Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
[size=24]சித்தப்பா
[size=18]அன்பின் உருவானவரே!
பாசத்தின் உறைவிடமானவரே!
தந்தைக்கு நிகர் அற்றவரே!
தாய் போன்று எமை வளர்த்தவரே!
தந்தையின் உடன் பிறப்பே!-
தந்தை போன்றே எமை காத்தவரே!
அறியா வயதில்
அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என்
அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால்
தந்தையுடன் வாழ்ந்தாலும்
தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை
அன்னை மடி தேடியதில்லை
அன்னை உருவில் உங்கள் அன்பு
ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என்
சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள்
தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள்
வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள்
தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை
தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாகப் படுத்தினீங்கள்
அன்னை சொல்ல கேட்டிருக்கிறேன் - எனக்காக
நீங்கள் கண் விழித்திருந்த இரவுகள் பற்றி
அயலார் சொல்லக் கேட்டிருக்கேன் - எனக்காக
நீங்கள் அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கைதனை
உண்மையிலே நீங்கள் உயர்ந்தவர்தான்
நீங்கள் மட்டுமா? உங்கள் தியாகங்களும் தான்
சித்தப்பா
>>>>******<<<<
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
இது என் நெடுநாள் ஆசை சித்தப்பா பற்றி எழுதனும் என்பது இங்கு வந்து செந்தில் அண்ணாவின் சித்தப்பா கவியைப் படித்ததும் என்னையும் அறியாமல் கிறுக்கி விட்டேன்.
அத்துடன் இது வெறும் கவியல்ல செந்தில் அண்ணா சொன்னமாதிரி சித்தப்பாவுக்கு அனுப்ப வேண்டிய மடல்.
படித்துவிட்டு பிழைகளை சுட்டிக்காட்டவும்
>>>>******<<<<
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
சந்தியா சித்தப்பா கவிதை நல்லா இருக்கு. உருக்கமான வரிகள் நெஞ்சை தொட்டு செல்கின்றன. வாழ்த்துக்கள் மேலும் கவி படைக்க
<b> .. .. !!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
வழமையாக அம்மாவின் சகோதரங்களுடன்தான் எங்களுக்கு அதிக ஈடுபாடு இருப்பது (மாமா. .சித்தி எண்டு) ஆனா வித்தியாசமாக அப்பாவின் உறவுகளின் பெருமையை கொண்டு வந்த சித்தப்பா என்ற கவி நல்லாக இருக்கிறது .........சந்தியா எனக்கெழுதிய மடலாக எடுத்துக் கொள்ளுகிறேன் நன்றியம்மா......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
சந்தியா சித்தப்பா பற்றி எழுதிய கவிதை நல்லாய் இருக்கு. எனக்கும் மிகவும் பிடித்தவர் சித்தப்பா. எனது சித்தப்பாவுக்காக எழுதியதாக எண்ணிக்கொள்கின்றேன். நன்றி
தொடர்ந்து எழுதுங்கள்.
Posts: 154
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
கவிதை ரொம்ப நல்லாக இருக்கு
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
சந்தியா கவிதை நல்லாயிருக்கு
எனக்கு சித்தப்பா இல்லை ஆனால் மாமாக்கள் இருக்கினம் இதே போல பாசத்துடன் உங்கட கவிதையை பார்த்ததும் தான்
பாசம் கட்டாயம் பகிரப்பட வேண்டியது தான் எண்டு நினைக்கிறன்
. .
.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Niththila Wrote:எனக்கு சித்தப்பா இல்லை ஆனால் மாமாக்கள் இருக்கினம் இதே போல பாசத்துடன் உங்கட கவிதையை பார்த்ததும் தான்
பாசம் கட்டாயம் பகிரப்பட வேண்டியது தான் எண்டு நினைக்கிறன்
சரியப்ப ..........இண்டேலைஇருந்து என்னை அங்கிள் எண்டு கூப்பிடுறதை விட்டுட்டு சித்தப்பா எண்டு கூப்பிடுங்கோ உங்கடை ஏக்கத்தை தீர்த்து வைச்ச புண்ணியமாவது எனக்கு வரட்டும்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
நன்றி கௌசி மற்றும் நித்திலா அக்கா
>>>>******<<<<