Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோர்வே சிறப்புத் தூதுவர் இன்று இலங்கை வருகை
#1
<span style='font-size:25pt;line-height:100%'>நோர்வே சிறப்புத் தூதுவர் இன்று இலங்கை வருகை </span>

இலங்கை அமைதி முயற்சிகளுக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்கிழமை இலங்கை வரக் கூடும் என்று தெரிகிறது.

ஜெனீவா 2 ஆம் சுற்றுப் பேச்சுக்கள் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தென் தமிழீழ தளபதிகளுடன் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முக்கிய ஆலோசனை நடத்துவதற்கான பயண ஒழுங்கை யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

ஆகையால் தங்களது தளபதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பின்னரே ஜெனீவாப் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரியிருந்தனர்.

இந்நிலையில் தென் தமிழீழத் தளபதிகளுடனான ஆலோசனைக்கு விடுதலைப் புலிகள் தனியார் விமான சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நேற்று திங்கட்கிழமை இணக்கம் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில் நோர்வே சிறப்புத் தூதுவர் இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளதாக நோர்வே தூதரக வட்டரங்களைச் சுட்டிக்காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜெனீவா பேச்சுக்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாற்காலிகமாக விலகிக் கொள்ளப் போவது தொடர்பான அறிவித்தல் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
puthinam.com
Reply
#2
நல்ல கட்டுரை.
நன்றி.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)