12-03-2005, 12:26 AM
<span style='font-size:21pt;line-height:100%'><b>இயக்குனர் பாரதிராஜா!</b>
- சின்னராசு
செட்டும் தேவையில்லை. முகவெட்டும் அவசியமில்லை என தமிழ்த் திரைப்படங்களில் பெரிய பெரிய அரங்குகள் போட்டு படம் எடுக்கிற வழக்கத்தையும் அதுபோல படங்களில் நடிப்பவருக்கு கவர்ச்சிகரமான முக அமைப்பும் தேவை என்றிருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றியமைத்து புரட்சி செய்தவர் இயக்குனர் பாரதிராஜா.
அவர் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான <b>16 வயதினிலே</b> திரைப்படத்திலேயே அந்தக் கதை நிகழ்கிற கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிக எளிய கிராம புறத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து அதனை பெரிய வெற்றிப் படமாகவும் தந்ததற்கு பின்னாலேயே வெளிப் புறங்களில் படம் எடுத்தால் அதில் தனி உயிரோட்டம் இருக்கிறது என்ற எண்ணங்களுக்கு நம்மவர்கள் வந்தார்கள்.
<img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi1.jpg' border='0' alt='user posted image'>
அதுவரை சென்னையில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டிருந்த சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் வேலை இல்லாமல் தூங்க ஆரம்பித்தன. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஸ்டூடியோக்களிலும் இருந்த படப்பிடிப்பு தளங்களை சரக்குகளை பாதுகாக்கும் கிட்டங்கிகளாக மாற்றி வாடகைக்குவிட ஆரம்பித்தார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை ஹாலிவுட் என்று பெருமையோடு சொல்லும் விதம் சென்னை கோடம்பாக்கத்தில் பிரமாண்டமான ஸ்டூடியோக்கள் தோன்றிக் கொண்டே இருந்த சூழ்நிலையில் படப்பிடிப்புகளுக்கு ஸ்டூடியோக்கள் அவசியமில்லை என்ற மாற்ற நிகழ்ந்து தமிழகத்திலே உள்ள பல கிராமங்கள் படப்பிடிப்பு நடத்த ஏற்றவையாக புகழ்பெற ஆரம்பித்தன.
அதேபோல தனது படங்களில் முழுக்க புது முகங்களை அறிமுகப்படுத்தும் புதுமையையும் பாரதிராஜா துணிந்து செய்தார்.
அதற்கு முன்பெல்லாம் இயக்குனர் ஸ்ரீதர் முக்கிய வேடங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் பாணியை கையாண்டு வந்தார்.
இருப்பினும் இயக்குனர் ஸ்ரீதர், தான் அறிமுகப்படுத்திய புதுமுகங்கள் திரைப்படங்களுக்குத் தான் புதுமுகங்களாக இருந்தார்களே தவிர நாடகம் போன்றவற்றில் நடித்து ஓரளவு பயிற்சி பெற்றவர்களாகவே இருந்தார்கள்.
ஆனால் பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்களோ நடிப்புத் துறைக்கு சம்பந்தமே இல்லாமல் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களாய் இருந்தார்கள்.
அதிலும் கிராம புறங்களை அவர் காட்டும்போது அதில் துணை நடிகர்களாக அந்தந்த கிராமத்து மனிதர்களையே நடிக்க வைத்தார். குறிப்பாக கிராமபுற முதியவர்கள் அவர் படங்களில் நடிகர்களாக தோன்றினார்கள். அதனால் அந்த காட்சிகள் எல்லாம் இயற்கையாக அமைந்தன.
திரைப்படங்களின் துவக்கத்தில் படத்தின் டைட்டிலை பல இயக்குனர்கள் பல புதுமைகளை புகுத்தி காட்டியதுண்டு. பாரதிராஜா அதிலும் தன் பாணியில் ஒரு புதுமையை செய்தார். டைட்டில் போடும்போது, இயக்குனர் பெயரை விட்டுவிட்டு படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் இயக்குனர் பெயரை போடுகிற புதுமையை அவர் கையாண்டார்.
அவருடைய முதல் படமான <b>16 வயதினிலே</b> படத்தில் டைட்டில் ஓடி முடிந்த பின்னர் படத்தின் நாயகியான ஸ்ரீதேவி ஓடி வந்தபடி தன் கையில் உள்ள காகிதங்களை உயர விசிறியடித்தப்படி, <b>நான் பாசாயிட்டேன்</b> என்று கத்துவது போல ஒலியை வெளிப்படுத்தி ஸ்ரீதேவி தோற்றத்தை அசையாமல் சில வினாடிகள் நிறுத்தி, இயக்குனர் பாரதிராஜா என தனது பெயரை காட்டுவார்.
இதைப் பின்பற்றியே அதற்குப் பின்னால் நிறைய இயக்குனர்கள் இந்த பாணியை கையாண்டார்கள்.
<img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi2.jpg' border='0' alt='user posted image'>
<b>ஈரநிலம்</b> படப்பிடிப்பில்...
தமிழ் திரையுலகில் முதலில் புதுமையாக சிந்தித்து படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி முதல் வெற்றியும் கண்டவர் இயக்குனர் ஸ்ரீதர்.
பாரதிராஜா எடுக்கும் படங்களில் சின்னசின்ன யுக்திகளிலும் நம்மை வியக்க வைப்பார். அவருடைய காலத்திற்கு முன்பு படங்களில் ஒரு கதாபாத்திரம் தன் மனதுக்குள் நினைப்பதை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக அவர் மெல்ல ஓசை இல்லாமல் முணங்குவதுபோல பேச வைப்பார்கள்.
பாரதிராஜாதான் ஒரு கதாபாத்திரம் மனதுக்குள் நினைப்பதை ரசிகர்களுக்கு புரிய வைக்க அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தை குளோசப்பில் காட்டி அசைவு இல்லாமல் சற்று நிறுத்தி அந்த கதாபாத்திரத்தின் குரல் பின்னணியில் ஒலிக்கச் செய்து காட்டி அதன்மூலம் அந்த கதாபாத்திரம் என்ன நினைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற பாணியை கொண்டு வந்தார்.
பாரதிராஜாவின் <b>16 வயதினிலே</b> படத்தை தொடர்ந்து <b>கிழக்கே போகும் ரயில்</b>, மூன்றாவதாக <b>சிவப்பு ரோஜாக்கள்</b>, அதன்பின் புதிய வார்ப்புகள் என தொடர்ந்து புதிய புதிய கலை நுணுக்கத்துடன் படங்களை வெளிக்கொணர்ந்தார்.
அவற்றுள் <b>புதிய வார்ப்புகள்</b> படத்தில் கிராமத்திற்கு ஆசிரியர் பணிக்காக வந்திருக்கும் பாக்யராஜ் தன் வீட்டருகே உள்ள நாயன வித்துவானின் பெண்ணான ரதியை காதலிப்பார். ரதி படிப்பதற்காக ஆசிரியர் பாக்யராஜிடம் புத்தகம் வாங்கி வா என தம்பியை அனுப்பி வைக்கும் போது, அந்த தம்பி ஆசிரியரை போய் பார்த்துவிட்டு திரும்பி வந்து அக்காவிடம் அவர் சொன்ன தகவலை சொல்லுவான்.
அக்கா நீ உன் இதயத்தை தந்தால் வாத்தியார் அவர் குங்குமத்தை தருகிறேன் என்று சொல்றார் என்பான். அதாவது இதயம், குங்குமம் என்ற பெயரில் உள்ள பத்திரிகைகளை வைத்து எழுதப்பட்ட வசனம் அது.
இந்தக் காட்சியில் இந்த பொடியன் தன் அக்காவிடம் அந்த தகவலை கூற ஆரம்பிக்கும் பொழுது அவன் முகத்தை குளோசப்பில் காட்டி அவன் பேசுவதுபோல ஆசிரியர் பாக்யராஜின் குரல் பின்னணியில் ஒலிக்கச் செய்து படமாக்கியிருந்தார் பாரதிராஜா.
<b>புதிய வார்ப்புகள்</b> பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட பிரபலமான ஓர் இயக்குனர் இந்த காட்சியை பெரிதும் பாராட்டி தன் உரையில் குறிப்பிட்டார்.
உன் இதயத்தை தந்தால் வாத்தியார் தன் குங்குமத்தை தருவாராம் என்று பேசுகிற காட்சியில் வசனத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடி இருப்பது நானும் சில படங்களில் சில காட்சிகளை அமைத்ததுண்டு. ஆனால் அந்தக் காட்சியில் அந்த சிறுவன் பேசப்போவது போல அவன் முகத்தை காட்டி பின்னணியில் வாத்தியாரின் குரலை ஒலிக்க செய்த அந்த யுக்திதான் என்னை அயர வைத்தது என்று அந்த இயக்குனர் மனம் விட்டு பாரதிராஜாவை பாராட்டினார்.
அந்த படவிழாவில் கலந்து கொண்ட நடிகை லட்சுமி பேசும்பொழுது, நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தில் பாரதிராஜா உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அன்று ஒரு காட்சி எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் உதவி இயக்குனரான பாரதிராஜா மற்றும் அவரை போன்ற உதவியாளர்களும் ஒரு சிறு தவறை செய்துவிட்டார்கள்.
அதன் காரணமாக நான் பாரதிராஜாவைப் பார்த்து, இந்த சின்ன விசயத்தில் கவனம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறீர்களே. நீங்கள் எல்லாம் பின்னால் பெரிதாக என்ன காரியம் சாதிக்கப் போகிறீர்கள் என கேட்டுவிட்டேன்.
ஆனால் இன்று பாரதிராஜா சாதித்து இருக்கும் பிரமாண்டமான காரியங்களைப் பார்த்து நான் அன்று பேசியதற்காக இன்று அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
பாரதிராஜா தன் மனத்திற்குள் 16 வயதினிலே கதையை உருவாக்கி அதை தயாரிக்க ஒரு சரியான தயாரிப்பாளரை தேடிக் கொண்டிர்ந்த காலக்கட்டத்தில்தான் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு அறிமுகமானார்.
பாரதிராஜா கூறிய கதை ராஜ்கண்ணுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் சப்பாணியாக வரும் கதாநாயகன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என ராஜ்கண்ணு கேட்டார்.
பாரதிராஜாவுக்கு அந்த சமயம் அந்த பாத்திரத்திற்கு இரு நடிகர்கள் பொருத்தமானவர்கள் என்ற எண்ணம் இருந்தது. எனவே கமல்ஹாசன் பெயரையும், நாகேஷ் பெயரையும் பாரதிராஜா குறிப்பிட்டார். ஆனால் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுக்கோ கமலஹாசனுக்கே இந்த வேடம் மிக பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் கமலஹாசன் கால்ஷீட் கிடைப்பதற்காக படம் தயாரிப்பதை சிறிதுகாலம் ஒத்திப் போட்டார்கள்.
பின்னர் நடிகர்கள் டெக்னிஷீன்கள் எல்லாம் முடிவாகி அந்த குழுவினர் படத்தை தயாரிப்பதற்காக வெளியூர் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் ஏதாவது படக்கம்பெனிகளில் நமக்கு சின்ன வேலைகள் ஏதும் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கே.பாக்யராஜ்க்கு இந்தத் தகவல் கிடைத்தது. அந்த 16 வயதினிலே படப்பிடிப்பு குழுவினருடன் தானும் ஒரு உறுப்பினராக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என அவர் விரும்பியபோது, அதுவரை அவருக்கு உதவிகள் செய்பவராகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்த கதை வசனகர்த்தா தூயவனை போய் பாக்யராஜ் சந்தித்தார்.
<img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi3.jpg' border='0' alt='user posted image'>
<b>புதிய வார்ப்புகள்</b> படப்பிடிப்பில் பாக்யராஜுடன்...
பாக்யராஜ் சொன்னதை கேட்ட தூயவன், நீ சொல்கிற இந்த படக் கம்பெனி புதிய மனிதரால் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் முக்கிய ஆட்கள் எல்லாம் புதியவர்களாகவே தெரிகிறார்கள். இவர்கள் தொடர்ந்து இந்த படத்தை முடித்து வெளிவருமா என்பதெல்லாம் சந்தேகம்தான். இருந்தாலும் உனக்கு சில மாதங்கள் ஏதோ வேலையும், சம்பளமும் கிடைத்து பொழுதும் கழியும் என்பதால் அந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் நீ போய் வா என விடை கொடுத்தார்.
16 வயதினிலே படத்திற்கு வசன கர்த்தாவாக கலைமணி பணியாற்றினார். வசன உதவி இயக்குனர் உதவி போன்ற பணிகளை பாக்யராஜ் மேற்கொண்டார்.
அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பாக்யராஜ் ஏற்கனவே குறிப்பிடிருக்கிறார்.
ஒருநாள் படப்பிடிப்பில் எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு வேலை தாமதமாகி படப்பிடிப்பு அதனால் பாதித்ததால் பாரதிராஜா பாக்யராஜிடம் கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த தவறுக்கு நாம் காரணமில்லையே! ஆனால் இயக்குனர் நம்மை திட்டுகிறாரே என மனம் உடைந்து போனார் பாக்யராஜ். எனவே அன்றைய படப்பிடிப்புடன் அந்த குழுவில் இருந்து விலகி சென்னை திரும்பிவிட திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால் அன்றைய படப்பிடிப்பு முடிந்த பிறகு பாக்யராஜை அழைத்து பேசிய பாரதிராஜா, இன்று காலையில் உன்னை நான் திட்டிப் பேசியதை நீ சங்கடமாக எடுத்துக் கொள்ளாதே! நான் திட்டியது உன்னையல்ல. படப்பிடிப்புக்கு தாமதம் நேரச் செய்தவரையே நான் திட்டினேன். ஆனால் நான் இப்போதுதான் புதிதாக இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். இந்த நிலையில் படத்தயாரிப்பு வேலைகளில் ஏற்கனவே அனுபவப் பட்டவர்களை நான் கடிந்து கொண்டால் பிறகு அவர்கள் நமக்கு ஒத்துழைப்புடன் வேலையில் ஈடுபடமாட்டார்கள். அதனால் தான் எனக்கு உதவியாளனாகிய உன்னை திட்டுவதுபோல என் கோபத்தை வெளிப்படுத்தினேன் என பாரதிராஜா கூறினாராம்.
16 வயதினிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அப்படத்திலே பரட்டையனாக நடித்த ரஜினிகாந்த் பிரபலமாகவில்லை. எனவே அந்தப் படப்பிடிப்பு சமயங்களில் ரஜினிகாந்த் சாதாரணமாக லுங்கி உடுத்திக்கொண்டு அந்த கிராம மக்களோடு சாதாரணமாக காணப்படுவார் என்று அந்த பழைய அனுபவங்களை எல்லாம் சிலர் கூறியிருக்கிறார்கள்.
16 வயதினிலே படம் தமிழ் திரைப் பட உலகின் மாமூலான பல உத்திகளை தவிடு பொடியாக்கி புதியதோரு கண்ணோட்டத்திற்கு வழிகோலியது என்றால் அது மிகையல்ல!
நன்றி: விகடன்</span>