Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யார் அடுத்த பிரதமர்?
#1
[size=15]
<b>யார் அடுத்த பிரதமர்?</b>
புதிய பிரச்சனை ஒன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வரலாம்.
அதுதான் தான் இருந்த பிரதமர் ஸ்தானத்துக்கு அடுத்த பிரதமராக
<img src='http://www.dailynews.lk/2005/02/16/z_04anura.jpg' border='0' alt='user posted image'>
அனுரா பண்டாரநாயகாவை நியமிப்பதா இல்லையா என்பது............?

தேர்தல் காலத்தில் அனுரா ஏற்படுத்திய முரண்பாடுகள் காரணமாக அவருக்கு பிரதமர் பதவி கிடைக்காமல் போகலாம்.

ஜனாதிபதி பதவியேற்புக்குப் பின்னர் இது பற்றிய போட்டியொன்று கட்சிக்குள் உருவாகலாம்?
Reply
#2
அனுரவை ஓரங்கட்டி விடுவார்கள். அனேகமாக அடுத்த பிரதமர் விமல் வீரவன்ச. ஒருவேளை ரத்னசிரி விக்கிரமனாயக்க களத்தில் நுழையலாம்.
Reply
#3
Sri Lanka president-elect drops running mate from prime minister job
Associated Press, Fri November 18, 2005 07:40 EST . COLOMBO, Sri Lanka (AP) _ Sri Lanka's president-elect has decided not to appoint Anura Bandaranaike, the country's tourism minister and brother of the outgoing president, to replace him as the new prime minister, a spokesman for the newly elected president said Friday.
Bandaranaike, who currently holds the posts of both tourism and investment minister, was Mahinda Rajapakse's running mate in Thursday's presidential poll. The two agreed to run on the same ticket when Rajapakse was named the ruling party's candidate for the Nov. 17 election.

But Bandaranaike had done little to support Rajapakse, and so there was no reason to name him prime minister, an official close to the new president said.

``There is no reason to give him the premiership,'' Trade Minister Jeyaraj Fernandopulle said, after accompanying Rajapakse to an official declaration of his victory.

``He has not worked or supported the victory of Mr. Rajapakse, so why should he become prime minister?'' he said.

Bandaranaike and outgoing president Chandrika Kumaratunga have been at odds with Rajapakse over his tough stand on a peace deal with Tamil Tiger rebels that saw him tie up with a hard-line Marxist party and another led by powerful Buddhist monks in return for their support in the poll.

Fernandopulle did not say who would fill the prime minister's job.

He said, however, that parliament will not be dissolved after Rajapakse's post falls vacant on Saturday, when he takes an oath as Sri Lanka's fifth executive president.

Rajapakse was declared the winner of the election by a slim margin on Friday, defeating his chief opponent Ranil Wickremesinghe, who trod a softer line with the rebels.


http://www.theacademic.org/
" "
Reply
#4
சிறிலங்காவின் புதிய பிரதமராகும் தனக்குத்தான் இருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டி.எம்.ஜயரட்ன கூறியுள்ளார்.


பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசியாவிற்கு நேர்காணல் அளித்த ஜயரட்ன, இன்று சனிக்கிழமை பிரதரமாக உள்ள மகிந்த ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்க உள்ளதால் பிரதமர் பதவியை கையளிக்கக் கோரி என்னை எனது ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் ஜயரட்ன கூறினார்.

வெளிவிவகார அமைச்சரான அனுரா பண்டாரநாயக்கவை பிரதமர் பதவிக்கு சுதந்திரக் கட்சி முன்னர் பரிந்துரைத்த போதும் தற்போது அது கைவிடப்பட்டு இருப்பதாகவும் ஜயரட்ண தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வர்த்தக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அனுராவுக்கு பிரதமர் பதவி அளிக்கக் கூடாது என்று மிகக் கடுமையாகக் கூறியிருந்தார்.

இதனிடையே மகிந்த ராஜபக்சவின் இராஜந்திரியாக கருதப்படுகிற மங்கள சமரவீர, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படக் கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் ஆனால் சுதந்திரக் கட்சித் தலைவர்கள் அவரைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கவில்லை என்றும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சங்கதி
" "
Reply
#5
அநுரா பண்டாரநாயக்காவிற்கு பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது. அவர் ஒரு அரசியல் கோமாளி. மகிந்த ராஜபக்ஷவை தேர்தல் பணிகளில் ஒத்துழைக்க மறுத்து ஒதுங்கியிருந்த அனுரா இத்துடன் சுதந்திர கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படலாம். சுதந்திரகட்சியில் தனக்கு வசதி வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்காது என்று நிச்சமாக தெரியவந்தால் அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவ கூட தயங்கமாட்டார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
பண்டாரநாயக்க பரம்பரையை அரசியலில் இருந்து தூக்குவதற்காகத்தான் மகிந்தாவுக்கு ஆதரவு வழங்கியது ஜே.வி;.பி அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள் ஆனபடியால் திரும்பவும் அநுராவை ஒருபோதும் கொண்டு வரமாட்டார்கள் அதே போல ஜே.வி.பி வருவதற்கும் எதாவது ஒப்பத்தம் செய்யப்படவில்லை என்பதால் ரட்னசிறி விக்கிரமவுக்கு சான்ஸ் ஒண்டு அடிக்கிறதுக்கு இடமிருக்கு இனவாதிகளுக்கு ஒத்துப் போகக்கூடியவரும் எண்டதால் மற்ற கூட்டு கட்சிகளும் ஆதரிப்பார்கள் எண்டு நினைக்கிறேன்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
எனக்கு தெரிவது என்னவென்றால் நிறைய குத்துவெட்டுக்கள் நடக்க கூடும். ஏனென்றால் இப்போதும் சுதந்திரக் கட்சி தலைவியாக சந்திரிக்கா அம்மையாரே இருக்கின்றார். எனவே அவர் தான் கட்சி சார்பான முடிவு எடுப்பார். ஆனால் பாராளுமன்ற பெரும்பான்மைக்கு ஜேவிபி தேவை. அவர்கள் அனுராவைச் சம்மதிக்கமாட்டார்கள்.


எனவே காலத்துக்காய் காத்திருப்போம்.
[size=14] ' '
Reply
#8
ஜெயரத்ன இலங்கையின் புதிய பிரமராவார் என்று தெரிகிறது

இலங்கையின் அடுத்த பிரதமராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.எம். ஜெயரத்ன நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளார் என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை மாலை பிரதமர் பதவிப் பிரமாணமும் புதிய அமைச்சரவை தெரிவும் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறும் சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது அதிகாரங்களையும் பொறுப்புகளையும் எதிர்வரும் புதன்கிழமை நடக்கும் விசேட வைபவமொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கவிருக்கிறார்.

அன்றைய தினமே ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் சந்திரிகா வெளியேறுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நேர்மையான முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தும், அப்பகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக நிராகரித்தமைக்கு எதிராகவும் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியை எதிர்த்தும் நீதிமன்றம் செல்ல ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசித்துவருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Reply
#9
[quote="AJeevan"]ஜெயரத்ன இலங்கையின் புதிய பிரமராவார் என்று தெரிகிறது



இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறும் சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது அதிகாரங்களையும் பொறுப்புகளையும் எதிர்வரும் புதன்கிழமை நடக்கும் விசேட வைபவமொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கவிருக்கிறார்.

அன்றைய தினமே ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் சந்திரிகா வெளியேறுவார் என தெரிவிக்கப்படுகிறது.


அது ஒரு கனாக்காலம், சந்திரிக்காவின் சாம்ராஜ்ஜியம் அழிகிறது, ஆடும்வரை ஆட்டம் ஆட்டம் முடிந்தால் ஜனாதிபதிமாளிகையை விட்டு ஓட்டம், முன்னேறிபாய்வதேன் அம்மா இப்போ சொல்லாமல் ஓடுவதேன் சும்மா? எத்தனை கொலைகள் கண்டோம் அத்தனையிலும் உங்கள் வெறிகள் கண்டோம்.
ஜனாதிபதி மாளிகையே........
பாராளமண்ற கதிரையே.........
விடை கொடு தாயே.........
சந்திரிக்கா அம்மா.......
ஊட்டுக்கு போறாங்க..........
விடை கொடுதாயே.........
.

.
Reply
#10
தேசிய அரசாங்கம் அமைக்கும் நோக்கோடு ரணில் மாத்தையாவை பிரதமந்திரியாக்கலாம் சிங்கள தேசம்.

தோல்வி நிச்சயம் என்று உணரும் பட்சத்தில் சிங்கள இனம் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய அரசாங்கத்தால் ஒன்று சேருவார்கள். அதற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும்.

அதன் பின்னர் தமிழ் தேசியம் எவ்வாறான புதிய சவால்களை எதிர்கொள்ளும்?
Reply
#11
பண்டாரநாயக்க குடும்ப அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்கள்.

மகிந்தவுக்கு வெளிநாடுகளோடு நட்பு ரீதியாக பெரிய அனுபவம் இல்லை.

மகிந்தவோடு இணைந்திருப்போரை மேலைத் தேசங்கள் நம்பத் தயாரில்லை. இந்தியாவும்தான்?

சுதந்திரக் கட்சியிலிருந்து சிலர் உடைத்துக் கொண்டு போகப் போகிறார்களாம் ஐதேகட்சிக்கு........

தொங்கப் போகுது பாராளுமன்றம்?
Reply
#12
சிறிலங்காவின் புதிய பிரதமராக ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று திங்கட்கிழமை காலை 11.39 மணிக்கு புதிய அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றார்.


1960 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த ரட்ணசிறி விக்கிரமநாயக்க, 1962 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.

களுத்துறை மாவட்டம் ஹொரணை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 1965 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.




1977 ஆம் ஆண்டு அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் 2000 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமராகவும் இவர் கடமையாற்றினார்.

அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பௌத்த சாசன அமைச்சராகவும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்களின் நியமனம் இன்று மாலை இடம்பெறுமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதினம்
" "
Reply
#13
mugaththar Wrote:ரட்னசிறி விக்கிரமவுக்கு சான்ஸ் ஒண்டு அடிக்கிறதுக்கு இடமிருக்கு இனவாதிகளுக்கு ஒத்துப் போகக்கூடியவரும் எண்டதால் மற்ற கூட்டு கட்சிகளும் ஆதரிப்பார்கள் எண்டு நினைக்கிறேன்


சா .....முகத்தாரும் அரசியலிலை லெக்ஷன் கேக்கலாம் போல கிடக்கு நான் சொன்ன மாதிரியே ரட்ணசிறி வந்திட்டாரே....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
முகத்தார் ஆ...... அப்பிடியே மெய்சிலிர்க்குது... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எப்பிடி இதெல்லாம்........ சின்னனில இருந்தே இப்பிடியா??.. இல்லை இப்பதானா..???? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
::
Reply
#15
முகத்தரண்ண நீங்கல் ஒரு அரசியல் ஆராச்சியாளராக உருவாகலாம்.
.

.
Reply
#16
Birundan Wrote:முகத்தரண்ண நீங்கல் ஒரு அரசியல் ஆராச்சியாளராக உருவாகலாம்
மனுசரை ஏத்தி விட்டே பாக்கிறத்தக்கு சனமெல்லாம் வெளிக்கிட்டுட்டு போல தெரியுது அப்பாவிகளை சாக்கடையிலை தள்ளாதைங்கோ அப்புமார்.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
இல்லை அண்ண உங்களுக்கு நிறைய அரசியல் ஆக்கள தெரிஞ்சிருக்கு உங்கள் அனுமானங்களும் சரியா இருக்கு, இனிநடக்கபோகும் அரசியல பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கோ. உங்கள் அனுமானங்கள் சரிவந்தால் நீங்கள் வருங்காலத்தில் ஒரு தராகி,ரிஷி. சரிவராடி சும்மா பகிடி எண்டுட்டு எஸ்கேப் ஆகலாம்தானே.
.

.
Reply
#18
பிரபல அரசியல் ஆய்வாளர் முகத்தார் அவர்களை வாழ்த்துகின்றோம். :wink:
[size=14] ' '
Reply
#19
தூயவன் Wrote:பிரபல அரசியல் ஆய்வாளர் முகத்தார் அவர்களை வாழ்த்துகின்றோம். :wink:

நம்மளோடு இருக்கிற ஒரு ஆய்வாளரை வாழ்த்துறதில நமக்கு பெருமைதானே முகத்தார்.

முதல்ல
மைத்திரிபால சேனாநாயக
டீ.எம்.ஜயரத்ன
சுசில் பிரேமரத்ன ஆகியோரது பெயரே பிரதமர் லிஸ்டில இருந்ததா எல்லாரும் சொன்னாங்க..........

ஆனா நீங்க சொன்ன மாதிரி நடந்திருக்கு.........எண்டால்
நீங்க எங்கேயோ போயிட்டீங்க முகத்தார்.
வாழ்த்துக்கள்.
Reply
#20
முகத்தார் வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் தீர்கதரிசனமான எதிர்வு கூறல்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். வெக்கமெண்டால் வேறை பெயரில வந்து விளாசுங்கோ :wink:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)