Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காந்தள்... செம்பகம்... சிறுத்தை...
#1
அரித்ராவை நீங்கள் அறிவீர்கள்!

அரித்ரா
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p2a.jpg' border='0' alt='user posted image'>

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறைச்சாலையில் இருக்கும் முருகன் & நளினி தம்பதியினரின் மகள்தான் மெகரா என்கிற அரித்ரா. தாய் ஆயுள் தண்டனைக் கைதியாகவும் தந்தை மரண தண்டனைக் கைதியாகவும் சிறையில் இருக்க... முருகனின் தாயாருடன் யாழ்ப்பாணத்தில் வளர்கிறாள் அரித்ரா!

92இல் செங்கல்பட்டு சிறையில் பிறந்த அரித்ரா, தாய் & தந்தையை விட்டு இரண்டு வயதில் ஈழத்துக்குப் போனாள். அதன் பின்னர் தங்கள் மகளை முருகனும் நளினியும் பார்க்கவில்லை. நளினியும் முருகனும் தங்கள் மகளைப் பார்க்க அனுமதிக்கும்படி எவ்வளவோ போராடிப் பார்த்தும் விதிகள் அனுமதிக்க வில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆஜராகி, பத்தொன்பது பேருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த வழக் கறிஞர் துரைசாமியின் முயற்சியால் சமீபத்தில் நீதிமன்றம் அரித்ராவைத் தமிழகம் அழைத்து வர அனுமதி வழங்கியது. நீண்ட போராட்டத் துக்குப் பிறகு சிறையில் இருக்கும் தன் அம்மா& அப்பாவைச் சந்தித்தார் அரித்ரா!

நளினி
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p2.jpg' border='0' alt='user posted image'>

இந்த நெகிழ்ச்சியான கதை ஒரு பக்கமிருக்க, இன்னொரு புறம் ஈழம் சிவக்கிறது மறுபடியும்!

முப்பது ஆண்டு களாகத் தொடரும் ஆயுதப் போராட்டத்தில், இப்போது அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை மூண்டால், இதுவே இறுதிப் போராக இருக்கும்!

ஈழத்துக் கடற்கரை யில் கிளிஞ்சல்கள் பொறுக்கி விளையாடும் குழந்தைகளின் கால்களில் மீண்டும் சடலங்கள் இடறும் சூழல் கவிகிறது. நான்காண்டு கால அமைதி முடிவுக்கு வந்து, இப்போது மீண்டும் தமிழர்கள் மீதான வன்முறை தொடங்கியிருக்கிறது. மாணவர்கள், இளம் பெண்கள் ராணுவத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார அமைப்புத் திட்டத்தை பேச்சுவார்த்தை காலத்தில் ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, இப்போது பொய் நாடகம் ஆடுகிறது. ஒற்றையாட்சி முறையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இலங்கை அரசாங்கம் ஆதரவை நாடி வந்தால், மீண்டும் ஒரு முறை இந்தியா ஏமாந்துவிடக் கூடாது. இலங்கை அரசுக்கு ராணுவ உதவி இந்தியா செய்யக் கூடாது. ஈழத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று நம்புகிறோம்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் & பிரான்ஸில் வாழும் ஈழத்துக் கவிஞர் கி.பி. அரவிந்தன்.

<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p3.jpg' border='0' alt='user posted image'>

இலங்கையின் நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வரும் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அரசியல் விமர்சகர், ÔÔஈழத் தமிழர்கள் இடைப்பட்ட இந்த நான்கு வருட யுத்த அமைதி காலத்தில் புலிகளுடன் சேர்ந்து தங்களுக்கென அறிவிக்கப்படாத தாய் தேசமான ஈழத்தைக் கிட்டத்தட்டக் கட்டியெழுப்பி விட்டனர்" என்கிறார்.

<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p4.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழ நடுவப் பணியகம், தமிழீழக் காவல் துறை, தமிழீழ வைப்பகம்(வங்கி), தமிழீழ நீதிமன்றம், தமிழீழச் சுங்கத் துறை, சட்டக் கல்லூரி, கல்வித் துறை என்று துறைவாரியாகப் பிரித்து, சீரான நிர்வாகத்துடன் புலிகளின் ஆட்சி நடக்கிறது. தேசிய மலராக காந்தள் மலரையும், தேசியப் பறவை யாக செண்பகப் பறவையையும், தேசிய விலங்காக சிறுத்தைப் புலியை யும் ஏற்கெனவே அறிவித்த புலிகள், சமீபத்தில் தங்கள் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சட்ட வரைவாக வெளியிட்டு உள்ளனர்.

<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p4a.jpg' border='0' alt='user posted image'>

முல்லைத் தீவு, மட்டக்களப்பு, கிளிநொச்சி என்று ஈழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்தை இயக்குகிறார்கள். விவசாயத்துக்கும் கல்விக்கும் மானியங் களை வழங்கும் அளவு வளர்ந்திருக்கிறார்கள்.

போராளிகள்! முறையான போர்ப் பயிற்சியோடு ஈழம் பற்றிய தத்துவப் படிப்பும் கட்டாயம் படித்தாக வேண்டும். வெறும் ஆயுதப் போராளி களாக மட்டும் இளைஞர்களை வைத்திருக்காமல், அரசியல் விஞ்ஞானத்தையும் புலிகளின் கல்லூரி கற்றுக்கொடுக்கிறது. தமிழீழக் குற்றவியல் சட்டம் இப்போதே நடைமுறையில் இருக்கிறதாம்!

<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p6a.jpg' border='0' alt='user posted image'>

இது தவிர, கஸ்டம்ஸ் துறையையும் ஏற்படுத்தி, ஈழத்திலிருந்து வெளியில் எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் வரிகளை வகுத்து அதை வருவாய்ப் பிரிவின் பொறுப்பில் விட்டிருக்கிறார்கள். யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி இப்படி ஒரு நாடாக தனித்து இயங்கும் வல்லமையைப் பெற்றுவிட்ட புலிகள், சர்வதேச சமூகத்தின் பார்வைக்காகத்தான் பொறுமை காப்பதாகத் தெரிகிறது.

இலங்கை அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தெரியும் சண்டையா, சமாதானமா என்பது! இதில் இந்தியாவின் நிலை தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று இரு தரப்புமே நம்புகின்றன.

<img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/p6.jpg' border='0' alt='user posted image'>

ஈழத்தில் மீண்டும் அமைதி முயற்சியைத் தொடங்கும்விதமாக நார்வேயின் தூதர் எரிக் சோல்ஹேய்ம் மீண்டும் ஈழத்துக்கு வருகிறார். அவர் வந்து திரும்பிய பிறகு, விடுதலைப் புலிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிடு வார்கள் என்கிறார்கள்.

அது சுதந்திரத் தமிழீழப் பிரகடன மாகவும் இருக்கலாம்!


<i>நன்றி: ஆனந்தவிகடன்
டி. அருள் எழிலன்
படம்: கே. ராஜசேகரன்</i>


Reply
#2
இணைப்புக்கு நன்றீ
<b> .. .. !!</b>
Reply
#3
தகவல்களுக்கு நன்றி இளைஞன்

Reply
#4
இணைப்புக்கு நன்றி இளைஞன்.

அரித்திராவிற்கு பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது, அதனால் அவரை இந்தமுறை புகைப்படம் எடுக்க கூட பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எப்படி ஆனந்தவிகடன் அவருடைய புகைப்படத்தை பெற்று கொண்டதோ தெரியவில்லை. சிறையில் உள்ள தாய் தந்தையரை பார்க்க வரும் போது கூட பர்தா போன்ற ஒரு அங்கியால் முகத்தை மூடியபடி வந்ததாக செய்திகளில் படித்தேன், அது உண்மையா என்று தெரியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
நன்றி இணைப்புக்கு 8)
-!
!
Reply
#6
இப் படம் அவர் இப்போதையதை விட இளமையான படம் என நினைக்கின்றேன். மேலும் இப்போதைய விஜயத்தில் இப்படம் எடுக்கப்படவில்லை போல் தெரிகின்றது
[size=14] ' '
Reply
#7
நன்றி இணைப்புக்கு
Reply
#8
அந்த பிள்ளைக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கைக்கு சந்தர்ப்பம் வழங்க ஊடங்கள் மறுபது ஏன்?

அந்தச் சின்னப்பிள்ளையை பொதுவாழ்க்கைக்கு இழுக்குறார்கள் படங்கள் போட்டு?
Reply
#9
அந்த சின்னப் பெண்ணையாவது வாழவிடுங்கன். பிறந்தவுடன் தாய் தந்தையிடன் இருந்து பிரித்தீர்கள். இப்பொழுது அப்பிள்ளையை உங்களின் வியாபாரப் பொருளாக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் செய்வதற்கு நீங்கள் ஒரு பக்க நியாயம் கூறலாம். அப்பிள்ளையின் மீது மக்களிடம் அனுதாபத்தைத் தோற்றுவித்து பெற்றோரின் விடுதலைக்கு ஆதரவளிக்கலாம் என்று. அதனை உங்கள் இதயசுத்தியுடன் செய்ய வேண்டுமெனில் அப்பிள்ளையின் படத்தை வெளியிடாமல் செய்யலாமே. இன்னும் சமூகம் என்றால் என்ன என்று தெரியாது இருக்கும் ஒரு சிறுமியின் படத்தை வெளியிட்டு வெளியே சமூகத்தில் ஒருவித வெறுப்புடன் அச்சிறுமி வாழவேண்டும் என்பதா உங்கள் எதிர்பார்ப்பு. இதில் கனடா நாட்டுச் சட்டத்தை சற்றுக்கடுமையாகவே இருக்கிறது. சிறுவர்கள் ஏதாவது குற்றங்களிற்காக கைது செய்யப்பட்டாலொ, அல்லது ஏதாவது நீதிமன்ற அல்லது சட்டத்துடன் தொடர்புடைய விடங்களில் தொடர்பு பட்டாலோ அவர்களின் விபரம் வெளியிடப்படமாட்டாது.
<b>
...</b>
Reply
#10
இணைப்புக்கு நன்றி
kaRuppi
Reply
#11
தூயவன் குறிப்பிட்டிருந்தது போல இந்த படம் அண்மையில் எடுக்கப்பட்டது போல் தோன்றவில்லை. தவிர இது பத்திரிகையாளர்களால் வெளியே வைத்து எடுக்கப்பட்டது போல இல்லாமல் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட படம் போலவே தோன்றுகின்றது. இது அரித்திராவின் நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து பத்திரிகைகளுக்கு கிடைத்திருக்க கூடும். எதிர்காலத்தில் இவரின் படங்கள் வெளியாவதை அரித்திராவை அறிந்தோர் தவிர்ப்பதுடன் பத்திரிகைகளும் அவற்றை பிரசுரிக்காமல் விடுவதே நல்லது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
ஆமாம் மதன். ஏனென்றால் பிற்காலத்தில் அக் குழந்தையின் பாதுகாப்பிற்கு அது அவசியமானது. ஏற்கனவே அது இலங்கையில் தான் வாழ்கின்றது. இப்படிப்பட்ட நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)