[size=18]புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - ளொப்ப்ய் எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாரிய ஒத்துழைப்பை எவருமே மறுப்பதற்கில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான தமிழீழத் தேசியத் தலைமையினது மதிப்பை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவருமே அறிந்த ஒன்றாகும்.
இருப்பினும் தனிநபர்களினது பங்களிப்புகளாக இருப்பதனூடே மட்டும் விடுதலைப் போராட்டத்தை நகர்த்திவிட முடியாது.
தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது.
சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும் உள்ளாகி உள்ளது.
சிங்களவர்களோடு மட்டுமே நாம் போராடிக் கொண்டிருந்தால் போதுமெனில் எந்த ஒரு தமிழீழக் குடிமகனும் அந்நிய தேசத்தில் அகதியாக இத்தனை காலம் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை- நம் காணிகள் செழித்திருக்க- நம் முன்னையர் காலம் மீண்டும் பூத்திருக்க சுதந்திரத் தமிழனாய் திருமலை கோணேஸ்வரர் ஆலயத்துக்கும் நல்லூர் கந்தன் கோவிலுக்கும் பங்குனி உத்திர பாதயாத்திரையும் போய்க்கொண்டிருப்போம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சமாதானம், அமைதிப் பேச்சுக்கள் என்ற அழுத்தங்களினூடே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை சர்வதேச தளத்திலும் இருக்க வேண்டும்.
அதை புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே செய்ய முடியும்.
உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு உயிரைக் கொடுக்க உள்ள போராளிகளுக்கு உந்துசக்தியாக- உயிரோட்டமாக புலம்பெயர் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்.
கொட்டும் பனியிலும் உறங்கா இரவுகளிலும் கடன்பட்டு செந்நீரைப் போல் உடல் உழைப்பைச் சிந்தி அள்ளி அள்ளி கொடுத்து அரும்பாடுபட்டு வளர்த்த விடுதலைப் பயிரின் அறுவடைக்கு முன்னராக புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை இருக்கிறதுதான் என்பது புலம்பெயர் தமிழரது மனசாட்சிக்குத் தெரியும்.
இந்தக் களைக்கு யார் காரணம் என்பது விவாதிக்கப்பட வேண்டியது அல்ல.
களையைக் களைந்து கதிர் முற்ற மகிழ்வோடு அதனை அறுத்து ஒன்றாய் நின்று விடுதலைப் பொங்கலிடுவதற்கான வழி என்ன என்பதைத்தான் புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தும் விதமாக புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டிய கடமையின் அவசியம் உணர்ந்து பேராசிரியர் கா.சிவதம்பி தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பைத் தருகின்றோம்<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஐரோப்பிய பயணத் தடையையும் கனேடியத் தடையையும் ஒன்றொன்றுக்கொன்று தொடர்புடையதாக கருதமாட்டேன்.
ஐரோப்பிய பயணத் தடைக்கான காரணம் பேச்சுவார்த்தை தொடர்பிலானதும், சிறிலங்கா அரசாங்கத்தினது பரப்புரைகள் அல்லது எடுத்துரைப்புகளுக்கான சந்தர்ப்பங்களாலும் ஏற்பட்டது எனக் கருதலாம். அதிலும் நோர்வே போன்றவற்றில் இது விடயத்தில் ஒரு தளர்ச்சி உள்ளது. அதனால் நோர்வேத் தரப்பை சிங்களத் தரப்பு கடுமையாகத் தாக்குகிறார்கள்.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது-
நோர்வே அல்லது மூன்றாவது நாடாக ஒரு மேற்கத்தைய நாட்டின் தலையீடு இல்லாமல், அனுசரணை இல்லாமல் சமாதானம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற உண்மையும்
அப்படியான நேரத்தில் நோர்வேயை வேண்டாம் என்று சொல்வது எப்படிப் புத்திசாலித்தனதமாகும் என்று சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்கிற ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கிறேன்.
இலங்கையில் தமிழரது நிலைப்பாடு பற்றி வெளிநாடுகளில் எடுத்துச் சொல்லப்பட்டு வந்த சில பரப்புரைகள்தான் கனேடியத் தடைக்குக் காரணம்.
குறிப்பாக சர்வதேச நிறுவனங்களிடத்தில் தமிழர் தரப்பானது நன்மதிப்பைப் பெறுவதற்கான பரப்புரைகளைப் புகலிடத் தமிழர்கள் வேண்டிய அளவு செய்யவில்லை. அதற்கு மாறான செயற்பாடுகளையே செய்து வந்துள்ளதாக எமக்குப்படுகிறது.
கனேடியத் தடையை விதித்தது ஒரு கன்சர்வேட்டிவ் கட்சி. அரசாங்கத்துக்கு வந்தும் சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கிறது. கனேடியப் பண்பை பாதுகாப்பாகச் சொல்கிறார்கள்.
தமிழ் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தாதரவு தேடும் கூடம்- கருத்தாதரவு தேடுகிற ஒரு தொழில்முறையாளர்களை- மருத்துவர்கள்-பொறியியலாளர்கள்-வல்லுநர்களைக் கொண்ட குழுமம் கனடாவில் இயங்கவில்லை.
தமிழ் மக்களால் சிங்கள மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய அரசாங்கத்திடம் சொல்வதற்கான வலுவான சிங்களக் குழு கனடாவில் உண்டு.
கனடாவில் ளொப்ப்ய் எனச் சொல்லப்படுகிற கருத்தாதரவு தேடும் குழுமம் ஒன்று உள்ளதா?
இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இருந்தது- இப்போது அங்கும் குறைந்து விட்டது. அவுஸ்திரேலியாவிலும் கூட இல்லை என்றுதான் நம்புகிறேன்.
தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் தங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுதலில் காணப்படுகிற பலவீனங்களின் வெளிப்பாடாகவும் குறைபாடுகளின் வெளிப்பாடாகவுமே கனேடியத் தடையை நான் பார்க்கின்றேன்.
புலம்பெயர் வாழ் நாடுகளில் உள்ளவர்கள் சரியான வகையில் இந்தப் பரப்புரையை அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அரசாங்கங்களிலும் நியாயப்பாடுகளை வெளிக்கொணரத் தவறிவிட்டார்கள் என்று அடித்துச் சொல்கின்றேன்.
நீங்கள் நேர்காணல் எடுக்கும் அவுஸ்திரேலியாவில் நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள பிரதான தேசிய நாளிதமிழில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றி எத்தனை அங்குலச் செய்தி கடந்த 6 மாத காலத்தில் வெளியாகியிருக்கின்றது?
ஒன்றுகூட வரவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியானால் நீங்கள் என்னுடன் பேசவேண்டியதும் இல்லை. என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?
இங்கிலாந்து- கனடா-ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை விட அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் ஆங்கிலம் படித்தவர்கள்- அடி நிலை ஊழியராக இருந்தாலும் அரச உத்தியோகத்தில் இருப்பவர்கள். உங்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை? அவர்களைப் போல் நீங்கள் உடல் உழைப்பாளர்கள் அல்ல என்பதை நான் நன்கறிவேன்.
உங்களுக்குள் குழு மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இங்கு வந்துவிட்டு மகிழ்கின்றீர்கள்.
கோவில்களுக்குச் செலவிடுவது போன்ற உங்களது சொந்த ஆத்மார்த்த திருப்திக்கான செயற்பாடுகளைப் போல் இந்த கருத்தாதரவு தேடுதல் எனப்படுகிற ளொப்ப்ய் யை ஏன் நீங்கள் செய்யவில்லை?
யார் தலைவர்-செயலாளர் என்கிற வகையிலும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்கிற வகையிலும் அங்கு நிலைமைகள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள்.
நீங்கள் மாநாடுகள்-பட்டிமன்றங்கள்- கருத்தரங்குகள்- குத்துவிளக்கேற்றுதல்களை செய்வதற்குத்தான் இவை தேவை.
அதைவிட எல்லா விடயமும் நன்கு அறிந்த 4 பேர் இணைந்து இந்த ளொப்ப்ய் யைச் செய்யலாமே.
உண்மையில் ளொப்ப்ய் செய்வதற்கான ஒழுங்குமுறைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பது துரதிர்ஸ்டம்.
ளொப்ப்ய் யை அறிந்தவர்களும் அதைச் செய்யவில்லை என்பதும் உன்மை.
அப்படியான நிலையில் தடைவிதித்து விட்டார்கள் என்று வயிற்றலடித்துக் கொண்டால் எப்படி?
இங்குள்ள தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது. நிலைமை அப்படி உள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கால வரிசைப்படியாக நீங்கள் வெளியீட்டுள்ளீர்களா? அப்படி இருந்தால் அது எவ்வளவு தூரம் சென்றடைந்திருக்கின்றது? வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டால் போதுமா?
இந்த விடயங்களைச் செய்வதற்கு எல்லோரும் இணைய வேண்டும் என்பதில்லை.
சிறிது பேர் இந்த விடயங்களைச் செய்ய முன்வருவார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்கள் மறுதலிக்கக் கூடாது.
கனடாவில் அப்படித்தான் நடந்தது என்று கேள்விப்படுகிறேன். கனடாவில் உள்ள சிலர் அவர் அப்படிச் சொல்லிவிடுவார்-இவர் எப்படிச் சொல்லிவிடுவார் என்று சொல்லிக் கொண்டு பேச விரும்புகிறவர்களையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றீர்கள். பக்கத்து கிராமத்துக்காரன் சண்டை போட்டால் அங்கேயும் நீங்கள் ஒன்றாக இணைந்து கொண்டு சண்டை போடுகின்றீர்கள். அந்த ஒற்றுமை எல்லாம் உங்களிடம் இருக்கிறது.
ஆனால் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்ட விடயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதுதான் பிரச்சனையே.
இன்றுள்ள சிறிலங்கா யாப்பு நிலையில் ஒரு தேசத்தின் அலகு என்கிற வகையில் தேசக் குழுமம் என்கிற வகையில் ஆட்சியில் தமிழர்களினது பங்கு என்ன? என்பது வரைவிலகணக்கப்படுத்தப்படவில்லை.
சிங்களவன் சொன்னதற்குப் பின்னர்தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ்ப் பத்திரிகைகள் வலிந்து எழுதுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக் கொண்டு சிலர் செயற்படுகின்றனர்.
அவர்களுக்கு நான் சொல்வது இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் தலைமை தாங்க வேண்டிய நிர்பந்தச் சூழல்களை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலில் இதை இலங்கைத் தமிழரது உரிமைப் போராட்டமாகத்தான் நாம் பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.
நீங்கள் புலிகள் பக்கமா? எதிரா நிற்கீர்களா என்பது அல்ல.
நீங்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளில் உள்ள வாழ்க்கை முறைக்கும் இங்குள்ள தமிழர்களது வாழ்க்கை முறைக்கும் வேறுபாடு உண்டு.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மருமகன் புறப்பட்டுவிட்டான், பேரன் புறப்பட்டுவிட்டான் எனில் அவன் கொழும்பு வந்து சேருவானா இல்லையா என்கிற பிரச்சனை ஒருதரப்புக்கு மட்டுமேயானது அல்ல. எல்லோருக்கும் பொதுவானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது
"வேரோடு கோபித்துக்கொண்டு கிளைகள் வெள்ளத்தில் போயின" என்கிற உவமையைத்தான் இங்கே சொல்ல வேண்டும் என்றார் ஓய்வுநிலைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி.
-புதினம்