Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுவர்கள் சேர்ப்புக்கள், உள்முரண்பாடுகள், உட்படுகொலைகள்
#21
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->

தமிழீழ அரசுக்கு எதிராக சதி செய்ததற்காக சதிக்குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி ஒருவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கண்ட இடத்தில் கைது அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டு அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

கட்டாயப்படுத்தப்பட்டு துரோகிகளாக்கப்பட்டவர்கள் தாம் செய்வதன் பாதிப்புகளை சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போராளிகளாக மாறுவார்கள், மாறியிருக்கிறார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஈழ நாதம் பத்திரிகை வித்துகொண்டு இருந்தபொழுது கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளரை கொண்டதற்கு சிறிலாங்க அரசாங்கம் என்ன செய்தது,, குமார் பொன்னம்பலத்தை கொண்டவருக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனைகுடுத்ததா?? அல்லது பிந்துனுவல படுகொலை செய்யப்பட்ட 28 தமிழ் இளைஞர்களை கோரமாக கொலைசெய்த காட்டுமிராண்டிகளை நீதிமன்றம் தண்டிச்சதா? யூட் உங்கட அகராதியிலும் ஏனைய மாற்றுகருத்துக்கொண்டவர்களின் அகரதியிலும் "தமிழினனை வேற்று இனத்தவன் கொண்டால் அது தப்பில்லையா"

அப்ப இலங்கை அரசாங்கம் அப்படி செய்யும்பொழுது இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து செயபடுவர்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லுறீங்களா?? :evil: :evil:
[b]

,,,,.
#22
Jude Wrote:[quote=veenanavan]
jude ±ÁìÌ ¾É¢ ¿¡Î ¸¢¨¼ìÌõ «§À¡Ð «¨ÉòÐ ¦¸¡¨ÄìÌõ Å¢ºÃ¨É ¦ºö¨Â ÀÎõ «Ð Ũà ¾Â× ¦ºöÐ ¦À¡ÚÐ ¦¸¡ûÇ×õ «øÄÐ «¼ì¸¢ Å¡º¢ì¸×õ :twisted: :evil: :twisted:

<b>அடக்கி வாசிப்பது, தமிழீழ சட்டம், நீதித்துறை இருந்தும், கொலைகள் ஓயாத நாட்டில் உயிர்வாழ்வதற்கான தேவைகளில் ஒன்றாக இருக்கலாம்.</b>

இந்திய ராணுவம் இலங்கை இராணுவமும் மனித உயிர்களிற்கு மதிப்பளிச்சவை அப்போ புலிகளும் தமிழீழ சட்டமும் தான் திருத்தப்பட வேணும் எண்டுறீயள். அது சரி உது எந்த ஊர்ச்சட்டம்?
::
#23
selvanNL Wrote:அதை உங்களால் நிருபிக்க முடியுமா?? ஈழ நாதம் பத்திரிகை வித்துகொண்டு இருந்தபொழுது கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளரை கொண்டதற்கு சிறிலாங்க அரசாங்கம் என்ன செய்தது,, குமார் பொன்னம்பலத்தை கொண்டவருக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனைகுடுத்ததா?? அல்லது பிந்துனுவல படுகொலை செய்யப்பட்ட 28 தமிழ் இளைஞர்களை கோரமாக கொலைசெய்த காட்டுமிராண்டிகளை நீதிமன்றம் தண்டிச்சதா? யூட் உங்கட அகராதியிலும் ஏனைய மாற்றுகருத்துக்கொண்டவர்களின் அகரதியிலும் "தமிழினனை வேற்று இனத்தவன் கொண்டால் அது தப்பில்லையா"

அப்ப இலங்கை அரசாங்கம் அப்படி செய்யும்பொழுது இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து செயபடுவர்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லுறீங்களா?? :evil: :evil:

இதற்கு நானும் பதிலை எதிர் பாக்கின்றேன் ஜூட்
::
#24
selvanNL Wrote:யூட் இந்த யாழ்களத்திலிருந்து ஒன்றை விளங்கிகொள்ளுங்கள் இங்கே வருகிறவர்கள் ஒவ்வொருவரும் புனைப்பெயர்களில் வருகிறார்கள்.. அவர்களால் பொய்யாகவோ அன்றி தேவையற்ற விதத்தில் கருத்துக்களை முன்வைக்க முடியும்.. ஆனால் களத்தில் ஒரு சிலர் சூரியகுமார், நீர், போன்றவர்கள் வைக்கும் கருத்துக்கு எவரின் அதரவுமில்லை மாறாக அதற்க்கு விளக்கம் சொல்லி தங்களது எதிர்புகளை காண்பிக்கிறார்கள்.. கிட்டத்தட்ட 99%வீகிதத்தினர் தமிழீழத்துக்கு அதரவாக தங்களின் இனத்துக்கு அதரவாக கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.. இவர்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு அதரவாக ஏன் கதைக்கமுடியாது?? அவர்களுக்கு என்னபயமா?? அவர்களும் தாயகத்திலிருந்து புலத்துக்கு வந்தவர்கள் தான்.. :!:

நான் என்ன தேர்தலில் நிற்கிறேனா ஆதரவு கேட்பதற்கு?
நான் எழுதுவதெல்லாம் இங்கே சிலர் எழுதும் நேர்மையற்ற கருத்துக்களை எடுத்து காட்டுவதற்கு தான். முதலில் ஒருவர் எழுதினார், நிக்ஸன் லட்சக்கணக்கில் தினமுரசு விற்ற பணத்தை கொள்ளையடித்ததால் ஈ.பி.டி.பி சுட்டு கொன்றது என்று. அது நம்பும்படியாக இல்லை என்று நான் எடுத்து காட்டியதும் ஒருவரும் அதற்கு ஆதரவாக எழுதவில்லை.

அடுத்த விடயம் தமிழீழ சட்டம், நீதித்துறை பற்றியது. நீதித்துறை என்ற ஒன்றும், தமிழீழ சட்டமும் இருக்கும் போது யாரையும் யாரும் அடையாளம் காட்டாமல் கொல்லலாமா? இப்படி கொல்லலாம் என்றால் ஏன் நீதி நிருவாகம்? ஏன் சட்டங்கள்? துரோகிகள், தேசத்துரோகம் பற்றி தமிழீழ சட்டக்கோவையில் சட்டங்கள் இருக்கின்றன. தமிழீழ மேன்நீதிமன்றங்கள் இவற்றை சிறப்பாக ஆராய இருக்கின்றன. இன்னமும் ஏன் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள்? இப்படி நடக்குமானால் இது சட்டத்துறைக்கு அவமானம் அல்லவா?

மூன்றாவது அம்சம், சிறுவயதில் கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு துரோகியாக்கப்பட்டவர்களுக்கு விடுதலை, வீதியில் சூடு, என்றால் அவன் ஏன் தனது துரோக வேலையை கைவிடப்போகிறான்? இன்னமும் எத்தனை பேர் இப்படி சுடப்பட போகிறார்கள்? பிறகு அதற்கு வஞ்சம் தீர்க்க இன்னமும் எத்தனை சகோதரர்கள், பிள்ளைகள், கணவன், மனைவியர் எதிரியிடம் மண்டியிடப் போகிறார்கள்? தமிழீழ நீதித்துறை இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது?
#25
selvanNL Wrote:அதை உங்களால் நிருபிக்க முடியுமா?? ஈழ நாதம் பத்திரிகை வித்துகொண்டு இருந்தபொழுது கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளரை கொண்டதற்கு சிறிலாங்க அரசாங்கம் என்ன செய்தது,, குமார் பொன்னம்பலத்தை கொண்டவருக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனைகுடுத்ததா?? அல்லது பிந்துனுவல படுகொலை செய்யப்பட்ட 28 தமிழ் இளைஞர்களை கோரமாக கொலைசெய்த காட்டுமிராண்டிகளை நீதிமன்றம் தண்டிச்சதா? யூட் உங்கட அகராதியிலும் ஏனைய மாற்றுகருத்துக்கொண்டவர்களின் அகரதியிலும் "தமிழினனை வேற்று இனத்தவன் கொண்டால் அது தப்பில்லையா"

அப்ப இலங்கை அரசாங்கம் அப்படி செய்யும்பொழுது இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து செயபடுவர்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லுறீங்களா?? :evil: :evil:



தமிழீழம் இலங்கை போன்ற ஒரு நாடாகத்தான் இருக்க வேண்டும் என்றால், எதற்கு தமிழீழம்? ஐ.நா.வும் மற்ற நாடகளும் சொல்வது போல நாம் இலங்கையிலேயே வாழ்ந்து விடலாமே?

நான் அறிந்த தமிழீழ பொலிஸ் கறைகள் அற்றது. சித்திரவதை செய்யாது. ஊழல் கனவிலும் இடம்பெற முடியாத ஒன்று.

நான் அறிந்த தமிழீழ நீதிமன்றுகள் வேகமாக வழக்குகளை தீர்ப்பன. தீர்ப்புகள் நியாயம் தவறாதவை.

இவற்றை இலங்கையுடன் ஒப்பிட்டு தமிழீழம் இலங்கையை போல கொலைகள் மலிந்து இருப்பதில் என்ன பிழை என்று கேட்க உங்களுக்கே வெட்கமாக இல்லையா? ஏன் இப்படி தமிழீழத்தின் மானத்தை வாங்குகிறீர்கள்?

எனது கேள்வி எல்லாம் தமிழீழ நீதித்துறை நிக்ஸனின் கொலை போன்ற சம்பவங்களையும் சட்டத்திற்குட்பட்டு இடம்பெற பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். தமிழீழ சட்டத்தில் தேசத்துரோகம் பற்றிய பகுதியும் மேன்நீதிமன்றுக்கான இதுபற்றிய சிறப்புரிமைகளும் இருக்கின்றன. தமிழீழம் சட்டம் ஆளும் நாடாக இருக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழப்பகுதியான யாழ்ப்பாணம் தமிழீழ சட்டத்திற்குட்பட்ட பகுதி. தமிழீழம் இலங்கை போல கொலைகள் நிறைந்திருப்பதில் என்ன தவறு என்று கேட்டு தமிழீழத்தை அவமதிக்காதீர்கள்.
#26
Thala Wrote:
Jude Wrote:[quote=veenanavan]
«¼ì¸¢ Å¡º¢ì¸×õ :twisted: :evil: :twisted:

<b>அடக்கி வாசிப்பது, தமிழீழ சட்டம், நீதித்துறை இருந்தும், கொலைகள் ஓயாத நாட்டில் உயிர்வாழ்வதற்கான தேவைகளில் ஒன்றாக இருக்கலாம்.</b>

இந்திய ராணுவம் இலங்கை இராணுவமும் மனித உயிர்களிற்கு மதிப்பளிச்சவை அப்போ புலிகளும் தமிழீழ சட்டமும் தான் திருத்தப்பட வேணும் எண்டுறீயள். அது சரி உது எந்த ஊர்ச்சட்டம்?

ஐயா, நான் சொன்ன பேச்சுரிமை நான் வாழும் அமெரிக்காவில் எனக்குள்ள பேச்சுரிமை. கொலைகளும், ஊழலும் மலிந்து, வாய் திறந்தால் குண்டர்படை கொல்லும் இந்தியாவும், இலங்கையும் போல தமிழீழம் இருப்பதில் என்ன பிழை என்று நீங்கள் கேட்கிறீர்கள். தவறு ஒன்றும் இல்லை, ஆனால் அப்படி ஒரு தமிழீழம் எதற்கு? இலங்கையும், இந்தியவும் கொன்று தள்ளுவது காணாதா? இன்னும் ஒரு தமிழீழமும் சேர்ந்தா தமிழரை சட்டத்திற்கு புறம்பாக கொல்ல வேண்டும்?
#27
Jude Wrote:எனது கேள்வி எல்லாம் தமிழீழ நீதித்துறை நிக்ஸனின் கொலை போன்ற சம்பவங்களையும் சட்டத்திற்குட்பட்டு இடம்பெற பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். தமிழீழ சட்டத்தில் தேசத்துரோகம் பற்றிய பகுதியும் மேன்நீதிமன்றுக்கான இதுபற்றிய சிறப்புரிமைகளும் இருக்கின்றன. தமிழீழம் சட்டம் ஆளும் நாடாக இருக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழப்பகுதியான யாழ்ப்பாணம் தமிழீழ சட்டத்திற்குட்பட்ட பகுதி. தமிழீழம் இலங்கை போல கொலைகள் நிறைந்திருப்பதில் என்ன தவறு என்று கேட்டு தமிழீழத்தை அவமதிக்காதீர்கள்.

ஒரு(எல்லா நாட்டிலும்) நாட்டில் சிவில், இராணுவம் எண்று இரண்டு சட்டங்கள் இருப்பது உங்களுக்கேன் தெரியாமல் போனது ஏன்?, அப்படியானால் முத்தலீப்பும் தமிழீழப் பகுதிக்கு வரும் போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பீர்கள் போல் இருக்கு. நிக்சனுக்கும்,முத்தலீப்புக்கும் ஒரே வித்தியாசம் தான் அவன் செய்வீப்பவன் மற்றயவன் செய்பவன். எல்லாரும் ஒரே குட்டை தான் தமிழர்கள் தான்..
::
#28
Thala Wrote:ஒரு(எல்லா நாட்டிலும்) நாட்டில் சிவில், இராணுவம் எண்று இரண்டு சட்டங்கள் இருப்பது உங்களுக்கேன் தெரியாமல் போனது ஏன்?,..

இராணுவசட்டம் இராணுவ வீரர்களின் ஒழுங்கீனம் போன்ற விடயங்களை கையாளுவது. இராணுவ சீருடையில் இல்லாத கொலைகள் நாட்டின் பொது சட்டத்தால் கையாளப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான யாழ்ப்பாணத்தில் தேசத்துரோகிகளை கையாளுவது பற்றி தமிழீழ மேன்நீதிமன்று தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். தேசத்துரோகம் பற்றி தமிழீழு சட்டத்ததில் பிரிவுகள் இருக்கின்றன. இவை இராணுவ சட்டத்தில் இருப்பதாக கூறி தமிழீழ மக்களுக்கான சட்டத்தில் இருந்து தவிர்க்கப்படவில்லை. சட்டம் கூறுவதை நீதிமன்றும் நீதித்துறையும் நிறைவுபடுத்த தவறினால் சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் மதிப்பிருக்காது. சட்டம் ஆளாத நாட்டை மற்ற சட்டம் ஆளும் நாடுகளும் ஐ.நா.வும் மதிக்கமாட்டா.
Thala Wrote:அப்படியானால் முத்தலீப்பும் தமிழீழப் பகுதிக்கு வரும் போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பீர்கள் போல் இருக்கு. நிக்சனுக்கும்,முத்தலீப்புக்கும் ஒரே வித்தியாசம் தான் அவன் செய்வீப்பவன் மற்றயவன் செய்பவன். எல்லாரும் ஒரே குட்டை தான் தமிழர்கள் தான்..


முத்தலீப்பின் கொலை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்றது. இது சம்பந்தமாக கொழும்பில் சட்டப்படி கைதுகள் செய்யப்பட்டு விசராணைகள் நடக்கின்றன. சிறிலங்காவின் சாதாரண சட்டப்படி (இராணுவ சட்டப்படியல்ல) விசாரணைகள் நடக்கின்றன.
#29
ஜூட் Wrote:Thala எழுதியது:

ஒரு(எல்லா நாட்டிலும்) நாட்டில் சிவில், இராணுவம் எண்று இரண்டு சட்டங்கள் இருப்பது உங்களுக்கேன் தெரியாமல் போனது ஏன்?,..


இராணுவசட்டம் இராணுவ வீரர்களின் ஒழுங்கீனம் போன்ற விடயங்களை கையாளுவது. இராணுவ சீருடையில் இல்லாத கொலைகள் நாட்டின் பொது சட்டத்தால் கையாளப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான யாழ்ப்பாணத்தில் தேசத்துரோகிகளை கையாளுவது பற்றி தமிழீழ மேன்நீதிமன்று தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். தேசத்துரோகம் பற்றி தமிழீழு சட்டத்ததில் பிரிவுகள் இருக்கின்றன. இவை இராணுவ சட்டத்தில் இருப்பதாக கூறி தமிழீழ மக்களுக்கான சட்டத்தில் இருந்து தவிர்க்கப்படவில்லை. சட்டம் கூறுவதை நீதிமன்றும் நீதித்துறையும் நிறைவுபடுத்த தவறினால் சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் மதிப்பிருக்காது. சட்டம் ஆளாத நாட்டை மற்ற சட்டம் ஆளும் நாடுகளும் ஐ.நா.வும் மதிக்கமாட்டா.

இப்போ நிங்கள் சொன்னதிலேயே இருக்கிறது பதில் இராணுவம் இல்லாத ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலைகாறன் கண்டு பிடிக்கப்பட வேண்டும் அதோடு குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்களை எல்லா நாட்டுச்சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவர் எண்றுதான் அழைக்க வேண்டும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே நீங்களும் எந்த அடிப்படையில் தமிழீழத்தை அல்லது புலிகளைக் குற்றம் சாட்டுகிறீர்கள் அவர்கள் தான் கொலை செய்ததென்று. தவிர நாங்கள் எமது பயணத்தில் எவ்வளவோ இழப்புக்களை காண்டாகிவிட்டது அதோடு இதுவும் ஒன்று எண்டாகட்டும். தமிழீழப் பயணமே எங்களின் நம்பிக்கை தான் அதுபோல் தமிழர் சட்டமாக்கலும் இன்று போல் எண்றும் சமத்துவாமாய் இருக்கும்..
::
#30
judukku À¾¢ø ¦º¡øøÅÐõ º¢ÅÕìÌ À¾¢ø ¦º¡øøÅÐõ ´ýÚ¾¡ý «ñ½¡
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#31
Thala Wrote:இப்போ நிங்கள் சொன்னதிலேயே இருக்கிறது பதில் இராணுவம் இல்லாத ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலைகாறன் கண்டு பிடிக்கப்பட வேண்டும் அதோடு குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்களை எல்லா நாட்டுச்சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவர் எண்றுதான் அழைக்க வேண்டும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே நீங்களும் எந்த அடிப்படையில் தமிழீழத்தை அல்லது புலிகளைக் குற்றம் சாட்டுகிறீர்கள் அவர்கள் தான் கொலை செய்ததென்று. ..

இங்கே எழுதிய எல்லோரும் விடுதலைப்புலிகள் மேல் உள்ள பாசத்தால் அவர்களை தாம் பாதுகாக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு இந்த கொலையை நியாயப்படுத்தும் வாதத்தை முன் வைத்தார்கள். அவர்களது வாதம் நிக்ஸன் துரோகி ஆகவே கொல்லப்பட வேண்டும் என்பது தான்.

எனது கருத்தோ அவன் துரோகியாக இருந்தால் அது தமிழீழ சட்டப்படி கையாளப்பட்டிருக்க வேண்டும் காரணம் யாழ்ப்பாணம் தமிழீழ பிரதேசம் என்பதாகும். இங்கே விடுதலைப்புலிகள் தான் இந்த கொலையை செய்ததாக நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் எல்லோருமே அவன் துரோகி ஆக கொல்லப்பட்டது நியாயம் என்று வாதிட்டதன் மூலம் விடுதலைப்புலிகளை பொறுப்பாக்கினர்.

நான் ஏன் தமிழீழ சட்டப்படி நிக்ஸனின் கொலை கையாளப்பட வேண்டும் என்று கேட்கிறேன்? தமிழீழம் தனிநாடாக அங்கீகாரம் கோரி நிற்கிறது. அதற்காகவே நாட்டுக்கு தேவையான நீதித்துறையை உருவாக்கி செயற்படுத்துகின்றது. போலிஸ் துறையை உருவாக்கியிருக்கிறது. இப்படி எல்லாம் செய்து வைத்துக் கொண்டு சிறிலங்காவில் பொலிஸ் ஊழல், சித்திரவதை, கொலைகளுக்கோ பஞ்சம் இல்லை, பொலிஸ் கண்டும் காணாமல் கொலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறது, நீதிமன்றில் நீதி கிடைக்கவில்லை, சிறிலங்காவில் சட்டம் நடைமுறையில் இல்லை, மேலும் அவர்கள் சட்டம் எமக்கு பாதகமானது, என்று சொல்லி "எமது நாட்டை அங்கிகரியுங்கள், நாம் சிறப்பான ஆட்சி செய்கிறோம்" என்று தமிழீழ நிருவாகம் கேட்கிறது.

இந்த நிலையில் தமிழீழ பிரதேசத்தில் கொலைகள் தொடருகின்றன. நீதி கேட்டு இறந்தவரின் சவப்பெட்டியுடன் உறவினர்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி முன் போராட்டம் நடத்துகிறார்கள்.

உலகம் இங்கே எதைக்காணுகிறது? தமிழீழம் இன்னுமொரு சிறிலங்காவா? என்று மற்ற நாடுகள் கேட்க மாட்டாவா?
இதை ஏன் நான் கேட்கிறேன்? நானும் வாயை மூடிக்கொண்டு சிவனே என்று இருக்கலாமே?
நான் கேட்பது, விடுதலைப்புலிகள் தமது நீதி நிருவாகத்தை மேலும் பலப்படுத்துவதன் மூலம் தமிழீழத்தை சிறிலங்காவிலும் பார்க்க சிறந்த நாடு என்று காட்டவேண்டும் என்பதற்காக.
இப்படி செய்வது தமிழீழத்தின் அங்கிகாரத்துக்கு அவசியமான ஒன்று. இதை அவர்கள் சிந்திக்காமல் இருந்திருக்கலாம். நாம் அவர்களுக்கு எமது கருத்தை சொல்வதன் மூலம் அவர்கள் இப்படியும் சிந்திக்க துண்டுகிறோம். இதனால் தமிழீழத்தின் ஆட்சி வலுப்பேறும்.

கொலைகாரரை அமெரிக்கா மின்சார கதிரையில் வைத்து கொல்கிறது. சிங்கப்புூர் போதைப்போருள் கடத்தியவார்களை நஞ்சேற்றி கொல்கிறது. எல்லாம் சட்டப்படி நடக்கிறது. ஆகவே உலகம் ஏற்று கொள்கிறது. தமிழீழம் ஏன் இப்படி சட்டம் ஆளும் நாடாக மாறக்கூடாது? சிறிலங்காவை போல இருந்து கொண்டு உலக அங்கீகாரம் கேட்டால் கிடைக்குமா?
#32
þø¨Ä jude «ñ½¡ ¡÷ ¦ºö¾¡Öõ «Ð ¾Á¢ú÷ÕìÌ ¿øÄ¡Ð ¾Á¢úÆÐìÌõ ¿øÄÐ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#33
எனக்கு விளங்குகிறது நீங்கள் மனித உரிமை, சட்டம் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நிக்சனை, முத்தலீப்பை, ஏன் எந்தத்துரோகியயும் நாங்கள் யாரும் மனிதர்களாக கருதவில்லை ஏனென்றால் நாங்கள் ஓவ்வொருவரும் அவர்களால் பாதிக்கப்பட்டிருகிறோம். ஒரு தடவை அல்ல பல தடவைகள், மிருகத்தனமாக நடாத்தப்பட காரணமாய் இருந்திருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் மிருக வதை சட்டத்தை பற்றிக்கூறுங்கள் அதில் இவர்களை சேர்க்கலாமா என்றுபார்போம். சற்றே சிந்தித்து பாருங்கள் உங்களின் நல் வாழ்க்கை கூட சிதைய காரணமாணவர் யார் எண்டு...?
::
#34
veenanavan Wrote:judukku À¾¢ø ¦º¡øøÅÐõ º¢ÅÕìÌ À¾¢ø ¦º¡øøÅÐõ ´ýÚ¾¡ý «ñ½¡

ஒரு விடுதலைப்போராட்ட அமைப்புக்கு பலவகையான ஆதரவாளர்கள் தேவை. அவற்றுள் இவையும் அடங்கும்
<ul>
<li> கொடி பிடிப்பவர்கள், ஊர்வலம் போவர்கள், சொல்லிக் கொடுத்தபடி கோசம் போடக்கூடியவர்கள்

<li> அமைப்பின் செயற்பாடுகளை அவதானித்து, அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராயந்து, அந்த செயற்பாடுகளை இன்னும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று அபிப்பிராயம் சொல்லக்கூடியவர்கள். இப்படி சொல்வதன் மூலம் இயக்கத்தை சிறப்புற இயங்க உதவுபவர்கள்.
<ul>

முதலாவது இரகத்துக்கு ஆயிரக்கணக்கில் ஆட்கள் தேவை. ஆதரவும் ஆட்களும் நிறையவே இருக்கிறது. யாழ் களத்திலும் நிறையப்பேர் வருகிறார்கள்.

இரண்டாவது ரகம் குறைவு. காரணம் இயக்கத்தின் செயற்பாடுகளில் குறைகள் இவர்கள் கண்களுக்கு தெரிய வேண்டும். செயற்பாடுகளால் என்ன தீமை உண்டாகும் என்று பார்க்க கூடியவர்களாக இருக்கவேண்டும். அதனிலும் மேலாக, இந்த தீய பாதிப்பை எப்படி தவிர்க்கலாம் என்று ஒரு வழியும் சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும். முதலாவது இரகத்துக்கு இந்த குறைபாடு, தீமைகள் எல்லாம் தெரியாது. அவர்களால் அப்படி பார்க்க முடியாது. அவர்களை பொறுத்தளவில், இந்த இரண்டாவது இரகமும் துரோகிகள் பட்டியலில் இடம்பெற வேண்டியவர்கள். இதனால் விடுதலை இயக்கங்கள் இந்த இரண்டாவது இரகத்தை பொதுவாக முதலாவது இரகத்துக்கு தெரியாதபடி வைத்திருப்பது வழக்கம்.
#35
Jude Wrote:
veenanavan Wrote:judukku À¾¢ø ¦º¡øøÅÐõ º¢ÅÕìÌ À¾¢ø ¦º¡øøÅÐõ ´ýÚ¾¡ý «ñ½¡

ஒரு விடுதலைப்போராட்ட அமைப்புக்கு பலவகையான ஆதரவாளர்கள் தேவை. அவற்றுள் இவையும் அடங்கும்
<ul>
<li> கொடி பிடிப்பவர்கள், ஊர்வலம் போவர்கள், சொல்லிக் கொடுத்தபடி கோசம் போடக்கூடியவர்கள்

<li> அமைப்பின் செயற்பாடுகளை அவதானித்து, அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராயந்து, அந்த செயற்பாடுகளை இன்னும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று அபிப்பிராயம் சொல்லக்கூடியவர்கள். இப்படி சொல்வதன் மூலம் இயக்கத்தை சிறப்புற இயங்க உதவுபவர்கள்.
<ul>

முதலாவது இரகத்துக்கு ஆயிரக்கணக்கில் ஆட்கள் தேவை. ஆதரவும் ஆட்களும் நிறையவே இருக்கிறது. யாழ் களத்திலும் நிறையப்பேர் வருகிறார்கள்.

இரண்டாவது ரகம் குறைவு. காரணம் இயக்கத்தின் செயற்பாடுகளில் குறைகள் இவர்கள் கண்களுக்கு தெரிய வேண்டும். செயற்பாடுகளால் என்ன தீமை உண்டாகும் என்று பார்க்க கூடியவர்களாக இருக்கவேண்டும். அதனிலும் மேலாக, இந்த தீய பாதிப்பை எப்படி தவிர்க்கலாம் என்று ஒரு வழியும் சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும். முதலாவது இரகத்துக்கு இந்த குறைபாடு, தீமைகள் எல்லாம் தெரியாது. அவர்களால் அப்படி பார்க்க முடியாது. அவர்களை பொறுத்தளவில், இந்த இரண்டாவது இரகமும் துரோகிகள் பட்டியலில் இடம்பெற வேண்டியவர்கள். இதனால் விடுதலை இயக்கங்கள் இந்த இரண்டாவது இரகத்தை பொதுவாக முதலாவது இரகத்துக்கு தெரியாதபடி வைத்திருப்பது வழக்கம்.


þø¨Ä «ñ½¡ ¿¢í¸û Å£ý À¢Êžõ À¢ÊìÌÈÁ¾¢Ã¢ þÕìÌ ¿¢ìºý ÓòÄ¢ô ¦¸¡¨Ä Àò¾¢ §ÀºÓý ±õÁÐ ¾Á¢ú ¯È׸û 60 000 (Á¡Å¢Ã÷ 18 000)«Å÷¸û Àò¾¢ ´Õ À¾¢ø ¦º¡øÖý§¸ «ñ½¡ :? :?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#36
Thala Wrote:எனக்கு விளங்குகிறது நீங்கள் மனித உரிமை, சட்டம் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நிக்சனை, முத்தலீப்பை, ஏன் எந்தத்துரோகியயும் நாங்கள் யாரும் மனிதர்களாக கருதவில்லை ஏனென்றால் நாங்கள் ஓவ்வொருவரும் அவர்களால் பாதிக்கப்பட்டிருகிறோம். ஒரு தடவை அல்ல பல தடவைகள், மிருகத்தனமாக நடாத்தப்பட காரணமாய் இருந்திருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் மிருக வதை சட்டத்தை பற்றிக்கூறுங்கள் அதில் இவர்களை சேர்க்கலாமா என்றுபார்போம். சற்றே சிந்தித்து பாருங்கள் உங்களின் நல் வாழ்க்கை கூட சிதைய காரணமாணவர் யார் எண்டு...?

நீங்கள் தமிழீழத்தில் உள்ள பற்று காரணமாகவாவது, ஒரு விடயம் கட்டாயம் செய்ய வேண்டும். உங்களுக்கு செய்யப்பட்ட மனிதஉரிமை மீறல், சித்திரவதை, பற்றி தமிழீழ நீதிமன்றில் குற்றவாளிகளை, தெரிந்த பெயர்களை பெயர் குறிப்பிட்டு, வழக்கு தொடர வேண்டும். இதன் மூலம் தமிழீழ நீதிமன்று இவர்களுக்கு எதிராக பிடிவிறாந்தும், பின்னர் கண்ட இடத்தில் சுடும் உத்தரவும் போட உதவியாக இருப்பீர்கள். சட்டப்படி குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுப்பது மனிதஉரிமை மீறல் அல்ல. அது நிக்ஸனாகவும் இருக்கலாம் முததலீப்பாகவும் இருக்கலாம் தேவானந்தாவாகவும் இருக்கலாம்.
#37
veenanavan Wrote:þø¨Ä «ñ½¡ ¿¢í¸û Å£ý À¢Êžõ À¢ÊìÌÈÁ¾¢Ã¢ þÕìÌ ¿¢ìºý ÓòÄ¢ô ¦¸¡¨Ä Àò¾¢ §ÀºÓý ±õÁÐ ¾Á¢ú ¯È׸û 60 000 (Á¡Å¢Ã÷ 18 000)«Å÷¸û Àò¾¢ ´Õ À¾¢ø ¦º¡øÖý§¸ «ñ½¡ :? :?


நியாயமான கேள்வி.
அவர்களது தியாகம் வீணாகாமல் இருக்க நாம் செய்யக்கூடியதெல்லாம் அவர்கள் கனவை நனவாக்குவதே. தமிழீழம் என்ற ஒரு நாடு மற்ற நாடுகளுடன் ஒன்றாக ஐ.நா. சபையில் அமர்ந்திருக்க செய்ய வேண்டும். அதற்கான வழி தமிழீழ கட்டமைப்பை உறுதிப்படுத்தி தமிழீழம், சிறிலங்கா போன்ற பிற்போக்கு கொலைகார நாடு அல்ல, சிங்கப்புூர் போல சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்றும் நாடு, என்று மற்ற நாடுகள் காண வேண்டும். அதனால் தான் நான் தமிழீழ பிரதேசத்தில் தமிழீழ சட்டம் சிறப்பாக நடைமுறைப்பட வேண்டும் மற்ற நாடுகள் எதிரியின் பக்கம் நியாயம் காணக்கூடாது. சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை காண வேண்டும் என்று கூறுகிறேன்.
#38
<b>அடக்கி வாசிப்பது, தமிழீழ சட்டம், நீதித்துறை இருந்தும், கொலைகள் ஓயாத நாட்டில் உயிர்வாழ்வதற்கான தேவைகளில் ஒன்றாக இருக்கலாம்.</b>

அதே உரிமையுடன் தான் நாமும் வாழ்கிறோம்...அதற்காக நடைமுறைக்கு சாத்தியமற்ற விடையங்களையும்.. வீண் விதண்டா வாதங்களையும் புரிய அந்த உரிமையை நாம் பயன் படுத்தக் கூடாது.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
#39
யூட் அவர்களே! நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் பார்க்கையில் உங்கள் பக்கமுள்ள சில நியாயமான எதிர்பார்ப்புக்கள் தெரிகிறது. நீங்கள் சொல்ல வருவது....தமிழீழம் என்ற வரையறைக்குள் இருக்கும் பிரதேசத்தில் நடைபெறும் கொலைகளையும்....குற்ற செயல்களையும் தமிழீழ சட்டத்தின் மூலம் கையாள வேண்டும் என்பது. ஆனால் இதில் பல சிக்கல்கள் இருப்பதை நீங்களே அறிவீர்கள் என நினைக்கிறேன்..கொள்ளையளவில் தமிழீழமாக வட கிழக்கு மாகாணங்கள் இருப்பினும் இப்போது தமிழீழ நியாயாதீக்கத்துக்குள் இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியே! அதனால் மற்றைய பகுதிகளுக்குள் தமிழீழ காவல் துறை செல்ல முடியாது..அங்கு நடை பெறும் தமிழீழ அரசு அமைவதற்கெதிரான சதிகளை முறியடிக்க வேண்டிய அவசர தேவை மறுபக்கத்தில் இருக்கிறது. அதனால்...இதில் தமிழீழத்தின் தேசிய இராணுவமாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இது தொடர்பான நடவடிக்கைகளை கையளிக்க வேண்டிய கட்டாய தேவை தமிழீழ நீதித்துறைக்கு உள்ளது... காரணம்.காவல் துறையால் செய்ய தீர்க முடியாத ஒரு வழக்கு விசாரனை.. குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு அனுப்பப்டுகின்றது. அவர்களும் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசத்தில் தான் நடவடிக்கைகளை மேற் கொள்ளுவார்கள்..அவர்களால் அது முடியாவிட்டால் இராணுவமாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வழங்கி அதனூடாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினால் நடவடிக்கை எடுக்கபடும்..அச்சந்தர்ப்பத்தில்.. தான் சிலர் சட்டத்துக்கு உட்படதா வகையில் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்...
பெரும்பாலன சிறிலங்கா இராணுவகட்டுப்பாட்டில் நடைபெறும் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டே தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்..அவர்கள் திருந்தி வாழ்வதற்க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.. இதை தான் நீங்கள் சட்டத்தின் மூலம் அவர்கள் திருந்தி வாழ வழி செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள்...அதை அவர்கள் செய்கிறார்கள்...ஆனால் சிற்சில சந்தர்ப்பங்களின் இவை சாத்தியமற்றதாகிறது என்பதும் உண்மையே!....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
#40
எல்லாத்துக்கும் முதல் குறிப்பிட்ட இளைஞனின் மரணம் தொடர்பான காட்சியை களத்தில் இருந்து அகற்றுவது அல்லது நிழற்படுத்திப் பிரசுரிப்பது அடிப்படை ஊடகதர்மத்துக்கு மதிப்பளிப்பதாக இருக்கும் என்பது தாழ்மையான கருத்து..!

மாற்று ஆயுதக் குழு அரசியல் என்பது ஜனநாயகம் அல்ல....அது ஒரு மக்களின் நியாயபூர்வ ஏன் ஜனநாயக எதிர்பாப்புக்களை சீர்குலைக்க ஜனநாயகப் போர்வைக்குள் எதிரிகளால் இயக்கப்படும் சுத்த பயங்கரவாதம்...கொடிய பயங்கரவாதம்...! புலிகள் தாங்கள் ஜனநாயக சக்திகள் என்று எங்கும் குறிப்பிட்டதில்லை...ஆனால் அவர்கள் உண்மையான ஜனநாயப் பண்புகளை...அதன் பிறழ்வுகளற்ற நடைமுறைகளை என்றுமே மதிக்கிறார்கள்... அதுமட்டுமன்றி தமது மக்களின் நியாயபூர்வ கோரிக்கைகளுக்காக சாவல்களின் மத்தியில் அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இன்னும் புலிகள் போராடி வருகின்றனர்...அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழீழ நிர்வாகச் செயற்பாடுகள் அப்படியே 100% ஜனநாயக மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது உசிதமான எதிர்பார்ப்பாகத் தெரியவில்லை...!

மாற்றுக்குழுக்கள் எனப்படுபவர்கள் யார்...தமது பெயர்களில் வெறும் ஈழத்தை உச்சரித்தபடி எதிரிக்கும் அவன் திட்டங்களுக்கும் தமிழர் தேசத்தில் செயல்வடிவம் கொடுப்பவர்கள்...! இந்தியாவும் சரி சிறீலங்காவும் சரி அமெரிக்காவும் சரி ஜனநாயகப் பண்புகள் கருதி இவர்களுக்கு தீனி போடவில்லை...தங்களின் தேவைகளுக்கு பாவிக்கவும் தமிழர்களின் போராட்ட சக்தியை வலுவிழக்கச் செய்யவுமே இவர்களைக் கருவியாக்கி நிற்கின்றனர்...! அது அவர்களுக்கு நங்கு தெரிந்திருந்தும் புலிகள் பல தடவைகள் இவர்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டி பொதுமன்னிப்புக்களும் வழங்கி இருக்கின்றனர்...ஆனால் அதை எல்லாம் இவர்கள் மதித்ததாக தெரியவில்லை...அப்படி மதிக்கவில்லை என்றால் இவர்களுக்கு என்ன தீர்ப்பு என்பதும் பலதடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன... அதை வைத்தே ஆயுதப் பாதுகாப்பும் கோருகின்றனர்...அடாவடித்தனங்களும் புரிகின்றனர்..! புலிகள் எப்போதுமே நேர்மையான ஜனநாயகவாதி மீது வன்முறைகளைப் பிரயோகித்ததில்லை என்பதை கவனித்தில் கொள்வதும் சிறந்தது...! எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் நேர்மையான ஜனநாயக நடைமுறை இருக்கா என்பதும் கேள்விக்குறிதான்...???!

மனித உரிமைகள் என்ற வகையில் ஒரு பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் எழும் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க வேண்டும்...ஆனால் அதன் செயன்முறைகள் ஆயிரம் பிற மனிதர்களைப் பாதிக்கும் என்றால் அந்தக் கருத்துக்கள் திருத்தி அமைக்கப்பட பரிந்துரைக்கப்படும்...! இல்லை அதையே சாதிப்பேன் என்று நிற்பதும் அதற்கு துணை போவதும் இல்ல அதை வைத்தே சீவியம் செய்வதும் சமூகத்துக்கு உதவாது...அதுகூட சமூகவிரோதச் செயல்தான்...! அப்படியானவர்களுக்கு தெளிவான எச்சரிக்கைகளின் பின் தண்டனை என்பது சட்டவரப்புக்குள்ளானதுதான்...! ஜனநாயகத்திலும் அதற்கு அனுமதி உண்டு...! ஒரு கொரில்லாக் கூட்டத்தில் ஒரு குரங்கு விதி விலகினால் அங்கும் மரண தண்டனைதான் தீர்ப்பு...ஒரு யானைக்கு மதம் என்றால்...அங்கும் தனிமைப்படுத்தல்தான்...ஒருவேளை அது இயற்கையோவும் தெரியாது...!

எது எப்படியோ பகுத்தறிவுள்ள மனித சமூகத்தில் உயிர்ப்பலிகள் எங்கும் தவிர்க்கப்பட வேண்டும்..அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் செயற்பாடுகளையும் அதன் தாக்கங்களையும் சுட்டிக்காட்டுதலின் பின்னாவது உணரக்கூடியவர்களாக நிதானமாகச் செயற்படுவது சிறந்தது...இல்ல அப்படிச் சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்றால் இப்படியான அநியாயச் செயற்பாடுகளுக்கு முண்டு கொடுக்காமல் ஒதுங்கி சாதாரண வாழ்வியலில் கலந்து செல்வது சிறந்தது..! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)