Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் நண்பன் என் கடவுள்
#1
என் நண்பன் என் கடவுள்

அமைதியான ஒரு காலை நேரம். எப்போது தான் எம் மண்ணின் எல்லைக்கோட்டை சென்றைடைவேன் என எதிர்பார்த்து எதிர்பார்த்து கொழும்பில் இருந்து புறப்பட்டதுக்கு, இப்பொழுதான் சுவாசம் சீராக ஓடுவது போல இருக்கின்றது.

புளியங்குளம் தாண்டி, இதோ தமிழீழத்தின் இதயமான வன்னிக்குள்ளும் வந்தாயிற்று. எத்தனை ஆண்டுகள் இதற்காக ஏங்கி இருக்கின்றேன்...இதை சற்றும் புரிந்துகொள்ளாமல் பக்கத்தில் இந்த வயோதிப பெண்மணி. வெளியே மதிப்பாய் அழைத்து பழகிய போதும். உள்மனது "இந்த கிழவின்ட தொல்லை தாங்க முடியலையே" என கரித்து கொட்டியது.

அட இது என்ன கதை என்று கேட்கிறீர்கள் போல!!. ஆமிக்காரன்ட செக்கிங் பொயின்றில இவ வந்த வான் பழுதடைய, என்ட அப்பர் பாவம் பார்த்து எங்கட வானில கூட்டி வந்திட்டார். வந்ததில இருந்து வாய் மூடவில்லை. எப்படி தான் இப்படி ஓய்வில்லாமல் பேசுகின்றாவோ தெரியாது.

சரி கதைக்கிறது தான் கதைக்கிறா நல்லதா ஏதும் சொல்லுதா?? அதுவும் இல்லை. தனக்கு 4 மகனாம். பெண்ணை பெறாததால் தப்பித்து கொண்டாவாம். இதில எங்கட அம்மா அப்பாவை பார்த்து ஒரு "பாவமா ஒரு பார்வை". ஏன் என்றால் என்னை பெற்றுவிட்டார்களாம்.

லண்டனில 2 மகனாம், கனடாவில 2 மகனாம். அங்கும் இங்கும் மாறி மாறி பறந்து கொண்டு இருக்கிறாவாம்.

இப்ப இவக்கு என்ன கவலை என்றால் வன்னியில இவவை புலிகள் பிடித்து காசு கேட்க போகினமாம். அட நான் சொல்லலைங்க. இந்த கிழவி சொல்லுது. தன்ட மகன்மார் நல்ல பெடியளாம். "என்ட மகன்கள் நல்லா உழைச்சு 2 வீடு வாங்கி இருக்காங்கள். சில பெடியள் மாதிரி இந்த புலிக்கு கொடிக்கம்பம் தூக்கிறன் என்று போறதில்லை. என்ற வளர்ப்பு அப்படி".... இதில மனிசி தன்னுடைய வளர்ப்பை பற்றி வேறு சொல்லுது.

இவட தொல்லை தாங்க முடியாம "இந்த மனிசி நிறைய கதைக்குது. வானில இருந்து தள்ளிவிடலாம் போல இருக்கு" இது கூட வந்த என் பெரியம்மாவின் மகன், என் அண்ணன். ரகசியமாக என் காதில் அவன் சொல்ல, எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க, மனிசி எங்களை பார்த்த பார்வை இருக்கே.....

இன்னும் சிறுது தூரம் தானே என அப்பா எங்கள் அனைவரையும் சமாதானபடுத்தின போது, "அண்ணே ஒரு 1/2 மணித்தியாலம் நிண்டு போட்டு போவமே" என சாரதி கேட்க. ஓர் கடையின் பக்கத்தில் வான் நின்றது.

அங்க தானே சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்தது. ஏதாவது சாப்பிட கிடைக்குமா என அப்பாவும், பெரியப்பாவும் கடைக்கு போக நாங்கள் எல்லாம் வானை விட்டு இறங்கினம். இந்த பெண்மணியும் இறங்கினவ "கனடா, லண்டன் என்றால் இப்படி இருக்குமா? என்னமா வேர்க்குது. ச்சா...." என்று இவ முடிக்க முதல்

"யார் அது ராசம் அக்காவே" என அழைத்தபடி ஒரு பெண்மணி அருகில் வர, இவர் நெளியா ஆரம்பித்தார்.

வந்தவ நல்ல ஒரு கதைகாரி போல "இஞ்ச பாரன் ஆர் என்று, இந்த மண்ணில கால் வைக்க மாட்டன் என்று போனனி, இப்ப மகன்மார் துரத்திவிட்டதும் வந்திட்டியா?"

ராசம் அக்காவை இப்ப பார்க்கணுமே. இதை தான் சொல்லுவார்களா "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என.

இதுக்கு மேல எதுக்கு இவவிண்ட கதை...

மறுபடி வான் நகர ஆரம்பிக்க, இப்படியான மனிதர்களுடன் பார்க்கும் போது நான் எவ்வளவு மேல் என நினைக்க தோன்றியது.

15 வருடங்களுக்கு முன் அயல்நாடு சென்று ஆரம்ப பள்ளி, உயர்பள்ளி, பல்கலைக்கழகம் முடித்து இதோ ஒரு மருத்துவராகி வேலைக்கும் போகிறேன். அரிச்சுவடி படித்த ஊரை மறக்க முடியாமல் தான் இதோ இப்பொழுது நான் இங்கே.

எம் மண்ணில், எம்மக்களுக்கு ஒரு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பா அம்மாவுடன் இங்கு நான் பிறந்த வீட்டிலேயே இருக்க வந்துள்ளேன்.

இப்படியானவர்களுடம் பார்க்கும் போது நான் எவ்வளவு மேல். கர்வம் எனும் அரக்கன் என்னுள்ளும் சிறிது தலைகாட்ட தொடங்கி இருந்தான். ஆனால் இன்னும் இரண்டு தினக்களில் அவ்வரக்கன் ஒரு கடவுளால் சூரசம்காரம் செய்யப்படுவான் என நான் அறிந்து இருக்கவில்லை.

வன்னியில் இருந்து வான் யாழை நோக்கி ஓட தொடங்கி இருந்த போது வானில் "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்" என்ற திரைப்பட பாடல் ஒலிபரப்பானது.

10 வயதில் இம்மண்ணைவிட்டு அழுதுகொண்டே நான் போன போது.... மறந்து வீட்டில் வைத்துவிட்ட பொம்மைக்காக அழுகிறேன் என நினைத்து "பொம்மையை விட்டுட்டு போறேன் என்று அழுகிறாயா? நான் கவனமா வைத்து இருப்பேன்.நீ வந்ததும் உன்னிடம் தருகிறேன்" என கூறி அனுப்பியவன் தான் என் நண்பண் "நிலவன்".

என்னைவிட 2 வயது கூடியவன். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள்.
பெற்றோர்கள் நண்பர்கள். அதனால் உறவுகளை விட நான் அதிகம் பழகியதும் நேசித்ததும் அவர்களை தான்.

நான் பிறந்த நேரம் அவன் கதைக்க ஆரம்பித்து இருந்தான். சிசுவாய் என்னை பார்த்தவன் தன் மழழை மொழியால் "நிலா" என "நிலவன்" என்ற தன் பெயரை சொல்லி அழைத்தானாம். அப்படிதான் என் பெயர் நிலா ஆனது.

அவன் வீட்டில் அவன் தான் ஒரு பிள்ளை. எங்கள் வீட்டில் நான் ஒரு பிள்ளை. சிறு வயதிலேயே என் மேல் மிகவும் ஆசையாக இருப்பான். பொம்மர் அடித்து பங்கருக்குள் போனாலும் என்னை தான் முதலில் தேடுவான். நானும் அப்படித்தான்.

பள்ளிக்கு போக ஆரம்பித்த போதும், பாடசாலையில் என்னை யாரும் கேலி செய்தால் அவர்கள் நிலவனிடம் அடி வாங்குவது உர்றுதி.

அன்பாய் இருந்தாலும் படிப்பில் எங்களுக்கும் கடும் போட்டி நிலவும். அப்படி ஒரு நாள் போடியின் போது தான் நாங்கள் ஒரு பந்தயம் போட்டோம். "நீயா நானா நன்றாக படித்து பெரிய ஆளாக வருவது என்று பார்ப்போமா?"

கோவம் வந்தாலும் சரி, மகிழ்ச்சி என்றாலும் சரி அவன் என்னை "போடி லூசு" என்றும், நான் அவனை "போடா லூசு" என்றும் அழைத்து அடித்துகொள்வோம்.

அவனுக்கு மருத்துவராக வேண்டும் என ஆசை. எனக்கு அவனை போட்டியில் வெல்ல வேண்டும் என ஆசை.

காலத்தின் கோலத்தால் நாங்கள் வெளிநாடு சென்றுவிட்டோம். நிலவன் குடும்பம் அங்கேயே இருந்தார்கள்.

ஒவ்வொரு வாரமும் எனக்கு கடிதம் அனுப்புவான். அனைத்தையும் எழுதி இருப்பான். ஒ/ல் இல் நல்ல மதிப்பெண் பெற்று ஏ/எல் படித்து கொண்டிருத போது அவன் கடிதங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு தடவை வர தொடங்கியது. பின்னர் 2,3 மாதங்களுக்கு ஒன்று. இப்படியே 3 வருடங்கள் உருண்டோட நானும் ஏ/எல் இல் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவம் பயில பல்கலைக்கழகம் சென்று இருந்தேன். அதன் பின்னர் அவன் கடிதம் வராமலே போயிற்று. என்னை பெற்றவர்களிடம் கேட்ட போது "நாடு பிரச்சனையில இடம் மாறி இருப்பினம்" என கூறினார்கள். படிப்பு சற்று சவாலாக இருக்கவே நானும் கடிதம் பற்றி அவ்வளவு சிந்திப்பதில்லை. எனது படிப்பு முடிந்து மருத்துவராக நான் பதவியேற்ற பின்னர் தான் என் மனதில் சிறு குழப்பம்.

இரவில் தூக்கத்தில் என் மனமே என்னிடம் ஏதோ சொல்லுவது போல இருக்கும்.

"நிலா இதுவா உன் நாடு? இங்கு என்ன செய்கிறாய்?" என பல கேள்விகள் மனதுக்குள் நச்சரித்தன.

அதன் பலனாய் தான் இப்பயணம். தாய் மண்ணை பார்ப்பதிலும் பார்க்க , என் நிலவனை பார்க்க போகிறேன் என்பது தான் பெரிதாக இருந்தது. ஏன் எனில் இன்று நான் மருத்துவராக இருப்பதற்கு கரணம் அன்று அவன் போட்ட பந்தயம்.

எங்கள் வீட்டை அடந்தட் போது நான் முதலில் போனது நிலவன் வீட்டுக்கு தான்.நிலவனப்பா தான் வாசலிலே இருந்தார். தூரத்தில் எனை கண்டதுமே "நிலாம்மா" என குரல் உடைய கத்தினார். சிறு பிள்ளை போல் ஓடிச்சென்று அவர் பின்னால் போய் கழுத்தை சுற்றி கைகளை போட்டு முத்தம் கொடுத்த போது ஏனோ அவர் கண்கள் பனித்து இருந்தன. ஆனந்தத்தில் நான் கூட தானே கண்களில் நீர் வர நின்று இருந்தேன்.

சத்தம் கேட்டு நிலவனம்மா வெளியே எட்டி பார்த்தார். ஒரு கணம் மகிழ்ச்சியில் விரிந்த அவர் கண்கள் மறு வினாடியே ஏனோ சுருங்கி போனது.

"எங்கே அவன்? எத்தனை நாளாக எனக்கு கடிதம் போடவில்லை. அவ்வளவு பெரிய ஆளாகிவிட்டானா" என பொய் கோவம் காட்டியபடி வீட்டுக்குள் போன எனக்கு இப்படி ஒரு .... கண்கள் இருட்ட மயங்கி விழ போன என்னை யாரோ தாங்கி பிடித்ததுபோல் இருந்தது.

கண் விழித்த போது அவன் முகத்தை தான் பார்த்தேன். படத்தில் அழகாக சிரித்தபடி "கப்டன்.நிலவன்".

என் நண்பன் மாவீரன் ஆகி இருந்தான். அவன் உருவ படத்திற்ற்கு பக்கத்திலேயே ஒரு பெட்டி. அத என்னிடம் எடுத்து குடுத்த நிலவனம்மா கதறி அழ , அவரை அழைத்து அவைவரும் சென்று விட...நானும் அவனும் மட்டும்...

அதிர்ச்சியில் இருந்து மீளாததால் ஏனோ கதறி அழ எனக்கு தோன்றவில்லை. பெட்டியை உடைத்த போது அங்கு எனது பொம்மை, பல கடிதங்கள்.

ஏ/எல் படிக்கும் போது தன்னை தாய் நாட்டுக்காக இணைத்து கொண்டது முதல் அவன் கடைசி நாள் வரை அத்தனையும் கடித்ததில்..

பொம்மையுடன் ஒரு சிறு துண்டு காகிதம் "உன்னுடைய பொம்மை இதோ உனக்காக..நிலவன்"

அதற்கு மேல் என்னால் கதறி அழாமல் இருக்க முடியவில்லை.

"பந்தயத்தில் உன்னை தோற்கடிக்க வந்த என்னக்கு இப்படி ஒரு பரிசளித்து சென்று விட்டாயே" என கதறி அழ ஆரம்பித்து எப்போது நிறுத்தினேனோ தெரியாது.

ஆனால் அழுது முடித்திருந்த போது ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

"எதற்காக அழ வேண்டும்? இங்கு என்ன சாவா நடந்து இருக்கின்றது? ஒரு சரித்திரம் அல்லவா அரங்கேறியிருக்கின்றது. என் நண்பன் மாவீரன், மரணத்தை வென்றவன். அவன் விட்டு சென்ற வேலையை, அவன் நடந்து சென்ற பாதையில் நானும் செல்வேன்".

அடுத்த நாள் காலையில் மருத்துவராக நான் என்ன உதவிகளை செய்யலாம் என அறிய வெளிய புறப்பட்ட போது அவன் நினைவு வர, அவனை வணங்கி திரும்பி நடக்க ஆரம்பித்த போது, மனம் ஏதோ சொல்ல நின்று அவனை பார்த்தேன்.

"அங்கிருந்து என்னை அழைத்து வந்தவன் நீதான் என எனக்கு தெரியும். போட்டியில் நீ வென்றுவிட்டாய் என நினைக்க வேண்டாம். உன் வழியே நானும் சென்று உன்னைப் போலே நானும் வருவேன்" என நான் கூற "போடீ லூசு" என அவன் கூறுவது போல இருக்க,

"நீ போடா லூசு" என சொல்லி நடக்க ஆரம்பித்த என் நடையில் முழுவதுமாய் அவன் தான் இருந்தான்.. என் நண்பன்..என் கடவுள்.


நிலவின் பயணம் ஆரம்பிக்க கதை முற்று பெறுகிறது.



எம் உயிர்காத்த மாவிரர்களுக்கு இக்கதையை சமர்ப்பிக்கின்றேன்.

தூயா
26/11/05
[b][size=15]
..


Reply
#2
தூயா மாவீரார்களுக்காக அர்ப்பணம் செய்த கதை மிகவும் நல்லாயிருக்கு. ஒவ்வொருவரும் சிறுவயதில் எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்தாலும் வாழ்க்கை சக்கரத்தில் அகப்பட்டு எமது வாழ்க்கை எல்லாம் நாம் நினைப்பவைக்கு மேலகாத் தான் நடக்கின்றது.. . நல்லாய் எழுதியிருக்கின்றீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்...

Reply
#3
உண்மை சம்பவங்களை கலந்து எழுதியிருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். எழுத எழுத உங்களுக்கு கதை எழுதுவது கைகூடி வரும். வசன அமைப்புகளில் கொஞ்சம் கவனம் அவசியம் தான் அது நாளடைவில் சரியாகிவிடும். தொடர்ந்து கதைகளை எதிர்பார்க்கின்றேன்.

வாழ்த்துக்கள் தூயா.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
நினைவோடு கூடீ தமிழர் தாயகத்தில் நடந்த நடந்துகொண்டிருக்கும் ஏக்கங்கள் தவிப்புக்கள் எல்லாமே! கதையின் உருபெற்றுள்ளது. இந்த நேரத்தில் இந்த கதையை எழுதியமைக்கு..உள்ளத்தில் இருந்து நன்றிகள்.....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அடடா அருமையான கதை. என் கண்கள் பனித்துவிட்டது. வாசகர் மனதைத்தொடுவது தானே கதையின் முதல் வெற்றி. தூயா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். யாழ் களத்தில் இப்படி ஒரு எழுத்தாளினி இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. இன்னும் பல சிறுகதைகள் எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளோம்.
Reply
#6
துயா வாழ்த்துக்களும், நன்றியும்..............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
தூயா கதை அருமை. வாசிக்கும் போது மனசை வருடிவிட்டது. முன்னமும் உங்களது ஒரு கதை படித்தேன் வாசகரை பாதிக்கும் இயல்புண்டு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
பதில் எழுதி என்னை ஊக்குவித்த ரமா, மதண்ணா, நிதர்சம், ஆதிபன்,குளம்ஸ் அண்ணா, மற்றும் அக்கிக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

மதண்ணா, அடுத்த கதையில் வசனங்களை பார்த்து எழுதுகிறேன். மிக்க நன்றி.

குளம் அண்ணா எனக்கு ஏன் நன்றி??? என் கதையை வாசித்த உங்களுக்கு தான் நன்றி சொல்ல நான் விரும்புகிறேன். மிக்க நன்றி.
[b][size=15]
..


Reply
#9
மாவீரர் வாரத்தில் தங்கள் கதை கண்டு மகிழ்ச்சி...
தாயக நினைவுகள் மனதை தொட்டுச் செல்கிறது.
மேலும் தொடர்ந்து தாருங்கள்.
வாழ்த்துக்கள்...
Reply
#10
தூயா கதையை மிகவும் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். கதை இறுதிவரை சுவை குன்றாது நகர்த்தப்பட்டுள்ளது.


Quote: கொழும்பில் இருந்து புறப்பட்டதுக்கு, இப்பொழுதான் சுவாசம் சீராக ஓடுவது போல இருக்கின்றது.

முகமாலை தாண்டி, இதோ தமிழீழத்தின் இதயமான வன்னிக்குள்ளும் வந்தாயிற்று. எத்தனை ஆண்டுகள் இதற்காக ஏங்கி இருக்கின்றேன்.

இடங்களையும் கொஞ்சம் அறிந்து அதற்கேற்ப எழுதினீர்கள் என்றீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கொழும்பிலிருந்து வன்னி செல்லும் போது நீங்கள் போராளிகளைச் சந்திக்கும் இடம் புளியங்குளம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#11
மன்னிக்கவும். பெயர்கள் தெரியாமல் இல்லை. புளியங்குளத்தை நினைத்து இந்த பெயரை போட்டு விட்டேன் தவறுதலாக. சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி. கதையில் இடத்தின் பெயரை மாற்றி உள்ளேன்.
[b][size=15]
..


Reply
#12
shanmuhi Wrote:மாவீரர் வாரத்தில் தங்கள் கதை கண்டு மகிழ்ச்சி...
தாயக நினைவுகள் மனதை தொட்டுச் செல்கிறது.
மேலும் தொடர்ந்து தாருங்கள்.
வாழ்த்துக்கள்...



மிக்க நன்றி அக்கா.
தவறுகளையும் சுட்டி காட்டுங்கள்.
பதில் எழுதியமைக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.
[b][size=15]
..


Reply
#13
மாவீரருக்காக நீங்கள் எமுதிய கதை கற்பனையாகத் தெரியவில்லை உண்மையாக நடந்தது போல் இருக்கிறது என்னதான் இருந்தாலும் கண்களில் நீர் வர வைத்து விட்டீர்கள் சுட்டி...............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
தூயாயாவின் கதையை தூய்மையான இந்த நாளிலே முதல்முதலாகப் படித்தேன். உருக்கமான கதையை பொருத்தமான நாளிலே இணைத்தமைக்கு என் பாராட்டுக்கள்.

Reply
#15
நன்றி முகம்ஸ் & செல்வமுத்து <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்களின் பாராட்டால் இன்னும் நிறைய எழுத வேண்டும் போல தோன்றுகிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#16
சிறு வயது நட்புக்கள் ஏக்கங்கள் எதிர்காலக்கனவுகள் எல்லாத்தையும் பிரதி பலித்து மிக உருக்கமாய் இருக்கின்றது... கண்ணீரை வரவழைத்துவிட்டது.. நன்றி.. தொடர்ந்து எழுதுங்கள்..
<b> .. .. !!</b>
Reply
#17
பாராட்டுகள் தூயா சும்மா சொல்ல கூடாது ஒருகணம் கண்கண் பனிக்க வைத்து விட்டீங்கள் நன்றிகள்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#18
நன்றி ரசிகை.

பாரட்டுக்கு மிக்க நன்றி சாஸ்த். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பிழைகளை மன்னித்து வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)