12-21-2005, 11:27 AM
<img src='http://www.thinakural.com/New%20web%20site/Logos/dr.gif' border='0' alt='user posted image'>
கொழும்பிலுள்ள ஒரு நிறுவனத்தின் நிருவாகி வங்கியில் மாற்றுவதற்காக ஒரு காசோலையைத் தனது கார்ச் சாரதியிடம் கொடுத்ததுடன், திரும்பும் வழியில் காரின் `பிரேக்'கை கராஜில் பரிசோதித்து வரும்படியும் அவரைக் கேட்டுக் கொண்டார்.
பகல் சென்ற சாரதிக்காக நிருவாகி காத்திருந்தார். பின்னிரவாகியும் காரையும் சாரதியையும் காணோம்.
மறுநாள் முற்பகல் நிருவாகி பரபரப்புடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று காருடன் சாரதியைக் காணவில்லையென்று முறைப்பாட்டை பதிவு செய்தார்.
அதே நேரத்தில் அந்தச் சாரதி`கூலாக' மேற்படி நிறுவனத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து கார் ஒரு குறிப்பிட்ட கிளப்பில் கிடப்பதாகவும் ஒரு இலட்சம் ரூபாவுடன் வந்து அதைக் கொடுத்து காரை மீட்டுச் செல்லும் படி நிருவாகிக்கு தெரிவிக்கும் படியும் தகவல் கொடுத்தார்.
நிருவாகி சீற்றத்துடன் பொலிஸார் சகிதம் அங்கு சென்ற போது குறிப்பிட்ட சாரதி காசோலைப் பணத்தை சூதாட்டத்தில் இழந்த பின் காரைப் பணயம் வைத்து ஒரு இலட்சம் ரூபா பெற்று அதனையும் சூதாட்டத்தில் இழந்துவிட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியது.
அந்தப் பலே ஆசாமி இப்போது மோசடிக் குற்றச்சாட்டில் பொலிஸ் வலையில் வகையாகச் சிக்கியுள்ளார்.
சூதும் வாதும் வேதனை தரும்!
Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...ember/21/DR.htm

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>