07-31-2005, 02:50 AM
சரவணபவன் சாம்பார்
1 பேணி துவரம்பருப்பு (2 மணி நேரம் ஊறவைத்து எடுக்கவும்)
5 கொட்டை புளி
1 தேக்கரண்டி சீனி அல்லது சக்கரை
2 மேசைக்கரண்டி சாம்பார்த்தூள்
1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி மல்லித்தூள்
1/2 தேக்கரண்டி கடுகு
1/2 தேக்கரண்டி சீரகம்
3 செத்தல் மிளகாய்
2 கொப்பு மன்னிக்கவும் கறிவேப்பிலை
4 வெங்காயம்
1 கீறு புூசனிக்காய்(சிறு துண்டுகளாக்கி அவித்து வைத்துக்கொள்ளவும்)
4 வெண்டிக்காய் (சிறு துண்டுகளாக்கி பொரித்து வைத்துக்கொள்ளலாம்
1 முருங்கக்காய் (சிறு துண்டுகளாக்கி அவித்து வைத்துக்கொள்ளலாம்)
1 உருளைக்கிழங்கு (சிறு துண்டுகளாக்கி அவித்து வைத்துக்கொள்ளலாம்)
1 கத்தரிக்காய் (சிறு துண்டுகளாக்கி அவித்து வைத்துக்கொள்ளலாம்)
காய்கறி அவித்த தண்ணீர் 2 அல்லது 3 பேணி
காய்கறியில் எதாவது கிடைப்பதில் மூன்றைப் பயன்படுத்தவும்
இங்கே நாங்கள் புூசனிக்காய்,வெண்டைக்காயை,உருளைக்கிழங்கு பயன்படுத்துவோம்
ஒரு பெரிய தக்காளிப்பழம்
சிறிது கொத்தமல்லி இலை
6 பல்லு உள்ளி
உப்பு சுவைக்கேற்ப
2 மேசைக்கரண்டி நல்லெண்ணை
செய்முறை
ஊறவைத்த துவரம்பருப்பை நன்கு அவியவிடவும் நன்கு அவிந்ததும் பாதி தக்காளியை ஒரு வெங்காயம் துண்டுகளாக நறுக்கி அத்துடன் போடவும். (துவரம் பருப்பு சரியாக அவியாவிட்டால் கடைந்து எடுக்கவும்)
ஒரு வெங்காயம் ,கால்துண்டு தக்காளி ,ஒரு தேக்கரண்டி, சீனி, 6 பல்லு உள்ளி, ஒரு செத்தல் மிளகாய் , ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், கால்தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத்தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும். (இதை இலங்கையில் கூட்டு என்றும் இந்தியாவில் விளுது என்றும் சொல்வார்கள்)
மீதி இருக்கும் வெங்காயத்தையும் தக்காளியையும் சிறு சிறு தூண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
அடுப்பில் இரும்புச்சட்டியை வைத்து எண்ணைவிட்டு சூடுசெய்யவும்
எண்ணை சூடானதும் கடுகு கருவேப்பிலை மீதமுள்ள செத்தல் மிளகாய் சேர்த்து கிளறவும்
கடுகு வெடிக்க வெட்டி வைத்த வெங்காயம் தக்காளி போட்டு கிளறவும்
அதன்பின் ஏற்கனவே தயார் செய்து வைத்து புூசனிக்காய் வெண்டைக்காய் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கிளறவும்
அதன்பின் அரைத்துவைத்த கூட்டை சேர்த்து கிளறவும்.
2 மேசைக்கரண்டி சாம்பார் தூள் மற்றும் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்
காய்கறி அவித்த தண்ணீரை தேவைக்கேற்ப இப்போது சேர்க்கவும்
இரண்டு நிமிடம் விட்டு அவித்து வைத்த துவரம்பருப்பை(வெங்காயம் தக்காளி ஏற்கனவே பருப்புடன் சேர்த்துவிட்டோம்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
இப்போது சுவைக்கேற்ப உப்பை சேர்க்கவும்
ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். வாசனை தோன்றியதும் இறக்கி கொத்த மல்லி இலையை மேலே தூவி இட்லி தோசை மற்றும் சோறு அகியவற்றுடன் பரிமாறலாம்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->