Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக்கொலை
#1
<span style='color:red'>இ****** அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக் கொலை. அகதியாக இ**** வந்தால் இதுதான் பதில் என்று கூறி தாக்கினர்.

[size=18]இலங்கை அரச வன்முறைகளுக்கு பயந்து இ******அகதியாக தலைமன்னார் ஊடாக சென்ற ஈழத்தமிழன் இ***** அகதி முகாமில் ஆழந்த நித்திரையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இ***** த**நாட்டின் மறக்கனம் என்ற இடத்திற்கு அருகாமையில் இந்த கோரச்சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசின் வன்முறைகளுக்கு பயந்து இ***** ஈழத்தமிழன் தனது மனைவி பிள்ளைகள் சகிதம் அண்மையில் அகதியாக சென்றுள்ளார். 26 வயதுடடைய நித்தியானந்தம் என்ற நேசன் தனது 24 வயது நிரம்பிய மனைவி கவிதா, 2 வயது குழந்தை பானு அல்லது மீராதர்சினியுடன் இ***** அகதியாக சென்றுள்ளார். தனது மனைவி குழந்தையுடன் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிய நேசனை ஒரு தமிழ் குழுவினர் அடித்துக் கொலை செய்துள்ளதுடன் மனைவி கவிதா கணவனை காப்பாற்ற இடைநடுவில் அகப்பட்டதால் படுகாயமடைந்துள்ளார். நேசனை அடித்து கொலை செய்தவர்கள் இ***** ஈழத்தமிழர்கள் அகதியாக வரக்கூடாது என்று கூறி தாக்கியதாக அறியமுடிகிறது. </span>

[size=24]இது தமிழீழ-தமிழக மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அளவிற்கு செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது

மோதலுக்கு காரணம் பழைய குரோதமே

ஆதாரம்: நிதர்சனம் இணையம்
Reply
#2
<b>அகதிகள் முகாமில் வாலிபர் வெட்டி கொலை </b>

<img src='http://dinamalar.com/2006jan20/photos/impn43.jpg' border='0' alt='user posted image'>

காலாப்பட்டு: புதுச்சேரி அருகே இலங்கை அகதிகள் முகாமில் அதிகாலையில் கணவன்மனைவி மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலில் கணவன் படுகொலை செய்யப்பட்டார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இலங்கையை சேர்ந்த 250 குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த முகாமில் இலங்கை மன்னார் மாவட்டம் நானாட்டா பகுதியை சேர்ந்த மகன் நேசன் (26) தனது மனைவி கவிதா(25), மகள் பானு (2) ஆகியயோருடன் வசித்து வந்தார்.


இந்நிலையில் நேற்று அதிகாலை 4 .30 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேசனின் வீட்டு கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்டனர். உடன் நேசனின் மனைவி கவிதா தண்ணீர் குவளையுடன் கதவை திறந்தார். அப்போது வெளியே நின்றிருந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து கவிதாவையும், அவரது கணவர் நேசனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது நேசனின் வீட்டிலிருந்து வெளியே வந்த முகமூடி(மப்ளர்) அணிந்த கொலையாளிகள் கத்தியைக் காட்டி மிரட்டியபடி தப்பி சென்றனர்.

பின்னர் வீட்டினுல் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த நேசன் மற்றும் கவிதாவை பொதுமக்கள் மீட்டு கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேசன் இறந்தார். கவிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., இளங்கோ, மரக்காணம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், அரிக்கிருஷ்ணன், ஏட்டு அலெக்ஸ்சாண்டார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ஏஞ்சல் சம்பவ இடத்தில் இருந்து முதலியார்குப்பம், அனிச்சங்குப்பம் வழியே சுமார் 3 கி.மீ., துõரத்திற்கு ஓடி திரும்பியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவம் நடந்த கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் பொங்கலுக்கு முன்பு நேசனுக்கும்முகாமில் தங்கியுள்ள வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. இருப்பினும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்</span>

http://dinamalar.com/2006jan20/imp43.asp
.
.
Reply
#3
உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி ஊமை...... இதே புரிந்துணர்தல் அனைத்து சகோதரர்களுக்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.....
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)