Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம்
#1
<b>செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் மதியுரைஞர் வன்னி சென்றுவர அரசு ஹெலி வசதி வழங்குமாம் </b>
நோர்வே அனுசரணைக் குழுவின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் எதிர்வரும் 25ஆம் திகதி விடுதலைப் புலி களின் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சிக்குச் செல்கின்றார்.
ஆனால், அங்கு அச்சமயம் விடுதலைப் புலிகளின் மதி யுரைஞர் அன்ரன் பாலசிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங் கள் தகவல் வெளியிட்டன.
இதற்கிடையில் தற்போது லண்டனில் தங்கி இருக்கும் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்காகக் கொழும்பு வருவாராயின், கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு அவர் சென்று வருவதற்கான ஹெலிகொப்டர் வசதிகளை வழங்குவது என்று அரச உயர்மட்டம் கொள்கை அளவில் தீர்மானித்திருப்பதாக நம்பகமாக அறியவந் திருக்கிறது.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் முயற்சியில் அனுசரணைப் பணி வகிக்கும் நோர்வேயின் விசேட தூது வரும், அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் இவ் வருட முதல் வாரம் தொடக்கம் அடுத்த செவ் வாய்க்கிழமை வரை தமது குடும்பத்துடன் எகிப்தில் விடுமுறையைக் கழித்து வருகின் றார்.
விடுமுறையை முடித்துக் கொண்டு நோர் வேத் தலைநகர் ஒஸ்லோவுக்குத் திரும்பும் அவர்,எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு வருகிறார்.
24 ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்திப்பார்.
அடுத்த நாள் அவர் கிளிநொச்சிக்குச் செல் கிறார். அங்கு அவர் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைச் சந்திப்பார்.
அங்கு புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை நேரடியாக சந்திப்பதற்கு சொல்ஹெய்ம் விரும்புகிறார் எனத் தெரிகின்றது. ஆனால், சொல்ஹெய்ம் வன்னி வரும் சமயத்தில் அங்கு புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பால சிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
அன்ரன் பாலசிங்கத்தின் பிரசன்னம் இல்லாமல் எரிக் சொல்ஹெய்மையோ அல் லது வேறு சர்வதேசத் தலைவர்களையோ தலைவர்பிரபாகரன் சந்திக்கமாட்டார் என்றும் தெரிகின்றது.
இச்சந்தர்ப்பத்திற்காக லண்டனிலிருந்து வன்னிக்குச் செல்வதற்கு மதியுரைஞர் பாலசிங்கம் தயார் என்றாலும் அதற்கான சூழ் நிலைகள், வசதிகள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர் லண்டனிலிருந்து புறப்படு வார் என்றும் கூறப்படுகின்றது.
முதலாவதாக அவரது பயணத்துக்கான பாதுகாப்பு உரிய சம்பந்தப்பட்ட தரப்புக ளால் அதற்கேயுரித்தான வழிமுறையில் உறு திப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்பு சூழ்நிலை யும் நிலவ வேண்டும். மோசமான மோதல் கள், அழிவுகள், தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் கொழும்பு ஊடாக அவர் வன்னிக்குச் செல்ல முயலமாட்டார் எனத் தெரிகிறது.
அடுத்ததாக, கட்டுநாயக்கா விமான நிலை யத்திலிருந்து வன்னி வரை தாமதமின்றிப் பயணம் செய்வதற்கு அவருக்கு ஹெலிகொப்டர் வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்தகைய நிலைமை உறுதியானால்தான் அவரது வன்னி வருகை இடம்பெறும் என் கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
மதியுரைஞர் பாலசிங்கம் வன்னி செல்ல விரும்பினால்,கட்டுநõயக்கா விமான நிலை யத்திலிருந்து விசேட ஹெலிகொப்டர் வசதி அவருக்கு வழங்கலாம் என அரசுத் தலைமை கொள்கையளவில் நேற்று முன் தினம் மாலை முடிவு செய்திருப்பதாக நம்ப கமாக அறியவந்தது.
அரசுத் தலைமையின் இந்தத் தீர்மானத்தை, பாதுகாப்புச் சிக்கல்களைக் காரணம் காட்டி புறந்தள்ளாமல் செயற்படுத்தக் கூடிய விருப்ப நிலையில் சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப் புகள் தயாராக இருக்கின்றனவா என்பது இன்னும் தெரியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கடந்த சுமார் இரண்டு மாதங்களாக இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் ஏதும் இதுவரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தரையி றங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலத்தில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும்,இராஜதந்திரிகளும் புலி களின் கிளிநொச்சித் தலைமையகத்துக்குச் சென்று அவர்களைச் சந்திக்க வேண்டிய தேவை எழுந்த போதெல்லாம் ஒன்றில் வவுனியா வரை அல்லது பலாலி வரை இலங்கை விமானப் படை வான்கலங்களில் சென்று அங்கிருந்து தரை மார்க்கமாகவே கிளிநொச்சிக்குச் சென்றனர்.
இந்தப் பின்னணியில் மதியுரைஞர் பால சிங்கத்தை ஏற்றிக் கொண்டு புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் ஹெலிகொப்டரை இறக்க விமானப்படை தயாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எது எப்படியென்றாலும் மதியுரைஞர் பாலசிங்கம் இப்போதைய சூழ்நிலையில் வன்னி வருவதனால் அது இலங்கையில் எரிக் சொல்ஹெய்ம் தங்கி நிற்கும் காலத்தை ஒட்டியதாக இருக்கும் என ஊகிக்க முடிகின்றது.
தனது உத்தேச வன்னிப்பயணம் குறித்து மதியுரைஞர் பாலசிங்கம் தீர்க்கமான முடிவு எதையும் இன்னும் எடுக்கவில்லை என்றும்
நிலைமையைப் பொறுத்து தலைவர் பிரபாகரனுடன் கலந்தாலோசித்து, அவரது வழி காட்டலுக்கு அமைய பாலசிங்கம் அடுத்த வாரமளவில் ஒரு முடிவை எடுக்கக் கூடும் என்றும் தெரியவருகின்றது.
இதனிடையே, 23ஆம் திகதி கொழும்பு வந்து, 25 ஆம் திகதி வன்னி சென்று, புலிகளின் தலைவர்களைச் சந்திக்கும் எரிக் சொல்ஹெய்ம் இலங்கையில் நான்கு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பி லிருந்து புறப்படமுன்னர் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு தடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பார் எனத் தெரிகிறது.
அதற்கேற்றவகையில் அவரது நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருப்பதாக அறியமுடிந் தது.
எரிக் சொல்ஹெய்ம் இம்முறை கொழும்பு வந்து திரும்புவதற்கு முன்னர் அரசு புலிகள் சமாதானப் பேச்சுக் குறித்தும், அது நடத்தப்படக் கூடிய இடம் குறித்தும் திட்டவட்ட மான ஒரு முடிவு எட்டப்பட்டுவிடும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் உறுதிதெரிவித்தன.

uthayan.com
இணைப்பு : : kugan
Sat, 14 Jan 2006, 06:10:32 GMT


http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<span style='font-size:25pt;line-height:100%'><b>ஹெலி வசதி வழங்க அரசு இணக்கம்: பாலாவின் கிளிநொச்சி வருகை உறுதி? </b></span>
[ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 16:00 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
தமிழ் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் கிளிநொச்சிக்கான பயணத்துக்கு சிறிலங்கா அரசு ஹெலி போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க இணங்கியிருப்பதை அடுத்து பாலாவின் வன்னிக்கான விஜயம் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் சாத்தியமாகியிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


எதிர்வரும் 23 ஆம் திகதி மிக முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அன்றைய தினம் உடனடியாகவே வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கிறார். மறுநாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துவிட்டு கிளிநொச்சிக்கு செல்கிறார்.

இதற்கிடையில் லண்டனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அன்டன் பாலசிங்கத்தை அங்கிருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்ல சிறிலங்கா அரசு ஹெலி போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால், கிளிநொச்சி வரும் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போது அரசு அதற்கு இணங்கியிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து அன்டன் பாலசிங்கத்தின் விஜயமும் உறுதியாகிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலசிங்கத்தின் கிளிநொச்சிக்கான இரு வழிப்பயணத்தின் போதும் அவருடன் நோர்வேயின் கொழும்புக்கான தூதரக அதிகாரி, கண்காணிப்புக்குழு பிரதிநிதி மற்றும் சமாதான ஒருங்கிணைப்ப்புக்குழு அதிகாரி ஒருவர் ஆகியோரை ஹெலியில் அனுப்புவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் மூலம்- புதினம் .கொம்
"
"
Reply
#3
<b>எரிக் சொல்ஹெய்ம், பாலசிங்கத்தை தடுத்து நிறுத்துக: மகிந்தவுக்கு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை!</b>

இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் இலங்கைக்கு வருவதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.


கொழும்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியதாவது:

கடந்த கால அரசாங்கங்களைப் போலவே மகிந்த அரசாங்கமும் அமைதி முயற்சி என்ற பெயரால் சிறிலங்காவின் இறையாண்மையை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறார்கள்.

எரிக் சொல்ஹெய்ம் மற்றும் பாலசிங்கம் ஆகியோர் இலங்கைக்குள் நுழைய அனுமதி கொடுத்தவர்கள் யார் என்பதை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் பயணத் தடை விதித்துள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது எதுவித தடையும் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. இலங்கைக்குள் பாலசிங்கம் நுழைவதை மகிந்த ராஜபக்ச தடுக்க வேண்டும்.

சில உறுதிமொழிகளின் அடிப்படையில்தான் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவை நாம் ஆதரித்தோம். ஜாதிக ஹெல உறுமயவுக்கு அளித்த வாக்குறுதிகளை மகிந்த ராஜபக்ச காப்பாற்ற வேண்டும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் தமிழ் உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை சபாநாயகர் லொக்கு பண்டாராவினால் தடுக்க முடியவில்லை. அதனால் அவர் உடனே பதவி விலக வேண்டும். எரிக் சொல்ஹெய்ம் மற்றும் பாலசிங்கத்தின் வருகை குறித்து கேள்வி எழுப்பிய போது தமிழ் உறுப்பினர்கள் இடையூறு செய்தனர்.

நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் தமிழ் உறுப்பினர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அத்துரலிய ரத்ன தேரர்.

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply
#4
<b>இலங்கைப் பயணத்தில் சிறிய அளவிலாவது முன்நகர்வு ஏற்படும்: எரிக் சொல்ஹெய்ம் நம்பிக்கை </b>
இலங்கை பயணத்தின் போது சிறிய அளவிலாவது முன்நகர்வு ஏற்பட்டால் எமக்கு பாரிய திருப்தியளிக்கும் என்று இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.


தமது இலங்கைப் பயணம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் எரிக் சொல்ஹெய்ம் கூறியதாவது:

இந்த பயணத்தின் போது யுத்த நிறுத்தத்தை நிலைப்படுத்துதல் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது.

தற்போதைய பயணத்தின் போது ஒரு சிறிய அளவிலாவது முன்நகர்வு ஏற்பட்டாலே எமக்கு அது பாரிய திருப்தியளிக்கும்.

யுத்த காலத்தை ஒப்பிடுகையில் இந்தக் கொடூர வன்முறைகள் இப்போது குறைவுதான். யுத்த களத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமைதிப் பேச்சுகளுக்கான முன் நிபந்தனையாக யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் உள்ளது. எப்போது பேச்சுகள் நடைபெறும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

வன்முறைகள் அதிகரித்துச் செல்வது முக்கிய பிரச்சனையாக உள்ளது. படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்துச் செயற்படுவது என்பதுதான் இப்போதைய முக்கியமான ஒன்றாகும் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply
#5
<b>பாலசிங்கத்துக்கு இராணுவ உலங்குவானூர்தி அளிக்கக் கூடாது: ஜாதிக ஹெல உறுமய </b>
கிளிநொச்சி வருகை தர உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறிலங்கா இராணுவத்தின் உலங்குவானூர்தி அளிக்கக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா, பாலசிங்கத்தின் பயண ஏற்பாட்டுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசாங்கம் அதை பரிசீலிக்கும் என்றார்.

ஆனால் இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்ப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அண்மைய இராணுவத்தினர் மீதான கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என்பதை பகிரங்கமாக பாலசிங்கம் அறிவித்த பின்னர் அந்த இராணுவத்தினர் பாதுகாப்புடன் வன்னிக்கு செல்லட்டும் என்றார் அவர்.

அரசாங்கத்தின் இந்த முடிவை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும் இராணுவப் பாதுகாப்பு தேவையெனில் தாக்குதலுக்கான பகிரங்க ஒப்புதலை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால் ஜே.வி.பி.யின் மூத்த தலைவரான அனுராகுமார திசநாயக்க, இதை நாம் எதிர்க்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்

<b><i>தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
"
"
Reply
#6
<span style='color:green'><b>சொல்ஹெய்ம், பாலசிங்கம் வருகையோடு நல்ல திருப்பம் கிட்டும் என அரசு நம்பிக்கை </b>

சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பது தொடர்பாக நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்க மும் இலங்கை வரவிருக்கின்றமை சமாதான முயற்சியில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம்.

சமாதான முயற்சியில் தீவிரமாக இருக் கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இவர் களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த் துக் காத்திருக்கின்றார். நல்லதொரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

இவ்வாறு சுகாதார அமைச்சரும் அமைச் சரவைப் பேச்சாளருமான நிமால் சிறிபால டி சில்வா நேற்று கொழும்பில் உள்ள தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

சமாதானப் பேச்சைத் தொடங்குவது தொடர்பான முயற்சியில் ஈடுபடுவதற்காக இம்மாதம் 23ஆம் திகதி நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் அன்ரன் பால சிங்கமும் இலங்கைக்கு வருகைதரவுள்ள னர்.

இவர்களின் வருகையை நாம் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். பேச்சை ஆரம்பிப்பது தொடர்பான நல்ல முடிவு ஒன்று கிடைக்கும் என நாம் ஆவலுடன் நம்புகிறோம். இலங்கை வரும் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியையும் புலிகளின் தலைவர் பிர பாகரனையும் சந்திப்பார். இந்தச் சந்திப்பின் மூலம் சாதகமான முடிவுகளை ஜனாதிபதி எரிக் சொல்ஹெய்முக்குத் தெரிவிக்கவுள் ளார்.

அதேபோல, பிரபாகரனும் நல்ல முடிவை அறிவிப்பார் என நாம் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.

எரிக் சொல்ஹெய்மின் வருகையுடன் சமா தானப் பேச்சுக்குத் தடையாகவிருக்கின்ற அந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என்பதில் நாம் உறுதியாகவும் நம்பிக்கை யுடனும் இருக்கிறோம்.

அடுத்ததாக வடக்குகிழக்கில் தற் போதுள்ள பதற்றமான சூழலைத் தணித்து வழமை நிலையைத் தோற்றுவிக்கவும் ஜனா திபதி பெரும் முயற்சி எடுத்து வருகின்றார்.

மட்டக்களப்பில் யுத்தநிறுத்தக் கண்காணிப் புக் குழுவினரின் அலுவலகத்திற்குக் குண் டுத் தாக்குதல் நடத்தப்பட்டும் கூட அவர்கள் தங்களது பணியில் நின்று விலகாது, தொடர்ந் தும் தங்களது பணியைச்செய்து வருகின்ற னர். இதற்காக ஜனாதிபதி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு நன்றிகளைத் தெரிவித் துள்ளார். அத்தோடு, தொடர்ந்தும் அப்பணி யில் ஈடுபடுமாறு அவர் யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுவினரைக் கேட்டுக் கொண் டுள்ளார்.

ஆகவே, எரிக் சொல்ஹெய்மின் வருகை யுடன் எல்லாம் ஒரு சுமுக நிலைக்கு வந்து, நாட்டில் இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு வகையான பீதி நீங்கும் என்பது நிச்சயம் இவ்வாறு அவர் கூறினார். </span>

<i><b>தகவல் மூலம்- உதயன்/ பதிவு</b></i>
"
"
Reply
#7
<b>பாலசிங்கத்துக்கு உலங்கு வானூர்தி அளிக்க அரசாங்கம் இணக்கம்
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 21:25 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]

நோர்வேயின் விசேடப் பிரதிநிதி எரிக் சொல்ஹெயிமிற்கும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு விமானப்படை உலங்கு வானூர்த்தியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.


இப்பயணத்தின் போது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் பாலசிங்கத்தின் பாதுகாப்பின் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுள்ளது என்று சமாதான செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்ரன் பாலசிங்கமும் வருகை தந்தால் மட்டுமே எரிக் சொல்ஹெய்ம் உடனான சந்திப்பில் தான் கலந்துகொள்வதாக நோர்வே பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாலசிங்கத்துக்கு வானூர்தி வழங்குவது சிக்கலானது என்ற போதிலும் அரசாங்கம் இதற்கு இணங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த உலங்கு வானூர்தியில் யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களும் பயணிக்கவுள்ளனர்.

அருகம்பேயில் விமானப்படை உலங்கு வானூர்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் உதவி வழங்கும் நாடுகளின் தூதர்கள் கிளிநொச்சிக்கு ஓமந்தை சோதனைச் சாவடி வரை வானூர்தியில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


[b]<i>
தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
"
"
Reply
#8
<b>பாலசிங்கத்துக்கு உலங்கு வானூர்தி அளிக்க அரசாங்கம் இணக்கம்
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 21:25 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]

நோர்வேயின் விசேடப் பிரதிநிதி எரிக் சொல்ஹெயிமிற்கும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு விமானப்படை உலங்கு வானூர்த்தியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.


இப்பயணத்தின் போது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் பாலசிங்கத்தின் பாதுகாப்பின் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுள்ளது என்று சமாதான செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்ரன் பாலசிங்கமும் வருகை தந்தால் மட்டுமே எரிக் சொல்ஹெய்ம் உடனான சந்திப்பில் தான் கலந்துகொள்வதாக நோர்வே பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாலசிங்கத்துக்கு வானூர்தி வழங்குவது சிக்கலானது என்ற போதிலும் அரசாங்கம் இதற்கு இணங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த உலங்கு வானூர்தியில் யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களும் பயணிக்கவுள்ளனர்.

அருகம்பேயில் விமானப்படை உலங்கு வானூர்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் உதவி வழங்கும் நாடுகளின் தூதர்கள் கிளிநொச்சிக்கு ஓமந்தை சோதனைச் சாவடி வரை வானூர்தியில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


[b]<i>
தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
"
"
Reply
#9
<b>பாலசிங்கத்துக்கு உலங்கு வானூர்தி அளிக்க அரசாங்கம் இணக்கம்
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 21:25 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]

நோர்வேயின் விசேடப் பிரதிநிதி எரிக் சொல்ஹெயிமிற்கும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு விமானப்படை உலங்கு வானூர்த்தியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.


இப்பயணத்தின் போது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் பாலசிங்கத்தின் பாதுகாப்பின் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுள்ளது என்று சமாதான செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்ரன் பாலசிங்கமும் வருகை தந்தால் மட்டுமே எரிக் சொல்ஹெய்ம் உடனான சந்திப்பில் தான் கலந்துகொள்வதாக நோர்வே பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாலசிங்கத்துக்கு வானூர்தி வழங்குவது சிக்கலானது என்ற போதிலும் அரசாங்கம் இதற்கு இணங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த உலங்கு வானூர்தியில் யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களும் பயணிக்கவுள்ளனர்.

அருகம்பேயில் விமானப்படை உலங்கு வானூர்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் உதவி வழங்கும் நாடுகளின் தூதர்கள் கிளிநொச்சிக்கு ஓமந்தை சோதனைச் சாவடி வரை வானூர்தியில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


[b]<i>
தகவல் மூலம்- புதினம் .கொம்</i></b>
"
"
Reply
#10
<b>அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்கான முழுப்பாதுகாப்பையும் ஸ்ரீலங்கா அரசு வழங்கும் </b>


நாளை தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிற்கும் நோர்வே நாட்டின் சிறப்புத் தூதுவர் திரு. எரிக் சோல்ஹெய்மிற்கும் இடையே நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வன்னிக்கு வருகை தரவுள்ள விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கட்டுநாயக்க வானூர்தித் தளத்திலிருந்து வன்னி செல்வதற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசு உறுதியளித்துள்ளது.
இதன்போது மிக பாதுகாப்பாக, அவரை வன்னிக்கு கொண்டு செல்வதற்கும் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அவரின் பாதுகாப்பிற்கு முழுப்பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் இவர் பயணிக்கும் உலங்குவானூர்த்தியில், நோர்வே பிரதிநிதிகளும் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரும் சேர்ந்து பயணிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#11
<b>பாலசிங்கம் தம்பதிகள் இன்று காலை கிளிநொச்சியை வந்தடைவர்</b>
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 07:31 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான முக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டனிலிருந்து புறப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இன்று காலை கிளிநொச்சியை சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


லண்டன் கீத்ரூ விமான நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட அன்டன் பாலசிங்கமும் அவரது பாரியார் அடேல் பாலசிங்கமும் இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவர்.

அங்கிருந்து கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலனுடன் சிறிலங்கா இராணுவத்தின் உலங்குவானூர்தியில் கிளிநொச்சிக்கு செல்வர் என்றும் காலை 9 மணியளவில் இவர்கள் கிளிநொச்சியை சென்றடைவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரவேற்று தலைவர் பிரபாகரனிடம் அழைத்துச் செல்வார் என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.

மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படும் பிரபா-சொல்ஹெய்ம் சந்திப்பு குறித்து அன்டன் பாலசிங்கமும் தலைவர் பிரபாகரனும் இன்றும் நாளையும் மந்திராலோசனை நடத்துவர் என்றும் தெரியவருகிறது

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)