Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெவுக்கு தோல்வி, உளவுத்துறை கணிப்பு
#1
கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது....

அதன் விவரம்:

ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 33 இடங்களும், பாமகவுக்கு 24 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

திமுக கூட்டணிக்கு மொத்தம் 176 இடங்கள் கிடைக்கும்.

அதிமுகவுக்கு 50 தொகுதிகளிலும், மதிமுகவுக்கு 5 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 3 இடங்களிலும் வெற்றி கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 58 இடங்களே கிடைக்கும்.

திமுக கூட்டணிக் கட்சியினரின் தீவிர பிரச்சாரம் காரணாக தேர்தல் நெருங்க நெருங்க அந்தக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் இதனால் அதிமுகவுக்கு கிடைக்கும் இடங்கள் 30 என குறையலாம்.

இவ்வாறு உளவுத்துறை அரசிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது....

(நன்றி : தட்ஸ்தமிழ்)
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)