ளடங்குகின்றது என நீங்கள் கருதுகின்றீர்களா? எனக் கேட்டபோது, கேள்வியை புரியாமல் பதில் அளித்தார். 'அவர்களும் தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ளடங்குவார்கள்.அவர்களும் சமூகத்தின் முன் சமதையாக வாழவேண்டுமே தான் எனது வாதமே ஒழிய அவர்கள் வாழ்வது மட்டும் தான் வாழ்க்கை. தமிழர் மரபே களவெடுத்தல் தான் என ஆதாரங்கள் காட்டுங்கள் பார்ப்போம்."

மேலும் தொடர்ந்தார்

"எல்லாவற்றையும் உள்வாங்கியதே தமிழர் வாழ்க்கை. அவர்களும் சமுதாயத்தில் மரியாதையாக வாழவேண்டும். ஒருவன் கொள்ளையடிப்பது என்பது அவனது உரிமை. அதை நீங்கள் தீர்மானிக்க எவ்வித உரிமையும் இல்லை. இல்லை என்பது விதிவிலக்கு. தமிழீழத்துக்கு அவர்கள் தேவையில்லை என்பதை ஜரோப்பாவில் இருக்கும் நீங்கள் தீர்மானிக்க முடியாது தமிழீழத்துக்கு அவர்களும் தேவை என்பதை சக மனிதர்களாக சொல்லப்பாருங்கள்" என்று அதன் தலைவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்தார்.
நீங்கள் ஏன் வெளிப்படையாக விரும்புகின்றீர்கள். வெளிப்படையாக வாழ்தல் என்பது திருட்டுத் தொழிலின் தகமை என்பது இல்லாது போய்விடுமல்லவா? என்ற கேள்விக்கு "திருடர்கள் வெளிப்படையாக வாழ்ந்தால் உங்களுக்கென்ன குறைவு. உங்களுக்கு என்ன குறைந்தது. வழக்கம் போல புசித்து புணர்ந்து மரித்து போவது தானே. அவர்களை புறம்போக்குகள் என்றும், குற்றாவளிகள் என்றும், கொள்ளையடிப்பவர்கள் என்றும் தீர்மானிக்கும் உரிமையை எங்கிருந்து பெற்றீர்கள்?"

"இவை எல்லாம் தமிழர் மரபு கிடையாதே" என்று செய்தியாளர் கேட்டபோது " இவை எல்லாம் தமிழர் மரபில் இல்லாவே இல்லை என்கின்றீர்கள்.பழந்தமிழ் இலக்கியத்தில் உதாரணம் காட்டினால் திருடனுக்கு ஏன் பழந்தமிழ் இலக்கியம் என்கின்றீர்கள்? திருடன் என்பவன் நாயின் வாயிலுள்ள தடியைப்பிடித்து நடக்கும் குருடன் கிடையாது. தனக்கு தேவையானவற்றை அவனே தேடிப்பெறும் திறமைசாலி. தனக்கு தேவையானவற்றை அவனே தீர்மானிக்கட்டும். நீங்களோ நானோ அல்ல."

"இறுதியாக என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்" எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு
" நான் சொல்ல விரும்புவதல்லாம் திருடுவது என்பர் மனித இயல்புகளே. இவ் விளிம்பு நிலை மனிதர்களைப் புறக்கணிக்காதீர்கள். சக மனிதராக ஏற்றுக்கொள்ளுங்கள். என்பது தானோழிய திருடுவது மட்டும் திறமையல்ல. அது அவரவர் தெரிவு. என் எண்ணங்களைச் சுமந்த நண்பர்கள் உலகெங்கும் உள்ளனர்.
ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். மாக்சீச சித்தாந்த்தில் கூட திருடுவது என்பது ஏற்றுக் கொள்ளப்ட்ட ஒன்று. .........................."
அப் பத்திரிகையாளர் மெதுவாக கழன்றார்.
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)