Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா கொல்கத்தா ரசிகர்களின் அடாவடித்தனம்,,
#1
அண்மையில் நடந்த முடிந்த இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா நாடுகளுக்கு இடையிலானா 4வது கிரிக்கட் போட்டியில் இந்திய கொக்கத்தா ரசிகர்கள் செய்த நாகரிகமற்ற ஒரு செயல் உலக நாடுகளிற்கு இந்தியாமக்களின் நாகரிகமற்ற செயலை மீண்டும் நிரூபித்து காட்டி இருக்கின்றது,

பொதுவாக இரண்டு நாடுகள் கிரிக்கட் கால் பந்து விளையாடும்பொழுது அந்த நாட்டு ரசிகர்கள் தங்களின் நாடு வெல வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருப்பார்கள், உதாரணத்துக்கு கால்பந்தை எடுத்துக்கொண்டால், இரண்டு உள்ளூர் கழகங்கள் விளையாடும்பொழுது தங்களுக்குள் அடிப்பட்டுக்கொள்ளும் ரசிகர்கள், அந்த நாட்டு அணி வேறோரு நாட்டு அணியுடன் விளையாடும்பொழுது ஒட்டு மொத்த ரசிகர்களும் முதல் நடந்த சண்டை சச்சரவுகளை மறந்து தங்கள் நாட்டு அணி வெற்றி பெறவேண்டும் எண்டு துடிப்பார்கள், இது உலக நாடுகளில் பொதுவாக நடைபெறும் நிகழுவு, வரலாறு..

ஆனால் இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள்? எல்லாத்துக்குமே சண்டை, பொறாமை, எரிச்சல், ஒரு மாநிலம் நல்லா இருந்தால் மற்ற மாநிலக்காரனுக்கு பிடிக்காது, எப்படியாவது ஏதாவது ஒண்டுக்குள் சிக்கவைத்து நொங்கெடுப்பது அவங்களுக்கு கை வந்த கலை, ஆனால் இங்க என்ன நடந்தது எண்டால் ஒரு விளையாட்டில் இவர்கள் செய்ததை பாருங்கள்..

கொல்கத்தா ரசிகர்கள் இந்திய அணிக்கு அமோக ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள், இந்திய அணியின் முன்னாள் கப்டன் சவ்ராவ் கங்குலிக்கு (ஒரு தனி நபருக்காக)அணியில் இடம் கொடுக்கவில்லை எண்ட உடன் அவர்கள் என்ன செய்தார்கள்? தட்ஸ் தமிழில் வந்த செய்தியை வாசியுங்கள்..

கொல்கத்தா வீரரான கங்குலி அணியில் இடம் பெறாததால் உள்ளூர் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். அவர்கள் போட்டி தொடங்கியதிலிருந்தே இந்திய வீரர்களை பார்த்து கேலி செய்து கொண்டிருந்தனர். இத தான் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் கங்குலிக்கு ஆதரவாகவும் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர். பயிற்சியாளர் கிரேக் சேப்பலை எதிர்த்து மோசமாக வார்த்தைகளால் திட்டினர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டனர்.

கங்குலி இல்லையேல் கிரிக்கெட் இல்லை என்று இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான காம்பீரும், பதானும் மைதானத்தில் இறங்கிய போது கோஷமிட்டனர். இதனால் தொடக்க ஆட்டக்காரர் பதான் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீண்டும் சேப்பலை வெளியேற்று, இந்தியாவை காப்பாற்று என்று கோஷமிட்டனர்.

தெண்டுல்கர் வந்த போது தெண்டுல்கர் ஏய் ஏய் என்று கேலி செய்தனர். இதனால் அவரும் 2 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது இன்னும் கேலி அதிகரித்தது. இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனர். ஷேவாக் 30 ரன்னில் அவுட்டான போது கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ராகுல் திராவிட் மைதானத்திற்கு வந்ததில் இருந்தே அருக்கு எதிரான கோஷங்கள் விண்ணை பிளந்தன. அவர் 6 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது அவமானம் அவமானம் டிராவிட் ஒழிக என்று கோஷமிட்டார்கள்.

கங்குலிதான் ஹீரோ சேப்பல் முட்டாள் என்று எழுதப்பட்ட அட்டையை தூக்கி பிடித்தனர். இப்படி ரசிகர்களின் கேலி தொடர்ந்ததால் இந்திய வீரர்கள் நிலைத்து நிற்க முடியாமல் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர்.

ஒரு வீராருக்காக இப்படி செய்து அணியின் மானத்தை வாங்கினதும் போதாமை தாய் நாட்டுக்கு செய்யிற, தேடிக்குடுத்த பரிசை பாருங்க.... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)