Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடத்தல் மன்னர்கள்
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>க(ட)த்தல் மன்னர்கள்</b></span>

<i>(மட்டுறுத்தினர் மன்னித்து விடுங்கள் எங்களுக்கு வேறை வழி தெரியலை)</i>

சாத்திரி : என்ன முகத்தான் 2 கிழமையாக் காணேலை எதாவது சுகமில்லையோ?

முகத்தார் : அட. .சாத்திரியே. .வா. .அதை ஏன் கேக்கிறாய் ஹாத்தாலுகளாலை வெளியிலை இறங்கவே பயமாக்கிடக்கு இனி மனுசியும் கேட்டடிக்கு போகவே கத்திறாள் என்ன செய்யிறது

சாத்திரி : சின்னப்புன்ரை பாடும் வலு சிக்கல் கையிலை காசுமில்லையாம் வீட்டிலைதான் வாவன் . . ஒருக்கா போய் பாத்திட்டு வருவம். . .

<i>(சின்னப்புவை தேடி இருவரும் வருகிறார்கள்)</i>

முகத்தார் : என்ன சின்னப்பு சீனி (டயபிட்டிக்) உச்சத்திலையோ ஆளை காணக் கிடைக்குதில்லை

சின்னப்பு : வாங்கோடாப்பா. .கையிலை 5சதத்துக்கு வழியில்லை நாக்கும் ஒட்டிப் போச்சுது இப்ப உங்களை கண்டது கடவுளைக் கண்ட மாதிரி கிடக்குது

சாத்திரி : இஞ்சை மட்டும் ஏதோ வாழுதாக்கும் எங்களுக்கும் அதே நிலைதான் கண்டியோ.

முகத்தார் : இப்ப காசுக்கு என்னடாப்பா வழி செய்யிறது தொழிலும் முன்னைய மாதிரியில்லை லவ் பண்ணுறதுகளும் கூட இழுத்துக் கொண்டு ஓடறதிலையே குறியா இருக்குதுகள் பிறகு எங்கை தொழிலைச் செய்யிறது

சாத்திரி : இப்பத்தைய நிலையிலை தொழிலை நம்பி வேலையில்லை வேறை எதன் குறுக்குவழியிலை சம்பாதிச்சாதான் சரி. நீங்கள் 2பேரும் ஓம் எண்டு சொல்லுங்கோ நான் நல்ல பிளான் தாறன்

சின்னப்பு : சாத்திரி உள்ளுக்கை போயிருந்து சாப்பிட வழி சொல்லப் போறன் முகத்தான் கவனம்

முகத்தான் : பொறு சின்னப்பு என்னதான் சொல்லுறான் எண்டு பாப்பமே. . .சரி சாத்திரி நாங்கள் 2பேரும் ரெடி உன்ரை பிளானைச் சொல்லு. . .

சாத்திரி : இந்த ஆட்கடத்தல் எண்டு கேள்விப்பட்டிருப்பியள்தானே. . .படங்களிலை வரும் அதுமாதிரி ஒரு பெரிய காயை கடத்திட்டு வந்து காசு கேட்டமெண்டால் சிம்பிளா விசயம் முடிஞ்சிடும் என்ன சொல்லுறீங்கள் . .?

சின்னப்பு : அட. . உடம்பு நோயில்லாத வேலை எனக்கு இவ்வளவு நாளும் தெரியாமப்போச்சுதே. . அது சரி ஆர் அந்த பெரிய காய்?

சாத்திரி : இஞ்சை தொழிலைச் சொன்னனான் வழியைச் சொல்லாமல் விடுவனே யாழ்களம் எண்டு ஒரு இணையமிருக்குது அதிலை நிறைய காசுக்காரர்தான் இருக்கினமாம் ஓரு 3பேரை கடத்திட்டு வந்திட்டமெண்டால் அவரவருக்கு வசதியாப் போயிடும் என்ன சொல்லுறீயள்

முகத்தார் : அப்பிடி போடு சாத்திரி சின்ன ஆட்களாக (நாங்கள் தூக்கிற மாதிரி) பெம்பிளைபிள்ளைகளை தூக்கினமெண்டால் உடம்புக்கு நோ இராது

சின்னப்பு : முகத்தான் ஏற்கனவே முதுகு கொஞ்சம் வளைஞ்சிருக்கு பெட்டைகளை கடத்தி அதை நிமித்த போறாய் போல கிடக்கு நான் வரேலையப்பா உந்த விளையாட்டுக்கு. .

சாத்திரி : பொறு சின்னப்பு . . .சின்ன ஆட்கள் பெம்பிளைப்பிள்ளைகளை கடத்திறது வலு சிக்கல் சும்மா யோசிச்சுப் பார் உறுப்பினரா 2000பேருக்கு மேலை அங்கை இருக்கினம் மாட்டுப்பட்டம் சங்கு ஊதிடுவாங்கள் ஆனபடியாலை. . .

முகத்தார் : அப்ப அதை நடத்திற ஆளையே கடத்திவிடுவம் என்ன?

சின்னப்பு : ஏன்ரைப்பா கூண்டோடை கைலாயம் போகவே பிறகு ஆரிட்டை காசை கேட்டு வாங்குறது. .அதோடை நல்லதுகள் செய்யிற மனுஷரை கடத்த எனக்கு மனமில்லை பேசாம கனபேரின்ரை எதிர்ப்பை சம்பாதித்து கத்தி வைச்சிருக்கிற ஆட்களை கடத்திட்டு நடத்திறவரிட்டை காசைக் கேப்பம்

முகத்தார் :இதுவும் நல்ல ஜடியாதான் சின்னப்புவும் பழைய கறளை தீர்க்கப் பாக்குது

சாத்திரி : ஓக்கே. . .இப்ப 3பேர்தானே எங்களுக்குத் தேவை யார் எண்டு சொல்லுங்கோ பாப்பம்

சின்னப்பு : பக்திமான். . . வலையில் ஒருவன். . . என்ரை கூட்டாளி 10.

சாத்திரி : சூப்பர் செலக்ஷன். . .லீவு நாட்களிலை சனம் குறைவா இருக்கிறதாலை அண்டைக்கே கேமைக் குடுப்பம் இப்ப யார் யாரைக் கடத்திறது எண்டு முடிவு செய்வம் முகத்தார் நீ முதலிலை செலக்ட் பண்ணு. .

முகத்தார் : நான் பக்திமானை கடத்திறன் பிச்சைக்காரன் மாதிரி வேஷம் போட்டுட்டு போய் கோயில் வாசலிலை நிண்டு அமத்திறன். .

சின்னப்பு : இதுக்கேன் பிச்சைக்காரன் மாதிரி வேஷம் போடவேணும் இப்பிடியே போய் நிண்டியெண்டால் காணுமே. .

சாத்திரி : சின்னப்பு கதையை விடு . . நீ சொல்லு பாப்பம் யார் எண்டு

சின்னப்பு : எனக்கு 10 ஒத்து வராது வழியிலையே ரத்தகளமாயிடும் ஆனபடியாலை சாத்திரி நீ அவரைப் பார் நான் வலையாலை ஒருதருக்கு கேமைக் குடுக்கிறன் முந்தி ஈரச்சாக்குப் போட்டு எத்தனை கோழி பிடிச்சிருப்பன் இது சிம்பிள்

முகத்தார் : அப்ப எல்லாம் சரி ஆனா மறக்காம எல்லாரும் துண்டு கொண்டு வரனும்

சின்னப்பு : சாத்திரி உவன் முகத்தான் ரொம்ப ஓவர். . .நான் ஜட்டி போட்டு எவ்வளவு காலமாகுது என்னை துண்டு கொண்டு வரச் சொல்லுறான்

முகத்தார் : அட. . நாசமாப்போன சின்னப்பு துண்டு அதுக்கில்லை முகத்தை மறைச்சுக் கட்டுறதுக்கு . .ஆளை அடையாளம் கண்டாங்கள் எண்டா பிறகு தெரியும்தானே

சாத்திரி : ஓக்கே. . .ஓக்கே. . .சண்டை வேண்டாம் எங்கடை பிளான்படி ஞாயிற்றுக் கிழமை பின்னேரம் தனி தனி ஆட்களை கடத்திட்டு என்ரை வீட்டுக்கு பின்னாலை இருக்கிற பாழடைஞ்ச வீட்டுக்கு வந்திடுங்கோ முக்கியம் அறைக்கை வைச்சு புட்டினபிறகுதான் சாக்கை அவிழ்த்து விட வேணும்

சின்னப்பு :ஆ. . ஒரு திருத்தம் சாத்திரி நீ பிடிக்கிற 10னிரை சாக்கை மட்டும் அவுக்காதை காசு கையிலை கிடைச்சாப்பிறகுதான் அதை அவுக்கவேணும் சரியோ ..

<i>(ஞாயிற்றுக் கிழமை பின்னேரம் சாத்திரி பாழடைஞ்ச வீட்டிலை டென்ஷனாக நடந்து திரிகிறார்)</i>

சாத்திரி : (மனசுக்குள் சா. . என்ன ஆட்களடா இவங்கள் சொன்ன நேரத்துக்கு ஒண்டும் செய்ய மாட்டாங்கள் )

<i>(படலையை திறந்து கொண்டு முகத்தார் வெறும் கையுடன் வாடின முகத்துடன் வாறது தெரியுது )</i>

சாத்திரி : முகத்தான் என்ன நடந்தது பிளான் வேக்கவுட் ஆகேலையோ இப்பிடி சோகமா வாறாய் என்னைப் பார் 5 நிமிஷத்திலை வேலையை முடிச்சிட்டன் சாக்குக்கை துடிச்சுக் கொண்டு கிடக்கிறார்

முகத்தார் : என்ரை விசயமும் சரிதான் கடைசிநேரத்திலை மிஸ் ஆகியிட்டுது

சாத்திரி : ஏனடாப்பா ஆட்கள் யாராவது குறுக்கை வந்திட்டாங்களோ. . ?

முகத்தார் : இல்லையடா பக்திமான் இண்டைக்கு முருகன் கோவிலுக்குத்தான் வருவர் எண்டு அறிஞ்சு அங்கை போனன் மடியிலை கந்தசஷ்டிகவச கசட்டை வைச்சுப் போட்டுக் கொண்டு வாயை அசைச்சு பாடிக்கிட்டு வாசலிலை நிண்டன் மனுசன் எனக்கு முன்னாலை வந்து கண்ணை மூடிக் கொண்டு நிண்டார் டக்கெண்டு நீ தந்த திருநிறை எடுத்து அடிச்சு விட்டன் நான் நடக்க சும்மா சாவி குடுத்த பொம்மை மாதிரி ஆள் பின்னாலையே வந்து கொண்டிருந்தார் மறைவான இடத்திலை கொண்டு போய் சாக்கை போடுவம் எண்டு இருந்தன்

சாத்திரி : பிறகென்ன ஆளைத் தனிய எங்கையன் ஒழிச்சு வைச்சிருக்கிறீயோ?

முகத்தார் : அட . நீவேறை. . வாறவழியிலை அம்மன்கோயில் ஒண்டு இருந்திச்சு எனக்குத் தெரியுமே இந்த மனுஷன் அம்மன்பக்தன் எண்டு அங்கை ஸ்பீக்கரிலை மாரியம்மான்ரை பாட்டை வேறை போட்டிருந்தாங்கள் கொஞ்சத்தூரம் வந்திட்டு திரும்பிப் பாக்கிறன் ஆளை காணேலை கோயிலடியிலை 10 பெம்பிளைகள் சுத்தி நிண்டு கும்மியடிக்க நடுவிலை நிக்கிறார் ஆள் இதுக்கை எங்கை போய் நான் கூட்டியாறது பேசாம வந்திட்டன்

சாத்திரி : சா. . யஸ் மிஸ்ஸாகிட்டுதே. . அது சரி சின்னப்பு எங்கை இன்னும் காணேலை

முகத்தார் : பயப்பிடாதை ஆள் வரும் நாங்கள் இப்ப நீ கொண்டு வந்த ஆளுக்காண்டி நிர்வாகத்தோடை டெலிபோனிலை பேசிவம் அவற்ரை கத்திக்கு தனி மதிப்பிருக்கிறதாலை அதுக்கு பிறிம்பா விலையைப் பேசு என்ன. . .

<i>(சாத்திரி கைத் தொலைபேசியை எடுத்து கள நிர்வாகத்துக்கு டயல் செய்கிறார்)</i>

சாத்திரி : ஹலோ அந்த பக்கத்திலை யார் பேசுறது?

மறுமுனை: வோய். . .என்ன நக்கலா . .டெலிபோன் எடுத்தது நீர் எங்களை கேக்கிறீர்

சாத்திரி : சரி தம்பி நாங்கள் கடத்தல்காரர் பேசுறம் உங்கடை நிர்வாகத்திலை இருந்த ஒரு ஆளை கடத்தி வைச்சிருக்கிறம்

மறுமுனை: அதுக்கிப்ப எங்களை என்ன செய்ய சொல்லுறீர் . . ?

சாத்திரி : என்னங்க இப்பிடிச் சொல்லுறீங்க எதாவது பேரம் பேசி காசை தந்திட்டு ஆளை கூட்டிட்டு போங்க. .

மறுமுனை: நாங்க ஏன் காசு தரனும் நாங்களா அவரை கடத்தச் சொன்னம் வேணுமெண்டால் அவரிட்டையே எதாவது கேட்டு வாங்குங்கோ. .

சாத்திரி : (முகத்தாரிடம் என்னடாப்பா கண்டுக்கிறாங்களேயில்லை கொஞ்சம் பயப்பிடுத்தி கேட்டாத்தான் சரி. .
ஹலோ. . .வடிவாக் கேளும் நாங்க பயங்கர கடத்தல்காரங்கள் இன்னும் 24மணித்தியாலத்திலை 10லட்சம் ரூபா எங்கடை கைக்கு வந்தாகனும் இல்லாட்டிக்கு உங்கடை ஆளின்ரை பிணம்தான் உங்களுக்கு கிடைக்கும்

மறுமுனை: வோய் பேமானி இன்னும் 12 மணித்தியாலத்திலை எங்கடைஆளை பிடிச்ச இடத்திலை கொண்டு வந்து விடலை. .நாங்கள் வரமாட்டம் நாய்வரும் ஜாக்கிரதை வையா போனை. .

சாத்திரி : என்னடா இது எங்களை விட பெரிய கடத்தல்காரங்கள் போல கதைக்கிறாங்கள் இப்ப என்ன பண்ணுறது. .

முகத்தார் : பொறு சாத்திரி யாழ்களத்திலை போய் நியுசைப் போட்டுட்டு தாறுமாறா கொஞ்சம் எழுதிப்போட்டு வாறன் அதுக்குப் பிறகாவது நிர்வாகம் எதாவது நடவடிக்கை எடுக்குதோ பாப்பம்

<i>(முகத்தார் போய் சிறுது நேரத்தில் ஓட்டமும் நடையுமாக வாறார்)</i>
சாத்திரி : என்ன முகத்தான் வேர்க்க விறுவிறுக்க வாறாய் என்ன பிரச்சனை?

முகத்தார்: நாங்க மோசம் போயிட்டம் சாத்திரி. . .களத்திலை 10 முழகிப்போட்டு சிலிப்பிக் கொண்டு நிக்குது நான் எழுதினதுகள் வெட்டி எறியேக்கைதான் எனக்கு விளங்கிச்சுது. தப்பினன் பிழைச்சன் எண்டு ஓடி வந்திட்டன்

சாத்திரி : என்ன இது கதை நான் இஞ்சை சாக்குக்கை பிடிச்சு வைச்சிருக்கிறன் வா. . முகத்தான் சாக்கை அவித்து உனக்கு காட்டுறன்

<i>(சாத்திரி சாக்கை அவிழிக்கிறார் உள்ளையிருந்து வேர்வையால் குளிச்ச ஒரு உருவம்
அனுங்கினபடி எழும்புது)</i>

முகத்தார் : என்ரை கடவுளே . .இஞ்சை பாரடா . .யார் எண்டு. . .சின்னப்பு. . . . .

சாத்திரி : எப்ப சின்னப்பு சாக்குக்கை ஏறி இருந்தனி . . ?

சின்னப்பு : கேப்பாயடா. . கேப்பாய். . கத்திறதுக்கு கூட வாயை திறக்க விட்டியே. .அப்பிடியே சாக்கைப் போட்டு அமத்தியிட்டியே. . .

முகத்தார் : என்னன்டு ஆள் மாறிப்போணது எண்டுதான் எனக்கு விளங்கேலை . . ?

சின்னப்பு : அது வேறை ஒண்டுமில்லையடா. . வலையை கடத்த நான் போகேக்கை பத்தின்ரை அறைக் கதவு திறந்திருச்சு. .எட்டிப் பாத்தன் ஒருத்தரையும் காணேலை மேசேலை கத்தி வேறை இருந்திச்சா அந்த கதிரேலை இருந்து பாக்க ஒரு ஆசை வந்திச்சு அப்பிடியே கதிரேலை இருந்து கத்தியை கையிலை எடுத்ததுதான் தெரியும் குறுக்கால போண சாத்திரி பின்னாலை இருந்து சாக்கை கவிழ்த்திட்டான் என்ன சாக்கடாப்பா நாத்தம் தாங்க முடியலை. . .

முகத்தார் : சாத்திரின்ரை பிளானைக் கேட்டு. . நல்ல காலம் கடவுள் காப்பாத்தினது.

சின்னப்பு : உண்மைதான்டா. .கொஞ்ச நேரம் பிந்தி வந்திருந்தீங்க இண்டைக்கு சின்னப்புக்கு பால்தான் ஊத்தியிருக்கவேணும் . .

சாத்திரி : சா. . .நல்ல சான்ஸ். . மிஸ்ஸாகிட்டுதே. . .பரவாயில்லை நெக்ஸ் டைம்

சின்னப்பு : முகத்தான் எடடா. . அந்த கல்லை நெக்ஸ் டைமாம் மனுசனை பாடேலை ஏத்திறத்துக்கு. . . .

(சாத்திரி பாஞ்சு விழுத்து ஓடுகிறார்)

<b>(யாவும் கற்பனை யாராவது மட்டுறுத்தினர் கடத்துப்பட்டா நாங்கள் பொறுப்பில்லை என இப்பவே சொல்லிடறம்)</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
முகத்தார் கற்பனையென்றாலும் கலக்கல் கற்பனைதான். அதுசரி சாத்திரியையும் இப்ப கனநாளாக காணவில்லை. நிஜமாகவே யாரும் கடத்திட்டார்களோ?? :roll: :roll: :?:
<i><b> </b>


</i>
Reply
#3
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#4
கடத்தல் மன்னரவையிட கதையைக்கேட்டு சிரிப்புத்தான். உண்மையாவே கடத்த ஐடியாக்கொடுக்கிற மாதிரிக்கிடக்கு.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
முகம்ஸ்...வாழ்த்துக்கள்..அருமையாக உள்ளது..சிரிப்பு தாங்க முடியலை.
[b][size=15]
..


Reply
#6
சுப்பர் நல்ல இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்த முறை நானும் வாறன் றெக்கி பாத்து சொல்ல
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#7
ஆ நானும் ஏதோ சூப்பர் ஐடியா கடத்துறத்துக்கு தருவீங்கள் என்று பார்த்தால் கடசில இப்படி முடிஞ்சுதே. நல்லாருக்கு அங்கிள் சிரிப்பு தாங்க முடியலை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#8
முகத்தாரும் சாத்திரியும் கையிலை கிடைத்தால் மக்களே பால்தான் வலையை கொண்டுபோகலாம் 10 லையும் பகத்திமானிலையும் கையா வைக்கிறயள் வைச்சயை வெட்டிப்போடுவம். அப்பு டண் உந்த புலநாயை அவிடுட்ட விடப்பு சாத்திரியையும் முகத்தாரையும் ஒரு வழிபண்ணட்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எப்பிடி இப்பிடி எல்லாம் எழுதுகிறீர்கள்?
எழுத்தாற்றல் எல்லாருக்கும் வராது- உங்களுக்கு அருவி போல கொட்டுகிறது- அருமை! 8)
-!
!
Reply
#10
மூன்று அப்புமார்களின் லொள்ளுத் தாங்கமுடியவில்லை
[size=14] ' '
Reply
#11
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

முகத்தார் கடத்தவெளிக்கிடாட்டாலும்... எப்பிடிக் கடத்தப் போகக்கூடாது எண்டு நல்லா அனுபவிச்சு சொல்லி இருக்கிறீங்க.... அதோட சாத்திரியையும் சின்னாவையும் கூட்டிக்கொண்டு போகக்கூடாது எண்ற அறிவுரை போலையும் இருக்கு....
::
Reply
#12
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#13
நல்லா இருக்கு முகத்தார்...தொடர்ந்து இப்படியும் படையுங்கோ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif' border='0' alt='user posted image'><img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif' border='0' alt='user posted image'><img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
கடவுள் தான் கடத்தல்கார மன்னர்களிடம் இருந்து காப்பாற்றினார் என்று மதனின் பக்தி இன்னும் கூடப்போகுது.
அங்கிள் நல்லாயிருக்கு.. சிரிக்க வைக்க என்றே நீங்கள் பிறந்து இருக்கின்றீர்கள்.

Reply
#16
முகத்தார் நல்ல நகைச்சுவை உணர்வுடன் சுப்பரா எழுதி இருக்கீங்க. சிரிப்பு தாங்க முடியலை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)