Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோபிஅனான் இதையும் ஒருக்கால் பாருங்கோ .....
#1
சிறுவர்களை கடத்தி கட்டாய பயிற்சி கொடுத்து கொலை செய்யுமாறு வற்புறுத்துவது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் - சர்வதேச தமிழர் ஒன்றியம்
சிறீலங்கா துணை ஆயுதக் குழுக்களால் தமிழ்ச் சிறுவர்கள் கடத்தப்பட்டு கட்டாயப் பயிற்சி வழங்குவது தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கொலைகளைச் செய்யுமாறு வற்புறுத்துவது தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச தமிழர் ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறுவர்களும் ஆயுத முரண்பாடுகளுக்குமான செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதிக்கு சர்வதேச தமிழர் ஒன்றியம் அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ துணை ஆயுதக் குழுக்களால் கடத்தப்படும் சிறுவர்கள் கட்டாய பயிற்சிக்காக சிறீலங்கா இராணுவ முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பயிற்சியை முடித்ததும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கொலைகளைச் செய்யுமாறும் வற்புறுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் இவர்களால் கடத்தப்பட்ட தமிழ்ச் சிறுவர்கள் இளைஞர்களின் பெயர் விபரங்களை ஆதார புூர்வமாக எடுத்துக்காட்டிய சர்வதேச தமிழர் ஒன்றியம் இது போன்ற செயல்களால் மிகுந்த கவலை அடைந்ததாகவும் இது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுட்டது பதிவிலிருந்து.

புலிகள் சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதாக குற்றம் சாட்டிய ஐ.நா.வின் மனித உரிமைகள் (?) அமைப்புக்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள?
அவைக்குத்தான் அரசாங்கம் கொடுக்கவேண்டியவைகளை கொடுத்துவிடுவினம் பிறகேன் வாயைத்திறக்கபோகின்றார்கள்
:oops: :oops: :oops: :oops:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)