Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனேடிய கொடி விற்பனையில் முன்னிலை தமிழீழத் தேசியக் கொடி
#1
கனடாவில் கோடைகாலம் மற்றும் பனிக்குளிர் காலங்கள் ஆகியவற்றின் போது விடுமுறை தினங்கள் மற்றும் கொண்டாட்ட காலங்களில் முக்கிய சந்திப்புக்களில் தெருவோரக் கடைகளின் வியாபாரம் களைகட்டிவிடும்.

அந்தக் கடைகளில் பெரும்பாலும் தேசிய கொடிகள்இ அன்பளிப்புப் பொருட்கள்இ கம்பளிகள் மற்றும் சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் ஆகியன இடம்பெறும்.

அந்த வகையில் கடந்த கோடைகாலம் மற்றும் தற்போதைய குளிர்காலம் ஆகியவற்றில் ரொறன்ரோவில் அதிகளவில் விற்பனையாகும் ஒரு பொருளாக தமிழீழத் தேசியக் கொடி உள்ளது.

ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் வியாபாரங்களிலே தமிழீழத் தேசியக் கொடி வியாபாரமும் பரந்தளவில் நடத்தப்படுகிறது.

இது குறித்து இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் முகாமையாளரிடம் கேட்ட போதுஇ

தமிழர்களைத் தவிர ஆங்கிலேயர் உள்ளிட்ட பலராலும் நினைவுப் பொருளாகஇ ஆபூர்வப் பரிசாக தமிழீழத் தேசியக் கொடிகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் நல்ல விற்பனை நடப்பதாலேயே தாங்கள் தமிழீழத் தேசியக் கொடியை முதன்மைப்படுத்தி வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்தார்.

கடந்த கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகிய ஒரு தேசியக் கொடியென்றால் அது தமிழீழத் தேசியக் கொடியே என்றும் இப்போதைய வியாபாரத்தில் கூட தாங்கள் அதனை முதன்மைக் கொடியாகப் பறக்கவிட்டிருப்பது அது இன்னமும் முன்னிலை வியாபாரத்தில் இருப்பதினாலேயே என்றும் தெரிவித்தார்.

இந்த வியாபாரம் வழமையான வியாபாரச் சந்தையில் எவ்வாறுள்ளது என்பது குறித்து கொடிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நிரந்தர நிறுவன உரிமையாளரிடம் வினவிய போதுஇ

ஆம்.. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமிழீழத் தேசியக் கொடியை விற்று வருகிறோம். தமிழர்களின் கொடியெனவே அனைவரும் இதனை அடையாளம் காண்கிறார்கள் என்றார் அவர்.
Reply
#2
கனடாவின் முன்னணி பல்கலைக் கழகமான வோட்டர்லு} பல்கலைக் கழகத்தில் இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில், பல நாடுகளின் தேசியக் கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த விற்பனையின் பறக்க விடப்பட்டிருந்த ஒரே ஒரு கொடி தமிழீழ தேசியக் கொடி மாத்திரம் தான். அத்துடன் அதிகளவில் விற்பனையானதும் தமிழீழ தேசியக் கொடிதான். விற்றவர்கள் தமிழ் மாணவர்களில்லை

கறுப்பினத்தவர், வெள்ளையர்கள், சீனர்கள் ஏன் இந்திய மாணவர்கள் கூட தமிழீழ தேசியக் கொடியை வாங்கிச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
<img src='http://img412.imageshack.us/img412/9811/0182dc.jpg' border='0' alt='user posted image'>
- Cloud - Lighting - Thander - Rain -
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)