Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மண்குதிரையை நம்பி அகழியில் கால் வைக்கும் அமெரிக்கா
#1
<b>புலிகள் மீண்டும் போருக்கு செல்வார்களேயானால் வலிமைமிக்க இராணுவத்தை சந்திக்க வேண்டியிருக்கும் </b>

[size=18]அமெரிக்கா கடும் எச்சரிக்கை



விடுதலைப் புலிகள் மீண்டும் போருக்கு திரும்பினால் அவர்கள் அதற்காக மிகப்பெரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தை சந்திக்கவேண்டியிருக்குமெனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கொழும்பிலுள்ள வர்த்தக சமூகத்தினர் மத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்திய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்ரட்,

விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டுமென்றே வாஷிங்டன் விரும்புகிறது.

ஆனால், அவர்கள் சமாதானத்திலிருந்து விலகுவார்களேயானால், நாம் ஒன்றை அவர்களுக்கு தெளிவாகச் சொல்ல விரும்புகிறோம்.

இப்போதுள்ளதை விட மிகவும் வலிமையான மிகவும் வினைத்திறன் மிக்க, இலங்கைப் படையினருடனேயே யுத்தம் புரிய வேண்டியிருக்கும். அதாவது யுத்தத்திற்காக அவர்கள் செலுத்த வேண்டிய விலை அதிகமாயிருக்கும் எனவும் தெரிவித்தார்.

சட்ட பூர்வமான அரசொன்று தனது மக்களின் பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் என எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அமெரிக்கா உதவி புரியும் என தெரிவித்த அவர் தமது பயிற்சி மற்றும் உதவித் திட்டங்கள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதையும், சட்ட விரோத பணிப்பரிமாற்றத்தை தடை செய்வதையும் உள்ளடக்கும் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் தனது மக்களையும் நலன்களையும் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அமெரிக்கா உதவி வழங்கும்.

வர்த்தக சமூகத்தினர் மத்தியில் இந்தளவிற்கு மிகக் கடுமையாக அமெரிக்க தூதுவர் ஏன் பேசுகிறார் எனக் கூட நீங்கள் கேட்கலாம்.

அதற்கொரு காரணமுள்ளது. வர்த்தக சமூகம் தான் சமாதான முயற்சிகளின் பலாபலன்களை உணரப்போவதென்பதாலேயே அவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்தார்.

தினக்குரல்

இதனை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது. நகைச்சுவை என்று தான் நாம் இதனை கருத முடியும். போயும் போயும் இலங்கை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இராணுவத்தை நம்பியா ஐயோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இது என்ன நகைச்சுவை 2005 முடிவு என்பதா அல்லது 2006 ஆரம்பம் என்பதா. தாங்களே ஈராக்கில ஓட வழிதெரியாமல் இருக்கினம் அதுக்கிடையில சிங்கள ஆமிய அவங்களுக்கு துவக்கு தேவையில்ல ஆளுக்கொரு 100 ரூபா நோட்டு கொடுத்தாலே காணும் வைத்திருக்கிற துவக்கையும் தாறன் இன்னும் கொஞ்சம் கூட பணம் தருவாயா என்று கேட்கிறவங்களை நம்பி அமெரிக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன செய்ய ?????
Reply
#2
இந்த வருடத்தின் நல்ல பகிடியாக இது இருக்கும்

Reply
#3
<i>சம்பந்தன் பின்வருமாரு கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது......</i>

<i>செய்தி புதினத்திலிருந்து நன்றியுடன்...</i>

<b>விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல:</b> <i><b>இரா.சம்பந்தன் </b></i>

தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை 'அல்கைதா மன நிலையில்' அமெரிக்கா அணுகினால் அது எந்த வகையிலும் பயன்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்ன் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.


<i>இது தொடர்பில் பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு அவர் அளித்த நேர்காணல்:</i>

விடுதலைப் புலிகள் வன்முறைக்குத் தயாராவதாக அமெரிக்க தூதுவர் ஜெஃரி லான்ஸ்ரெட் கூறியுள்ளார். வன்முறை என்பது ஒரு பக்கத்திலிருந்து உருவாவது அல்ல.

தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை அல்கைதா மன நிலையில் அமெரிக்கா அணுகினால் அது எந்த வகையிலும் பயன்படாது. விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வந்தாலும் அதை சிறிலங்கா அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மீளக் குடியேற்றம் தொடர்பாக எத்தனையோ ஆலோசனைக் கூட்டங்களில் விடுதலைப் புலிகள் பங்கேற்ற போதும் அது நடக்கவில்லை. ஆகக் குறைந்தபட்சம் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பைக் கூட சிறிலங்கா அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுகளுக்கான இடம் குறித்து சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் விரைவில் இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என்றார் இரா.சம்பந்தன்
"
"
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)