Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தினமணி
#1
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு புலிகளை குற்றம் சாட்டுவதா?: மகிந்தவுக்கு 'தினமணி' நாளேடு கேள்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச அவசர கோலத்தில் குற்றம் சாட்டுகிறார் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.


தினமணி நாளேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

அரசியல் படுகொலைகள் வாடிக்கையாகிவிட்ட இலங்கையில்இ தமிழர் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மட்டக்களப்பு தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்றபோது இவ்விதம் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடும் என்று எதிர்பார்க்காத காரணத்தால் அந்த எம்.பி.யின் பாதுகாவலர்களால் அவரைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது. பரராஜசிங்கம் முதலில் தேவாலயத்துக்கு வருவதாக இல்லை என்றும் பிறகு தொலைபேசி மூலம் வற்புறுத்தப்பட்டதன் பேரில்தான் வந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஆகவே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றே தோன்றுகிறது.

அரசியல் படுகொலையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிற வன்முறை அமைப்புக்கள்இ ஒருவரைக் கொன்ற பின்னர் தாங்கள் ஏதோ சாதித்து விட்டதைப்போல காட்டிக் கொள்ள அக் கொலையைத் தாங்கள்தான் செய்ததாக அறிவிப்பு விடுப்பது வழக்கம். ஆனால் பரராஜசிங்கம் விசயத்தில் இவ்வித அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

அமைதிக்கும் அன்புக்கும் உறைவிடமான தேவாலயத்தில் தாங்கள் நடத்திய படுகொலை மோசமான இழிசெயல் என்பதை உணர்ந்து வெட்கி அவர்கள் அவ்விதம் கள்ள மௌனம் சாதிக்கலாம். இலங்கையில் கடந்த பல ஆண்டுகளில் எவ்வளவோ அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால் வழிபாட்டுத் தலத்தில் அரசியல் படுகொலை நடப்பது இதுவே முதல் தடவை.

பரராஜசிங்கம் படுகொலையை இலங்கை அதிபர் ராஜபக்ச வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று அவர் அவசரக்கோலத்தில் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை ராணுவமோஇ நேரடியாக விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் பரராஜசிங்கம் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்தவர்.

விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து கருணா கோஷ்டியினர் தனியே பிரிந்த பிறகும் அவர் தொடர்ந்து பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பைத்தான் ஆதரித்து வந்தார்.

ஆகவேதான் உயிர் நீத்த பரராஜசிங்கத்துக்கு "மாமனிதர்' என்ற பட்டத்தை பிரபாகரன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரராஜசிங்கத்தை இலங்கை ராணுவத்தின் ரகசியத் தகவல் பிரிவும் அவர்களின் கைப்பாவையாக உள்ள ஆயுதம் தாங்கிய கும்பல்களும்தான் படுகொலை செய்துள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பரராஜசிங்கம் எளிய மனிதர். தமிழர்கள் சார்பில் உரக்கக் குரல் எழுப்பி வந்தவர். மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் செயல்களைக் கண்காணிப்பதற்கென்றே தனி அமைப்பு உள்ளது. அதில் அவர் முக்கிய உறுப்பினராகத் திகழ்ந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக அவர் மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பட்டியலிட்டு அவற்றை உலக சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

மேற்கூறிய அமைப்பைச் சேர்ந்த சந்திரநேரு கடந்த பிப்ரவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரராஜசிங்கம் காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்திலும்இ சார்க் நாடுகளின் நாடாளுமன்றச் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

இப் படுகொலையானது இலங்கையில் 2002 பிப்ரவரியிலிருந்து அமலில் இருந்து வரும் சண்டை நிறுத்தத்தைக் குலைத்து மறுபடி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுப் படைகளுக்கும் இடையே போர் மூள வழிவகுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இவ்வித நிலைமை ஏற்படுவதைத் தடுத்துஇ பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படிச் செய்யஇ நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் முயன்று வருகின்றனர்.

இப்போது இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் இந்தியாவும் இதையே வலியுறுத்தும் என எதிர்பார்க்கலாம்.

நன்றி - புதினம்.
<b> </b>
Reply
#2
இந்தநேரத்திலாவது இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவுடன் செய்திவெளியிட்டதற்கு தினமணி இந்தியன் எக்பிரஸ் பத்திரிகைகளுக்கு நன்றி.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)