Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
மட்டக்களப்பில் சைக்கிள் குண்டுத் தாக்குதல்.நால்வர் பலி.40 பேர் காயம்..இப்ப சிங்கை வசந்தம் தொலைக்காட்சி செய்தி தகவல்...
படை ட்ரக் மீது தக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிப்பு
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>மட்டு. தாண்டவன்வெளியில் தாக்குதல் - 3 காவல்துறையினர் பலி - 13 காவல்துறையினர் உட்பட 20 படையினர் படுகாயம் </b>
மட்டக்களப்பு மாவட்டம், தாண்டவன்வெளிச் சந்தியில் இன்று மாலை 5.00 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன், 13 காவல்துறையினர் உட்பட 20 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரை இலக்கு வைத்து சைற் சாஜர் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன் 13 காவல்துறையினர், மற்றும் ஏழு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.
னஇதன்போது பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலதிக படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்படுவதுடன், மக்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான படங்கள் விரைவில்...
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>மட்டக்களப்பு நகரில் கிளைமோர்த் தாக்குதல்: பொதுமகன் உட்பட 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி- 25 பேர் காயம்!! </b>
மட்டக்களப்பு நகரில் இன்று வியாழக்கிழமை மாலை இராணுவ வாகனமொன்று கிளைமோர்த் தாக்குதலில் சிக்கியதில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் நான்காவது நபர் அவ்வீதி வழியாக சென்றுகொண்டிருந்த பொதுமகன்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 13 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 7 பேருடன் அவ்வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த ஐந்து பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - திருணோமலை வீதி தாண்டவன்வெளியில் உள்ள தயா ஸ்டோர் அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பிரதேசங்களில் வீதித்தடைகளை ஏற்டுபத்தி வழமையான சோதனை நடவடிக்கைகளுக்கு சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனமே வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதாக இச்சம்பவம் தொடர்பாக கூறப்படுகிறது.
<i><b> தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
சங்கதியில் தாக்குதல் படங்கள்
http://www.sankathi.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>மட்டக்களப்பில் கிளைமோர்த் தாக்குதல்: 3 சிப்பாய்கள் பலி- 2 சிப்பாய்கள் படுகாயம்!!</b>
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 08:41 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி ஊறணியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று சிறிலங்கா இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஊறணி இராணுவ முகாமிற்கு முன்பாக பிரதான வீதியில் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய்ளே இந்த தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டிருந்தன
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>மட்டக்களப்பில் கிளைமோர்த் தாக்குதல் - 3 படையினர் பலி - நால்வர் படுகாயம் </b>
இன்று காலை 7.45 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டம் ஊறணியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், ராசிக் கும்பலின் உறுப்பினர் ஒருவர் உட்பட நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
ஊறணி இராணுவ முகாமிற்கு முன்பாக, மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதியில், வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் மற்றும் ராசிக் கும்பலைச் சேர்ந்த தேசவிரோதிகளை இலக்கு வைத்தே இக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வீதியோர மரமொன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டே, தொலைஇயக்கி(ரிமோட்) மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாக ஸ்ரீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கள் பாதுகாப்புப் படையினரால் தடைசெய்யப்பட்டிருப்பதுடன், மேலதிக படையினர் அங்கு குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"