Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரணிலின் தோல்விக்கு காரணம் என்ன?
#1
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ரணிலின் தோல்விக்கு காரணம் என்ன?</span>

17ம் தேதி நடந்து முடிந்த தேர்தல் பலரின் எதிர் பார்ப்புகளைகளை தோல்வியடையச் செய்திருப்பதாக அனேக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன அமைதியான பேச்சுவார்த்தை சமர்ச்சி முறையிலான ஆட்சிதான் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு எண்டு முன் வைத்துப் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜ.தே.கட்சி தோல்வியடைந்திருக்கிறது அதே நேரம் இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என முழக்கமிட்ட மகிந்தாவின் தலைமை வெற்றியீட்டியிருக்கிறது இது சிறுபாண்மை இனத்துக்கு சில அச்சத்தை ஏற்படுத்தினாலும் மகிந்தாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் கூட்டு வைத்திருக்கும் ஜேவிபி கட்சிகளின் ஒப்பந்த அடிப்படையில் இலங்கையின் சமாதானபேச்சுவார்த்தை மத்தியஸ்த்திலிருந்து நோர்வே வெனியேற்றப்பட வேண்டும் மற்றது சுனாமி பொது கட்டமைப்பு நீக்கப்படவேணும் இவைதான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என சிந்திக்க வைக்கிறது ஆனா ஜேவிபி கூறியது போல சிறுபாண்மைக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியுமெண்டனை நிரூபித்து இருக்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் என்ன நடவடிக்கை செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்
சரி அதை விடுவம் இப்ப ரணிலின் தோல்விக்கு என்ன காரணம் . .எனது பார்வையில்.

1. ஒரு குறுகிய வாக்கு வித்தியாசம் (1.80.000) தான் இவரை தோல்வியடைச் செய்திருக்கிறது இதற்கு வட பகுதி மக்களின் தேர்தல் பஸ்கரிப்பு முக்கியமான காரணம் பேச்சு வார்த்தை எண்டு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினாலும் அந்த 2வருடத்தில் ரணில் எந்த விதமான தீர்வையும் கொண்டு வராமல் போனது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு அதுக்கு சரியான பதிலடியை வட பகுதி மக்கள் சந்தர்ப்பம் பார்த்து குடுத்திருக்கிறார்கள் (இந்த இடத்தில் சிறுபான்மையின் பலம் ரணிலுக்கு விளங்கியிருக்கும்)

2. தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களை பார்த்தால் தெரிந்திருக்கும் மக்களை கவரும் வகையில் அவரின் பேச்சுகள் இருக்கவில்லை விசயம் இருக்கோ இல்லையோ மேடை அரசியல் பேச்சு மக்கள் ரசிக்கும் தன்மையாக இருக்கவேணும் அவரின் பேச்சுக்கள் சோபை இழந்து காணப்பட்டது (விமல் வீரவம்சாவின் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு)

3. கண்டியில் பேசிய காமினி திசாநாயக்காவின் மகன் மீண்டும் புலிகளுடன் யுத்தம் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவின் துணையுடன் அதை எதிர் கொள்வோம் என பொது மேடையில் பேசியது ஆரோக்கியமானதா தெரியவில்லை சாதானம் எண்டு சொல்லிக் கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எண்டதை தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டியது

4. அதே போல மிகிந்த மொறகொட பத்திரிகையாளர் இடையில் புலிகளின் பிளவுக்கு(கருணா) தாங்கள் காரணமென ஒத்துக் கொண்டது தேர்தல் நேரத்தில் சரியானதாகப் படவில்லை ஒரு பேச்சுவார்த்தையில் பங்கு கொண்ட ஒருவர் இப்படி பேசியது எதிர் தரப்பினருக்கு பிரச்சாரம் செய்தது போலாகிவிட்டது

5. சரி இவையால்தான் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை எண்டால் சிங்கள மக்கள் ஏன் ரணிலை ஆதரிக்கவில்லை தென் இலங்கை மக்கள் பேச்சுவார்த்தையை விரும்ப வில்லையா? அல்லது யுத்தம்தான் ஒரு தீர்வு எண்டு நினைக்கிறார்களா? இனியொரு யுத்தம் நடந்தால் அது எப்பிடி யிருக்கும் எண்டு விளங்காத நிலையில் இருக்கிறார்களா?

எதுவாக இருந்தாலும் தமிழனுக்கு விடிவு விரைவில் கிடைப்பதுக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்
உங்களின் கருத்துகளையும் இணையுங்கள். . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இதில் ஒன்றை மட்டும் தெட்டத்தெளிவாக புரிந்து கொள்ளக்க்கூடியதாக உள்ளது... அருமையான காய் நகர்த்தல் ஒண்டு இலங்கையில் நடைபெற்றுள்ளது,, சிங்கள நாட்டிற்கு ஒரு ஆப்பு வைக்கப்பட்டுள்ளதை சோ.வி.பி,ராஜபக்ஷா கூட்டனிக்கு இப்பொழுது வடிவாக விளங்கி இருக்கும்,, தமிழரின் தலைமையிடம் சிங்கள அரசியல் வாதிகள் நிறைய கற்கவேண்டி உள்ளதாக இத்தேர்த்தல் எடுத்துக்காட்டுகின்றது,,, Idea


முகம்ஸ் என்னொண்டு ரணிலின் தோல்விக்கு என்ன காரணம் தெரியுமா?? மகிந்தவின் வெற்றிதான்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
ஜேவிபி உறுமயவுக்கு சிங்கள மக்களின் ஆதரவு என்ன எண்டு புலிகளுக்கு மட்டும் அல்ல தமிழருக்கும் தெரியும்...(2 தேர்தல்கள் சொல்வது) இதில் தமிழர் எல்லாம் வாக்குக்கள் அளித்து ரணில் அரசதலைவராய் வந்தாலும்...... பெருண்பாண்மையினரின் ஆதரவு இல்லாமல் எந்தத்தீர்வுக்கும் வரமுடியாது.......... அது ரணிலாக இருத்தாலும் முடியாது....... ரணிலின் இந்தக் கையாலாகாத்தனம் தான் அவரின் தோல்விக்குக்காரணம்...


சும்மா பேசுகிரம் எண்டு காலத்தை இழுப்பதவிட முடிவான தீர்வை நோக்கிநகர புலிகள் முடிவு செய்தார்கள் அதைத் தமிழ்மக்கள் வளிமொழிந்துள்ளார்கள்...
::
Reply
#4
[size=15]ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழர் கட்டுப்பாட்டுப் பிரதேச தமிழரது நிலைப்பாடு தேர்தலில் வாக்களிப்பதா இல்லையா என்பது மட்டுமே?

ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழர் பிரச்சனை யாருக்கு வாக்களித்தால் நிம்மதியாக வாழலாம் என்பது?

சிங்கள மக்களுக்குத் தெரியும்.
இவர்களில் யார் வந்தாலும் யுத்தமொன்றுக்கு போக முடியாது என்பது.
அவர்களது இறுதிப் பேச்சுகள் சமாதானத்தை நோக்கியதாகவே இருந்தது.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->\"எமது ஆட்சிதானே நடக்கிறது. இப்போதும் யுத்தமில்லைதானே?  
மீண்டும் நாங்களே வந்தால் எப்படி மீண்டும் யுத்தமொன்று வரும்?  
நாங்கள்தானே சமாதானத்துக்கான பேச்சுகளுக்கு அடி கோலியவர்கள்?
நாங்கள் தமிழருக்கு எதிரானவர்கள் அல்ல.
சமாதானத்தையே விரும்புகிறோம்.

பிரபாகரன் கூட எனது உறுவுக்காரன் என்பதான பேச்சுகள்.........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=15]இவை ஓரளவு யுத்த பீதியை தளர்த்தியது.

ஆனால்
தென்பகுதி பெளத்த தலைமை ஒன்று வர வேண்டும்.
புதியதொரு சிந்தனையும் தலைமையும் தேவை.
பாமர மக்களைப் பற்றி நோக்கக் கூடிய தலைமையாக அது இருக்க வேண்டும் என்பதே சிங்கள மக்களது கேள்வியாகவும் ஆதங்கமாகவும் இருந்திருக்கிறது என்பது இப்போது தெளிவு.

ஐக்கிய தேசிக் கட்சி எதுக்கும் மேலைத் தேசங்களை காட்டி அல்லது யுத்த பீதியை உருவாக்கியே வாக்குக் கேட்டது.

மகிந்த சிந்தனை என்ற பேரில்
சமாதானத்துடன் கூடிய கிராமப் புறங்களுக்கான வசதி-வாய்ப்புகளை அள்ளித் தர இருப்பதாக கூறியவை ஜே.வீ.பியின் அங்கிகாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கிராமங்களை கணணி யுகமாக்கி முழு உலகையும் கிராமத்துக்கு கொண்டு வரப் போகிறோம் என்ற புது ஜால வார்த்தைகள் கணணி என்பது என்னவென்றே தெரியாத கிராமத்து சிங்கள அப்பாவி விவசாயிக்கு இனிப்பு.

ஐ.தே.க. (பிரேமதாஸ) ஆட்சிக் காலத்தில் கிராமத்து ஜே.வீ.பியினர் என அடையாளம் காணப்பட்ட இளைஞர்களைக் கொன்று குவித்த அணர்த்தங்கள் மறக்க முடியாதவை.

பல ஜே.வீ.பியினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சுதந்தரக் கட்சிக்குள் இணைந்தனர்.
அவர்கள் வெளியே மட்டுமே சுதந்திரக் கட்சியினர்.
உள்ளே முற்று முழுதாக ஜே.வீ.பிதான்.

ஜே.வீ.பியின் வளர்ச்சி கிராமங்களில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை போன்ற நாடுகளின் பலம் கிராமங்கள்தான்.
இடதுசாரிகளின் பலம் மேற்கு உலகில் அஸ்தமனமாகிக் கொண்டு வந்தாலும்.
கால்மாக்ஸ் - லெனின் - மாவோ போன்றோரின் சிந்தனைகள் சிங்களக் கிராமத்து மக்களுக்கு தேனிசை போன்றது.
சோஸலிச பேச்சுக்கள் நடை முறைக்கு சாத்தியக் குறைவாக இருந்தாலும் பெளத்த சிந்தனையோடு கூடிய நடை முறைகள்
என்றுமே கவரக் கூடியது.

மேலத்தேச எதிர்ப்புகள் வேறு
கிராம மக்களைக் கவர்ந்துள்ளது.

இவை ஜே.வீ.பியால் மென்மையாக வருடப்படும் நடைமுறைகளும் -பேச்சுகளுமாகும்.
அவர்களது அரசியலும் கீழ் மட்டத்திலுள்ள மக்கள் ஊடாகவே நடக்கிறது.
ஊரில் நடக்கும் நல்லது - கெட்டதுக்குக் கூட ஜே.வீ.பியினர் பங்கு கொள்வது.
அவர்களது குடும்பத்து உறவாக இணைந்து நிற்பது.
வாகன வசததிகளற்ற - பந்தோபஸ்துகள் இல்லாது மக்களோடு மக்களாக இணைவது எல்லாமே மக்களைக் கவரக் கூடியது.

ரணிலின் ஐ.தே.கட்சி பணக்காரர்களுக்கான வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கும் கட்சி என்பது கிராமத்தவரது வாக்குகளை தடுத்தே வந்திருக்கிறது.

இவர்களுக்கு தமிழ் - முஸ்லிம் வாக்குகள்தான் பலம்.

தமிழர் வாக்குகள்தான் இவற்றிலும் முதன்மையானது.

தமிழர் பகுதி வாக்குகள் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விமோசனமில்லை என்பதான நம்பிக்கையீனத்தை உலகுக்கு வெளிக்காட்டியிருக்கிறது.

அதுவே மகிந்தவுக்கான வெற்றிக்கும்
ரணிலின் தோல்விக்கும் வழிவகுத்துள்ளதான வெளிப்பார்வை.

பார்வைக்கு புரியாத ஒன்று உண்டு என்றால்
அது ஜே.வீ.பியின் அமோக வளர்ச்சி.........

எல்லோரும் நினைப்பது போல
இப்போதும் இங்கு மகிந்த வெற்றியடையவில்லை.
ஜே.வீ.பிதான் வெற்றி பெற்றிருக்கிறது.

ஜே.வீ.பினரின் லட்சியம்
சிறிமாவோ மற்றும் ஐதேக ஆட்சிகாலத்தில் தம் உறுப்பினர்களைக் கொன்று குவித்த
<b>ஐதேக மற்றும் பண்டாரநாயக்க ஆட்சிகளை இல்லாமல் பண்ணுவதே</b>.
அது நடந்தேறியிருக்கிறது.

<b>இது ஜே.வீ.பியின் வெற்றி.</b>
Reply
#5
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->[b]<span style='font-size:25pt;line-height:100%'>ரணிலின் தோல்விக்கு காரணம் என்ன?</span>

17ம் தேதி நடந்து முடிந்த தேர்தல் பலரின் எதிர் பார்ப்புகளைகளை தோல்வியடையச் செய்திருப்பதாக அனேக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன அமைதியான பேச்சுவார்த்தை சமர்ச்சி முறையிலான ஆட்சிதான் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு எண்டு முன் வைத்துப் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜ.தே.கட்சி தோல்வியடைந்திருக்கிறது அதே நேரம் இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என முழக்கமிட்ட மகிந்தாவின் தலைமை வெற்றியீட்டியிருக்கிறது இது சிறுபாண்மை இனத்துக்கு சில அச்சத்தை ஏற்படுத்தினாலும் மகிந்தாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் கூட்டு வைத்திருக்கும் ஜேவிபி கட்சிகளின் ஒப்பந்த அடிப்படையில் இலங்கையின் சமாதானபேச்சுவார்த்தை மத்தியஸ்த்திலிருந்து நோர்வே வெனியேற்றப்பட வேண்டும் மற்றது சுனாமி பொது கட்டமைப்பு நீக்கப்படவேணும் இவைதான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என சிந்திக்க வைக்கிறது ஆனா ஜேவிபி கூறியது போல சிறுபாண்மைக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியுமெண்டனை நிரூபித்து இருக்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் என்ன நடவடிக்கை செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்  
. .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சிறுபான்மைக்கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆடசியமைக்க முடியுமென்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தது ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுத்தமாதிரித்தான். தமிழ்மக்கள் இந்தமுறை வாக்களித்திருந்தால் ரணில் நிச்சயமாக அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டி வந்திருக்காது.
அநேகமாக இந்த தேர்தலுடன்(அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குள்) ராஜபக்சவும் ஜே.வி.பியும் அரசியலில் பின்தள்ளப்படுவார்கள். ஏனென்றால் இவர்கள்தான் தமிழீழம் கிடைப்பதற்கு காரணகர்த்தாக்களாக இருக்கப்போகின்றவர்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)