Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புத்தளம் பகுதியில் விமான விபத்து
#1
இலங்கையின் புத்தளம்
நுரைச்சோலையை அண்மித்த இலந்தையடி பகுதிக் கடலுக்குள் இன்று காலை 11.00 மணியளவில் ஒரு விமானம் விழுந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானம் விமனப்படைக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம்.
அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும் என்ன காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை.

படகுகள் மூலம் மீனவர்கள் அப்பகுதியை அண்மித்து தேடிய போதும் எவரையும் பார்க்க முடியவில்லை என அறிவிக்கிறார்கள்.

விபத்து நடந்த இடத்துக்கு அண்மையில் கற்பிட்டி கடற்படைத்தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- அஜீவன்
Reply
#2
புத்தளத்தில் நடுவானில் எரிந்து வீழ்ந்தது விமானம்!
[செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2005, 16:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் புத்தளம் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு விமானம் ஒன்று எரிந்து வீழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


கொழும்பிலிருந்து 140 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலந்தையடி கடல்நீரேரி பகுதியில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. மேற்கு புத்தளத்திலிருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நுரைச்சோலையை அண்மித்த பிரதேசம் இது.

ஆனால் சிறிலங்கா இராணுவத்தினது விமானமோ உலங்குவானூர்தியோ எதுவும் காணாமல் போகவில்லை என்று சிறிலங்கா விமானப் படையின் பேச்சாளர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிந்து விழுந்து விமானமா அல்லது உலங்கு வானூர்தியா என்பது குறித்தும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு சிறிலங்கா விமானப்படையும் கடற்படையினரும் விரைந்துள்ளனர்.

அதே நேரத்தில் விமானம் ஒன்று எரிந்து வீழ்ந்ததை நேரில் பார்த்ததாக அந்தப் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

நன்றி:புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#3
விமானம் விழுந்ததாக தகவல்: கடற்படையினர் கடலில் தேடுதல்
(ஜப்ரல் அஸ்கான்)

கற்பிட்டிக்கும் நுரைச்சோலைக்கும் இடைப்பட்ட இலத்திடிய கடற்பரப்பில் சிறிய விமானமொன்று வெடித்து வீழ்ந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து, கடற்படையினர் அப்பகுதியில் பெரும் தேடுதலை நேற்று நடத்தியுள்ளனர்.சிறிய விமானமொன்று வெடித்து கடலில் வீழ்ந்ததாக மீனவர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானப்படையின் ஹெலிகொப்டர், கடற்படையினரின் படகுகள் இத்தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நளின் ஆர்.விதாரணகே இலத்திடிய பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானமைக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

விமானப்படைக்குச் சொந்தமான எந்தவொரு விமானமும் கற்பிட்டி வான்பரப்பில் பயணிக்கவில்லை என்று விமானப்படை அறிவித்துள்ளது. எனினும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

-Veerakesari
Reply
#4
<b>கற்பிட்டியில் வீழ்ந்தது விமானமல்ல டொனாடோ எனும் தீச் சுழல்!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 16:47 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
கற்பிட்டி நுரைச்சோலை கடற்பரப்பில் எரிந்து விழுந்தது விமானம் அல்ல என்றும் டொனாடோ எனும் தீச்சுழலே அந்தக் கடற்பரப்பில் வீழந்ததாகவும் சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


கற்பிட்டிக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் தீப்பந்தொன்று வந்து விழுந்ததாக இரு மீனவர்கள் தெரிவித்ததையடுத்து ரோலர் படகுகளில் அந்தப் பகுதிக்கு கடற்படையினர் சென்று சோதனைகளை நடத்தினார்கள்.

சம்பவம் நடந்த இடத்தில் எந்தவித எண்ணெய்ப் பசையும் காணப்படவில்லை. விமானமோ அல்லது உலங்குவானூர்த்தியோ விபத்தில் சிக்கியிருந்தால் அந்த இடத்தில் எண்ணெய் பசைத் தன்மை காணப்பட்டிருக்கும் என்று சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரும் விமானப்படையினரும் இணைந்து தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
</b>
http://www.eelampage.com/?cn=21784
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)