10-02-2003, 11:26 PM
Alai Wrote:கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலேகூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்.......
நான் வளர்க்கும் பூச்செடியில் முட்கள் மட்டும் பூப்பதென்ன
பாவமா சாபமா காலத்தின் கோலமா..?
கால் நடக்கும் பாதையெல்லாம் கற்கள் குத்தி வலிப்பதென்ன
யாரிதன் காரணம் தெய்வந்தான் கூறணும்
வைரக்கல்லை நான் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் உலகமே
உப்புக்கல்லை எனக்களித்து ஒப்புக் கொள்ளச் சொல்லுமே...
நெய்யை விட்டுத் தீபமேற்றினால்...!
கையைச் சுட்டு நன்றி காட்டுதே..!
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்...
தெய்வத்துக்கு ஆறுமுகம்.. மானுடத்தில் நூறுமுகம்..
மெய்யெது பொய்யெது யாரதைக்கண்டது..
பாலும் இங்கு வெள்ளைநிறம்.. கள்ளும் இங்கு வெள்ளைநிறம்..
பாலெது கள்ளெது பேதம் யார் கண்டது..
நேசம்வைத்த யாருக்குமே.. நெஞ்சமெல்லாம் காயம்தான்..
பாசம்வைத்த கண்களிலே.. பார்ப்பதெல்லாம் மாயம்தான்..
ஏறிச்சென்ற கால்கள் உதைக்குது..
ஏற்றிவிட்ட ஏணி சிரிக்குது..
கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனிதஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர் மிருகஜாதிதான்...
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

