Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நலவாழ்வுக்கான உணவு கூம்பகம்/பிரமிட்
#1
<img src='http://img463.imageshack.us/img463/7831/healthyfood6pg.jpg' border='0' alt='user posted image'>

இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.
கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும்

<b>நாளாந்தம் உட்கொள்ளவேண்டியவை.</b>

<b>1. நீர்</b>
முக்கோணத்தின் அடிப்பரப்பானது நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ நீர் உள்ளெடுத்தல் மிக அடிப்படையானது என்பதை இது காட்டுகிறது.

ஆண் -> ஒரு நாளுக்கு 12 கிளாஸ்/ 3லீட்டர்/ 96 அவுன்ஸ் நீர் அருந்தவேண்டும்

பெண் -> ஒரு நாளுக்கு 8 கிளாஸ்/2லீட்டர்/64 அவுன்ஸ் அருந்தவேண்டும்.

<b>ஏன் நீர் அருந்தவேண்டும் அல்லது நீரின் முக்கியத்துவம் என்ன?</b>

* மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். ஒரு வளர்ந்த மனிதனின் உடல் நிறையில் 60% நீராகும்.
* உடலின் அனைத்து தொழிற்பாட்டுக்கும் சமிபாடு, அகத்துறிஞ்சல் கடத்துதல், உடலின் அனுசேபம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.
* உடல் வெப்பநிலையை பேண உதவுகிறது
* நீரில் எந்த சக்தி பெறுமானமும் இல்லை
நீரிழப்பால் வரும் தலைவலி, அசதி என்பவற்றை போக்குகிறது.
*சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றை குறைப்பதில் உதவுகிறது
* குடல், சிறிநீரகம், சிறுநீர்ப்பை என்பவற்றில் ஏற்படும் புற்றுநோயை குறைக்கிறது.

நீரிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுபவை

<b>2. பழங்களும் மரக்கறிகளும்</b>

ஒரு நாளுக்கு ஒரு சுகதேகி மனிதனால
5 தடவைகள் மரக்கறிகளும், 2-3 தடவைகள் பழங்களும் உள்ளெடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

<b>ஏன் பழங்களையும் மரக்கறிகளை உண்ணவேண்டும்.?</b>

* மிகச்சிறந்த நார்ப்பொருளுக்கான மூலங்களாகும்
* விற்றமின், கனியுப்புக்களுக்கான சிறந்த ஆதாரம்.
* சக்தி பெறுமானம் குறைந்ததும் கொழுப்பற்றவை
* ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
* அதிகளவில் உட்கொள்வதால் புற்றுநோய், நிறை அதிகரிப்பு, இதய நோய்கள், ஆஸ்துமா, ஆகியவற்றை குறைப்பதில்/ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை குறைக்கிறன.

<b>3 தானியங்களும், மாபொருள் உள்ள மரக்கறிகளும்</b>

<b>ஏன் முக்கியத்துவமானது?</b>

* கொழுப்பு குறைவானது
* விற்றமின்கள் குறிப்பாக B கூட்ட விற்றமின்கள், விற்றமின் E , கனியுப்புக்களான , இரும்பு, செலனியம், நாகம் என்பவற்றை அதிகள்வில் கொண்டவை.

* ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
* உடல் நலத்துக்கன உணவை வழங்குகிறது
* பலவேறு வகையாக இருப்பதால் தெரிவுகள் அதிகம்
* புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல் என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

<b>4. அவரை இன உணவுகள்</b>

* மிகக்குறைந்த் கொழுபை கொண்டவை
* அதிகளவு புரத்ததை கொண்டவை
* கனியுப்புக்களான நாகம், இரும்பு, செலனியத்தையும், போலிக்கமிலம் எனும் விற்றமினையும் அதிகளவு கொண்டவை
* புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல், மன அழுத்தம், நீரிழிவு என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

<b>அடுத்த படிநிலையில் இருப்பவை வாசனைப்பொருட்களும் பாதகமற்ற கொழுப்பு உணவுகளுமாகும்.</b>

<b>5.1 நல்லின கொழுப்புணவுகள்</b>

நல்லின கொழுப்புணவுகள் எனும் போது அவை தாவர எண்ணெய் வகைகள் குறிப்பக அதிகளவான <b>தனி நிரம்பாத கொழுப்பமிலங்களை (MonoUnsaturated fatty acid), Omega 3 fatty acid </b>ஐ கொண்டவையாகும். இவை உடல் நலனுக்கு உகந்தவை

உதாரணமன எண்ணெய் வகை : ஒலிவ், நல்லெணெய், நிலக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோய எண்ணெய் போன்றவை

*உடலுக்கு சக்தியை வழங்குவதல்
*இதய நோய்கள், தொற்றுக்களில் இருந்து பாதுகாத்தல் , குருதி அழுத்ததை குறைத்தல்
* விற்றமின் அகத்துறுஞ்சல் , ஒட்சியேற்ற எதிரிகளை வழங்கல் குறிப்பக விற்றமின் E
* மன நலம்/ மூளையின் நலனுக்கு அவசியமானவை

<b>5.2 வாசனைப்பொருட்கள் </b>
மூலிகைகளும், வெங்காயம், லீக்ஸ் போன்றவையும், வாசனைப்பொருட்களும்
<b>முக்கியத்துவம்</b>
* தொற்றுக்களை குறைத்தல்
* குருதிஅழுத்ததை குறைத்தல் போன்றன

<b>6. பாலும் முட்டையும்</b>

<b>முட்டை நாளுக்கு ஒன்று வீதமும்
பால் நாளுக்கு 1-3 தரமும் உள்ளெடுக்க வேண்டும்</b>

இரண்டும்
* புரதம், விற்றமின்களான A,D,E, K, B12 என்பவற்றை அதிகளவு கொண்டவை
* மனிதருக்கு தேவையான எல்ல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

<b>அடுத்த வகை உணவுகள் வாரத்தில் சில நாட்கள் உள்ளெடுத்தால் போதுமானது </b>

<b>7. மீனும் கடலுணவுகளும்</b>

வாரத்தில் 2-4 முறை எடுத்தல் போதுமானது. (ஒரு தடவை 4-6 அவுன்ஸ் )

<b>8 இறைச்சிகள்</b>

வாரத்தில் 1-3 முறை எடுக்கவேண்டும்.

<b>9. இவை அத்தியாவசியமான உணவுகள் அல்ல, விரும்பினால் உள்ளெடுக்கலாம், மிக குறைந்த அளவில்</b>

<b>சொக்லேட்</b>- அதிகளவு 1 அவுன்ஸ் / நாள்

<b>அற்ககொல்</b> - 1-2 தடவை/ நாள் இது வயது, சுகநலன் என்பவற்றை பொறுத்தது.

ஒரு பரிமாறல் என்பது 300 மில்லி லீடடர் ஆகும்

<b>தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.</b>
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
நல்ல பயனுள்ள கட்டுரை நன்றி குளம். முன்பு சிறு வயதில் படித்த பல விடயங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது.

ஒரு கேள்வி: இந்த மரக்கறி வகைகளும் பழக்களும் இணைந்தே 5 பாகம் உள்ளெடுக்கபடவேண்டும் என்று நினைத்தேன். அப்படியில்லையா? தனியாக 5 பாகம் மரக்கறி வகைகளும் 2-3 பாகம் பழங்களும் அவசியமா? McDonald's fruit bag, Tropicana Orange Juice மற்றும் salad bag லேபல்களை பார்த்தால் அதில் World Health Organisation நிர்ணயித்த 5 பாகம் பழமும் மரக்கறிகளும் வகைகளில் இதுவும் ஒன்று என்று எழுதப்பட்டிருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
Mathan Wrote:நல்ல பயனுள்ள கட்டுரை நன்றி குளம். முன்பு சிறு வயதில் படித்த பல விடயங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது.

ஒரு கேள்வி: இந்த மரக்கறி வகைகளும் பழக்களும் இணைந்தே 5 பாகம் உள்ளெடுக்கபடவேண்டும் என்று நினைத்தேன். அப்படியில்லையா? தனியாக 5 பாகம் மரக்கறி வகைகளும் 2-3 பாகம் பழங்களும் அவசியமா? McDonald's fruit bag, Tropicana Orange Juice மற்றும் salad bag லேபல்களை பார்த்தால் அதில் World Health Organisation நிர்ணயித்த 5 பாகம் பழமும் மரக்கறிகளும் வகைகளில் இதுவும் ஒன்று என்று எழுதப்பட்டிருக்கின்றது.
மதன் உணவு கட்டமைப்புக்கான பரிந்துரை காலத்துக்கு காலம் மாறுபட்டு வருகிறது. அத்துடன் ஆரம்ப பிரமிட்டுக்களில் நீர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது நீருக்கு மேலதிகமாக உடற்பயிற்சி யும் இணைக்கப்பட்டு வருகிறது.
நீங்க கேட்டது 5 பாகமா என்பது? தற்போது பழமும், மரக்கறியும் சேர்த்து 7 தடவை. என சொல்லப்படுகிறது.

இது ஒரு ஆலோசனையே தவிர அப்படியே அனுசரிக்கவேண்டும் என்பதில்லை. ஆனால், மீன், கடலுணவு, இறைச்சி, அதிக நிரம்பிய கொழுப்பமிலமுள்ள உணவுகளை நாளாந்தம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
நன்றி குளம் அண்ணா

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். ஏன் இப்படி முன்பு வருலது இல்லையோ இதற்கு மேகன் அண்ணா என்னவாவது சொய்யுங்கோவன்
Reply
#5
அருமையான தேவையான தகவல்கள் குழம்ஸ்... நண்றி...

அதுவும் கடசியாய் தேனீர் பற்றிச் சொல்லி இருக்கிரீங்கள் பாருங்கோ அது இன்னும் நண்று...
Quote:தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.

நான் அதைக் கொஞ்சம் கூடுதலாயே கடைப்பிடிக்கிறனான்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#6
shobana Wrote:நன்றி குளம் அண்ணா
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். ஏன் இப்படி முன்பு வருலது இல்லையோ இதற்கு மேகன் அண்ணா என்னவாவது சொய்யுங்கோவன்

சோபனா இதை படியுங்கள் புரியும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7294
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
Mathan Wrote:
shobana Wrote:நன்றி குளம் அண்ணா
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். ஏன் இப்படி முன்பு வருலது இல்லையோ இதற்கு மேகன் அண்ணா என்னவாவது சொய்யுங்கோவன்

சோபனா இதை படியுங்கள் புரியும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7294

மிக்க நன்றி மதன்
Reply
#8
பயனுள்ள கட்டுரை குளக்காட்டன்.
மேலும் இதுபோன்று தாருங்கள்.
Reply
#9
Quote:ஆண் -> ஒரு நாளுக்கு 12 கிளாஸ்/ 3லீட்டர்/ 96 அவுன்ஸ் நீர் அருந்தவேண்டும்

பெண் -> ஒரு நாளுக்கு 8 கிளாஸ்/2லீட்டர்/64 அவுன்ஸ் அருந்தவேண்டும்.

குளம் அண்ணா ரொம்ப நன்றி உங்கள் பயனுள்ள தகவலுக்கு..ஆனால்..மேலுள்ளது ஏன் அப்படி..ஆண்கள் கூடவும்..பெண்கள் குறையவும் குடிக்க வேண்டும்? :roll:

அதே போல் தான்..நித்திரைக்கும், நான் படித்தேன். ஆனால் வித்யாசமாக>>
ஆண்கள்: ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் நித்திரை கொள்ளணும்.
பெண்கள்: ஒரு நாளைக்கு 9 மணித்தியாலங்கள்...

அதுவும் ஏன் என்று யாருக்காவது தெரியுமா? :roll:

(உண்மையாக நான் இதை எந்த போட்டிக்காகவோ...வாதட்டத்துக்காகவோ கேட்கவில்லை..புரியாததால் கேட்கிறேன்)
..
....
..!
Reply
#10
ப்ரியசகி Wrote:

உடற்தொழிலியல் ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உண்டு. இதனால் அவர்களின் அனுசேபச்செயன் முறை, ஆணில் அதிகமாகவும், பெண்ணில் குறைவாகவும் இருக்கிறது. உண்ணும் உணவின் சக்திப்பெறுமானத்திலும் ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் உள்ளெடுக்க வேண்டும் என்று தான் ஆலோசனை சொல்லப்படுகிறது. அதற்கேற்ப அருந்தும் நீரின் அளவும் மாறுபடும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#11
நன்றி குளம்ஸ' நல்ல தகவல்..

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
நல்ல பயனுள்ள தகவல்! நன்றி குளக்கட்டான்
Reply
#13
Thala Wrote:..
அதுவும் கடசியாய் தேனீர் பற்றிச் சொல்லி இருக்கிரீங்கள் பாருங்கோ அது இன்னும் நண்று...
Quote:தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.

நான் அதைக் கொஞ்சம் கூடுதலாயே கடைப்பிடிக்கிறனான்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்ல தகவல் நானும் அப்பிடித்தான் அப்பு ஆனா என்ன ஒரு வித்தியாசம் நீர் தேனீர் நான் வந்து மற்றது அவ்வளவுதான்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
MUGATHTHAR Wrote:
Thala Wrote:..
அதுவும் கடசியாய் தேனீர் பற்றிச் சொல்லி இருக்கிரீங்கள் பாருங்கோ அது இன்னும் நண்று...
Quote:தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.

நான் அதைக் கொஞ்சம் கூடுதலாயே கடைப்பிடிக்கிறனான்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்ல தகவல் நானும் அப்பிடித்தான் அப்பு ஆனா என்ன ஒரு வித்தியாசம் நீர் தேனீர் நான் வந்து மற்றது அவ்வளவுதான்

என்ன சின்னப்பு பாவிக்கிறதோ..?? இல்ல வேற எதாவதா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)