Posts: 18
Threads: 4
Joined: Dec 2005
Reputation:
0
இது உங்களில் பலரும் முன்பே படித்திருக்கக்கூடிய என்னுடைய ஒரு தொடர்கதையென்றாலும் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய எழுத்துலக ஆரம்பத்தொடர்கதையானதால் உங்களின் விமரிசனங்களுக்காக மீண்டும் தருகிறேன். முன்பே படித்த அன்பர்களும் அவர்களுடைய விமர்சனங்களை தரலாம்.
இதுவும் என்னுடைய கற்பனை பாதியும் நிஜம் மீதியும் கலந்த ஒரு கதைதான்.
------------------------
பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து என் வாழ்நாளில் என்றுமே சொல்லியிராத ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி அவளைத் திட்டினேன். பிறகு, "மரியாதையா நடந்துக்கோ, தெரிஞ்சத மட்டும் பேசு" என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தேன்.
ராத்திரி முழுக்க தூக்கம் வரவில்லை; அன்றைய நாளின் ஞாபகங்கள் மீண்டும், மீண்டும் வந்து கழுத்தை நெரித்தது. கோடை விடுமுறையின் கடைசி பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட நான் அன்றைய தலைப்பில் மிக அருமையாகப் பேசி, காந்தி, பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன் இவர்களின் கருத்துக்களையும் இடையிடையே இட்டு, 'என் சிறுநீரைக் குடித்தால் உனக்கு விடுதலை தருகிறேன்' என்று சொன்ன அமெரிக்க சார்பு பொலிவிய அரசிடம், 'என் தலை மயிறு கூட அந்த சுதந்திரத்தை ஏற்காது' என்று சொல்லி இறந்து போன செகுவாராவின் கருத்துக்களைச் சொல்லி முடிக்கும் பொழுது அரங்கம் அதிரும் கரவொலி.
ஆனால் பின்னால் வந்து பேசிய அவளை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை, பெரும்பாலும் கல்லூரிக்கிடையிலோ அல்லது பள்ளிகளுக்கிடையிலோ நடக்கும் பேச்சுப்போட்டிகளில் மிகவும் தெரிந்த நண்பர்களே பங்குகொள்வார்கள். ஆனால் இந்தப் பேச்சுப்போட்டி எல்லோருக்கும் உரியது. அதாவது யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். நான் பேசி முடித்தபின் மேடையேறிய அவள் முதல் வரியிலேயே, "முன்னால் பேசிவிட்டு போனாரே ஒருவர், அவரை நேற்று ஒரு பெட்டிக்கடையருகில் கையில் சிகரெட்டுடன் பார்த்தேன், இவரும் இவர் நண்பர்களும் சேர்ந்து அங்கு போகும் பெண்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள், இப்படிப்பட்ட இவருக்கு செகுவாராவைப் பற்றி பேச அருகதையே இல்லை!" என்று சொல்ல, பேச்சுப்போட்டி நடந்த இடம் ஒரு பெண்கள் கல்லூரியாதலால் பலத்த கரகோஷம், அதன் பின்பு அவள் தலைப்பிலும் பேசினாள்.
அவள் பேசிவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பெண்களை மதிக்கும் நான், எப்படி அப்படி நடந்து கொண்டேன் என்றே தெரியவில்லை.
காலையில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன், அவளும் அங்கே வந்தாள், நேரே அவளிடம் போனேன்.
"உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்."
நான் சொன்னதும், கொஞ்ச தூரம் நகர்ந்து வந்த அவள், "ம்ம்ம்ஸ் சொல்லுங்கள்."
"என்னை மன்னிச்சிருங்க, நேத்து கோபத்திலே திட்டிட்டேன், அந்த வார்த்தை சொல்லி திட்டியிருக்க கூடாதுதான், ஆனால் சொல்லிட்டேன், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!" என்று சொல்லிவிட்டு அவளையே பார்த்தேன்.
"நேத்திக்கு நீங்க என்னவோ திட்டினீர்கள் என்று தெரியும், ஆனா சத்தத்துல என்ன சொன்னீங்கன்னு கேட்கலை, பரவாயில்லை, எம்மேலையும் தப்பிருக்கிறது, நீங்க சாதாரணமா எடுத்துப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க கோபமாய்ட்டீங்க, ஆமா உங்களுக்குத்தான் முதல் பரிசு கொடுத்தாங்க, ஆனா வாங்க நீங்க வரலையே?" என்று கேட்டாள்.
"இல்லை மனசு சரியில்லை, அதான் வாங்கலை, அது ஒன்னும் பிரச்சனையில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க!" என்று சொல்லிவிட்டு அவளைவிட்டு நகர்ந்துவிட்டேன்.
சிறிது நேரத்தில் எங்கள் கல்லூரிப்பேருந்து வந்து நின்றது, நாங்கள் ஏறி அமர்ந்து கொண்ட சிறிது நேரத்தில் அவளும் வந்து அமர்ந்தாள். என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை, உடனே சார்லஸிடம், 'டேய் யார்ரா அவ? நம்ம காலேஜா?'
'யாருக்குத் தெரியும், ஃபர்ஸ்ட் இயரா இருக்கும், நம்ம பஸ்ல ஏற்றான்னா நம்ம காலேஜாத்தான் இருக்கும்.'
அய்யோ இந்த விஷயம் இத்தோடு முடிஞ்சிரும்ன்னு பார்த்தா முடியாது போலிருக்கே, இன்னும் ஒரு வருஷம் இவளோட குப்பை கொட்டணுமான்னு நான் நினைச்சேன். ஆனால் வாழ்க்கை வேறு விதமாக நினைச்சிருச்சு.
தொடரும்...
Posts: 18
Threads: 4
Joined: Dec 2005
Reputation:
0
அன்று என் கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக மாணவர்கள் வரும் நாள், ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது எங்கள் கல்லூரி நிர்வாகம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் நடத்தும் பொறுப்பு எங்களுக்கு. எல்லா ஏற்பாடுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே முடிந்திருந்தது. சில கடைசி நேர விஷயங்கள் பாக்கியிருந்தன. இரண்டு மணிநேரக் கலைநிகழ்ச்சிகள், 90 சதவீத பொறுப்புகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, நடத்துவதை மட்டும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா நிகழ்சிகளையும் ரிகர்ஸல் பார்த்தாகிவிட்டது. மேடையும், நிகழ்ச்சியை நடத்துவதும் என் பொறுப்பில் இருந்தது.
காலையில் போனதுமே, பிரின்ஸிபால், "தாஸ், எல்லாம் முடிஞ்சிருச்சா, ஒன்னும் தப்பில்லையே. ஏடாகூடமாச்சுன்னா சேர்மன் கோச்சுக்குவார் பார்த்துக்கோ!".
"இல்லை சார், எல்லாம் சூப்பராக வந்திருக்கு, இந்த வருஷம் அசந்திரப் போறீங்க பாருங்க," என்று சொன்னேன்.
நிகழ்ச்சிகளெல்லாம் நன்றாக நடந்தது, சொல்லப்போனால் மற்ற ஆண்டுகளைவிட மிகச் சிறப்பாக இருந்தது, மற்ற ஆண்டுகளில் ரிகர்ஸல் பார்க்காமல் வந்து விடுவார்கள்; அதனால் கடைசிநேரக் குழப்பங்கள் இருக்கும், இது தெரிந்துதான் நான் எல்லா நிகழ்சிகளுக்கும் ரிகர்ஸல் தரவேண்டும் என்று கட்டாயமாகக் கூறிவிட்டேன், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் நன்றாகச் செய்திருந்தார்கள், ஆக மொத்தம் எல்லாம் சிறப்பாக நடந்தது.
வாழ்த்துரை கூறவந்த சேர்மன், ரொம்ப சந்தோஷமாகி மேடையில் நின்று கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து, "இவரு மோகன், மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன், வருஷாவருஷம், இவர் மற்றும் இவரோட குழுவால் கல்லுரிக்கு நிறைய பரிசு, நிறைய கேடயங்கள், நல்ல பேரு கிடைச்சுக்கிட்டிருக்கு, எனக்குத் தெரியும் இந்த வருஷம் விழா நல்லாயிருக்குமுன்னு. புது மாணவர்களாகிய நீங்கள் இவரை மாதிரித்தான் வரணும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நீங்க கேட்கலாம்,' அப்பிடின்னு ஒரே பாராட்டு மழை.
அப்புறம் "உங்கள்ளேர்ந்து (புதிய மாணவர்களிடம்) ஒருத்தர் வந்து விழா எப்படியிருந்தது. நீங்கள் கல்லூரிகிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்றீங்கன்னு சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!" சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த புதிய மாணவர்களைப் பார்த்தார். நானும் அப்போதுதான் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தேன். மூன்றாம் நான்காம் வரிசையில் உட்கார்ந்திருந்த அவள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
கொஞ்ச நேரம் யாருமே வரவில்லை, கடைசியில் நான் நினைத்ததைப் போலவே அவள் தான் மேடையேறி வந்தாள்.
நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாகவும், சீனியர்கள், ஜூனியர்களுக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றாள். நன்றியுரை கூறவந்த நான் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு (அவளையும் சேர்த்து), 'நானும் சீனியர் என்பதால் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவதாக'க் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தேன்.
நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே அவள் என்னிடம் வந்து அப்படிப்பட்ட ஒன்றை கேட்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.
----------
"உங்களோட நோட்ஸ் எனக்கு வேண்டும், கிடைக்குமா?".
மேடையிலிருந்து இறங்கியதும் நேராக ஆயாக்கடைக்குப் போய் சாப்பாடு ஃபுல் கட்டு, கட்டிவிட்டு, கிளாசுக்கு வந்தால், வருகின்ற வழியிலேயே நின்று கொண்டிருந்தாள். என்னடா இது இவளைப் பார்க்க வேண்டியிருக்கிறதேன்னு நினைச்சுக்கிட்டே கிராஸ் பண்ணினா, இப்படிக் கேட்டாள்.
நான் உடனே, "முதல்ல நான் உங்களோட சீனியர்ன்னு தெரியுமா, நீங்க முதல் வருடம் படிக்க வந்திருக்கிறீங்க. சொல்லப்போனால் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் தான் கேட்கணும். எங்கிட்ட கேட்கிறீங்க. நோட்ஸ் என்கிட்டயிருந்தாலுமே யார்க்கு தரணும்னு நான் முதல்ல யோசிக்கணும். உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது, நான் நோட்ஸ் தருவேன்னு எப்படி நினைச்சீங்க, ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க முதலாம் ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க, நான் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அவ்வளவுதான் நமக்குள்ள உள்ளது. முன்னாடி நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டாச்சு, அவ்வளவுதான்!" என்று சொல்லிட்டு கிளாசுக்குப் போய்ட்டேன்.
கிளாசுக்கு போனால் அங்கே என்னுடைய ஜூனியர்கள்(இரண்டாம் ஆண்டு) இருந்தார்கள்.
"ம்ம்ம்... சொல்லுங்கண்ணே!!" என்றேன் நான்.
"அண்ணே, எங்க ஜூனியரைப் வரவேற்க போறோம், உங்களையும் கூட்டிக்கிட்டு போகச் சொல்லி பிரின்ஸி சொன்னாரு, வரீங்களா?"
"என்னடா வம்பாப் போச்சு, உன் ஜூனியரை வரவேற்க நான் எதற்கு, பிரின்ஸிக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏனாம்?"
"ராகிங் பிராப்ளம் இருப்பதால் உங்களையும் கூட்டிக்கிட்டு போகச்சொல்லி சேர்மன் சொன்னாராம்."
"சரி வந்து தொலையுறேன், ஆனா ஒன்னும் பேசமாட்டேன். இங்கையே சொல்லிட்டேன்".
எல்லா புதுசுங்களும் உட்கார்ந்திருந்ததுங்க, இவள் முதல் ஸீட்டிலேயே உட்கார்ந்திருந்தா, முகம் வாடியிருந்தது. என்னைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.
"இவர்களெல்லாம் உங்க சீனியர்கள், இவன் பேரு சுந்தரம், கிளாஸ் ரெப். இனிமே சுந்தரம் உங்ககிட்ட பேசுவான்". நான் விலகி பின்னால் நின்றேன்.
அவன் நன்றாகவே பேசினான், பேச்சின் இடையே விஷயம் நோட்ஸ் பக்கம் வந்தது. சுந்தரம் என்னவோ பதில் சொன்னான், அப்போது நான் எதேச்சையாக அவளைப் பார்க்க அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்தது.
"அண்ணே..." சுந்தரம் கூப்பிட்டதும் தான் உணர்ச்சி வந்தது.
"ம்ம்ம்... சொல்லு சுந்தரம்".
"இவங்க சிலபஸ் மாறியிருக்காம், பர்ஸ்ட் செமஸ்டர்ல சி-யும், டேட்டா ஸ்ட்ரெக்சரும் இருக்காம். அது எங்களுக்கும் இப்பத்தான்(மூன்றாம் செமஸ்டரில்) இருக்கு. நோட்ஸ் வேண்டுமாம். எங்களிடம் இல்லையே? அதான் என்ன செய்வதுன்னு..."
இது நான் எதிர்பாராதது, அவள் இதைத் தெரிந்து கொண்டுதான் என்னிடம் கேட்டாளா, ஐயோ என்னடா இது சோதனைன்னு நினைச்சிக்கிட்டே...
"ஸ்டுடண்ட்ஸ், இங்கே லக்சரர்ஸ் தற்ற நோட்ஸே போதும், அப்புறம் புக்ஸ் இருக்கும். உங்களுக்கு சீனியர் நோட்ஸ் தேவைப்படாது, தேவைப்பட்டால் உங்க லெக்சரர் மூலமா மூவ் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். இப்பவும் அவள் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்புறம் அவர்கள் ஒவ்வொருவருடைய பெயர், ஊர், அப்பாவின் தொழில் இன்னபிற விவரங்களை கேட்டார்கள். கேட்காமல் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு அவள் சொல்லும் விவரங்களை கூர்மையாகக் கேட்டேன். பெயர் அகிலாண்டேஸ்வரி, ஊர் ஸ்ரீரங்கம், அப்பா புரோகிதர்.
சுந்தரம் கேட்க கூடாத ஒரு கேள்வியைக் கேட்டான்.
"உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேட்கலாம்" என்று சொன்னான்.
உடனே அகிலா எழுந்து "நான் பேச்சுப்போட்டியில் கலந்துப்பேன், அதுக்கு யார்கிட்ட கேட்கணும்?" என்று கேட்டுவிட்டு என்னை வேறு பார்த்தாள்.
"தாஸ் அண்ணாதான் கல்ச்சுரல் லீட், அவர்கிட்டத் தான் சொல்லணும். ஆனா உங்களுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அண்ணா வருஷாவருஷம் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கி வருவார்," என்று சொல்லி பெருமையாக வேறு என்னைப் பார்த்தான்.
தலையெழுத்தே வம்புல மாட்டிவிட்டுட்டானேன்னு நினைச்சு, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, உங்கள் பெயரையும் பதிவு செய்யலாம். போட்டிக்கு முன்பு கல்லுரியில் ஒரு போட்டி நடக்கும். அதில் வென்றவர்கள் தான் யுனிவர்சிட்டி போட்டியில் கலந்திக்கணும். அதானால உங்கள்ல யார் யாரெல்லாம் பேசுவீங்களோ அவங்களெல்லாம் கலந்துக்கலாம். அதுக்கு மாலை நேரத்தில என்னை தனியா பாருங்க" என்று சொன்னேன். (அவளுக்காக இல்லை, அதுதான் முறை).
என்னடா இது சுத்தி சுத்தி அடிக்குதேன்னு நினைச்சுக்கிட்டே திரும்பியும் கிளாசுக்கு வந்தேன்.
------------------
சாயந்திரம் அஞ்சு மணியிருக்கும், கல்லூரி எப்பொழுதும் நாலே காலுக்கு முடிந்துவிடும், ஆனால் அன்று கொஞ்சம் வேலையிருந்ததால் கிளம்பவில்லை. ஐந்து மணிக்கு இவள் பர்ஸ்ட் ப்ளோரிலுள்ள என் வகுப்பறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது தான் என்னவோ நினைப்பாய் வாசல் பக்கம் திரும்ப நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதிலிருந்து நிற்கிறாளோ தெரியவில்லையென்று நினைத்து உள்ளே கூப்பிட்டேன்.
"மறந்தே போயிட்டேன், கூப்பிட்டுயிருக்கலாம்ல."
"இல்ல இன்னொரு பையனும் வந்தான், இப்ப கீழே போயிருக்கான் வரட்டுமேன்னு பார்த்தேன். அதுமட்டுமில்லாம உங்களை கூப்பிட பயமாயிருந்தது" என்று சொன்னாள்.
நான் அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கவனிக்காதது போல விட்டுவிட்டேன்.
"சரி சொல்லு, நான் உனக்கு என்ன பண்ணனும்"
"இல்ல நீங்கதான் பேச்சுப்போட்டியில கலந்துக்கணும்னா உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னீங்க, ஆனா நான் பேச்சுப்போட்டியில கலந்துக்கல; வேற என்ன போட்டியிலெல்லாம் கல்லூரி கலந்துக்கும்னு தெரிஞ்சா, எதிலாவாது கலந்துக்கலாமேன்னுதான்"
வேணும்னே என்னைக் கிண்டுறான்னு, நான் ஏன் பேச்சுப்போட்டியில கலந்துக்கலைன்னு கேட்கலை.
"நாங்க அது இல்லாம, ஸ்கிட்(நாடகம்), மைம்(ஊமை நாடகம்) இரண்டுலையும் கலந்துப்போம், டான்ஸ் மற்றதெல்லாம் என்கிட்ட இல்லை"
"நான் டான்ஸ் ஆடமாட்டேன், நாடகத்தில் கலந்துக்கிறேன், முன்னாடி எங்க ஸ்கூல் நாடகத்திலெல்லம் நடிச்சிருக்கேன்"
நான் அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சரி உன் பேரை சேர்த்துக்கிறேன், தேவையிருந்தால் கூப்பிடுகிறேன். நன்றி" என்று சொல்லிவிட்டு என் நோட்டில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன்.
ஆனா ஒரு இரண்டு நிமிஷம் ஆகியிருக்கும் அவள் கிளம்பாததால்,
"ம்ம்ம்... அப்புறம்?"
"இல்லை, நோட்ஸ்..."
"நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன், பின்னாடி கிளாஸ்லையும் சொன்னேன்... இதுக்கு மேல உனக்கு என்ன தெரியணும்."
"இல்லை, கனிமொழி அக்காத்தான் உங்க கிட்ட கேட்கச் சொன்னாங்க, அவங்க எனக்கு அக்கா முறை வரும். ஆனா இதை உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நமக்குள்ள என்னன்னமோ நடந்திருச்சி, உங்களுக்கும் என்னை பிடிக்காமப் போச்சு..." கொஞ்சம் விட்டா அழுதுறுவான்னு நினைச்சேன்.
"கனிமொழியா?" கனிமொழி என்னோட ஜூனியர், சொல்லப்போனா ஒரேயொரு பெண் நண்பி, நாடகத்தில் எல்லாம் என்கூட நடிக்கிற பொண்ணு, இன்னும் சொல்லப்போனால் இந்தக் கல்லுரியிலேயே என்னை கிண்டல் அடிக்கக்கூடிய அளவு உரிமையுள்ளவள் அவள் ஒருத்தி தான்.
"கனிமொழிக்கு என்ன ஆச்சு, இன்னிக்கு ஆளையே காணோம்?"
"உடம்புக்கு கொஞ்சம் சரியில்லை, நாளைக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்" இன்னும் அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டிருந்தது. நல்ல நேரம் அவள் சொன்ன அந்த மற்றொரு பையன் வந்தான்; நான் தப்பித்தேன்.
"அண்ணா நானும் நல்லா பேசுவேன், நீங்க நாடகமெல்லாம் போடுவீங்கன்னு கேள்விப்பட்டேன், நானும் நடிக்கலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்."
"சரி உன்பேரு சொல்லு, எழுதிக்கிறேன், வாய்ப்பிருந்தா கூப்பிடுறேன்"
"அண்ணா, உங்க நோட்ஸத்தான் லெக்சரர்ஸ் யூஸ் பண்ணுவாங்களாமே, நோட்ஸ் கிடைக்குமா சி-க்கும், டேட்டா ஸ்ட்ரெக்சருக்கும்"
"யேய், அப்படியெல்லாம் உன்கிட்ட யார் சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை, என்னடா இது ஜூனியரா வந்த இரண்டாவது நாளிலேயே எனக்கும் என் வாத்தியாருங்களுக்கும் சண்டை மூட்டிவிட்ருவீங்க போலிருக்கே? இந்தப் பொண்ணுக்கிட்ட நோட்ஸ் கொடுக்கிறேன் வாங்கிக்க, எனக்கு கொஞ்ச வேலையிருக்கு அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லிட்டு அவளைப் பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பவும் நோட்ஸ் எழுதத் தொடங்கினேன்.
அன்னிக்கென்னமோ கீழே விழுந்து இன்னும் கீழே போய்க்கிட்டேயிருக்கிற மாதிரி தோன்றியது.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
மோகன்டாஸ் உங்கள் ஒரு காதல் கதை நன்றாக இருக்கிறது. மேலும் தொடர்க
<b> .. .. !!</b>
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
[size=18]உங்கள் கதை நன்றாகவே உள்ளது தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஓம் ஓம்..நானும் ரொம்ப ஆவலாக இருக்கேன்..தொடருங்கள்..தாஸ் ..
இடையில் ஏதும் எழுத குழம்பிடும்...சோ.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
வணக்கம் அண்ணா
உங்களை வரவேற்கவில்லை வரவேற்ப்பகுதியில் என நினைக்கிறேன் உங்களைப்போன்ற தமிழ் ஆர்வம் உங்கவர்கள் இணைவது வரவேற்கத்தக்கவிடயம்
உங்கள் கதை நன்றாகப்போகிறது... மிகுதிப்பகுதியைப்படிக்க ஆவலாக உள்ளோம் தொடரு
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
மரத்தடியில் குந்தவை வந்தியதேவனின் கதை விறுவிறுப்பாய் தொடரும் அப்படி வாசித்த கதை இது :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கற்பனையும் நிஜமும் கலந்த கதை நன்றாக இருக்கின்றது.
மேலும் தொடருங்கள்...
Posts: 18
Threads: 4
Joined: Dec 2005
Reputation:
0
அடுத்த நாள் காலையில் பஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும் பொழுது, கனிமொழியும், அகிலாவும் ஒன்றாக வந்து கொண்ருந்தார்கள். ஆகா கனிமொழிகிட்ட மாட்டிக்க கூடாதுன்னு நினைச்சு பக்கத்தில் இருந்த ஒரு டீக்கடையில் நுழைந்தேன். பெண்கள் டீக்கடையில் டீ குடிப்பதில்லை. ஆனால் காலேஜ் பஸ்ஸில் உட்கார்ந்ததும் மாட்டிக் கொண்டேன்.
கனிமொழி, "சார்லஸ், நீங்க முன்னாடி ஸீட்டில் உட்காருங்களேன்" என்று சார்லஸை எழுப்பிவிட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
"என்னம்மா சொல்றா உன் பிரண்ட்?" நானே ஆரம்பித்தேன்.
"ஆனாலும் அண்ணே, நீங்க பண்ணினது சரியில்லை!"
"எதைச் சொல்ற?..."
"அகிலா நேத்திக்கு பூரா ஒரே அழுகை, நான் பயந்திட்டேன் யாராவது நான் இல்லைன்னு ரேகிங் ஏதும் பண்ணிட்டாங்களோன்னு. ஆனா நம்ம காலேஜூல ரேகிங் கிடையாதுங்கறதால, ஏண்டி அழறேன்னு கேட்டா உங்க பேரைச் சொல்றா, சின்னப் புள்ளையை இப்படியா பயமுறுத்துறது?"
"இதென்னாடி ஒம்பாயிருக்கு, நான் என்னா பண்ணினேன் உன் ஃபிரண்டை, கூப்பிடு அவளையே கேட்கிறேன்!"
"ம்... இங்கப் பாருங்க, நான் சொன்னேன்னு சொன்ன பின்னாடியும் நோட்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களாமே."
"ஏய் இங்கப் பாரு அவ உங்கிட்ட எதையோ மறைக்கிறான்னு நினைக்கிறேன், அவளை காலேஜூல பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சுப்போட்டியில பார்த்தேன், என்னைப் பத்தி தப்பா பேசினா, அடிச்சிட்டேன், பின்னாடி தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பும் கேட்டுட்டேன். நீயே சொல்லு அவளோ பர்ஸ்ட் இயர், என்கிட்ட நேரா வந்து நோட்ஸ் கொடுன்னா எப்பிடு கொடுப்பேன், அவ முதல்ல உன் பேரைச் சொல்லவே இல்லை, சொன்ன பின்னாடி கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்"
"ஆகா, இவ்வளவு நடந்திருக்கா. கள்ளி சொல்லவேயில்லை, ஆமா ஒரு நாள் வந்து உம்முன்னு உட்கார்ந்திருந்தா, அப்பிடியிருக்க மாட்டாளேன்னு, என்னாடின்னு கேட்டேன். ஒன்னுமில்லைன்னுட்டா, சரி யாரோ ஒரு பையனை சாக்கா வச்சு சொன்னீங்களாம் நோட்ஸ் தரேன்னு, அதை ஏன் என்கிட்ட நேரே சொல்லலைன்னுதான் ஒரே அழுகை." பின்னர் குரலை குறைத்து, "அண்ணே, அவளுக்கு அம்மா கிடையாது, அப்பா புரோகிதம் அதனால காசு கிடையாது. +2வில நல்ல மார்க் ஆனாலும் இங்க நம்ம காலேஜூல தான் சீட் கிடைத்தது. அது மட்டுமில்லாம ரொம்ப வெகுளிப் பொண்ணு, ஊரு, ஒலகத்தப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அவங்கப்பா என்கிட்ட வந்து நீதாம்மா பார்த்துக்கணும்னு சொல்லி விட்டுட்டு போயிருக்காரு, இப்பக்கூட எங்கவீட்டுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்னு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேங்கிறா; அப்பா இவளை தனியா அனுப்ப முடியாது. வேணுமின்னா நீயும் ஹாஸ்டல்ல தங்கிப் படீங்கிறார். இவளால நானும் இப்ப ஹாஸ்டல்ல தங்கணும்." மூஞ்சை சோகமாக வைத்துக் கொண்டாள்.
"சரி நான் ஏதாவது சொல்லணுமா உன் ஃப்ரெண்ட்டுகிட்ட?"
"அண்ணே, அவ அப்படியே உங்கள மாதிரி தான், நல்லா படிப்பா, நல்லா பேசுவா, நல்லா ஓவியம் கூட வரைவா, நான் நினைச்சேன் நம்ம கூட அவளையும் சேர்த்துக்கிலாம்னு, நீங்கத்தான் உங்களுக்கு ஒத்து வராதவுங்க கூட பழகமாட்டீங்க. இவளோட எல்லாமும் ஒத்துவரும்னாலும் அதுக்காட்டியும் சண்டை போட்டு, அடிச்சுவேறபுட்டீங்க. நான் சொல்றத சொல்லிட்டேன் இனிமே உங்க விருப்பம்." என்று சொல்லிவிட்டு திரும்ப போய் அகிலாவிடம் உட்கார்ந்து கொண்டாள்.
பிறகு அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள், சிறிது நேரத்தில் அகிலா மீண்டும் அழத் தொடங்கினாள்.
அய்யோ இதென்னடா பெரும் தலை வேதனையாப்போச்சேன்னு நினைச்சுக்கிட்டே கண்ணை மூடினேன்.
----------------------------
அன்றைக்கெல்லாம் நிறைய வேலை இருந்ததால் வேறு எதைப்பற்றிய நினைவும் வரவே இல்லை. கனி மொழி சாப்பிடும் நேரத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தாள், அவளிடம் அகிலா கேட்ட நோட்ஸ்களைக் கொடுத்து விட்டு, "இங்கப்பாரு உன் ஃபிரண்ட்கிட்ட சொல்லு, அவ உட்கார்ந்து காப்பி எடுப்பாளோ, இல்லை ஜெராக்ஸ் எடுப்பாளோ எனக்குத் தெரியாது, இரண்டு நாள்ல எனக்கு நோட்ஸ் திரும்ப வேண்டும். உனக்காகத்தான் அவளுக்கு நோட்ஸ் கொடுக்கிறேன். எனக்கு ரொம்ப வேலையிருக்கு இன்னொருநாள் உட்கார்ந்து பேசுவோம்" என்று சொன்னதும் அவள் சென்றுவிட்டாள்.
அடுத்த நாள் சனிக்கிழமை, கல்லூரி கிடையாது என்பதால் வீட்டில் ஆஸ்திரேலியா விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வெளியே யாரோ கூப்பிடுற மாதிரி சத்தம் கேட்டது, ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.
"அத்தே..."
எங்கம்மாவையா கூப்பிடுறா பாவின்னு, வெளிய வரலாம்னு பார்த்தால் போட்டுக்கிட்டிருந்த ட்ரெஸ் பத்தலை, அதனால மேல்சட்டையைத் தேடி போட்டுக் கொள்வதற்குள், அம்மா கதவைத் திறந்துவிட்டார்கள்.
"யாரும்மா நீ?"
"அத்தே, இது மோகன் வீடு தானே, நான் அவரைப் பார்க்கணும்..."
"அவன் வீடுதான் நீயாரும்மா?"
"நான் அவர் கூடப் படிக்கிற பொண்ணு, சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தே!" என்று பட்டென்று எங்கம்மா காலில் விழுந்துவிட்டாள்.
அம்மா உடனே பதற்றமாகி, "என்ன பொண்ணும்மா நீ, கால்ல எல்லாம் விழுந்துட்டு. கூப்பிடுறேன் பேசிக்கிட்டிரு, நான் உனக்கு காப்பி கொண்டு வரேன்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ள வந்து என்னிடம் "டேய், உன்னைப் பார்க்க யாரோ பொண்ணு வந்திருக்கு, போய்ப்பாரு" அப்பிடின்னு சொல்லிவிட்டு அடுப்பாங்கரைக்குள்ள போயிட்டாங்க.
நான் நேரா அவளிடம் போய், "யேய், இங்க எதுக்கு வந்த?"
"ஏங்க, அந்த சுவற்றில இருக்கிறது நீங்க வரைஞ்சதா, சூப்பராயிருக்கு"
"இத சொல்லறதுக்குத்தான் வந்தியா?"
"இல்ல, நீங்கத்தான் கனி அக்காகிட்ட நோட்ஸ் சீக்கிரம் வேண்டும்னு கேட்டீங்களாம். அதான், ஜெராக்ஸ் எடுத்துட்டு அப்பிடியே உங்க வீட்டிலேயே திரும்பி கொடுத்துட்டு வந்திரலாம்னு வந்தேன்."
அடுத்தக் கேள்வி கேட்குறதுக்குள்ள அம்மா காபி டம்பளருடன் திரும்பி வந்து, "கனி அக்காவா அது யாரு? தம்பி, நம்ம கனிமொழியா""
"ம்ம்ம்... நம்ம கனிமொழிதான், இவ அவளோட தங்கச்சி முறை, அகிலாண்டேஸ்வரின்னு பேரு, நம்ப காலேஜூலத்தான் படிக்குது!"
"அப்பிடியா, நீ பேசிட்டிரு நான் கடைவரைக்கும் போய்ட்டு வந்திர்ரேன்"
அம்மா போனபிறகு, "அதுக்காக, வீட்டுக்கா கொண்டு வரச்சொன்னது? திங்கட்கிழமை காலேஜூல கொடுக்க வேண்டியதுதானே?"
"ஏன் நான் வீட்டுக்கு வரக்கூடாதா?" திரும்பவும் கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்தது.
"சரி கொடுத்துட்டேல்ல, கிளம்புறது"
"என்னை துரத்துறதிலேயே இருக்கீங்க..."
"சரி, என்னாத்தான் பண்ணனும்"
"எனக்கு இங்கிருக்கிற லைப்பிரரியில, மெம்பராகணும். கனி அக்காதான் சொன்னாங்க நீங்க மெம்பருன்னு; நான் மெம்பராகணும்னா, ஏற்கனையே இருக்கிற மெம்பர் யாராவது கையெழுத்து போடணுமாம். அதான் நீங்க போடுவீங்களான்னு கேட்க வந்தேன்."
"நாளைக்கு காலையில வந்து கையெழுத்து போடுறேன், இப்ப கிளம்புறியா?"
"அத்த வந்ததும் சொல்லிட்டு போறேன்"
இன்னிக்கு எனக்கு உதை வாங்கித்தராம போக மாட்டா போலிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு, "அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ கிளம்பு!" என்று சொல்லி அவளை அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு.
அம்மா வந்தவுடன் முதல் வேலையா என்கிட்ட வந்து, "என்னடா அவ அத்தைங்கிறா, எனக்கெங்கையோ உதைக்கிற மாதிரி இருக்குதே?!" ன்னு ஒரு மாதிரி முகத்தை வைச்சுக்கிட்டு கேட்டாங்க.
"எல்லாம் என் தலையெழுத்து வேற என்னா", என்று சொல்லிட்டு மீண்டும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினேன்.
--------------------
ஞாயிற்றுக் கிழமை, காலையில் எழுந்ததும் சன் டிவியில் உள்ள நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ச்சியாகப் பார்த்துவிட்டு நிமிர்ந்தால் மதியம் ஒரு மணி, தலைவருடைய தளபதி படம் போட்டு இருந்தான். நான், அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் ஞாபகம் வந்தது அவளிடம் நான் லைப்பரரிக்கு வருவதாகச் சொன்னது. உடனே நான் அவசரமாக கிளம்ப, அம்மா, "தம்பி, இருடா நைனா பால் வாங்கிட்டு வந்திரும். காப்பி குடிச்சுட்டு போ!" என்றாள்.
அம்மா பேச்சு தட்ட முடியாமல் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி ஐந்து; அந்த லைப்ரரி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆறு மணிக்கெல்லாம் சாத்திவிடும். எனக்கென்னமோ அவள் வந்தி ருக்கமாட்டாள் என்று எண்ணம் ஓடினாலும், அவளைப் பார்ப்பதற்காக இல்லாவிடினும் புத்தகம் மாற்றவாவது போகலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கே சென்றேன்.
லைப்பரரிக்குள் பார்த்தாள், உள்ளே உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். ஆகா காலையிலேயே வந்திருப்பாள் போலிருக்கிறது, இன்றைக்கு மாட்டிக்கொள்ளாமல் நாளைக்கு கல்லுரிக்கு வந்து வேறு ஏதாவது சாக்கு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து நான் திரும்பியிருப்பேன், பின்னால் யாரோ வேகமாக என்னை நோக்கி நகர்ந்து வருவதைப்போல் தோன்றியது. நான் திரும்பிப் பார்த்த பொழுது என் எதிரே நின்று கொண்டிருந்தாள்.
"இல்லை சாரி, மறந்துட்டேன். அடுத்தவாரம் வந்து பண்ணிக்கலாமே?"
"காலையிலேர்ந்து வையிட் பண்ணுறேன், இப்பத்தான் வந்தீங்க. என்னைப் பார்த்ததும் ஏதோ பேயைப் பார்த்ததை போல ஓடுறீங்க?"
"அதான் சாரி கேட்டேன்ல..."
"பண்ணறதை எல்லாம் பண்ணீற்ரது, அப்புறம் சாரி கேட்கிறது," வேறு எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள்.
"what do you mean?"
"I mean, what I mean!"
"சரி இப்ப என்ன பண்ணனுங்ற?"
"என்னைக் காக்க வைச்சதுக்குப் பரிகாரமா, காபி ஷாப் கூட்டிட்டு போகணும்"
என்னடா இது தைரியம் அதிகம் வந்திருச்சி போலிருக்கேன்னு நினைச்சு, "எதுக்கு?" என்றேன்.
"காபி ஷாப் எதுக்கு போவாங்க, காப்பி சாப்பிடத்தான்" சொல்லிச் சிரிச்சாள்.
காபி ஷாப் வந்து சேர்ந்தோம். பேரர் வந்ததும் இரண்டு நெஸ்கஃபே ஆர்டர் செய்துவிட்டு என்னையே பார்த்தாள்.
"என்னா?"
"இல்ல உங்ககிட்ட பர்ஸனலா கொஞ்சம் பேசணும்."
"எதைப்பத்தி?"
"உங்களைப்பத்தி..."
"என்னைப் பற்றி என்னா?"
"சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு..."
"தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போற?"
"இல்ல சும்மாத்தான், அக்கா உங்களைப் பத்தி நிறைய சொல்லுவாங்க."
"என்ன சொல்லுவா?"
"நீங்க நல்லா படிப்பீங்க, நிறைய ட்ராயிங்க் வரைவீங்க, தனியா ப்ராஜக்ட்டெல்லாம் எடுத்துப் பண்றீங்கன்னு, நான் கூட வரைவேன்..."
"ம்ம்ம், தெரியும். அதுக்கென்ன?"
"இல்ல, நான் வெறும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், நீங்க என்னெல்லாம் பண்ணுவீங்க?"
"நானும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், அதுக்கென்ன?"
"இல்ல, நான் அப்ஸரா 4B பென்சில் தான் உபயோகிக்கிறேன். நீங்க?"
"ஏய் உனக்கு என்ன கேட்கணும் நேரா கேளு?"
"நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?" கேட்டுவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள்.
"ஆமாம் காதலிக்கிறேன், என் சொந்தக்கார பொண்ணு ஒன்னை."
அதற்குப்பிறகு அவள் எதுவும் பேசவேயில்லை, நான் காபிக்கு காசு கொடுத்துவிட்டு, "கொஞ்சம் வேலையிருக்கு வர்றேன்" என்று சொல்லிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
அப்பா நிம்மதி, இனிமே தொந்தரவு பண்ண மாட்டாள் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாள் இடி இறங்கியது.
-------------------------------
அடுத்த நாள் காலையில் நான் ஃப்ரெண்ட் வண்டியில் கல்லுரிக்கு வந்தேன். அகிலாவைப் பார்க்கவேண்டாம் என்பது தான் முக்கிய காரணம். ஆனால் கல்லூரி பஸ் வந்த கொஞ்ச நேரத்திலேயே, கனிமொழி நேராக என் கிளாசிற்கு வந்து என் அருகில் அமைதியாக நின்றாள். அப்படியிருக்கும் பழக்கமில்லாதவள் ஆகையால் நானே தொடங்கினேன்.
"என்ன கனிமொழி?"
"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..."
"ம்ம்ம், சொல்லு. என்ன விஷயம்."
"இல்லண்ணே, தனியாத்தான் சொல்லணும்."
"சரி வா, கேன்டீனுக்கு போகலாம்" என்று சொல்லி கேன்டீனுக்கு அழைத்து வந்தேன். அங்கே வந்தும் பேசாமல் இருந்தாள்.
"என்னம்மா சொல்லு, எதைப்பத்தி பேசணும் உன் பிரண்ட்டப் பத்தியா, பரவாயில்லை சொல்லு..."
"ஆமா அவளைப்பத்தி தான்..."
"என்ன விஷயம்"
"அண்ணே சொல்ரணேண்னு தப்பா நினைச்சுக்க கூடாது, அவ உங்களைக் காதலிக்கிறாளாம். இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லணும்னு ஒரே அடம். நான் எவ்வளவோ சொல்லிட்டேன கேட்கவே மாட்டேங்குறா."
"என்னாடி இது வம்பாயிருக்கு, அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து விளையாடுறீங்களா, நேத்திக்கு அவ என்னன்னா வீட்டுக்கு வந்து அத்த என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு எங்கம்மா கால்ல விழுறாள். நீ என்னடான்னா இன்னிக்கு வந்து அவள் காதலிக்கிறான்னு சொல்றே. என்னம்மா இது. அவதான் சின்ன பிள்ளை உளருறான்னா நீயுமா? அதுசரி நேத்திக்கு தான் நான் அவகிட்ட என் சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னேனே. அப்புறமும் ஏன் இப்படி சொன்னாள்."
"நான் அவகிட்ட சொல்லியிருக்கேன், உங்க அக்கா, அம்மாவுக்கு பிறகு ஒரு பெண்ணுக்கிட்ட பேசுறீங்கன்னா அது நான் தான்னு. அதனால நீங்க சொன்னத அவ சுத்தமா நம்பவேயில்லை, இதிலே கொடுமையென்னன்னா என்கிட்டையே நீ அவரை காதலிக்கிறீயான்னு கேட்டா, ஒரே அறை, ஆனா வாங்கிட்டு சிரிக்கிறா. நான் அவகிட்ட அதுக்குப்பிறகு பேசவேயில்லை, ஆனா ராத்திரி முழுக்க தூங்காம ஒரே அழுகை, பார்க்க சகிக்கலை. அதான், உங்ககிட்ட சொல்லிட்டேன், இனி நீங்களாச்சு, உங்க காதலியாச்சு"
"அக்கா, தங்கச்சி ரெண்டுபேரும் உதை வாங்கப் போறீங்க, நீ போய் உடனே நான் அவளைப் பார்க்கணும் சொன்னேன்னு சொல்லு."
கால் மணிநேரத்தில் அவள் கேன்டீனுக்கு வந்தாள்.
"ஏய், கனிமொழிக்கிட்ட என்னடி சொன்ன?"
மௌனமாக நின்றாள்.
"கேட்கிறேன்ல, சொல்லமாட்டே, இங்கப்பாரு உனக்கு ஒரு பதினாரு இல்லை பதினேளு வயசிருக்குமா, அதுக்குள்ள உனக்கு காதலா. நீ எப்பிடியோ போ, ஆனா என்னை ஏன் பிரச்சனையில் மாட்டிவிடுற. எனக்கு எத்தனையோ கனவு இருக்கு, உன்னைப்போல யாருண்ணே தெரியாத பெண்ணை- பெண்ணை என்ன பெண்ணை- குழந்தையையெல்லாம் காதலிக்க முடியாது. அதுமட்டுமில்லாம நான் காதலிக்கிறதுக்காக இங்க வரலை. இதனாலத் தான் நான் பொண்ணுங்க கூட பழகுறதேயில்லை. இப்பப் பாரு கனிமொழிக்கு எனக்கும் இருக்கிற உறவையே நீ சந்தேகப்படுற. இதுதான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே இதைப்பத்தி நீயோ இல்லை யாராவதோ என்கிட்ட பேசினா, நான் உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன். அதே மாதிரி என் பின்னாடியே சுத்தறது, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறது, எல்லாத்தையும் நிறுத்தணும் இல்லைன்னா நான் இந்த காலேஜ் விட்டே நின்னுடுவேன். என்ன புரியுதா?"
தலையை மட்டும் ஆட்டினாள்.
"வாயத்திறந்து பதில் சொல்லு..."
"சரி, ஆனா ஒரே ஒரு சந்தேகம். நீங்க என்கிட்ட சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னது உண்மையா? பொய்யா?"
"அதெதுக்கு உனக்கு?"
"நான்தான் நீங்க கேட்டதுக்கு சரின்னுட்டேன்ல, சொல்லுங்க?"
"சரி பொய், அதுக்கென்ன?"
"அது போதும்," என்று என் தாடையைத் தொட்டு அவள் உதட்டில் வைத்து "உம்மா.............." என்று சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாள்.
நான் தலையில் அடித்துக் கொள்ள, கேன்டீனில் டீ விற்கும் கிழவி என்னைப் பார்த்து சிரித்தாள்.
--------------------
தொடரும்...
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எங்களுக்கு ஒரு டவுட்டு...பிரயாணங்களின் போது கூட.. போகும் இடம் வரும் இடம் என்று கதைகளை (அதுவும் கற்பனை கலந்த குடும்ப விவகாரக் கதைகள்... ) அதிகம் பெண்கள் தான் படிக்கிறார்கள்...ஏன்...???! கதைகளின் ஊடாக சமுதாயம் காட்டப்படுகிறது என்ற நம்பிக்கையிலா..இல்ல பொழுது போக்க வேற வழியில்லாமலா..???! :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 18
Threads: 4
Joined: Dec 2005
Reputation:
0
அப்படியும் இருக்கலாம் மற்றொன்று வெளிப்படையாக நடந்துகொள்வதாகவும் இருக்கலாம்.:-))))))))))))
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கதையில சொல்லுறது எல்லாம் வெளிப்படை என்று பெண்கள் நம்புறாங்களா...அப்ப பெண்கள் சுயமா ஆய்வு செய்து அறியாங்களா விடயங்களை..! சொல்லுறதியெல்லாம்...வெளிப்படை என்றே பெண்கள் கருதுவாங்களோ...! காலம்....பெண்களே..உண்மையா இது...! :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 18
Threads: 4
Joined: Dec 2005
Reputation:
0
அண்ணாத்த என்னயிது நான் ஒன்னு சொன்னா நீங்க ஒன்னு புரிஞ்சிக்கிறது. நான் அவங்க வெளிப்படையா படிப்பாங்க என்னை மாதிரி ஆண்கள் அது போன்ற கதைகளை படித்தாலும் வெளியில் காட்ட மாட்டார்களென்று சொல்ல வந்தேன்.
Posts: 18
Threads: 4
Joined: Dec 2005
Reputation:
0
அடுத்த ஒரு மாதம் நான் அகிலாவைப் பார்க்கவேயில்லை; சரி பெண்ணு திருந்திவிட்டதுன்னு நினைச்சு நானும் சும்மாயிருந்திட்டேன். வெளியில் போனால் அவள் என்னைப் பார்ப்பது போல ஒரு ஃபீலிங் இருக்கும், ஆனால் சுத்திப் பார்த்தால் அவள் இருக்க மாட்டாள். இதெல்லாம் முதல் ஒரு வாரத்திற்குத்தான், பின்னர் உண்மையிலேயே அவளை மறந்துவிட்டிருந்தேன். கனிமொழி மட்டும் அவ்வப்போது வந்து பார்ப்பாள். அவ்வளவுதான். அகிலாவை பார்த்து மூன்று வாரம் இருக்கும், கனிமொழி ஒருமுறை என்னைப் பார்க்க வந்தாள். அவள் பின்னாடியே யாரோ வருவது போல் இருந்தததால், அவள் பின்னால் பார்த்தேன்.
"யாரண்ணே தேடுறீங்க, உங்க லவ்வரையா?"
"கனி, என்ன விளையாட்டிது, அவளே விட்டுட்டாலும் நீ விடமாட்டே போலிருக்கே?"
"அவ விட்டுட்டாளா, யார் சொன்னது?"
"பின்னே என்ன, நான் அவளைப் பார்த்தே பல வாரம் ஆகுது, சரி அவ என்னதான் சொல்றா?"
"ரொம்ப சந்தோஷமா இருக்கிறா, நீங்கதான் யாரையும் காதலிக்கலைன்னு சொல்லீட்டீங்களாமே, அதானால அன்னிலேர்ந்து ஒரே ஆட்டம் தான். நீங்க தான் அவளை பார்க்கலைன்னு சொல்றீங்க. அவளைப் பார்த்தா அப்படி தெரியலை, ஒரு வேளை உங்களுக்கு தெரியாம, சுத்திக்கிட்டிருக்கிறாளோ என்னவோ?"
"எப்பிடியோ போகட்டும், இந்த பயம் இருந்தா சரி, அதுமட்டுமில்லாம என் வம்புக்கு வராம இருந்தா ரொம்ப நல்லது."
இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும் இரண்டு வாரங்கள் நான் அவளைப் பார்க்கவில்லை. அன்றைக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், நானாக எடுத்து பண்ணிக் கொண்டிருந்த ப்ரோஜட் ஒரு வழியா நல்லா முடிஞ்சு கிளெயண்ட் கிட்ட காட்டியாச்சு; இரண்டு மூணுதடவை பக் ஃபிக்ஸிங் எல்லாம் முடிஞ்சு நாலேஞ் ட்ரான்ஸ்ஃபரும் ஆகியிருந்தது; முதலாளி அன்னிக்குத்தான் இருபதாயிரம் ரூபாய்க்கு செக் குடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் என் காலேஜ் ப்ராஜக்ட்க்கும் இதை உபயோகப்படுத்தக்கிலாம்; என்ன சர்டிபிகெட் வேணுமின்னாலும் வாங்கிக்கன்னு கூட சொல்லியிருந்தார்.
ஆறு மணிக்கு கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்து நானும் சார்லசும் பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் கனிமொழியும், அகிலாவும் நடந்து வருவது தெரிந்தது. என்னமோ அன்னிக்கு அகிலாவை வம்பு பண்ணனும் போல் இருந்தது. ஆனால் எதற்கு வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கணும்னு பேசாம இருந்தேன். சொல்லப்போனா ஒரு மாதம் கழித்து அவளைப் பார்க்கிறேன். அவர்கள் எங்களை நோக்கித்தான் வந்தார்கள்.
"அகிலா உங்ககிட்ட தனியா பேசணுமாம்," என்றாள் கனிமொழி
"முடியாது!"
"அண்ணே கொஞ்சம் சீரியஸ்."
"நீயே சொல்லு கனி!"
"அவதான் சொல்லணுமா, என்னன்னு தான் கேளுங்களேன்.."
அவளிடம் திரும்பி, "சரி சொல்லு!"
"தனியா பேசணும்..." சொல்லிவிட்டு குனிந்து கொண்டாள். நான் சொல்லாமலே சார்லசும் கனி மொழியும் நடக்கத் தொடங்கியிருந்தார்கள்.
"ஒரு பிரச்சனை.." - அகிலா
"என்ன பிரச்சனை?"
"என் கிளாஸ் பையன் ஒருத்தன் என்னை காதலிக்கிறேன்னு சொல்றான், எனக்கு பயமா இருக்கு."
நான் சந்தோஷமாகி, "கன்கிராட்ஸ், ரொம்ப சந்தோஷம். அப்ப இனிமே என்னை விட்டுறுவ."
"ம்ம்ம், சீரியஸ்..."
"சரி பிரச்சனை பண்றானா?"
"இல்லை பிரச்சனையெல்லாம் ஒன்னும் பண்ணலை, லெட்டர் எழுதிக் கொடுத்தான் அதான்"
"இதிலென்ன பிரச்சனை, பிடிக்லைன்னா பிடிக்லைன்னு சொல்லு, பிடிச்சிருந்தா லவ் பண்ணு, இதுக்கு என்னை ஏன் கேட்குற?" சொல்லிமுடித்ததும் தான் தாமதம். அழ ஆரம்பித்துவிட்டாள். இதுதான் முதல் முறை என் குடும்பத்தில் இல்லாத பொண்ணு என் முன்னாடி இப்படி அழுவது.
"ஏய் நான் என்ன சொன்னேன்னு இப்பிடி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற?"
"நான் உங்களைக் காதலிக்கிறேன்னு தெரியும் உங்களுக்கு, இருந்தும் இன்னொருத்தனை காதலின்னு சொன்னா அழாம என்ன பண்ணுறதாம்"
"இதென்னடி வம்பாயிருக்கு, நானா உன்னை காதலிக்க சொன்னேன், ஒரு மாசத்தில திருந்திட்டேன்னு நினைச்சேன் இல்லையா?"
"அது நமக்குள்ள உள்ள பிரச்சனை, நாம பேசி தீர்த்துக்கலாம். இதுக்கு ஒரு வழி சொல்லுங்க"
"என்ன சொல்லச் சொல்லுற?"
"நான் அவன்கிட்ட, 'இந்தமாதிரி நான் மோகனை காதலிக்கிறேன், நீ வேற யாரையாவது பார்த்துக்கோ'ன்னு சொல்லப் போறேன்; இதுல நீங்களும் இருக்கிறதால உங்ககிட்டையும் சொல்றேன்" சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
"நீ எனக்கு செருப்படி வாங்கித்தரப்போற, அதானே?" கொஞ்சம் கோபமாகக் கேட்டேன், திரும்பவும் அழத் தொடங்கினாள். நான் இப்போது எதுவும் பேசாமல் இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த கனிமொழி, "திரும்பவும் அழவுட்டுட்டீகளா, என்னண்ணா இது, சின்னப் பொண்ணை எப்பப் பார்த்தாலும் அழவைச்சி வேடிக்கை பார்க்கிறது."
நான் கனிமொழியிடம் "அவ யார்கிட்டையும் எதுவும் பேச வேண்டாம், நான் அவன் கிட்ட பேசிக்கிறேன், கூட்டிட்டு போ இவளை இங்கிருந்து, எப்பப்பாரு அழுமூஞ்சியாட்டம் அழுதுகிட்டு" சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்த நாள் அந்தப் பையனை அழைத்து கண்டித்து அனுப்பினேன்.
--------------
அதென்னமோ ப்ரோஜக்ட் நல்லா முடிஞ்சதில் இருந்தே அகிலா ஞாபகமாவே இருந்தது; அந்தப் பிரச்சனைக்கு பிறகும் கூட நான் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை; ஆனால் அவள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தாள் என்று தோன்றியது. நானும் விளையாட வேண்டும் போல் தோன்றியது; அதனால் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு பக்கத்து ஊரில் இருக்கும் பாட்டியை பார்க்க சென்றுவிட்டேன். அடுத்த நாள் கல்லூரியில் பர்ஸ்ட் மூணு மணிநேரமும் கம்ப்யூட்டர் லேப், அகிலாவுடைய கிளாசுக்கு பாடம் எடுக்க வேண்டிய லெக்சரர் வரவில்லை.
Head of the Department என்னிடம் வந்து, "தாஸ், கொஞ்சம் டைட் ஸெட்யூல், நீ அந்த ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடண்டுகளுக்கு ஏதாச்சும் எடுத்துட்டு வந்திரேன்?"
"சார் சொல்றனேன்னு தப்பா நினைக்கக் கூடாது, எனக்கு உடம்பு சரியில்லை, வேணும்னா அவங்களை லேப்புக்கு வரச் சொல்லுங்களேன்" சொன்னதும், HOD, அப்பிடியா, உடம்பு சரியில்லையா பரவாயில்லை, லேப்புக்கு வரச்சொல்லிறுன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
நான் அட்டெண்டர் ஒருவரிடம் சென்று அவர்களை லேப்பிற்கு வரச்சொல்லிச் சொல்லிவிட்டேன்; பிறகு, நேராக சார்லஸிடம் வந்து, "சார்லஸ், அவ வருவா. நான் இல்லைன்னா நிச்சயம் உன்கிட்ட வந்து கேட்பா, நீ எனக்கு உடம்பு சரியில்லைன்னும் ரெஸ்ட் ரூமில் இருக்கிறேன்னும் சொல்லு!"
"மாமா, எதுக்குடா இது. இதுவரைக்கும் சரியா போய்க்கிட்டிருந்த நீ இப்ப ரூட் மாற்றாப்புல இருக்கு."
"ரூட்டும் மாறலை ஒன்னும் மாறலை, அவ என்கிட்ட கண்ணாம்மூச்சி விளையாடுறா அதான்," சொல்லிவிட்டு அட்மின் ரூமிற்குள் சென்றேன். அங்கே விசேஷம் என்னவென்றால், அட்மின் ரூமிலிருந்து லேபைப் பார்க்க முடியும் ஆனால் லேப்பில் இருந்து உள்ளே பார்க்க முடியாது. இது மாணவர்கள் தப்பு எதுவும் பண்ணாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டது.
கொஞ்ச நேரத்தில் லேபிற்கு வந்தாள், எங்க கிளாஸ் தான் உள்ளேயிருக்கிறதுன்னு தெரிஞ்சிக்கிட்டதும் என்னைத் தேடினாள். நான் இல்லாததால், நேரே சார்லஸிடம் போய் என்னவோ கேட்டாள். பின்னர் நேராக அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள். கால் மணிநேரம் இருக்கும், நேராக லேப் அட்டெண்டரிடம் போய் என்னவோ சொன்னாள்; வேறு என்னவாயிருக்கும் அவளுக்கும் உடம்பு சரியில்லைன்னு சொல்லி ரெஸ்ட் ரூமிற்கு வர நினைத்திருப்பாள்.
அவள் லேபை விட்டு வெளியே வந்தாள், நானும் அவள் பின்னே லேபை விட்டு வெளியே வந்து பின்னாலிருந்து அவள் தோளைத் தொட்டேன். பயந்து திரும்பியவளிடம், "ஏய் லேப்பில் இல்லாமல், எங்கடி ஊர் சுத்திக்கிட்டிருக்க?"
"சே..., நீங்கதானா, நான் பயந்திட்டேன். பின்னாலேர்ந்தெல்லாம் தொடாதீங்க பயமாயிருக்கு. ஆமா உங்களுக்கு உடம்புக்கு என்ன?"
"இனிமேல் தொடலை, ஏன் உடம்புக்கு ஒன்னுமில்லையே"
"நான் பயமுறுத்தாதீங்கன்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்." இதுக்கு விளக்கம் வேறு. "நேத்திக்கு நீங்க வரலை, இன்னிக்கு சார்லஸ் சொன்னார் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அதான் கேட்டேன்".
"எனக்கு உடம்பு சரியில்லைன்னா உனக்கென்ன?" சொல்லிவிட்டு அவளையே பார்த்தேன். மூஞ்செல்லாம் சிவந்து போனது உடனே, "ஏய் அழுதுத் தொலையாதே, இது காலேஜ், என் சீட்டைக் கிழிச்சிருவாங்க."
"அழமாட்டேன், பயப்படாதீங்க. உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல்ல, நீங்க இன்னிக்கும் லீவு போட்டிருந்தீங்கன்னா. உங்க வீட்டுக்கே வந்திருப்பேன்."
"வருவே, வருவே. எங்கம்மாகிட்ட போட்டுக் குடுத்துருவேன். நீ என்னை காலேஜூல மிரட்டுறன்னு"
"நானா மிரட்டுறேன், நீங்கதான் சந்திச்ச முதல் நாளே கன்னத்தில் அறைஞ்சீங்க, அப்புறம் தினம் தினம் அழவைச்சுக்கிட்டிருக்கீங்க. நானும் சொல்றேன் அத்தைகிட்ட"
"சொல்லுவடி, சொல்லுவ..." நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கனிமொழி அங்கே வந்தாள்.
"அய்யோ காதலர்கள் பேசும் போது குறுக்கே வந்திட்டனோ?"- கனிமொழி
"கனி, என்னம்மா இது. உனக்கு எத்தனை தடவை சொல்றது. என்னய கேட்டா உன் பேருலத்தான் தப்பு. இவளை அதட்டி வைக்காம நீதான் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்க. இது ரொம்ப தப்பு"
"ஆமா தப்பெல்லாம் என் பேருலத்தான், உங்காளுக்கு ஒன்னுமே தெரியாது, பப்பா பாரு."
"ம்ம்ம், இங்கப்பாரு உங்ககூட வெட்டிப்பேச்சு பேச எனக்கு நேரம் இல்ல, நானே உன்னை பார்க்ணும்னு நினைச்சேன். அம்மா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க. இந்த வாரம் வீட்டில ஏதோ விசேஷமாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரு என்ன?" சொன்னவுடன் அகிலா தலையைக் குனிந்து கொண்டாள்.
"அண்ணே என்ன இது, அகிலாவை கூப்பிடுறதில்லையா? உங்க லவ்வரா இல்லைன்னா கூட என் தங்கச்சின்னாவது கூப்பிடலாமில்லை"
"கனி அவரை ஏன் வற்புறுத்துற? அவருக்குப் பிடிக்கலைன்னா விட்டிரு!" - அகிலா.
"கனி, அவளையும் கூட்டிட்டு வா, ஆனா வந்தா சும்மா இருக்க மாட்டாளே, அத்தேம்பா, கால்ல விழுவா, ஓவரா பில்டப் கொடுப்பா, அதான் பயமாய் இருக்கு. நார்மலா நடந்துப்பான்னா கூப்பிட்டு வா," அவளைப் பார்த்து சொல்லிவிட்டு நான் நகர்ந்தேன்.
(தொடரும்...)
|