Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விளையாட்டு...கிரிக்கெட்...!
#1
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் முடிவுகளின் கீழ் ICC இன் (சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்) கிரிக்கெட் அணிகள் தரப்படுத்தலின் பிரகாரம் அவுஸ்திரேலிய அணி முதலாம் இடத்திலும் குருவிகளின் சிறப்பு விருப்புக்குரிய அணியான தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்திலும் சிறிலங்கா அணி மூன்றாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன...!

ஒரு நாள் போட்டிகள் தரவரிசை பட்டியல் :

1. ஆஸ்ட்ரேலியா - 135 புள்ளிகள்
2. தென்ஆப்ரிக்கா - 113 புள்ளிகள்
3. இலங்கை - 109 புள்ளிகள்
4. நியூசிலாந்து - 109 புள்ளிகள்
5. இந்தியா - 107 புள்ளிகள்
6. பாகிஸ்தான் - 106 புள்ளிகள்
7. இங்கிலாந்து - 106 புள்ளிகள்
8. மேற்கிந்திய தீவுகள் - 100 புள்ளிகள்

தகவல் மூலம் வெப்புலகம் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<img src='http://www.webulagam.com/sports/cricket/0404/12/images/img1040412019_1_1.jpg' border='0' alt='user posted image'>

<b>லாரா - 384 மீண்டும் உலக சாதனை!</b>

10 ஆண்டுகளுக்கு முன் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சர் கேரி சோபர்ஸின் 365 ரன்கள் சாதனையை முறியடித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா, இன்று மேத்யூ ஹெய்டனின் 380 ரன்கள் சாதனையை முறியடித்து இரண்டாவது முறையாக உலக சாதனை படைத்துள்ளார்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆண்ட்டிகுவாவில் உள்ள புனித ஜான்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று 313 ரன்களுடன் களமிறங்கிய பிரையன் லாரா, சற்றுமுன் இந்திய நேரப்படி இரவு 9.15 மணிக்கு 384 ரன்களை எட்டி உலக சாதனை படைத்தார்.

374 ரன்களில் இருந்த லாரா, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் பெட்டியின் பந்தை மேலேறி வந்து சிக்ஸர் அடித்து ஹெய்டனின் 380 ரன்களை சமன் செய்தார். அடுத்த பந்தை ஸ்வீப் செய்து பௌண்டரிக்கு விரட்டி புதிய சாதனை படைத்தார்.

546 பந்துகளை எதிர்கொண்டு 42 பௌண்டரிகளுடனும், 4 சிக்ஸர்களுடனும் லாரா இந்த சாதனையை படைத்தார்.

6வது விக்கெட்டிற்கு ரிட்லி ஜேக்கப்ஸுடன் இணைந்து இதுவரை 250 ரன்களை குவித்துள்ளார் லாரா.

<img src='http://www.webulagam.com/sports/cricket/0404/12/images/img1040412019_1_2.jpg' border='0' alt='user posted image'>


நன்று வெப்புலகம் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
<img src='http://news.bbc.co.uk/media/images/40028000/jpg/_40028193_laraton_getty200.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/40031000/jpg/_40031815_team300x200.jpg' border='0' alt='user posted image'>
bbc.com

லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்கள் எடுக்க உதவிய அவரின் உலக சாதனைக்குரிய இனிங்ஸ் தொடர்பான படங்கள்...!


லாரா ஆட்டமிழக்காது ஓட்டங்களை இங்கிலாந்து அணிக்கெதிராக எடுத்த நிலையில் தமது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட் இழப்பிற்கு 751 ஓட்டங்கள் என்றிருந்த வேளையில் தமது இனிங்சை வலிந்து முடிவுறுத்தி இங்கிலாந்தை அவர்களின் முதல் இனிங்சை ஆரம்பிக்க அழைத்திருந்தார்...தற்போது இங்கிலாந்து அணி வெறும் 151 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை இழந்து பெற்றுள்ளது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இங்கு போடப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டி தொடர்பான பழைய அழைப்பிதல்...அதன் பரிமானம் (அளவு) கருதி நீக்கப்பட்டுள்ளது... (kuruvikal)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<b>ஐசிசியின் கிரிக்கட் ஆ°கார் விருதுகள் அறிமுகம்!</b>

ஆஸ்காருக்கு இணையான கிரிக்கட் விருதுகளை ஐசிசி அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி லண்டன் அலெக்சான்ட்ரா மாளிகையில் முதல் விருது வழங்கும் விழா நடை பெற உள்ளது.

12 மாத கால கிரிக்கட் போட்டிகளில் சிறந்த வீரர்கள் மற்றும் சிறந்த அணிகளுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படும், ஏற்கனவே இந்த மகா விருதுக்கு இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை அணிகளின் தலைவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

7 விருதுகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டு வழங்கப் பட உள்ளன. ஆண்டின் சிறந்த வீரர், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் சிறந்த அணிகள், ஆண்டின் வளரும் வீரர்,மேலும் முக்கியமாக கிரிக்கட் உணர்வுக்கான விருதும் இதில் உள்ளடங்கும். இது தவிர சிறந்த நடுவருக்கான விருதும் வழங்கப் பட உள்ளன.

விருதுகளை தீர்மானிக்கும் நீதிபதிகள் குழுவில் நடப்பு அணித் தலைவர்கள், முன்னாள் சிறந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் செய்தி ஊடக பிரதி நிதிகளும் அடங்குவார்கள்.

2003 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2004 ஜூலை 31,2004 வரை ஆட்ட திறமைகள் கணக்கிடப்பட உள்ளன.

webulagam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40179000/jpg/_40179916_warne_wicket270.jpg' border='0' alt='user posted image'>

<b>533 விக்கெட்கள்: வார்னே சாதனை</b>

இந்திய வீரர் இர்பான் பதான் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் வார்னே, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அனில் கும்ளே 4வது விக்கெட்டை வீழ்த்திய போது, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறினார். இவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோசை பின்னுக்குத் தள்ளினார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் வார்னே, யுவராஜ் விக்கெட்டை கைப்பற்றியபோது அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்தார்.

இந் நிலையில் இன்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இர்பான் பதான் விக்கெட்டை வீழ்த்தி, அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 114 டெஸ்டில் விளையாடியுள்ள வார்னே 533 விக்கெட்டுகள் பெற்றுள்ளார்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:

<b>வார்னே (ஆஸ்திரேலியா): 114 போட்டிகள், 533 விக்கெட்கள்

முரளிதரன் (இலங்கை): 91 532

வால்ஷ் (மேற்கு இந்திய தீவுகள்): 132 519</b>

மெக்ராத் (ஆஸி): 99 446

கபில்தேவ் (இந்தியா): 131 434

ரிச்சர்டு ஹாட்லி (நியூசி): 86 431

வாசிம் அக்ரம் (பாக்): 104 414

கும்ளே (இந்தியா): 86 409

அம்புரோஸ் (மே.இ.): 98 405

போத்தம் (இங்கி): 102 383

thatstamil.com & bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
நன்றிகள் குருவிகளே
[b][size=18]
Reply
#8
<b>ICC உலக11 அணிக்கு எதிரான சூப்பர் தொடரில் விளையாட ஆஸி. தகுதி</b>!

ஐசிசி சூப்பர் தொடரில்' விளையாடும் வாய்ப்பை உறுதி செய்து கொண்டுள்ளது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா.

வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் உலகில் தலைசிறந்து விளங்கும் அணிக்கும், ஐசிசி உலக லெவன் அணிக்கும் இடையே "ஐசிசி சூப்பர் தொடர்' ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

3 ஒருதின ஆட்டங்களும் ஒரு டெஸ்ட் போட்டியும் அதில் அடங்கும். அதில் விளையாடப்போகும் பெருமை எந்த நாட்டு அணிக்கு என்ற ஆவல் ரசிகர்களிடம் மோலோங்கியிருந்தது.

தற்போது அந்த வாய்ப்பை ஆஸ்திரேலியா அணி உறுதிசெய்து கொண்டுள்ளதாக ஐசிசி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய ஒருதினத் தொடரை 2-0 என வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி சூப்பர் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத் தொடர் வெற்றியால் கிடைத்த புள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 137 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. தரநிலைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 17 புள்ளிகள் குறைவாக இரண்டாம் இடத்தில் உள்ளது நியூஸிலாந்து.

இதற்கிடையே நியூஸிலாந்தில் வரும் பிப்ரவரியில் நடைபெறும் ஒருதினத் தொடரில் 5 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்துவிட்டாலும், நியூஸிலாந்து அணியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்ற முடியாது என்ற விவரமும் உறுதியாகியுள்ளது.

அதாவது, நியூஸிலாந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டாலும் 129 புள்ளிகளையே சேர்த்திருக்கும். அதே சமயம் ஆஸ்திரேலியா ஒருபுள்ளி கூடுதலாகப் பெற்றிருக்கும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி: அதேசமயம், ஐசிசி உலக லெவன் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

ஒருதினத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் அந்த அணி கைப்பற்றியதே காரணம்.
Reply
#9
நன்றி வசி
[b][size=18]
Reply
#10
<b>கங்குலியை மட்டும் தண்டிப்பது முறையற்ற செயல்:</b> <i>தர்மதாசா</i>

பந்துவீச அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் காப்டன் செüரவ் கங்குலியை மட்டும் தண்டனைக்குள்ளாக்குவது முறையற்ற செயல் என இலங்கை கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கை, மே.இ.தீவுகள், இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருதின கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி கொழும்பில் தொடங்குகிறது.

இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால குழு தலைவர் ஜயந்தா தர்மதாசா கோல்கத்தாவில் சனிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்தார்.

மேலும் கூறியது:

அன்றைய ஆட்டத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக காப்டன் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார். ஆனால் அதற்காக காப்டனுக்கு மட்டுமே தண்டனை கொடுப்பது சரியல்ல என நான் நினைக்கிறேன்.

ஆடுகளத்தில் வீரர்களை வழிநடத்துவது என்பது எளிதான பணி அல்ல. சக வீரர்களின் ஒருங்கிணைப்பு காப்டனுக்கு அவசியம். 1980-களில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய கிம் கியூûஸ அதற்கு உதாரணமாகக் கூறலாம். டென்னிஸ் லில்லி மாதிரியான வீரர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து விளையாடுவதில் சிறப்பு பெற்றிருந்தார்.

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கு கங்குலி வரவேண்டும். போட்டிக்காக அவர் வருகையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.


DINAMANI.COM
Reply
#11
என்னப்பா கங்குலியை வலிந்து கூப்பிடுறாங்கள் Confusedhock: :roll:
[b][size=18]
Reply
#12
கிரிக்கட் வரலாற்றில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர் அடித்தவர் west indiesசை சேர்ந்த சோபர்ஸ் என்ற கிரிக்கட்வீரர்

ஓல் ரவுண்டர் பிரபலங்கள் இம்ரான்கான் கபில்தேவ் அயன் போதம் அலன் போர்டர்

இந்தியன் கிரிக்கட்டில் கப்டன் பதவியிலிருந்த தமிழன் வெங்கட்ராகவன்


இந்தியன் கிரிக்கடில் ஒரே நேரத்தில் பிரபலமாய் இருந்த மைத்துனர்கள் கவாஸ்கர், விஸ்வநாத்

கங்குலி திரைப்பட நடிகை நக்மாவுடன் கிசுகிசக்கப்பட்டவர்

இலங்கையில் றோயல் சென்தோமஸ் பாடசாலைகளிடையே பிக் மச் நடைபெறும் பெரும் விழாக்கோலம் காணும்
இதே போல் யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் பிக் மட்ச் நடைபெறும்

யாழ் மத்திய கல்லூரி கி்ரிக்கட் வீரர் நகுலேஸ்வரனின் போலிங் திறமையினால் இலங்கை கிரிக்கட் ரீமில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவேளையில் தமிழன் என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டார்.நகுலேஸ்வரன் அமெரிக்காவிலிருக்கும் சட்டநிபுனர் உருத்திரகுமாரின் கிளாஸ்மேற் ஆகும்

யாழ் இந்துக்கல்லூரி கிரிக்கட் வீரர்கள் குகன் யோகி விடுதலை புலிகள் அமைப்பில் பிரபலமாகஇருந்தவர்கள்


இது எனது சின்ன கிரிக்கட் துளிகள்-------------------------------------------------------------------------------------------
Reply
#13
நன்றி வசி & குருவிஸ்
Reply
#14
Quote:கங்குலி திரைப்பட நடிகை நக்மாவுடன் கிசுகிசக்கப்பட்டவர்

நன்றி ஸ்ராலின் உங்கள் கிரிக்கெட் துளிகள் அருமை இந்த சாதனை நான் கேள்விப்படவில்லை, இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லையா?
Reply
#15
உங்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் சேவாக் இருவரையும் தெரியும்தானே அண்மையில் சச்சினின் மனைவி இரட்டைப் பிள்ளைகளை பிரசவித்தார் இதனைப் பற்றி சச்சின் பேட்டி கொடுத்த போது..

<b>IN PRESS REPORT HE SAID
BOOST IS THE SECRET OF "MY ENERGY"
SUDDENLY SEHWAG CAME IN SAID "OUR ENERGY "</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
அது ஒரு காலம்

என்ரர்த ரகன்

பூருஸ்லியின்படம்-பார்த்து

கல்லூரிகள் எங்கும்-இளைஞர்

பூருஸ்லிகளாய் திரிந்தனர்

அவனது அதிரடி சிக்சர்-அடி

கண்டு கேட்டு

தோட்டம் முதல் மைதானம்-எங்கும்

மட்டைகளுடன் கபில்தேவ்களாயினர்




--------------------------------------------------------------------------

ஸ்ராலின் கபில் தேவ் விசிறியாக்கும்
Reply
#17
இலங்கையில் இந்த மாதக்கடைசியில் நடைபெற இருக்கும் இந்தியன் ஓயில் கப் 2005 ஆன முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா .இலங்கை . மேற்கிந்திய தீவுகள் பங்கு பற்றுகின்றன அந்த ஆட்டங்களுக்கான அட்டவனை

<b>INDIAN OIL CUP 2005</b>

July 30, 2005 Sri Lanka v India ---------- Dambulla ---(D/N)

July 31,2005 India v West Indies ---------- Dambulla(D/N)

Aug o2,2005 Sri Lanka v West Indies--------Dambulla(D/N)

Aug 03,2005 Sri Lanka v India -------------- Dambulla(D/N)

Aug 06,2005 Sri Lanka v West Indies-----R.Premadasa (D/N)

Aug 07,2005 India v West Indies------------- R.Premadasa (D/N)

Aug 09,2005 Final ------- R.Premadasa (D/N)

You can watch on Ten sports channel
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
[b]INDIAN OIL CUP 2005 MATCH-1- -30 JULY 2005
SRILANKA
SCORE :
INDIA ------------ 205/9 (50 overs)
*R Dravid b Chandana 54

Muralitharan 10 1 33 3

SRILANKA--------- 209/7(47.2 overs)
ST Jayasuriya not out 43

Bowling
Pathan 10 2 43 2 (1w)
Khan 10 1 32 2 (2w)

Man of the Match: ST Jayasuriya
Result: Sri Lanka won by 3 wickets

http://live.cricinfo.com/db/ARCHIVE/2005/O..._30JUL2005.html
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
நன்றி
[b][size=18]
Reply
#20
[b]INDIAN OIL CUP 2005 MATCH-2- -31 JULY 2005

WEST INDIES
SCORE :
WEST INDIES ------------178 all out (47.4 overs)
N Deonarine lbw b Sehwag 41

Bowling
Nehra 9 2 23 2
INDIA --------- 180/4 (36 overs)
R Dravid not out 52

Bowling
Lawson 9 0 58 2


RESULT : INDIA WON BY 6 WKTS

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._31JUL2005.html
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)