Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் சிங்களக் காடையர் வெறியாட்டம்
#1
திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை சிங்களக் காடையர்கள் மீண்டும் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தமிழர் வீடுகள் தீக்கிரையாகின. இருவரை படுகொலை செய்துள்ளனர்.



திருகோணமலை தெகிவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

திருகோணமலை சிங்களக் குடியேற்றப் பகுதியான தெகிவத்தவில் காலை 8.40 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

தெகிவத்த-கிளிவெட்டி வீதியில் தென்னந்தோப்பு வேலியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபடும் படையினரை இலக்கு வைத்து கிளைமோர் கண்ணிவெடி பொருத்தப்பட்டிருந்தது.

இத்தாக்குதலையடுத்து சிங்களக் காடையர்களும் சிறிலங்கா இராணுவத்தினரும் அப்பகுதியில் தமிழர்கள் மீது மீண்டும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இன்றைய வன்முறை வெறியாட்டத்தில் 15க்கும் மேற்;பட்ட தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் இரண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஒருவரைக் கத்தியால் குத்தியும் மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டதையடுத்து கிளிவெட்டி நோக்கி தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.


www.puthanam.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)