Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானிய பயங்கரவாத தடை சட்டம்
#1
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம்

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40993000/jpg/_40993968_blair2032_ap.jpg' border='0' alt='user posted image'>
<b>புதிய அதிகாரம் தேவை என்கிறார் பிரதமர் டோனி பிளேர்</b>

பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யாமலேயே அவர்களை 90 நாட்கள்வரை தடுத்துவைக்க வழிசெய்யும் சட்ட மசோதா குறித்து விவாதம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மீண்டும் துவங்கியுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் இந்த விவாதத்தின் மீது பேசுகையில் லண்டனின் போக்குவரத்துக் கட்டமைப்பு மீது ஜூலை மாதம் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்து இரண்டு தாக்குதல்களை காவல்துறையினர் முறியடித்துவிட்டனர் என்று குறிப்பிட்டார்.

ஆனால் இதுபற்றி அவர் விவரிக்கவில்லை. பிரிட்டனின் மக்களவையில் இப்பிரச்சனை கடுமையாக விவாதிக்கப்பட்டுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமான ஒன்று என்றும், பாதுகாப்பு படையினர் இந்த நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்துவதாகவும் பிளேர் கூறினார்.

ஆனால் எதிர்கட்சியினர் இதை ஏற்கவில்லை. இந்த நடவடிக்கைகள் அதிகபட்சமானவை என்றும் இவை மிக அதிக அளவிலான முஸ்லீம்களை கோபமடையச்செய்யும் என்றும் எதிர்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்த விபரங்கள் பெருவதையும் இந்த நடவடிக்கை மேலும் கடினாமாக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆளும் தொழிற் கட்சியைச் சேர்ந்த சிலரும் புதிய சட்டத்தை எதிர்கின்றனர்.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
புதிய சட்டவிதிகள் தோற்கடிக்கப்பட்டன

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41001000/jpg/_41001442_blair203seriousmain.jpg' border='0' alt='user posted image'>
<b>இந்த வாக்கெடுப்பு டொனி பிளேயரின் தலைமைதுவத்திற்கு ஒரு பரீட்சையாக கருதப்பட்டது.</b>

பிரித்தானிய உள்துறை அமைச்சர் Charles Clarke புதிய பயங்கரவாத சட்ட விதிமுறைகளை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த புதிய விதிமுறைகள் பயங்கரவாத நடவடிக்கைகளும் தொடர்புடையதாக சந்தேகப்படுவோரை குற்றச்சாட்டு ஏதும் பதிவு செய்யாமலே 90 நாட்கள் தடுத்து வைத்திருக்க பொலீசாருக்கு அதிகாரம் வழங்குகின்றது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் பிரிட்டிஷ் சிறுபான்மை மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் என்றும் மனித உரிமை குழுக்களும் எதிர்கட்சியினரும் கூறி வந்தனர். இந்நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு ஆதரவாக 291 வாக்குகளும் எதிராக 322 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய மசோதா தோற்கடிக்கப்பட்டது.

இது டொனி பிளேயர் தலைமையிலான தொழிற்கட்சி அரசிற்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகின்றது. அண்மையில் மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிரதமர் இந்த ஆட்சிகாலத்தின் முடிவில் தலைமை பொறுப்பில் இருந்து விலக திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த தோல்வி அவரை அதற்கு முன்பாக தலைமை பொறுப்பில் இருந்து விலகவேண்டிய அழுத்ததிற்கு உள்ளாக்கலாம்.

மூல செய்தி: பிபிசி இணையம்

http://news.bbc.co.uk/1/hi/uk_politics/4422086.stm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
புதிய பயங்ரவாத சட்டம் தோல்வியை தழுவியதாக செய்திகள் கூறுகின்றன
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)