Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அல்-கெய்டாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு உண்டு:
#1
<b>அல்-கெய்டாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு உண்டு: அமெரிக்காவின் நிக்கலஸ் பேர்ன்ஸ்

[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 21:37 ஈழம்] [ச.விமலராஜா]

அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அல்-கெய்டா இயக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நிக்கலஸ் பேர்னஸ் இன்று திங்கட்கிழமை கூறியதாவது:

நாங்கள் இந்த நாட்டின் நண்பர்கள். இந்த நாட்டின் பிராந்திய ஒற்றுமையை ஆதரிக்கிறோம்.

கண்டனத்துக்குரிய ஒரு பயங்கரவாத அமைப்பினால் இந்த நாட்டினது மக்கள் மேலும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு யுத்தச் சூழலில் வாழ வேண்டியது இல்லை.

அரச படையினர் மீதான புலிகளின் தாக்குதலால் அப்பாவி மக்கள் அழிந்து வருகின்றனர். மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தம் உருவாகும் என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த யுத்த காலங்களில் 64 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

ஆழிப்பேரலை மீளமைப்புக்கான நிதி உதவி மற்றும் சிறிலங்கா அரச படையினருக்கு பயிற்சி அளித்தல் தொடர்பிலான திட்டங்கள் இறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

<span style='font-size:25pt;line-height:100%'>அமெரிக்காவினால் அல்-கெய்டா அமைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு.</span>

தமிழ் மக்களின் ஏழ்மை நிலை மற்றும் ஆழிப்பேரலையால் வடக்கு-கிழக்கில் அவர்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் சட்டபூர்வமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதை அமெரிக்கா உணருகிறது.

ஆனால் விடுதலைப் புலிகள் கண்டிப்பாக வன்முறையைக் கைவிட வேண்டும். அமெரிக்காவுடன் அல்-கெய்டா பேச்சு நடத்த ஒரு அடிப்படையும் இல்லை.

அல்-கெய்டா இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். வன்மையாக கண்டனத்துக்குரிய செயற்பாடுகளுக்காக அது பயங்கரவாதத்தைப் பயன்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் உட்கார்ந்து பேசினால்தான் நீண்டகால பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டு, வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்ல முடியும் என்பதை இந்த நாட்டினது அனைத்து நண்பர்களுக்கும் நாம் சொல்கிறோம்.

துப்பாக்கி முனைகளினூடே தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் என்று விரும்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் எதுவித உறவும் ஏற்படாது என்பதோடு உண்மையில் நீண்டகாலத்துக்கு எந்த நாட்டோடும் ஆக்கபூர்வமான உறவும் ஏற்படாது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றார் பேர்ன்ஸ்.

கொழும்பில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மை நிக்கலஸ் பேர்ன்ஸ் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

கொழும்பு வருவதற்கு முன்பாக இந்தியா சென்ற நிக்கலஸ் பேர்ன்ஸ் இந்தியத் தலைநகரம் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்து வருவது குறித்து அமெரிக்கா கவலைப்படுகிறது என்று கூறினார்.

மேலும், சிறிலங்கா அரசாங்கத் தரப்பு மற்றும் நோர்வேத் தரப்பினருடன் இலங்கையில் தாம் பேச்சுகளை நடத்த உள்ளதாகவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் அமைதியையும் காப்பதற்காகவும் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிக்கலஸ் பேர்ன்ஸ் கூறினார்.

நன்றி: புதினம்</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
அமெரிக்கா தூதுவர் சொன்னது சரிதான்.. அல்ஹைதாவுக்கும் அமெரிக்க அரசுக்கும்த்தான் ஒற்றுமை அதிகம், அல்ஹைதாவினர் உலகத்துக்கு வெளிப்படையாக காண்பிச்சு அட்டூழியங்களை செய்கிறார்கள், அமெரிக்கா உலகத்துக்கு தெரியாமல் (என்று நினைத்து) செய்கிறது.

எனக்கு ஒன்று புரியவில்லை, ஈராக்கில், அப்கானிஸ்த்தானில், பலஸ்தீனத்தில் அமெரிக்கா செய்யும் அட்டூழியங்களை உலகு அறியும், ஐ.நா சபையிடம் அனுமதி வாங்காமல் தன் இஸ்ரத்திற்கு ஈராக் மீது போர் தொடுத்தார்கள், இன்று ஒவ்வொரு நாளும் ஈராக்கில் பிணக்குவியல்கள் குவிந்துகொண்டு இருக்கிறது, அதனை விட அமெரிக்க, பிரிட்டீஸ் படைகளின் வதைமுகாங்களில் பலர் துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள், இப்படி இருக்கும்பொழுது எந்த முகத்தோடு அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்ஸ் "உலகில் நடைபெறும் வன்முறைகளை அமெரிக்கா ஏற்றுக்கொளாது" என கூறுவார்? இவரின் அறிக்கையை கேட்கும் மக்கள் கேனையர்கள் என்று நினைக்கிறாரா? அல்லது நாங்கள் சொல்வதைத்தான் இந்த கேனையர்கள் கேட்க வேண்டும் எண்டு நினைக்கிறார்களா? :evil: :evil:

இன்றைய உலகில் ஆயுத பலம், இருந்தால் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும் என அமெரிக்கா வல்லாதிக்கம் பிற நாடுகளுக்கு பறை சாற்றுகிறது. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)